Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பாக்தாத் – காஸா – புதுக்குடியிருப்பு : யமுனா ராஜேந்திரன்

இனியொரு... by இனியொரு...
02/22/2009
in அரசியல்
0 0
7
Home அரசியல்

பௌத்த-சிங்கள-பெருந்தேசிய-பாசிச இலங்கை அரசின் கொடுமைக்கு ஆளாகி வரும் பல்லாயிரம் ஈழத் தமிழ் மக்களது உயிர்களுக்கு ஆதரவான பெருங்கொந்தளிப்பு தமிழக மக்களின் மனங்களில் பெருவெடிப்பாக எழுந்திருக்கிறது. அவர்களது கையறுநிலை தீக்குளிப்புகளாகவும், அம்மக்களது ஆத்திரமும் கோபமும் காவல்துறையினருடனான வழக்குரைஞர்களின் நேரடி மோதலாகவும் தமிழகத்தில் பரிணமித்திருக்கிறது.

எழுத்தாளர்கள் கோணங்கி, பிரபஞ்சன், அரசியல் தலைவர்கள் தா.பாண்டியன், தொல்.திருமாவளவன் போன்றவர்களின் வழி அறிவுமட்டத்தில் இந்தக் குரல் வேறொரு தளத்தில் தமிழகத்தில் தெளிவாகக் கேட்கிறது. தமிழக மக்கள் – கட்சி அரசியலுக்கு அப்பால் – ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் திரண்டிருக்கிறார்கள்.

ஈழத்தமிழருக்கு ஆதரவான தமிழக மக்கள் இயக்கத்தில் பெரும் மாறுதலை நிகழ்த்திய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியனை என்னால் சில நிமிடங்கள் சந்தித்து உரையாட முடிந்தது. தா.பாண்டியன் தனது நிலைபாட்டில் தெளிவாக இருக்கிறார். வைகோ, மருத்துவர் ராமதாஸ், தொல்.திருமாவளவன், பழ.நெடுமாறன் போன்றவர்களுடன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கூட்ட மேடையைத் தான் பகிர்ந்து கொள்வது, இந்திய அரசியல் சார்ந்த கூட்டணித்தன்மை கொண்டதல்ல என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். இலங்கையில் நடைபெறும் தமிழ் மக்களின் மீதான சிங்கள அரசின் மிருகத்தனமான தாக்குதலை நிறுத்துவதற்கான நடவடிக்கையே அவரது நோக்கம்.

இலங்கை அரசை அரசியல் தீர்வை முன்வைக்க அவர் கோருகிறார். விடுதலைப் புலிகளின் பல்வேறு அரசியல் தவறுகளை – சகோதரப் படுகொலைகள் மற்றும் ஏகப்பிரதிநிதித்துவம் போன்றவை குறித்து அவர் மறக்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை. கம்யூனிஸ்ட் என்பவன் சமவேளையில் சர்வதேசியவாதியாகவும் தேசியவாதியாகவும் மனிதனாகவும் இருக்க அவர் கோருகிறார். இவற்றுக்கு இடையிலான இணக்கம் குறித்தும் அவர் அறிந்திருக்கிறார்.

மொழி-நிலம்-பண்பாடு போன்றவற்றுக்கான அவாவாக தேசிய கோஷத்தை, அதனது ஜனநாயக அவாவை அவர் புரிந்து கொண்டிருக்கிறார். சிங்கள இனவிஷமேறிய நிவையில் முழுத்தமிழ் இனத்தவர்களையும் கோமாளிகள் எனச் சரத் பொன்சேகா என்கிற சிங்கள ராணுவத் தளபதி ஏசுகிறபோது, தோழர்.தா.பாண்டியனுக்குள் தானும் தமிழன் எனும் பெருமிதம் எழுகிறது. இலங்கை சிங்களவருடையது என்றும், தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என்றும் ஏசுகிற இனவாதி சரத் பொன்சேகா பற்றிப் பேசாமல் கண்ணை மூடிக்கொண்டு, தோழர்.தா.பாண்டியனின் அரசியல் விவேகத்தின் மீது சந்தேகம் எழுப்புகிற சந்தர்ப்பவாதப் ‘பின்நவீனத்துவ முன்னுரை மன்னன்’ அ.மார்க்ஸ் மாதிரியில் தோழர். தா.பாண்டியனால் இருக்க முடியவில்லை.

