பல்கலை மாணவர்கள் மீதான அரச வன்முறைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறு அழைக்கின்றோம்.
தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த தமது உறவுகளுக்கு கடந்த 27-11-2012 அன்று ஈகைச் சுடரேற்றி நினைவு கூர்ந்தார்கள் என்று கூறி யாழ் பல்கலைக்கழக மாணவிகளதும் மாணவர்களதும் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவத்தினர் துப்பாக்கிகளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவர்களைத் தாக்கியும் இருந்தனர். இச்சம்பவங்களைக் கண்டித்து மறுநாள் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நாடாத்தியிருந்தனர். அமைதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் மாணவ மாணவிகளால் மேற்கொள்ளப்பட்ட இப்போராட்டமானது சிறீலங்க அரச பயங்கரவாதத்தினால் இரும்புக் கரம்கொண்டு அடக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் திருப்தி கண்டுவிடாத அரச பயங்கரவாதம் பல்கலைக்கழக மாணவர்களில் நான்குபேரை கைது செய்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் மூலம் விசாரித்தும் வருகின்றது.
முள்ளிவாய்க்காலுடன் தமிழினத்தின் உரிமைப்போராட்டத்திற்கு முடிவுரை எழுதிவிட்டதாக நினைத்த சிறீலங்கா அரசு தமிழ் மக்களின் உணர்வெழுச்சி கண்டு அதனை இரும்புக் கரம் கொண்டு அடக்க முனைகின்றது. தமிழ்த்; தேசிய போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் வகிபாகம் முக்கியமானதும் பிரித்தறிய முடியாததுமாகும். யாழ் பல்கலைக்கழக சமூகத்தினை அடக்கி ஒடுக்க அரச இயந்திரம் முயற்சிப்பது தமிழ்த்; தேசிய அரசியலுக்கு அவர்கள் செய்துவரும் பங்களிப்பை இல்லாது ஒழிக்கும் நோக்கிலேயே. யாழ் பல்கலைக்கழக மாணவர்களை இலக்குவைத்து தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்குவதன் மூலம் அவர்களை மௌனிக்கச் செய்யலாம் என அரச இயந்திரம் கற்பனை காண்கின்றது. இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அணிதிரளுகின்றபோதுதான் பல்கலைக்கழக மாணவர்களது பாதுகாப்பை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் பாதுகாப்பையும் தமிழ்த்; தேசத்தின் இருப்பையும் உறுதிப்படுத்த முடியும் என்ற யதார்த்தப் புறநிலையுணர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் கண்டன ஆர்ப்பாட்டமொன்றினை ஏற்பாடு செய்துள்ளோம். எமது இத்தகைய போராட்டங்களுக்கு ஆதரவாகவும், இத்தகைய போராட்டங்களை சர்வதேச மயப்படுத்துமுகமாகவும் புலம்பெயர் தமிழ் உறவுகள் குறிப்பாக இளையோர்கள் தாம் வாழும் நாடுகளில் இத்தகைய போராட்டங்களை சமகாலத்தில் முன்னெடுக்க வேண்டுமென்றும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் தமிழ் இளையோர் அப்பல்கலைக்கழகங்களின் கவனயீர்ப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் அன்போடும் உரிமையோடும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
யாழ் நகரில் இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
இடம்:- யாழ் பஸ் நிலையம் முன்பாக உள்ள சோமசுந்தரப்புலவர் சிலையருகில்
நேரம்:- செவ்வாயக்கிழமை (2012-12-04) காலை 11.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை
There are 17 University Campuses all over the country in all 9 provinces.
Again and again you are writing “There are 17 University Campuses all over the country” what is the connection with this protest and your comment
Can u explain pls…
Ravi, the students are born during the war or the traumatic period. It is a different culture at UOJ or EUSL or for the matter SEUSL compared to other University Campuses outside the North and East. There is an ethnic divide between the security forces and the civilians in the North and East like Kashmir and/or Palestine.