பாகிஸ்தானுக்கு சமீபத்தில் மிகப்பெரும் அளவிற்கு அமெரிக்கா நிதியுதவி அளித் திருப்பது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் பெறப்படும் இந்த நிதி இந்தியாவுக்கு எதிரான பகைமை நடவடிக்கை களுக்கு பாகிஸ்தானால் பயன்படுத்தப்படுகிறது என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய வெளியுற வுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, சமீபத்தில் பாகிஸ் தானுக்கு 1.5 பில்லியன் டாலர் நிதி உதவி அளிக்க அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.