தமிழக மக்களை, அதனது பிரதிநிதிகளை ஒரு பொருட்டாகவே கருதாத இந்திய அரசின் நடத்தையின் மீது அவருக்குத் தீராத கோபம் இருக்கிறது. மனித குலத்துக்கு எதிரான குற்றம் புரிகிறது இலங்கை அரசு எனும் அவர், பிரச்சினையை ஐக்கியநாடுகள் சபைக்கு எடுத்துச் செல்வதில் முனைப்புடன் செயல்படுகிறார். குறிப்பான வரலாற்று அறிவு இல்லாமல் மார்க்ஸ்-லெனின்-ஸ்டாலின் மேற்கோள்களின் அடிப்படையில் தேசிய இனப் பிரச்சினையை மார்க்சியர்கள் அணுகுகிறார்கள் எனும் அவப்பெயரை அவர் மறுதலித்திருக்கிறார்.

சகலவற்றுக்கும் மார்க்சியம் நிவாரணி என்பதை நாம் காலப் போக்கில் மறுத்திருக்கிறோம். சகலவாற்றுக்கும் பெண்ணிலைவாதம் நிவாரணி என்பதையும் நாம் மறுக்கிறோம். சகலவற்றுக்குமான தேசிய நிவாரணியையும் நாம் மறுக்கிறோம். தற்போது சகலவற்றுக்கும் நிவாரணியாக தலித்தியப் பார்வை முன்வைக்கப்படுகிறது. இதனையும் நாம் மறுதலிக்கவே வேண்டியிருக்கும். பரஸ்பரம் ஊடறுத்துச் சிந்தித்தலும், பரஸ்பரம் ஏற்பதும் நிராகரித்தலும் எனவே இனியான விடுதலைக் கோட்பாடு உருவாக முடியும்.

தமிழக தலித்திய-பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்கள் கோட்பாட்டளவில் மார்க்சியத்துக்கு எதிரில் தம்மை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வழிகாட்டுதலிலான தலித்தியம் தமிழகத்தில் இப்போது தேங்கிப் போய்விட்டது. மார்க்சியர்களையும், புரட்சியாளர்களையும் விமர்சிப்பதில் காட்டிய முனைப்பை இவர்கள் அடக்குமுறையாளர்களிடமும் இனவெறியர்களிடமும் ஏகாதிபத்தியங்களிடமும் மதஅடிப்படைவாதிகளிடமும் முதலாளித்துவத்திடமும் காட்டவில்லை. இவர்களது அரசியல் சாதிநீக்க அரசியல் அல்லாமல், சாதிகாக்கும் அரசியலாக ஆகிப் போனது. பிறர்விலக்க இயல்பு என்பது அடையாள அரசியலின் தர்க்க நீட்சி. இதனாலேயே இவர்கள் பிளவுண்டு கிடக்கிறார்கள். இந்த சாதிகாக்கும் அடையாள அரசியலைத் தற்போது ஆதிக்கசாதியினரான கொங்குவேளாளர்கள் வெளிப்படையாக எடுத்திருக்கிறார்கள்.

ஆதிக்க சாதிகாக்கும் அரசியலுக்கு எதிர் அரசியல் என்பது சாதிநீக்க-இடதுசாரி அரசியல் ஒற்றுமையின் மூலமே சாத்தியம். அதற்கான திசை நோக்கி தலித்திய அரசியல் நகர்வதற்கான தடம் தெரியவில்லை. தேர்தல் அரசியலில் தமது சாதிக்கான அதிகாரம் என்பதாகவே அடையாள அரசியல் சென்று அடைந்திருக்கிறது. இதனது பிறிதொரு பரிமாணமாகவே மார்க்சியம் மற்றும் தேசியம் குறித்த விமர்சனமாகத் துவங்கி, சிங்கள பௌத்த அரசதிகாரத்தின் பங்காளியாக இந்த தலித்திய அடையாள அரசியல் இலங்கை நிலைமையில் ஆகியிருக்கிறது.

