இன்று ஏனைய மனிதர்களுக்கும் மனிதக் குழுக்களுக்கும் எதிரான வெறுப்பும், இனவாதமும், நிறவாதமும் மறுபடி மேலோங்கி வருகிறது. சமூகம் மாற்றமடைவதற்கான போராட்டங்கள் எழும்போதெல்லாம் நிறவாத மற்றும் இனவாதிகள் அவற்றைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். மக்களை நச்சூட்டும் இந்தக் குழுக்களை உலகம் முழுவதும் காணலாம்.
கிரேக்கத்தில் நிறவாத நவநாசிக் கட்சி மக்கள் மத்தியில் நிறவாதத்தைப் பரப்பி வருகின்றது. பிரித்தானியாவில் பிரித்தானிய தேசியக் கட்சி, பிரான்சில் தேசிய முன்னணி போன்று கிரேக்கத்தில் கோல்டன் டான் என்ற நிறவாதக் கட்சி பாசிசக் கோட்பாடுகளை மக்கள் மத்தியில் பரப்பிவருகின்றது. பொருளாதார நெருக்கடிக்கு எதிராக புரட்சிகரமாகப் போராடும் ஏனைய கட்சிகளுக்கு இவர்கள் சவாலாக அமைவதோடு சமூகத்தைச் சீரழிக்க முற்படுகின்றனர்.
இந்த நிறவாதக் கட்சிக்கு எதிராக கடந்த செப்செம்பர் மாதம் மனிதபிமானம் மிக்க கிரேகர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள். இவர்களில் 15 பேரைப் கிரேக்கப் போலிஸ்படை கைது செய்தது. பின்னதாக மேலும் 25 வரையான மற்றொரு ஆர்ப்பாட்டக் குழுவினரையும் போலிஸ் கைது செய்தது.கைது செய்யப்பட்டவர்கள் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என பின்னதாக பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.
சிகரட் லைட்டர்களினால் அவர்களின் கைகளை எரித்த பாசிச ஆதரவு போலிஸ் படை, கைத்தொலைபேசிகளில் அவர்களைப் பதிவு செய்தது. இணையத் தளங்களில் கைதிகளின் முகவரிகளையும் அடையாளங்களையும் வெளியிட்டு நவ நாசிக் கட்சியான கோல்டன் டான் பாஸிஸ்ட்டுக்களிடம் காட்டிக்கொடுகப் போவதாக பொலீஸ் அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.
இதைவிட நிர்வாணப்படுத்தியும், அவமானப்படுத்தியும் அமரிக்கப் படைகள் ஈரக்கில் கைதிகளுக்கு மேற்கொண்டதற்கு இணையான சித்திரவதைகளைச் செய்ததாக குறிப்பிட்டனர். கடந்த தேர்தலில் நிறவாத நாசிக் கட்சியான கொல்டன் டவன் 18 ஆசனங்களைக் கப்பற்றியுள்ளது. கருத்துக்கணிப்புகளில் சைரா இடது முன்னணியிலும் அதிகமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.
கிராகத்தில் இடதுசாரிகள் பாராளுமன்ற வழிகளை நிராகரித்து மக்கள் சார் அரசியல் தலைமையை வழங்கத் தவறினால் கிரேக்க பாசிசம் ஐரோப்பா முழுவதும் பரவ வாய்ப்புண்டு.
Greek is also a Stem Language like Tamil, Sanskrit, Latin and Arabic. They also laid the foundation for democracy. Now it is a matter of living within their means and balancing their national budget. Euro is a bulwark against the American Dollar. It”s survival depends on the fiscal responsibility of the Euro Zone members. The measures the Greek government takes in 2012 to control the unrest of it’s population is something of real concern to us outside the Europe too.