பாக். மருத்துவமனையில் தற்கொலைத் தாக்குதல்: 20 பேர் பலி!

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாகாணத்தின் தேரா இஸ்மாயில்கான் பகுதியில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் இன்று இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அலாட்ஷி பிரிவைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடலைப் பெறுவதற்காக மருத்துவமனையில் ஏராளமானோர் குவிந்திருந்த போது திட்டமிட்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 23 பேர் உயிரிழந்ததாகவும் தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலை நடத்திய தீவிரவாதியின் தலை மற்றும் உடல் பாகங்களை கைப்பற்றி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.