இனச்சுத்திகரிப்பு
வன்னியில் கொத்துக்கொத்தாக் மக்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் உலகின் அத்தனை அதிகார மையங்களும் அண்ணார்ந்துபார்த்து இரசித்துக்கொண்டிருந்தன. ஆயிரமாயிமாக அல்ல, லட்சம் லட்சமாக புலம்பெயர் தமிழர்கள் ஐரோப்பிய அமரிக்க நாடுகளின் தெருக்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். குழந்தைகள், முதியோர், ஊனமுற்றோர் என்று யாரும் விதிவிலக்கின்றி ஐரோப்பிய வீதிகள் நிரம்பின. இதனால் எல்லாம் இலங்கை அரசுக்கு யாரும் அழுத்தங்களை வழங்கவில்லை. இலங்கை அரசோடு பேரம் பேசி தமக்கு வேண்டியதை ஏகபோகங்கள் பெற்றுகொண்டன. இலங்கை அரசு தான் திட்டமிட்ட அனைத்தையும் நிகழ்த்தி முடித்தது.
இன அழிப்பிற்குக் கிடைத்த வெற்றியின் அடிப்படையிலிருந்து அதன் மறுபக்கமான இனச் சுத்திகரிப்பை தமிழ்ப் பிரதேசங்களில் கட்டவிழ்த்து விட்டுள்ளது இலங்கை அரசு. கேட்பதற்கு யாரும் இல்லை. உலகின் அதிகாரவர்கத்தின் கூறுகள் ஆங்காங்கு சில அறிக்கைகளை வெளியிட்டுவிட்டு உறங்கிப் போகின்றன.
நம்பிக்கை இழந்த மக்கள்
லட்சங்களாக அதே வேகத்தில் மறுபடி போராட்டங்களை நடத்துவதற்கு மக்கள் தயாரில்லை. அவர்களிடமிருந்த நம்பிக்கை பறிக்கப்பட்டுவிட்டது. இந்த தசாப்தம் கண்டிராத கோரமான மனிதப்படுகொலைகளையே நிறுத்த முடியாத எழுச்சிகள் எப்படி சில பெண்கள் இராணுவத்தில் வலிந்து இணைத்துக் கொள்ளப்படதையும், பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதையும் நிறுத்தும் என்று கேட்கிறார்கள். நியாயமான கேள்வி.
இந்த நிலையில் சர்வதேச அரசியல் சூழலை சரிவரக் கையாளாமல் தான் போராட்டம் அழிந்து போனது என்றும், போராட்டத்தில் தவறான ஒரு சிலர் புகுந்து கொண்டதால் தான் அழிந்து போனது என்றும் மிகவும் குறுகலன அரசியல் ‘ஆய்வுகளை’ குறுகிய தேசிய வாதிகள் முன் வைக்கிறார்கள்.
தோற்கடிக்கப்பட்ட முடியாத போராட்டங்களும் தோல்வியும்
இதே ‘சர்வதேச’ அரசியல் சூழலில் தான் குர்தீஷ் மக்களின் போராட்டம் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது; கிரேக்கத்தில் பெரும்பான்மையான மக்கள் இடதுசாரிகளின் கீழ் அணித்திரண்டு போராடுகிறார்கள்; காஷ்மீரில் வீட்டுக்கு ஒரு இராணுவம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் போது கற்களைக்கூட ஆயுதமாகப் பயன்படுத்தி மக்கள் போராடுகிறர்கள்; நாகாலாந்தில் பேச்சுவார்த்தை நடத்த முடியாமல் நெதர்லாந்தில் அவர்களின் தலைவர்களைத் தேடிச்சென்று பேரம் பேச முயற்சிக்கிறது இந்திய அரசு . பிலிப்பைன்சில் நோர்வே தனது பேச்சுவார்த்தை தரகு வேலையால் அழிக்க முற்பட்ட போராட்ட அமைப்பு புதிய உத்வேகத்துடன் தலைகாட்டுகிறது;
நேபாளத்தில் புதிய கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிருக்கிறது; இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிராகவும், ஏகாதிபத்தியங்களில் தலையீட்டுக்கு எதிராகவும் தமது இராணுவக் கட்டமைப்புக்களைப் பலப்படுத்தப்போவதாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறது; இந்திய நிலப்பரப்பின் அரவாசிக்கு மேற்பட்ட பகுதி போராளிகளின் பலத்திலேயே தங்கியுள்ளது. ஈராக்கில் உலகின் வல்லரசை எதிர்த்து இன்னும் மக்களும் ஆயுதக் குழுக்களும் போராடுகின்றன; பாலஸ்தீனத்தை அமரிக்க, ஐரோப்ப்பிட, இஸ்ரேல் கூட்டு வெற்றிகொள்ள முடியாமல் திணறுகிறது; தென்னாபிரிக்கா, அங்கோலா, கொங்கோ, லத்தீன் அமரிக்க நாடுகள் என்று உலகின் ஒவ்வோர் கொல்லைப்புறத்திலும் போராட்டங்கள் முன்னைய தசாப்தத்தை விட முன்னோக்கியே சென்றிருக்கின்றது. வாழ்வதற்காகப் போராடும் மக்கள் கூட்டத்திலுருந்து போராடுவதற்காக வாழும் அர்த்தமுள்ள மனிதர்ககள் நாளைய உலக மாற்றுவதற்கான பலம்பெற்றவர்களாகியிருக்கிறார்கள்.
மேற்குறிப்பிட்ட அத்தனை போராட்டங்களும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் என்று நேரடியாகவே அறிவிக்கப்பட்டு நடத்தப்படும் திட்டமிட்ட அரசியல் போராட்டங்கள். ஈழப் போராட்டத்தில் நடைபெற்றது போல ஒட்டிக்கொள்வதற்கு வல்லரசுகளையும் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளையும் அவர்கள் தேடியலையவில்லை. அந்த நிலையில் கூட அவர்களை ஒடுக்கவோ முற்றாக அழிக்கவோ முடியவில்லை.
