தொண்ணூறுகளின் பின்னான இந்தியா பெரும் மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கிறது. இந்தியாவின் இதயம் என்று வர்ணிக்கப்படும் மத்திய இந்தியாவில் மக்களின் போராட்டங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய அரசு திணறிப் போயிருக்கிறது. காஷ்மீர், நாகாலாந்து என்று இந்திய அரசின் கொல்லைப் புறங்களில்லெல்லாம் மக்கள் தெருவிற்கு வந்து போராடுகிறார்கள். இந்தியா எங்கும் பரந்து வாழும் இஸ்லாமியர்கள் தாம் நேசித்த இந்தியப் பற்றை கேள்விகேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இவை அனைத்தையும் கையாள இந்திய அதிகார வர்க்கத்திற் பலமான தத்துவார்த்த ஆயுதம் தேவைப்பட்டது. உணர்ச்சிபூர்வமான அவர்களின் முதலாவது ஆயுதம் என்பது இஸ்லாமிய எதிர்ப்பு என்பதாகும்.
90 களில் பிரான்சில் பிரயோகிக்கப்பட்ட இதே இஸ்லாமிய எதிர்ப்பு ஆயுதம் அல்ஜீரியாவில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்தது. பிரஞ்சு மக்கள் மத்தியில் இஸ்லாமியர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கியது. 9/11 இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் பின்னதாக ஐரோப்பா எங்கும் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பு வாதம் இன்னும் தீவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது.
சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஜனநாயகத்தின் உலகளாவிய பொது எதிரியாக இஸ்லாம் உருவகப்படுத்தப்பட்டது. அமரிக்காவும் அதன் நேச அணிகளும் உலகின் ஒரு குறித்த மதத்தினர் மீதான தாக்குதலை நிறுவனமயப்படுத்தப்பட வகையில் கட்டவிழ்த்தனர்.
இஸ்லாமிய அடிப்படை வாதம் என்ற குறித்த பிரிவு என்பதே அந்த மதத்தில் – இந்து மதத்தைப் போலவும், கிறீஸ்தவ மதத்தைப் போலவும்- நிறுவன மயமாக இல்லாதிருந்த போதும், மேற்கு அதனைத் திட்டமிட்டு உருவாக்கியது. பல சந்தர்ப்பங்களில் உருவாவதற்கான சூழலைத் தோற்றுவித்தது.
சோவியத் வீழ்ச்சியின் பின்னர் அமரிக்க அணி தனது பாதுகாப்புப் பொறிமுறைய வளர்த்துக்கொள்வதற்கு ஒரு பொது எதிரியை உருவாக்கினர். அந்த எதிரி இஸ்லாமாக உருவானது எனினும் காலவோட்டத்தில் இஸ்லாம் என்பது மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணை வளத்தைச் சுரண்டுவதற்கும் உதவிபுரிந்தது.
இஸ்லாமிய எதிர்ப்பு, பாக்கிஸ்தானிய எதிர்ப்பு என்பன இந்திய தேசத்தை ஒட்டிவைத்திருப்பதற்கான கருவியாகளாக ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அது நிறுவனமயமான நிலையைத் தொண்ணூறுகளின் பின்னரே பெற்றுக்கொள்ள ஆரம்பித்தது.
இந்து பாசிசம் இஸ்லாமிய அடிப்படை வாதம் உருவாகும் சூழலைத் தோற்றுவித்தது.
பலவீனமான எதிர்கொள்ளத்தக்க இஸ்லாமிய அடிப்படைவாதம் மிகப்பெரும் எதிரியாகத் திட்டமிட்டு உருவகப்படுத்தப்பட்டது.
இந்திய அதிகார வர்க்கத்தின் ஊடகங்கள், இஸ்லாம் என்பது நாட்டின் எரிந்துகொண்டிருக்கும் பிரச்சனையாக உருவகப்படுத்தின. இதனூடாக இந்தியாவின் நிறுவனமயமான பாசிசம், பொது எதிரியை உருவகப்படுத்திக்கொண்டது.
