பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே மார்கலா மலைப்பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விமானத்தில் இருந்த 152 பயணியின் கதி என்ன என்று தெரியவில்லை.துருக்கியில் இருந்து இஸ்லாமாபாத் சென்றது விமானம். கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானம் மலையில் மீது மோதி விபத்தில் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் அந்த பகுதிக்கு விரைந்துள்ளனர். கனமழை மற்றும் மோசமான வானிலையால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.