ஆக, ஏகாதிபத்தியங்களும் அல்லது சர்வதேசம் என்று அரசியல் ‘மேதவிகள்’ அடிக்கடி உச்சாடனம் செய்யும் நாடுகளும் தமக்கு நேரடியான எதிரிகளாகப் பிரகடனப்படுத்தியவர்களை அழிக்காமல் ஈழப் போராட்டத்தை மட்டும் அழித்தது ஏன்?
இதற்கான வினாவிற்கு விடை காண்பதற்கு முன்னர் இதிலிருந்து தெளிவாகும் ஒன்றைக் காணலாம். ஈழப் போராட்டம் அழிக்கப்பட்டதற்கு சர்வதேச அரசியல் நிலைமை மட்டும் காரணமல்ல.சர்வதேச அரசியல் நிலைமைகளால் அழிந்துபோகக் கூடிய அரசியல் வழிமுறையையே போராட்டம் கொண்டிருந்தது.
‘காய் நகர்த்திகளும்’ இனச்சுத்திகரிப்பும் இணையும் புள்ளி
மக்கள் பலத்தில் தங்கியிராமல் சர்வதேச நாடுகளின் ‘காய்நகர்த்தும்’ வால்பிடி அரசியலுக்குள் நுளையாமல், கொலைகாரர்களின் காலடியில் வசிக்கும் ஐந்தாம்படை அரசியலாக்காமல் தமது மக்களின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இன்னும் நம்பிகையோடிருக்கிறார்கள்.
சர்வதேச அரசியல் மட்டும் தான் அனைத்துக்கும் காரணம், நாங்கள் ‘காய்நகர்த்தி’ பழுக்க வைக்கிறோம் பேர்வளிகள் என்று புறப்பட்ட பிழைப்புவாதிகள், மேற்கு நாட்டு உளவு நிறுவனங்களோடும் அழிவு சக்திகளோடும் ஐந்து நட்சத்திர விடுதிகளிலும், அதிநவீன கட்டடங்களிலும் கூட்டம்போட்டு கும்மாளமடித்துக்கொண்டிருக்கும் போதே ஒவ்வோரு அங்குல நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டது. மக்கள் சூறையாடப்பட்டார்கள். போதைப்பொருள் இளைஞர்களின் நாளாந்த தேவையானது.
இன்னும் அவர்கள் அதே காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் போதே யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினுள் இராணுவம் நுளைந்து மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியிருக்கிறது. பலவந்தமாகப் பெண்களை இராணுவத்தில் இணைத்திருக்கிறது.
அழிவிற்கான முன்னுதாரணங்கள்
இந்தச் சூழலில் நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் சுயநிர்ணய உரிமைக்கான போராட்ட்ட அரசியலின் அழிவு சக்திகளைக் கோடிட்டுக் காட்டுகின்றது.
முதலாவதாக, அமரிக்க தூதரகம், மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து வெளியிட்ட அறிக்கையும் அதற்கு புலம் பெயர் இனவாதிகளால் வழங்கப்பட்ட முக்கியத்துவமும்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னர் இலங்கை அரசு நிகழ்த்தும் திட்டமிட்ட இன அழிப்பின் பின்னணியில் செயற்படும் அமரிக்கா, பெண்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட போதோ, நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட போதோ மௌனம் சாதித்தது! ஒருலட்சம் அப்பாவிகள் கொன்று குவிக்கப்பட்டபோது செய்மதி ஊடாகப் பார்த்து ரசித்துக்கொண்டு சாதித்த அதே மௌனம்!!
எங்காவது போராட்டங்கள் என்று பேச்சுவந்தாலோ அதுவும் அது சிறிய சக்தியாகக் கூட உருவாகும் என்றால் அமரிக்காவிற்கு அக்கறை வந்துவிடுகிறது. அவர்களின் நோக்கம் தெளிவானது; போராட்டங்கள் எழுச்சிகளாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமானால், அமரிக்கா காப்பாற்றும் என்ற போலி நம்பிக்கை கொடுக்கப்பட வேண்டும். இதனூடக போராட்டங்களை நிறுத்த வேண்டும். உலகம் முழுவதும் மனித உயிர்களைக் குடிக்கும் அமரிக்காவின் அக்கறை முன்வைத்து காய்களை நகர்த்த இனவாதிகள் தயாராகியிருப்பார்கள்.
இரண்டாவதாக தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தெருவில் இறங்கிப் போராடிய சிங்கள மாணவர்களின் போராட்டம். ஈழப் போராட்டத்தின் அழிவிற்கு கணிசமான பாத்திரம்வகித்த வை.கோபாலசாமி இந்தியா சென்ற இந்திய வம்சாவழித் தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திவிட்டு போராட்டம் நடத்தினோம் என மார்தட்டிக்கொண்டாரே, அதைவிட சிங்கள மாணவர்களின் போராட்டம் ஆயிரம் மடங்கு வலிமைவாய்ந்தது.
யார் காட்டிக்கொடுப்பாளர்கள்?
தமிழ்ப் பேசும் மக்க்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் சிங்களப்பகுதியில் எங்கிருந்தும் எழுந்துவிடக் கூடாது என்பதில் இலங்கை அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. சிங்கள் மக்களை பேரினவாத் நச்சூட்டி அடக்கி ஆண்டுகொண்டிருக்கிறது. எங்காவது ஒரு மூலையில் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிரான போராட்டம் உருவாகுமானால், அதனை ஒடுக்குவதற்கு அவர்களையே பயன்படுத்திக்கொள்கிறது.
அது எவ்வாறு நடைபெறுகிறது?
சிங்கள மாணவர்கள் போராடிய செய்தியை இனவாத, பிழைப்புவாத இணையங்கள் இருட்டடடிப்புச் செய்தன. அதே நாளில் அவசர அவசரமாக, பல்கலைக்கழக் மாணவர் சமூகம் வெளியிட்டதாக ஒரு போலி அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் ‘தேசியத் தலைவர் வழிகாட்டலில் தனிநாடு பிடிப்பதற்காக புலம் பெயர் தமிழர்களை ஒன்றிணையுமாறு கோரப்பட்டிருந்தது’.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மேதின ஊர்வலத்தில் புலிக் கொடியோடு உள்நுளைந்து அந்த ஆர்ப்பாட்டத்தைப் புலிகளின் ஆர்ப்பாட்டமாகக் சிங்கள மக்களுக்குக் காட்ட முனைந்த இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கும் இதற்கும் என்ன வேறுபாடு. இலங்கை அரசு மேற்கொண்ட அதே நடவடிக்கைகளை இனவாத பிழைப்புவாத புலம்பெயர் பிரமுகர்கள் மேற்கொள்கிறார்கள்.