இனிவரும் காலங்களில், கஷ்மீரில் இந்திய இராணுவத்தின் படுகொலைகள், இலங்கையில் இந்திய ஆதரவுடன் நடந்த இனப்படுகொலை, மத்திய இந்தியாவில் அழிக்கபடும் மக்கள் இவை அனைத்திற்கும் மேலாக பட்டினியால் செத்துப் போகும் மக்கள் கூட்டம் என்பன இஸ்லாமிய எதிரியால் மறைக்கப்பட்டு விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு உருவமைக்கப்படும் இஸ்லாமிய எதிர்ப்பு வாதமும் அதன் கர்த்தாவான இந்து பாசிசமும் சமூக ஒழுங்கில் நிறுவன மயமாக்கப்பட்டுள்ளது என்பதை விபரிக்கும் வெளிப்படையான சம்பவம் தான் பாபர் மசூதி குறித்த நீதிமன்றத் தீர்ப்பு.
இந்தியாவின் ஒரு பகுதி மக்கள் நம்புகின்ற ஒரே காரணத்திற்காக அந்த இடம் இந்துக்களுக்குச் சொந்தமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதன் பின்னணி இந்து வெறியும் இந்து பாசிசமும் இல்லாமல் இந்தியா இன்னும் நிலைத்திருக்க முடியாது என்பதாலாகும். வெறும் இதிகாசக் கட்டுக்கதைகளை வைத்துக்கொண்டு அது இந்துக்களின் இடம்தான் என்று சர்மா என்ற நீதிபதி தீர்ப்புச் சொன்னபோது மனிதகுலம் வெட்கித் தலைகுனிந்தது.
இலங்கை இதிகாசக் கதைகளை முன்வைத்து அந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்குத் தான் சொந்தமானது என்று போர்க்குர எழுப்பியதன் பின்புலம் இன்று இந்திய நிலைமைகளுக்கும் பொருந்திப் போகிறது.
இவ்வாறு நிறுவனமயப்பட்ட இந்து பாசிசத்தையும் இஸ்லாமிய எதிர்ப்பையும் கட்டமைபதன் பின்னான நிகழ்சி நிரல்கள் அபாயகரமானவை.
1. இஸ்லாமிய அடிப்படைவாதம் உருவாவதற்கான சூழலை உருவாக்குதல்.
2. இஸ்லாமிய அடிப்படை வாதமே பொது எதிரியாக உருவமைத்தல்.
3. விரக்தியடந்து அரசிற்கு எதிராகப் போராடும் மக்கள் பகுதியினரை இஸ்லாமியப் பூச்சாண்டி காட்டி திசைதிருப்பல்.
4. இதனூடாக தேசிய விடுதலைப் போராட்டங்கள், மாவோயிஸ்டுக்களின் போராட்டங்கள் ஆகியவற்றை பலவீனமடையச் செய்து இறுதியில் அழித்தல்.
5. இந்தியாவைச் சுரண்டல் சந்தைக்குரிய பிரதேசமாக உருவாக்கல்.
பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், இந்திய தேசத்திற்காகவும் அர்ப்பணிப்புத்துப் போராடிய இஸ்லாமியர்களை இந்தியப் பிரஜைகள் அல்ல எனப் பிரகடம் செய்திருக்கிறது இந்தத் தீர்ப்பு. உலகின் இரண்டாவது பெரிய இஸ்லாமிய நாடான இந்தியாவில் இந்து பாசிசம் தான் வாழ முடியும் என சட்டபூர்வமாக நிரூபித்திருக்கிறது நீதிமன்றம்.
நரேந்திரமோடியினதும் ஆர்.எஸ்.எஸ் மஞ்சள் பயங்கரவாதிகளதும் குரலை நீதிமன்றம் சட்டபூர்வமாகவும் நிறுவன மயமாகவும் உருவகப்படுத்தி ஒலித்திருக்கிறது.
