பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கானை கொலை செய்யுமாறு அமெரிக்க புலனாய்வுத் துறையான சி.ஐ.ஏ. தன்னிடம் கோரியதாக அமெரிக்காவின் தனியார் பாதுகாப்பு முகவர் அமைப்பான பிளக்வோட்டரின் ஸ்தாபகர் எரிக் பிரின்ஸ் தெரிவித்துள்ளார்.
செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ள பிரின்ஸ் கானை கொலை செய்யுமாறு சி.ஐ.ஏ. தன்னிடம் கேட்டதாகவும் ஆனால் வாஷிங்டனிலிருந்த அதிகாரிகள் தேவையற்ற சர்ச்சையை உருவாக்க விரும்பவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் சந்தேகத்திற்கிடமானவர்கள் மீது சி.ஐ.ஏ. நடத்திய சில நடவடிக்கைகளிலும் தமக்கு பங்கிருந்ததாக பிரின்ஸ் கூறியுள்ளார்.சி.ஐ.ஏ. தொழிற்படும் இடங்களில் தனிப்பட்ட பாதுகாப்புச் சேவைகளை வழங்க ஆரம்பித்ததிலிருந்து இவ் அமைப்பு உலகளாவிய ரீதியில் பிரபலமடைந்தது.ஆனால், சி.ஐ.ஏ.யின் இரகசிய நடவடிக்கைகளில் தமக்கு தொடர்பேதும் இருக்கவில்லையென பிளக்வோட்டரின் தற்போதைய நிர்வாகம் மறுத்துள்ளது.