அடிப்படையில் இந்தப் பிழைப்பு வாதிகள் மாணவர்களின் நியாயமான போரட்டத்தைத் திசைதிருப்பி தங்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் உட்படுத்த முனைகிறார்கள்.இவர்களுக்கு மக்கள் நலனிலோ மாணவர்கள் நலனிலோ அக்கறை கிடையாது. தமது சொந்த பிழைப்புவாத நலன்களே இவர்களுக்குப் பிரதானமானது.
ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் சரியான திசையில் சிங்கள மக்களின் ஒடுக்கப்படும் பகுதியினரின் ஆதரவோடும் பங்களிப்போடும் நடைபெறுமானால் இலங்கை அரசு ஆட்டம்காண ஆரம்பிக்கும். அது எப்படி அரசுக்கு எதிரானதோ அதே போன்று அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழ் இனவாதிகளுக்கும் எதிரானது. இங்குதான் தமிழ் குறுகிய தேசிய வாத இனவாதிகளும் இலங்கை அரச அதிகாரவர்க்கமும் ஒன்றிணைகின்றனர்.
இவர்கள் ஒருங்கும் புள்ளியிலிருந்தே அழிவு முளைவிடுகிறது. இனப்படுகொலைக்கும் இனச் சுத்திகரிப்பிற்கும் அவர்களுக்கு நியாயம் கிடைக்கிறது.இலங்கையில் வாழும் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பிரிந்துசெல்லும் உரிமைக்காகப் போராடுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை.
ஈழத்தமிழர்கள் மீது சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை இலங்கை அரசு திணிக்கிறது. இலங்கை அரசே அவர்கள் போராடுவதைத் தவிர வேறு வழி கிடையாது என்று நடைமுறையில் கூறுகிறது. அவர்களுக்குப் போராடுவது மட்டுமே வழி. அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும். உலகம் முழுவதும் பரந்திருக்கும் ஜனநாயக முற்போக்கு சக்த்திகளோடு இணைந்து ஆதரவுப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கான அனைத்து இணைவுகளும், பங்களிப்புக்களும், திட்டமிடலும் கணநேர தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்.
மக்களுக்கு நம்பிக்கையை உரைப்பது எப்படி?
ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் புலம்பெயர்ந்திருக்கும் தமிழர்கள் இதன் ஆதார சக்தியாக அமைய வேண்டும். ஆனால், நம்பிக்கை இழந்து துயத்தை மட்டுமே தேக்கி வைத்திருக்கும் இவர்களுக்கு நம்பிக்கையை எப்படி உரைப்பது?
ஒரு வழிதான் நம்முன்னே காணப்படுகின்றது.
அவர்களிடம் நடந்த தவறுகளை வெளிப்படையாகச் சொல்லவெண்டும். தோல்விக்கான காரணங்களை முன்வைக்க வேண்டும். தோல்விகளையும் தவறுகளையும் நியாயப்படுத்தினால் இன்னொரு தோல்விக்கான தயாரிப்புக்கள் நடைபெறுவதாகவே அவர்கள் நம்புவார்கள்.
போராட்டத்தின் ஆரம்பம், அதன் படிநிலை வளர்ச்சி அதனோடு கூடவே வளர்ச்சியடைந்த தவறுகள், என்று அனைத்துமே மக்கள் முன்னிலையில் முன்வைக்கப்பட வேண்டும்.
பாரிய தவறுகளும், பிறழ்வுகளும் உலகில் போராடுகின்ற முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கும், இடதுசாரிகளுக்கும் தெளிவாக, தேவையானால் புள்ளிவிபரங்களோடு தெரியும். அவர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள். இருட்டடிப்புச் செய்யப்பட்டது தமிழ்ப் பேசும் மக்களுக்கு மட்டும்தான். பிழைப்புவாதிகளால் திட்டமிட்டு இது நிகழ்த்தப்படுகிறது. நாங்கள் தவறுகளைச் சுயவிமர்சனம் செய்யாதவரை யாரும் எம்மோடு இணைந்துகொள்ளப்போவதில்லை.
மறுபுறத்தில் தவறுகளை எதிரிகள் குற்றச்சாட்டுக்களாக முன்வைத்து சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களே சாத்தியமில்லை என்று மக்களை அவநம்பிக்கைக்கு உட்படுத்துவார்கள்.
உதாரணமாக இனிமேல் ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை என்று புலி அடிப்படைவாதிகள் கூறுகிறார்கள். மக்கள் இவர்களைப் பார்த்து குழப்பமடைகிறார்கள். ஆயுதப் போராட்டம் என்றால் புலிகள் நடத்திய இராணுவ யுத்தம் என்ற எண்ணத்திலிருந்தே இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. உலகில் ஹிட்லரின் பாசிசத்தை வெற்றியடைந்த போராட்டம் கூட ஆயுதப் போராட்டம் தான் ஆனால் வெற்று இராணுவ யுத்தமாக இருக்கவில்லை.
இதற்கெல்லாம் உதாரணங்கள் இலங்கையில் அரிதாகவே காணப்படுகின்றன. உலகத்தின் வெற்றிபெற்ற போராட்டங்கள் அனைத்துமே மக்கள் யுத்தத்தோடு இணைந்த ஆயுதப் போராட்டங்களே. பாரிய போர்விமானங்களோடும், யுதக்கப்பல்களோடும், ஆயிரமாயிரம் இராணுவத்தோடும், மக்களை சாரிசாரியாக அழித்தும் வியட்னாமில் அமரிக்கா தோல்வியைத் தழுவிக்கொண்டது, ஆயுதமேந்திய மக்கள் யுத்தம் வெற்றிபெற்றது. தோல்வியைத் தழுவிய அமரிக்க இராணுவத் தளபதி ‘காட்டுமிராண்டிகளோடு யுத்தம் நடத்தமுடியாது’ என்று வெளிப்படையாகவே கூறிப் பின்வாங்கிக் கொள்கிறார். காட்டுமிராண்டிகளின் யுத்தம் என அவர் குறிப்பிட்டது தான் ஆயுதமேந்திய மக்கள் யுத்தம். இன்றும் அது தனது வெற்றியை குர்திஷ்தானில் அறிவித்துக்கொண்டிருக்கிறது.
