ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூன் மீது காசாவில் செருப்பு வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலில் சிறைப்பட்டிருக்கும் பலஸ்தீனியர்களின் உறவினர்கள், காசாவுக்குள் நுழைய முயன்ற போதே, பான்கீமூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகளை வீசி எறிந்தனர்.
அவர்கள் சிறையில் இருக்கும் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களை ஏந்தி, “இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்தது போதும்…” என்று எழுதப்பட்டிருந்த போஸ்டர்களை பான்கீமூனிடம் காண்பித்தனர்.
மத்திய கிழக்கில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் மனித அழிவுகளுக்குக் காரணமாக அமரிக்காவின் அடியாளாக அமரிக்கா செயற்பட்டுவருகிறது. இலங்கையில் ஐ,நாவின் ஆசியோடு நிகழ்த்தப்பட்ட வன்னிப் படுகொலைகளின் பின்னர் ஐ.நாவைத் திருப்த்தி செய்த சவேந்திர சில்வாவைத் தனது ஆலோசகராக பன் கீ மூன் நியமித்துக்கொண்டார்.