இந்திய அரசின் தத்துவார்த்தப் பின்புலமாக அமைந்திருக்கும் இந்து பாசிசத்தினது சூழ்ச்சிக்கு எதிராக இந்திய முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து இஸ்லாமியர்கள் போராடுவர்கள். இஸ்லாமியர்களைப் பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளாத இந்தியா சிதறிப்போகும் என்பதை அவர்கள் உலகிற்கு உணர்த்துவார்கள். இன்று உற்சாககளிப்பில் ஆழிக் கூத்தாடும் இந்து வெறியர்கள் இந்தியாவின் பிரஜைகள் அல்ல என்று உணரவைப்பார்கள்.இஸ்லாமிய எதிர்ப்புவாதம் என்பது இந்திய மக்களுக்கு மட்டுமல்ல அனைத்துலக மக்களுக்கும் எதிரானது என்பதை இந்திய மக்கள் உணருவார்கள்.
http://smarttamil.wordpress.com/2010/10/01/ayodhya-verdict/
இந்த இடுகையில் குறிப்பிடும் படி தொல்பொருள் துறை ஆதாரம் உள்ளதா?
இந்திய அரசியல் உலகமுதலாளித்துவ அரசியலுக்கு விதிவிலக்கான தல்ல.முதலாளித்தவ புரட்சி நடைபெறாத இந்தியா ஆபிரிக்கா போன்ற
நாடுகளில் இங்குள்ள அரசியல்வாதிகள் மதங்களையும் இனங்களுக்கும் இடையேயும்
ஏன் சாதிகளுக் கிடையேயும் பகைமையை மூட்டியே தமது அரசியல் ஆதாயத்தை பெறுகிறார்கள்.
பாபர்மசூதி இடிப்பு விவகாரம் இராமர் அம்பு வில்லு வைத்து எடுத்த இடம் சீதை சமையல்
செய்த சமையல்கட்டுக்கு உரிமை கோருகிற அயோத்திவிவகாரம் இந்த அரசியல்வாதிகளால் உருவாக்கப்பதே! இதில் பலியாகப் போகிறவர்கள்-பலியாக்க பட்டவர்கள் பாட்டாளிமக்களே!.
தற்சமயம் தீர்ப்பு என்னமாதிரி இருந்தாலும் இது நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.
ஒருமதக்கலவரத்தை ஒருஇனக்கலவரத்தை பழம்குடிமக்களுக்கெதிரான தாக்குலை
இந்தியதேசிய முதாலித்துவத்தின் குணாம்சத்தில் இருந்தே கண்டு கொள்ள முடியும்.
இப்படியான தாக்குதலில் இருந்து பாதுகாப்பது என்பது வரலாற்று விஞ்யாணத்தை உள்ளடக்கிய ஒரு மாக்ஸியஇந்திய கட்சியாலேயே சாத்தியமானது ஒன்று.
HELLO GUYS. TAKE IT EASY. WE DONT WANT TO DISCUSS TOO MUCH ABOUT THIS ISSUE BECAUSE NO ONE OR NO BODY OR EVEN THE GOD CANNOT SETTLE THIS PROBLEM. IT WAS THERE AND IT IS THERE AND IT WILL BE THERE FOR EVER. BUT WE WILL NOT BE HERE TO HEAR THE FUTURE GAME.
முஸ்லிம்கள் அமைதியாக இருந்தாலும் ஊடகங்கள் தூண்டிவிட்டு ஒரு வழி செய்துவிடும்
மறுக்க முடியாத உண்மை.இப்படியான தொலைக்காட்சிகள் பத்திரிக்கைகளுக்கு பின்னும்
ஒவ்வொரு முதாலித்துவ கட்சிகள ஒளிந்திருப்பதை கண்டு கொள்ளலாம்.