சேகுவேரா பெயரையும் சொல்லிக் கொண்டு, சுத்தி அரிவாள் கொடியுடன் சிங்கள இனவாதம் பேசுகிற ஜே.வி.பி.குறித்து ஒரு நிiபாட்டுக்கு வருவதற்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகியிருப்பதை நான் சந்தித்த முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கச் செயலாளர் தோழர்.ச.தமிழ்ச்செல்வன் வருத்தத்துடன் ஒப்புக்கொண்டார். மார்க்சிஸ்ட் கட்சி இப்பிரச்சினையில் தமிழக மக்களிடமிருந்து அந்நியமாகியிருப்பதை தனிப்பட்ட வகையில் நான் பேசிய பல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் ஒப்புக்கொண்டார்கள். இனத்தின் அடிப்படையில் அல்லாவிட்டாலும் ஒரு சர்வதேசியக் கடமையாக போரை நிறுத்த வேண்டுவது தமது கடமையாக இருக்கிறது என்பதனையும் நான் பேசிய தோழர்கள் ஒப்புக்கொண்டார்கள்.

பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றுபட்டுச் செயல்படுகிற இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஈழப் பிரச்சினையில் ஒத்த கருத்துக்கு வந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் பல தோழர்கள் பகிர்ந்து கொண்டார்கள். சிற்சில நடைமுறைப் பிரச்சினைகள் இருந்தாலும், இலங்கை இனப் பிரச்சினை குறித்து இரு கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஆழ்ந்த அக்கறையும் அவதானமும் கொண்டிருக்கிறார்கள். சிக்கலை ஆழ்ந்து பயின்று வருகிறார்கள். சிங்கள இனவாத அரசு, ஜே.வி.பியின் இனவாதம், விடுதலைப் புலிகளின் அரசியல் தவறுகள் என்பனவற்றை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்தத் தெளிவிலிருந்துதான் ‘ தமிழ் மக்களின் மீதான யுத்தத்தை நிறுத்து, அரசியல் தீர்வை முன் வை’ என இலங்கை அரசை அவர்கள் வலியுறுத்திக் கேட்கிறார்கள்.

ஸதாம் குஸைன் ஆட்சிக்கு வந்ததும் கம்யூனிஸ்ட்டுக்களைத் தான் முதலில் வேட்டையாடினான். இந்தக் காரணத்தினால் பாக்தாத் மீது அமெரிக்க மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் குண்டு போட்டபோது கம்யூனிஸ்ட்டுகள் அமெரிக்காவை எதிர்க்காமல் பின்வாங்கியதில்லை. ஹமாஸ் இஸ்லாமியக் குடியரசையும் மத அடிப்படைவாதத்தையும் பேசுவதால், இஸ்ரேல் எனும் பிசாசு காஸாவின் மீது குண்டுபோட்டதை எதிர்க்காமல் கம்யூனிஸ்ட்டுகள் கண்பொத்தி வாளாயிருக்கவில்லை. ‘அரசியல் தீர்வை முன்வை, மக்களைக் கொல்லாதே’ என்றுதான் கம்யூனிஸ்ட்டுகள் குரலெழுப்பினார்கள்.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் திசைவழி, போராளி இயக்கங்கள், குறிப்பாக விடுதலைப் புலிகள் முரண்பாடுகளைக் கையாண்ட வழிமுறைகள் போன்றவற்றில் எமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். அரசியல் தீர்வை அரைநூற்றாண்டாக முன்வைக்காத சிங்களப் பெருந்தேசிய அரசு, இப்போது தமிழ் மக்களின் மீது குண்டு போடுகிறது. காஸாவுக்கும் பாக்தாத்துக்கும் புதுக்குடியிருப்புக்கும் மனித அவலம் எனும் அளவில் என்ன வித்தியாசம்? இதனால்தான் ‘இலங்கை அரசே, மக்களைக் கொல்வதை உடனடியாக நிறுத்து, அரசியல் தீர்வை முன்வை’ என்று அழுத்தமாகச் சொல்கிறார் தோழர்.தா.பாண்டியன்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

