தேர்தலுக்காக பேரறிவாளன் விடுதலை செய்யப்படலாம்
தமிழகத்தைப் போல மேற்குவங்க மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. மேற்குவங்கம் இடது சாரிகளின் கோட்டையாக இருந்தது. நந்திகிராம் பிரச்சனையை பயன்படுத்தி இடதுசாரிகளிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றினார் மம்தா பானர்ஜி.
இந்த தேர்தலில் பாஜக அங்கு காலூன்ற நினைக்கவில்லை ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சில முக்கிய தொகுதிகளில் வென்றதை அடுத்து சட்டமன்ற தேர்தலில் வெல்ல நினைக்கிறது பாஜக. அதற்காக அம்மாநிலத்தில் வலுவாக உள்ள மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை உடைத்து அதை தன் பக்கம் கொண்டு வர முயல்கிறது பாஜக.
சமீபத்தில் அக்கட்சியின் மிக முக்கியமான தலைவரான சுவேந்து அதிகாரி விலகி பாஜகவில் இணைந்தார். அவர் சில எம்.எல்.ஏக்களையும் பாஜகவில் சேர்த்தார். அதன் பின்னர் பல சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர்.
இந்நிலையில் இன்று மேற்கு வங்க மாநில வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி தன் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவருடைய ராஜிநாமை ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார். உட்கட்சிக்குள் எழுந்த பூசலே இவரது விலகலுக்கு காரணம் என்ற போதும் இவர் கடந்த இரு மாதங்களாகவே அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். மூத்த அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய இவரும் விலகியுள்ளார். இவர் விரைவில் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படி விலகுகிறவர்கள் தொடர்பாக பேசிய மம்தா பானர்ஜி,
“இங்கு பதவிச் சுகம் அனுபவித்து விட்டு சொத்துக்களை பாதுகாக்க பாஜகவுக்குச் செல்கிறார்கள். மேற்குவங்கத்தை பாஜக கையில் கொடுக்க சிலர் முயல்கிறார்கள். அது நடக்காது நான் நாந்திகிராம் தொகுதியிலும் போட்டியிடுவேன் “ என்று அறிவித்துள்ளார்.
நந்திகிராமம் தொகுதி இந்தியா அறிந்த தொகுதி ஆகும், இடது சாரிகளை வீழ்த்தி மம்தா ஆட்சிக்கு வந்த மாற்றம் நந்திகிராமில் இருந்தே துவங்கியது. டாடா நானோ கார் தயாரிக்க பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம் இருந்து எடுக்க அந்த வன்முறையில் பலரும் இறந்தார்கள். இது இடது சாரி அரசுக்கு பின்னடைவாக இருந்தது.
இத்தொகுதியில் இருந்துதான் பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி போட்டியிட்டார். இப்போதும் அதே தொகுதியில் அவரே போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து மம்தா பானர்ஜியே போட்டியிட இருக்கிறார். மேற்கு வங்க தேர்தலில் பாஜகவா? மம்தாவா என்ற கேள்விக்கு விடை விரைவில் தெரியும்.