இனிமேல் ‘காய் நகர்த்துவோம்,’ ஆயுதப் போராட்டம் சரிவராது என்று கூறுகிறவர்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள மறுப்பவர்கள். தவறுகளை தங்கள் பிழைப்பிற்காக உள்வாங்கிக்கொள்பவர்கள்.
ஆக, ஆயுதப் போராட்டம் சாத்தியமானதே என மக்களுக்குக் கூறவேண்டுமானால் அவர்களுக்கு நம்பிக்கையை உரைக்க வேண்டுமானால், ஆயுதப் போராட்டம் என்பது என்ன என்பதையும் எப்படி நாம் தவறிழைத்தோம் என்பதையும் கூறவேண்டும். இதனைக் கூற மறுக்கின்றவர்கள் மக்களின் அவநம்பிக்கையில் பிழைப்பு நடத்தும் பிழைப்பு வாதிகள்.
பல்கலைக்கழக மாணவர் போராட்டம் : புதிய அரசியலின் தேவை
இப்போது பல்கலைகழக மாணவர்களின் போராட்டத்தின் பின்னர் பிழைப்புவாதிகளும், ஏகாதிபத்தியங்களும் தவறுகளை மீள உள்வாங்க ஆரம்பித்திருக்கின்றனர். போராட்டத்தை ஒரு அங்குலமாவது முன்நகர்த்த விரும்பாத இவர்கள் அதனை அடியோடு ஒட்ட நறுக்கிவிட தம்மாலான அனைத்தையும் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
நாம் தவறுகளை உணராதவர்கள் என போராடும் மக்கள், எதிர்ப்பியகங்களின் சர்வதேசியம் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது. உலகை அழிக்கும் ஒபாமாவின் கைக்கூலிகளாக இருந்துகொண்டு, சர்வதேச உளவு நிறுவனங்களின் ஐந்தாம் படையாக இருந்துகொண்டு, இராணுவ வாதிகளாகக் காட்டிகொண்ட நாம் எம்மோடு கைகோர்க்கோர்குமாறு யாரைக் கோருவது?
அடையாளங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அரசியலை உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்லும் சுயவிமர்சனத்தோடு உலகின் ஜனநாயக் முற்போக்கு இயக்கங்களை அணுகுவோம். போராடும் மக்களோடு இணைந்து புதிய போராட்டங்களையும் எழுச்சிகளையும் முன்னெடுப்போம். இலங்கை பாசிச அரசிற்கு எதிரான பெரும்பான்மை மக்களின் போராட்டமாக நமது போராட்ட்ங்களை மாற்றுவோம். அழிவுகள் நிறுத்தப்படும். மக்கள் நம்பிக்கை கொள்வார்கள். உலகமக்களின் அங்கமாக இணைத்துக்கொள்ளப்படுவோம்.
பிழைப்பிற்காக மக்களின் அவலத்தைப் பயன்படுத்தும் திருடர்களோடு ஓரணியில் திரள்வது சாத்தியமற்றது. பிழைப்புவாதிகள் உட்பட்ட, இலங்கை இந்திய ஏகாதிபத்திய அரசுகள் ஈறான, அதிகார வர்க்கத்திற்கு எதிராக ஒன்றினைதலே மக்கள் நலனுக்கான ஒன்றிணைதலாகும்.
ஈழத் தமிழர்கள் மீது தீர்வு ஒன்றை தினிக்க முற்படும் எவரும் உணர வேண்டிய ஒன்று என்னவெனில் , அந்த திணிப்பு எத்துணை பல்மானதாக இருந்தாலும் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப் படாததாக இருந்தால் இன்னொரு ஆயுத வன்முறை தவிர்க்க முடியாதது . திணிப்புக்கு உதவும் அரசியல் வாதிகள் செல்வாக்கு இழப்பர்கொஞ்சம் பொறுங்கோ , கொஞ்சம் பொறுங்கோ எகிறி எழும்பாதையுங்கோ, இதைநான் சொல்லவில்லை இதை சொன்னது யார் தெரியுமா ???? சர்வதேச நெருக்கடிகளுக்கான ஆனையகம் !!!! அவர்கள் சொன்ன வரிகளை மானியத்துக்கு மாரடிக்கும் நோர் வேசிய கற் குகை மையத்து ஆவிகள் வகையறாக்கள் மறைக்கலாம் ச்மூக இயங்கியலை இவர்களால் தடுக்க முடியாது என்பதனை யாழ பல்கலைக் கழக சம்பவங்கள் இவர்களுக்கு உணர்த்தியிருக்கும் . International Crisis Group —–states on page 32 that “Both the Sri Lankan government and its main international
partners – China, Russia, India, the U.S., the EU,
Australia and Japan – should recognise that in the absence
of any government willingness to share power, the
TNA leadership is taking a serious risk with its moderate
position. The TNA will find it hard to reduce its demands
further without losing credibility with Tamil voters and
provoking a return to more militant positions.government
policies in the north and east continue along current
lines, and if the government does not begin to implement
the full devolutionary potential of the thirteenth
amendment and ultimately go beyond it, the risk of renewed
conflict can only grow”++++++++++++++http://www.crisisgroup.org/~/media/Files/asia/south-asia/sri-lanka/239-sri-lanka-tamil-politics-and-the-quest-for-a-political-solution see page 32
this is the link for posting above http://www.crisisgroup.org/~/media/Files/asia/south-asia/sri-lanka/239-sri-lanka-tamil-politics-and-the-quest-for-a-political-solution
இலக்கு நியாயமானதாகவும் அவசியமான சமூகநியதியாகவும் இருந்தால் , எவ்வளவு காலம் எடுத்தது , எவ்வளவு செலவு ஆனது , எவ்வளவு நட்டம் ஏற்பட்டது என்பதை வைத்து தீர்மானம் எடுக்க முடியாது . தீர்மானம் இலக்கு அடையப்பட்டதா என்பதை வைத்தே எடுக்கப்பட வேண்டும் என்பதை சரணடைவுவாதிகள் உணர வேண்டும்.