வவுனியா அகதி முகாம்களில் சுதந்திரமின்றி மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் - ஜோன் ஹோம்ஸ்

Comments 7

  1. மாறன் says:
    17 years ago

    யமுனா ராஜேந்திரன் உங்களுக்கு நன்றிகள். புலிகளும் அரசும் மக்களை
    அதிகார வெறிகளுக்காக பலியாக்குகிறார்கள். இந்த நேரத்தில் மக்களை காப்பாற்ற
    வேண்டிய அரசு தனது வழமையான இனவாத துவேச நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
    இந்தக் கட்டுரை அரச துதிபாடிகளையும் புலி துதிபாடிகளையும் மக்களைப்பற்றி சிந்திக்க வைக்கட்டும்.

  2. Kurupam says:
    17 years ago

    புலிகள் நேற்று கொழும்பில் குண்டு போட்டதையும் பாண்டியன் நெடுமாறன் திருமாமறவன் கண்டிப்பார்களா? அல்லத அது சிங்களம் கொல்லபபடத்தான் வேணும் என்னபார்களா? இதில் இலங்கை அரசுக்கு முன் புலிகளளைத்தான் கண்டிக்க வேண்டும் புலிகள் இப்பவே இந்திய அரசிடம் இந்திய அரசின் நிலைப்பாட்டடிக்கு ஏற்ப உடன்பட வேண்டும் அப்போத தான் தமிர்கள் ஏதாவது பெற்றுக் கொள்ள முடியும் ஆனால் புலிகளின் பிரச்சிசை தமிழர்கள் அல்ல தலைவரை எப்படி அரசிடமிருந்தும் இந்தியாவிடமிருந்தும் பாதுகாப்பது என்பதே ஆகவே தலையும் பொட்டும் தாங்களாகவே சயனைட்டை கடித்தால் தமிழர்க்கு விமோசனம் நிச்சயம் கிடைக்கும் இப்பவும் தூரம் அதிகமில்லை அந்த இலட்சியத்தை அடைய – எப்படி முடியும்??

  3. ashok says:
    17 years ago

    புலிகளின் வீழ்ச்சி நாம் எதிர்பார்த்ததே. மனித சமூகத்தை நேசிக்காத பாசிச அமைப்பின் விதி இவ்வாறுதான் முடிவுறும். அதேவேளை புலிகளின் இந்த பாசிச வெற்றிடத்தை பாசிச தன்மை கொண்ட ஏனைய ஆயுத வன்முறைக் குழுக்கள் நிரப்பும். அதற்கான நிகழ்ச்சி நிரல் தொடங்கிவிட்டது. வன்முறைக்கு எதிராக பேசிய பல “நண்பர்கள்” இந்த ஆயுத குழுக்களின் தொங்கு தசைகளாக மாறிவிட்டதே இதற்கு சாட்சி. பிரான்சில் உள்ள பல நண்பர்களோடு பேசும் போது இவர்களின் இன்றைய அரசியலும் நடவடிக்கைகளும் அருவருக்கத்தக்கதாக இலங்கை அரசின் கொடூரமான கொலைகளை நியாயப்படுத்துவதாக இருக்கிறது. இவர்கள் சில காலங்களுக்கு முன் வன்முறை பற்றி, ஐனநாயகம் பற்றி வாய்கிழிய கத்தியவர்கள். அரசின் தொங்கு தசைகளாக மாறிய தங்களின் செயலுக்கு எந்தவித வெட்கமும் கூச்சமும் அற்றவர்களாக இருப்பதுதான் ஆச்சரியம். சிலவேளை இந்த நண்பர்கள் பற்றிய எம் மதிப்பீடுதான் தவறோ தெரியவில்லை. சில நாட்களுக்கு முன் இந்த நண்பர்களை சந்தித்தேன். இச் சந்திப்புக்கு பின் நான் மிகுந்த அருவருப்பும் அவமானமும் கொண்ட மன நிலையோடு திரும்பினேன். இவர்களோடு ஏதோ சில காலம் நானும் ஐனநாயகம், வன்முறை எதிர்ப்பு ,மனித உரிமை மீறல்கள் பற்றியெல்லாம் பேசித் திரிந்தவன். இந்தகாலத்தை நினைத்து அவமானமும் வெறுப்பும் கொள்கின்றேன்.