இந்திய இதயத்தில் கீறப்பட்ட காயம் பாபர் காலத்து மசூதி,இது ஆக்கிரமிப்புச் சின்னமாய் ஆயிரம் வருடங்கள் இருந்து இந்து மக்களீன் வலியாய்,வேதனையாய் இருந்து வருகிறது.கும்பல்,கும்பலாய் கொல்லப்பட்ட இந்துக்களீன் பிரேதங்களீன் மீது எழுப்பப்பட்டதே இந்த மசூதி.
எது ஆக்கிரமிப்புச் சின்னம்? தஞைப் பெரிய கோவிலைப் போல ஆக்கிரமிப்புச் சின்னம் உண்டா?
உங்கள் இந்துத்துவ மதவாத முகம் எப்போதோ தெரிந்த விடயம் தான்.
வரலாறு தெரியாமல் பிதற்றாதீர்கள்.
இன்று இந்தியப் பண்பாடென உலகறியும் வட இந்தியப் பண்பாட்டின் ஏகப் பெரும் பகுதிக்குரிய பெருமை முகலாயரது.
மதங்களைச் சமமாக நடத்திய இந்தியத் துணைக் கண்டப் பேரரசர்கள் இருவர்: ஒருவர் பிறப்பால் முஸ்லிம், மற்றவர் பவுத்தத்தை தழுவியவர்.
தமிழ்மாறன் ஒன்றைமட்டும் புரிந்து கொள்ளுங்கள். பாபர் மசூதி ஐநுh ஆண்டு கதை .
இது இருபத்தியொராம் றூற்றாண்டு புலம்பெயர் தமிழர்கள் பத்துலட்சத்தையும் தாண்டி
விட்டது. எட்டுவருடமே பத்துவருடங்களோ ஒரு நாட்டில் குடியிருந்தால் குடியுரிமை கோர
முடியுமென்று சர்வதேசிய சட்டம் சொல்லுகிறது.
உண்மையில் அப்படியும் ஆகியிருக்கிறோம். எமக்கொரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி
என்பது என்ன நியாயம்? இராமர்கோவில் என்பது ஒரு பிழைப்புவாத பிற்போக்கு அரசியல்
என்பது புரியவில்லையா? பாட்டாளிகளை தெருவில் மோதவிட்டு இரத்தத்தை சுவைக்கும்
முதாலித்தவ அரசியல்.
தமது மதத்தை பாதுகாக்க வேண்டாம் என்று சொல்லமாட்டேன்.ஆனால் இது இந்துமதவெறியர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. எம்மதமும் சம்மதமே என்பது தான் தொழிலாளிவர்க்கத்திற்கு உகந்த பாதை.
மன்னர்ராட்சி காலத்திற்கு திரும்பி போகாதீர்கள். இதுசமதர்மத்திற்குரிய காலங்கள்.
கண்ணுக்கு கண் என்று பழிவாங்கப் புறப்பட்டால் இந்த உலகமே குறுடுயாகிவிடும்
என்ற மாட்டின்லூதசிங் வாசகத்தை தான் உங்களுக்கு நினைவூட்ட முடியும்.
India was not even a country before 1947. it was created by UK. Forget I
பொண்னையா: இந்துக்கள் 1947க்கு முன் இந்தியாவில் அல்லது பாரதத்தில் இருந்ததில்லையா?
அல்லது அந்த மசூதி ஒரு கோயிலை இடித்து கட்டப்படவில்லையா?
Mr.Yedu. Why did not your so called Hindhus did not make an war and conquer other countries. Muslims are warriors. That is why they could come to India and defeat the Hindhus. Now, when they get a very favourable situation, they demolish Babri masjid. Is it not shameful?
விருமான்டி:நீங்க சொன்ன பதிலிலேயே உங்களது கேள்விக்கான பதில் உள்ளது… இப்போது இந்துகள் தங்களுக்கு சாதகமான போது மசூதியை இடித்தார்கள்..இதற்கு ஏன் வெட் கபட வேண்டும்?