இலக்கு நியாயமானதாகவும் அவசியமான சமூகநியதியாகவும் இருந்தால், தீர்மானம் இலக்கு அடையப்பட்டதா என்பதை வைத்தே எடுக்கப்பட வேண்டும். //agree
.
இலக்கு நியாயமானதாகவும் அவசியமான சமூகநியதியாகவும் இருந்தும் இலக்கு ஏன் அடையப்படவில்லை என்பதை வைத்தே அந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் போராட்ட முறை,அவர்களின் இலக்கு என்ன என்பது பற்றி முடிவு எடுக்கப்பட வேண்டும்.
.
.
தெட்ட தெளிவாக தெரிகிறது தமிழ் மக்களின் விடிவு அவர்கள் இலக்கு அல்ல என்பது.
.உலகே அறியும் அவர்களின் இறுதி நேர செயல்பாடுகளிளிருந்து அவர்களின் இலக்கு சுய நலன் (பிரபாகரனின் உயிர் )மட்டும் தான் என்பது . இதற்கு இடைஞ்சல் தமிழ் மக்கள் என்றால் அவர்களை பலி ஆக்கவும் தயங்க மாட்டோம்(HUMAN SHIELDS ) என்பதின் விளைவு தான் முள்ளிவாய்க்கால் .
.
அதாவது மக்கள் பலி கொடுக்கப்பட்டார்கள் ஒரு பாசிச வாதி(பிரபாகரன்)யிடமிருந்து என்னுமொரு பாசிச அரசின் ராணுவத்திடம்.இதற்கு கூட்டிக்கொடுத்து துணை நின்றது புலம்(ன் ) பெயர்ந்த தமிழ் அமைப்புகள்.ஆதாரங்கள் தேவையாயின் தரப்படும் .சிறு ஆதாரம்:ரமேஷ் LITTLE ENGLISH ,சார்லஸ் பெரும் பணக்கட்டுகளுடன் ,சூசை குடும்பம் சரணடைவு.
Thevan, Sinnaih Snathiramouleesan should have graduated wioth a degree from the University of Jaffna in the ffirst place or to begin with..
மக்கள் தெளிவாக உள்ளார்கள் ஒரு பாசிசவாதிக்கு( பிரபகரனிட்கு )வீர வணக்கம் செலுத்த முடியாது என்பதில். தமது உறவுகள் உயிரைக்கொடுத்தது தமிழரின் விடிவிற்காக மட்டும் தான் ,இந்த பாசிசவாதி பிரபகரனிட்கு அல்ல என்பதில் மிக தெளிவாக உள்ளார்கள்.இவர்கள் பிரபாகரனை ஒரு மாவீரனாக ஏற்க தாயாராகவில்லை .முடியுமாயின் 2013இல் பிரபாகரனின் படத்தை வைத்துப்பாருங்கள் புரியும்.
You are far removed from reality, have you ever pinched yourself to see if you are ever awake?
Mustang, that is right. Sometimes we miss out in the small things.
1973. At the Kent State University in Kent, Ohio, USA. Ohio National Guard. opened fire at the protesting students, America has come to war with itself.
Who is GOSL? Government of Sri Lanka – Shri Lanka/
What solution? Eastern Provincial Council is functioning. Northern Provincial Council elections are scheduled for the new year 2013. It is Sri Lanka Police all over the island. That is not negotiable by anyone at anytime. That person will end up like Yitzak Rabin in Israel.
அடையாளங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அரசியலை உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்லும் சுயவிமர்சனத்தோடு உலகின் ஜனநாயக் முற்போக்கு இயக்கங்களை அணுகுவோம். போராடும் மக்களோடு இணைந்து புதிய போராட்டங்களையும் எழுச்சிகளையும் முன்னெடுப்போம்.
நடந்த தவறுகளை வெளிப்படையாகச் சொல்லவெண்டும். தோல்விக்கான காரணங்களை முன்வைக்க வேண்டும். தோல்விகளையும் தவறுகளையும் நியாயப்படுத்தினால் இன்னொரு தோல்விக்கான தயாரிப்புக்கள் நடைபெறுவதாகவே அவர்கள் நம்புவார்கள்.
போராட்டத்தின் ஆரம்பம், அதன் படிநிலை வளர்ச்சி அதனோடு கூடவே வளர்ச்சியடைந்த தவறுகள், என்று அனைத்துமே மக்கள் முன்னிலையில் முன்வைக்கப்பட வேண்டும்.
பாரிய தவறுகளும், பிறழ்வுகளும் உலகில் போராடுகின்ற முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கும், இடதுசாரிகளுக்கும் தெளிவாக, தேவையானால் புள்ளிவிபரங்களோடு தெரியும். அவர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள். இருட்டடிப்புச் செய்யப்பட்டது தமிழ்ப் பேசும் மக்களுக்கு மட்டும்தான்.
–
Karunakaran, Mallika is the name of the spouse of Honourable Karu Jayasuriya. I heard Americans are backing him now. Keep Hope Alive – Jesse Jackson of Chicago, Illinois, USA.
Tamils’ enemy is Bilderberg Group.
Bilderberg Group created communal tension that followed by genocide.
Do not blame Sinhalese.
Selva and Praba failed to tell Tamils’ about our enemy.
40 Years Selva period is gone it is called political struggle.
40 Years Praba period is gone it is called arms struggle.
Next 40 Years will be economic struggle period.
First try to understand what is Bilderberg Group. தமிழர்கள் ‘எதிரி பில்டர்பெர்க் குழு ஆகும்.
பில்டர்பெர்க் குழு இனப்படுகொலை தொடர்ந்து வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்களம் குற்றம் இல்லை.