    யமுனாஇ உங்கள் கட்டுரை இன்றைய காலத்தில் முக்கியமானது. புலிகளின் பாசிசத்தை எதிர்ப்பதற்கு புறப்பட்ட நாங்கள் இன்னுமொரு பாசிசத்தை ஆதரிப்பவர்களாக மாறிவிட்டோம். அதிகார ஆசை பல நண்பர்களை ஆட்கொண்டுவிட்டது. சர்வதேச அரசியல் பற்றி சரியான வழிகாணும் தோழர்களும்கூட இலங்கை பிரச்சனையில் அரசின் நிலைப்பாட்டை மக்கள் படுகொலையை ஆதரிப்பவர்களாக இருப்பதுதான் வேதனையானது. என்ன செய்வது அதிகார ஆசை யாரைத்தான் விட்டுவைத்தது?

  4. THASAN says:
    17 years ago

    நல்ல கருத்துக்கள்

  5. katsura says:
    17 years ago

    இனி நிறைய நல்ல விடையங்கள் எழுத வேண்டி என்னை நிர்ப்பந்திக்கிறீர்கள். அப்படியே தொடருவோம்.

  6. katsura says:
    17 years ago

    எனக்கென்ன நல்ல அழகான அமாழி அதிகமாகத் தொpயாது

  7. katsura says:
    17 years ago

    இனியொரு நண்பர்களுக்கு.
    நாம் சில விடையங்களை ஏன் செய்கிறோம். எதற்குச் செய்கிறோம் என்று சிந்தியாது பல நேரங்களில் குழம்பிப் போவது நமது நோக்கங்களையும் செயற்பாடுகளையும் பாதாள குழியில் தள்ளிவிட்டுவிடும். யமுனா எழுதிய கட்டுரைக்கு நான் எழுதிய பதில் எந்த வகையில் உங்களைப் பாதித்திருக்கிறது. ஈழவிடுதலைப் போராட்டத்தின் திசைவழிஇ போராளி இயக்கங்கள்இ குறிப்பாக விடுதலைப் புலிகள் முரண்பாடுகளைக் கையாண்ட வழிமுறைகள் போன்றவற்றில் எமக்கு விமர்சனங்கள் இருக்கலாம் என்று எவ்வித வலியுமற்று கதை சொல்லக் கூடிய அளவிலிருக்கும் யமுனாவுக்கு காவடி எடுக்க உங்களால் முடிகிறது. காஸாவுக்கும் பாக்தாத்துக்கும் புதுக்குடியிருப்புக்கும் மனித அவலம் எனும் அளவில் என்ன வித்தியாசம்? என்று பரலோகத்திலிருந்து கேட்கும் யமுனாவுக்கு நான் எழுதிய பதிலை இரண்டு தடவை நீக்கியுள்ளீர்கள். நல்லது. இதற்குப் பிறகு கருத்துச் சுதந்திரம் பற்றி நீங்கள் வாய் கிழியப் பேசுவீர்கள். விடுதலைப்புலிகள் புதுக்குடியிருப்பிலுள்ள மக்களை வெளியேறவிடாது தடுத்துவைக்கிறார்கள் மீறியபோது காலிற்கு கீழே சுடுகிறார்கள் என்று உலகம் பூராவும் பேசுகிறார்கள். உங்களுக்கும் யமுனாவுக்கும் மாத்திரமே தொpயாமல் இருக்கிறது.
    ஆறுதலாகப் பேசுவோம்
    கற்சுறா

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In