செல்வா மற்றும் Praba நமது எதிரி பற்றி தமிழர்கள் ‘சொல்ல முடியவில்லை.
40 ஆண்டுகள் செல்வா காலம் இது அரசியல் போராட்டம் என்று போய்விட்டது.
40 ஆண்டுகள் Praba காலம் அது ஆயுத போராட்டம் என்று போய்விட்டது.
அடுத்த 40 ஆண்டுகள் பொருளாதார போராட்டத்தில் காலம் இருக்கும்.
முதல் பில்டர்பெர்க் குழு என்ன புரிந்து கொள்ள முயற்சி.
‘பில்டர்பெர்க் குழு’ என்பது புதியதோ புதுமையானதோ அல்ல. இது அரசனை உருவாக்கிய காலம்தொட்டு ஆண்டாண்டு காலமாக புதிய புதிய வடிவங்களில் பரிணமித்து இன்று முதலாளித்துவமாக மாற்றம் கொண்ட ஒரு நகர்வு. கொலைத்தொழிலை தோல்வியின்றிச் செய்யும் திறன்கொண்ட ஒரு நாட்டுமக்களின் நடைமுறை. இந்தநடைமுறையானது, நல்லாட்சி நடைபெறும் நாடுகளிலும் போர்தொடுத்து மக்களை கொல்வதையும், வெல்வதையும் திக்விஜயம் என்ற பெயரில் நடாத்தி, ஒரு அரசனை சக்கரவர்த்தியாக்கி அழிந்ததும் ஆக்கங்களைக் கண்டதும் சரித்திரம். அதே மக்கள்கூட்டம் இன்று ஜனநாயகம் என்ற பெயரில் ஜனாதிபதிகள், பிரதமமந்திரிகளென உருவாக்கும் போது அதில் பணபலம்கொண்ட நாட்டுமக்கள், ஒருவரை சக்கரவர்த்தியாகுவதற்குப் பதில் சிலரைச் சக்கரவர்த்தியாக்கி பில்டர்பெர்க் குழு என்ற புதிய பெயரில் திக்விஜயம் (உலகப் பொருளாதார வலம் அல்லது வளம்) செய்யவைத்து மக்கள் அழிவிற்கு காரணமாகின்றனர். ஆகமொத்தம் மக்கள்கொலைதான் இங்கு முதன்மை பெறுகிறது. இதற்கு சிங்களம், தமிழ் என்ற வேறுபாடுகள் தெரியாது. இந்த நடைமுறைகளுக்கும் அப்பால் சென்று மிகக்கொடூரமாக மிருகங்களைவிடவும் கேவலமாக மக்களைக்கொன்ற, கொல்லும் சிங்கள அரச கூட்டத்தை பில்டர்பெர்க் குழு என முகமூடியிட்டு மறைக்க முயல்வதும், முலாம்பூச முயல்வதும் கேவலத்திலும் கேவலமானது.
Bilderberg Group. That is new to me. Another American Century.
பாரிய தவறுகளும், பிறழ்வுகளும் உலகில் போராடுகின்ற முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கும், இடதுசாரிகளுக்கும் தெளிவாக, தேவையானால் புள்ளிவிபரங்களோடு தெரியும். அவர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள். இருட்டடிப்புச் செய்யப்பட்டது தமிழ்ப் பேசும் மக்களுக்கு மட்டும்தான். பிழைப்புவாதிகளால் திட்டமிட்டு இது நிகழ்த்தப்படுகிறது. நாங்கள் தவறுகளைச் சுயவிமர்சனம் செய்யாதவரை யாரும் எம்மோடு இணைந்துகொள்ளப்போவதில்லை.
/// this is applicale to so called இடதுசாரிகளுக்கும். மறுபுறத்தில் தவறுகளை எதிரிகள் குற்றச்சாட்டுக்களாக முன்வைத்து சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களே சாத்தியமில்லை என்று மக்களை அவநம்பிக்கைக்கு உட்படுத்துவார்கள்.
///this is also applicale to so called இடதுசாரிகளுக்கும். will they do it? should stop blame TESIYAVAATHIKAL for so called leftists தவறுகள்.
There are three different kinds of problems. National, Regional and Local. Sri Lanka Police is now in control of the whole island.
Jaffna University students struggle is the beginning of a new struggle When I look back into students struggle in 1970 against standardisation based on race, this is comparable with that. One hopes that a new leadership will emerge and will not make the mistakes of the “manavar peravai”.
Pius Master, they know that 1970 is the turning point. That is why now it is 50 % merit and 50 % district basis. G. G. Ponnambalam only asked for that from the British
MustangGT//// you reminds me this comedy scene: enjoy http://www.youtube.com/watch?v=zn46OHmHyrk
Am I surprised you love comedy ? Unfortunately I have different interests than you. I am sorry I can’t join you.
உலகின் அத்தனை அதிகாரமையங்கள், ஏகபோகங்கள், உலகின் அதிகாரவர்க்கத்தின் கூறுகள், ஏகாதிபத்தியங்கள் இலங்கை அரசோடு பேரம்பேசி தமக்கு வேண்டியதை பெற்றுக்கொண்டு ஈழப்போராட்டத்தை அழித்தன, என்று ஆசிரியர் மறைபொருளில் குறிப்பிடுவது ஏன் என்று புரியவில்லை. தமிழீழ அரசின் மீதும், மக்களின் மீதும் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்தத்தின் உடனடி, நீண்டகால நோக்கங்களையும், அவற்றின் பலாபலன்கள் எவை என்பதையும், முக்காலத்திற்குமுரிய அப்பலன்களீல் சர்வதேச மூலதனத்தின் ( உலக முதலாளித்துவத்தின்) பங்குகள், வளப்பகிர்வுகள், நில/நீர் துண்டாடல்கள், மலிந்த உழைப்பு பகிர்வுகள் போன்ற விடயங்கள் மீண்டும், மீண்டும் நினைவுபடுத்தப்படவேண்டியவை. அரசியல்மயப்படுதல் என்ற செயற்பாட்டிற்கு உரமூட்டுபவை. அதைவிடுத்து அவர்கள் கெட்டவர்கள், கொடியவர்கள், மனிதாபிமானம் இல்லாதவர்கள், கொத்துக்கொத்தாய் கொல்ல பார்த்து ரசித்துக்கொண்டிருந்தவர்கள் என்றெல்லாம் கூறிவிட்டு அவர்களின் “பொருளாதார-அரசிய” முகங்களை வெளிப்படையாக்காமல் விட்டுவிடுவது அவர்களை மறைமுகமாய்ப் பாதுகாத்துவிடும். அது கட்டுரையின் நோக்கத்திற்கு வலுச்சேர்ப்பதாகாது. வல்லரசுகளிற்கிடையிலான போட்டிகளை ஒரு தேசம் (அதன் தேச உருவாக்கச்செயற்பாடு முற்றுபெறாதபோதும்) தனது இறையாண்மைக்கு சாதகமாக பயன்படுத்துவதைப்பற்றிய ஆசிரியரின் கருத்தென்ன?
பெரும்பான்மையான தமிழ்மக்களை பொறுத்தவரை 1950-1980 வரை ஒரு முப்பது ஆண்டுகள் ஸ்ரீ லங்கா அரசுருவாக்கத்தின் கீழும் அடுத்த முப்பது அ ஆண்டுகள் தமிழீழ அரசுருவாக்கத்தின் வாழ்ந்தவர்கள். அவர்களை மீளவும் தேசிய இனம், சுயநிர்ணய உரிமைப்போராட்டம் என்ற விவாதங்களிற்குள் இட்டுச்செல்வது, வரலாற்றின் எதிர்த்திசையில் வழிகாட்டுவது ஆகாதா? ஆசிரியரிடமிருந்து காத்திரமான, தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன். சிங்கள சமூகத்தின் மத்தியில், சிங்கள சக்திகளால் இக்கருத்துக்கள் முன்வைக்கப்படுதல் வேறான விடயம்.
மலையகத்தேசியம், இஸ்லாமியத்தேசியம், தமிழ்த்தேசியம்/அதன் உட்கூறுகள், அவ்வவற்றின் வளர்ச்சி வீதம், தற்போதைய வளர்ச்சி மட்டம், இத்தேசியங்களுக்கு இடையிலான பொதுத்தன்மைகள், வேறுபாடுகள், சச்சரவுகள், ஒத்துப்போதல்கள் , இத்தேசியங்களோடு பகைமை பாராட்டும் சிங்களத்தேசியம், அதன் உட்கூறுகள், இவற்றைப்பற்றியெல்லாம் ஆழமாகக் கணக்கெடுக்காது, கருத்தில்கொள்ளாது, ஏதோ ஒருவிதமான அவசரத்தன்மையுடன் “ஒருவழிதான் ந்ம்முன்னே காணப்படுகிறது” என்பது பொருள்முதல்வாதப்பார்வையாகுமா?
குறுகியதேசியவாதிகள், பிழைப்புவாதிகள்,புலம்பெயர் இனவாதிகள், இனவாத பிழைப்புவாத இணையங்கள், இனவாத பிழைப்புவாத புலம்பெயர் பிரமுகர்கள், அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழினவாதிகள், தமிழ் குறுகிய தேசியவாத இனவாதிகள் என்றெல்லாம் கோபவெறியுடன் திட்டுவதுவதுடன், இவர்கள் மக்கள் பலத்தில் தங்கியிருப்பவர்கள் அல்ல, பதிலாக சர்வதேச நாடுகளின் காய்நகர்த்தும் வால்பிடிஅரசியலுக்குள் நுழைந்தவர்கள், கொலைகாரர்களின் காலடியில் வசிக்கும் ஐந்தாம்படையினர் என்றும் சாடுவதுடன் கவனமாக நிறுத்திக் கொள்கிறார். மறந்தும், மருந்துக்கேனும் அத்தரகர்களின் வர்க்க அபிலாசகளை பேசவில்லை. சர்வதேசமூலதனத்துடன் அவர்களுக்கிருக்கும் மரபுரீதியான விசுவாச உறவுகளை சுட்டிகாட்ட தவறியுள்ளார்.
ஆனால் மேலே பல்வேறு பெயர்களில் ஆசிரியரால் திட்டப்பட்டவர்கள் மட்டுமே அமைப்பு ரீதியாக தம்மை ஒழுங்குபடுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதையும். புலம் பெயர் மக்களுடன் தொடர்புகளை பேணிவருகிறார்கள் என்பதையும் அவர்களால் மட்டுமே லட்சக்கணக்கில் இல்லாவிட்டாலும் சில பத்தாயிரக்கணக்கிலாவது மக்களை வீதிகளில் இறக்க முடியுமென்பதையும் மிக லாவகமாக மறந்து விடுகிறார்.
ஆசிரியர், நாம் சுயவிமர்சனம் செய்யவேண்டும் என்று பிடிவாதமாக கூறும் போது இவர் குறிப்பிடும் நாம் யார் என்ற கேள்வி தானாகவே எழுகின்றது. இப்பின்னூட்டலை இடும் முத்து ஆகிய நானும் இந்த நாமுள் வருகிறேனா என்ற ஐயம் இயல்பாகவே எனக்குள் எழுவதுடன், நான் ஏன் சுயவிமர்சனம் செய்யவேண்டும் என்றும் அபத்தமாக எண்ணத்தூண்டுகிறது. கட்டுரை.
ஆசிரியரின் முன்னைய ஆக்கங்களை வாசித்து வருபவன் என்ற முறையில், இக்கட்டுரை தனது ஆழத்தை இழந்த ஓர் அவசரப்படைப்பாகவே தோன்றுகின்றது.
ஆயினும் “இலங்கை பாசிச அரசிற்கு எதிரான பெரும்பான்மை மக்களின் போராட்டமாக நமது போராட்டங்களை மாற்றுவோம்” எனும் அவரால் முன்வைக்கப்பட்டுள்ள கோசம் கோட்பாடு மற்றும் நடைமுறை ரீதியில் மிக ஆழமானது.
நட்புடன் முத்துவிற்கு,
//அவர்கள் கெட்டவர்கள், கொடியவர்கள், மனிதாபிமானம் இல்லாதவர்கள், கொத்துக்கொத்தாய் கொல்ல பார்த்து ரசித்துக்கொண்டிருந்தவர்கள் என்றெல்லாம் கூறிவிட்டு அவர்களின் “பொருளாதார-அரசிய” முகங்களை வெளிப்படையாக்காமல் விட்டுவிடுவது அவர்களை மறைமுகமாய்ப் பாதுகாத்துவிடும். அது கட்டுரையின் நோக்கத்திற்கு வலுச்சேர்ப்பதாகாது.வல்லரசுகளிற்கிடையிலான போட்டிகளை ஒரு தேசம் (அதன் தேச உருவாக்கச்செயற்பாடு முற்றுபெறாதபோதும்) தனது இறையாண்மைக்கு சாதகமாக பயன்படுத்துவதைப்பற்றிய ஆசிரியரின் கருத்தென்ன? //
போராட்டத்தின் பாதையைத் தீர்மானிப்பது எம்மைப் பொறுத்தவிடயம், அடிப்படைக் கேள்வி நாம் உலகில் ஒடுக்கப்படும் மக்களின் பக்கமா இல்லை ஒடுக்குபவர்களின் பக்கமா என்பதிலிருந்தே அனைத்தும் ஆரம்பமாகிறது. இந்தியாவிற்கு எதிராக ஐரோப்பாவோடு கைகோர்க்கிறோம் என்று கற்பனை செய்துகொண்டு ஆப்கானிலும் அரபு நாடுகளிலும் உலகின் இன்ன பிற நாடுகளிலும் ஏன் ஐரோபிய நாடுகளில் போராடுபவர்களையும் அன்னியப் படுத்தி தமிழ்ப்பேசும் மக்களின் போராட்டத்தை தனிமைப்படுத்தி அழிக்கப்படுவதற்குத் துணை போனது ஒரு பகுதி.
இன்னொரு பகுதி இந்தியாவைப் பயன்படுத்துகிறோம் என்று கூறி இந்தியா முழுவதும் பரந்திருக்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகளை தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தின் எதிரிகளாக்கியது. இந்திய இராணுவ காலத்தில் பிரேமதாசவோடு கைகோர்த்துக்கொண்டு சிங்கள மக்கள் மத்தியிலிருந்த ஜனநாயக முற்போக்கு சக்திகளை அன்னியப்படுத்தியது. பேய்களையும், பூதங்களையும் பிசாசுகளையும் பயன்படுத்துகிறோம் பேர்வளிகள் தான் முள்ளிவாய்க்கால் வரை போராட்டத்தைக் கொண்டுவந்து நிறுத்தியவர்கள்.
சர்வதேச அரசியல் நகர்வுகளை ஆழமாக அறிந்து வைத்திருங்கள்; அவர்களைப் பயன்படுத்தலாம் என்ற கனவிலிருந்தல்ல. பலமானவர்களை வால்பிடித்து சாதிக்கலாம் என்பதற்காக அல்ல. அவர்களது பலவீனங்கள் மீது தகுந்த நேரத்தில் தாக்குதல் நடத்துவதற்காக. அவர்களின் எதிரிகளான, எமது நண்பர்களான போராடும் மக்களை அறிந்துகொண்டு தோழோடு தோழ் சேர்ந்து உழைப்பதற்காக. அது தான் புதிய அரசியல் வழிகளை திறந்துவிடும். இல்லையெனில் பிழைப்பு வாதிகளுக்கு வழிகளைத் திறந்து விடும்.
//பெரும்பான்மையான தமிழ்மக்களை பொறுத்தவரை 1950-1980 வரை ஒரு முப்பது ஆண்டுகள் ஸ்ரீ லங்கா அரசுருவாக்கத்தின் கீழும் அடுத்த முப்பது அ ஆண்டுகள் தமிழீழ அரசுருவாக்கத்தின் வாழ்ந்தவர்கள். அவர்களை மீளவும் தேசிய இனம், சுயநிர்ணய உரிமைப்போராட்டம் என்ற விவாதங்களிற்குள் இட்டுச்செல்வது, வரலாற்றின் எதிர்த்திசையில் வழிகாட்டுவது ஆகாதா?//
வரலாற்றில் அவமானகரமான மனிதப்படுகொலைகளிச் சந்தித்த மக்கள் கூட்டத்தை நோக்கி கேள்வியா இது. நான் சுய நிர்ணய உரிமைக்காக தமிழ்ப் பேசும் மக்கள் போராட வேண்டும் என்பதையும் அது இலங்கை மக்களின் விடுதலைக்கான முன்நிபந்தனை என்பதையும் பல தடவைகள் கூறியுள்ளேன். அதுவும் தோல்விகளிலிருந்து கற்றுக்கொண்டு தவறுகளைக் களைந்து உலக மக்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஈழத்தமிழர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிறேன்.
நீங்களோ தோற்றுப் போனாலும் போகட்டும் அழிவுகளோடும் பாரிய தவறுகளோடும் கூடிய அதே வழிமுறைகளை விமர்சனமின்றிப் பின்பற்ற வேண்டும் என்கிறீர்கள். இதில் என்ன தெளிவு வேண்டியிருக்கிறது?
//மலையகத்தேசியம், இஸ்லாமியத்தேசியம், தமிழ்த்தேசியம்/அதன் உட்கூறுகள், அவ்வவற்றின் வளர்ச்சி வீதம், தற்போதைய வளர்ச்சி மட்டம், இத்தேசியங்களுக்கு இடையிலான பொதுத்தன்மைகள், வேறுபாடுகள், சச்சரவுகள், ஒத்துப்போதல்கள் , இத்தேசியங்களோடு பகைமை பாராட்டும் சிங்களத்தேசியம், அதன் உட்கூறுகள், இவற்றைப்பற்றியெல்லாம் ஆழமாகக் கணக்கெடுக்காது, கருத்தில்கொள்ளாது, ஏதோ ஒருவிதமான அவசரத்தன்மையுடன் “ஒருவழிதான் ந்ம்முன்னே காணப்படுகிறது” என்பது பொருள்முதல்வாதப்பார்வையாகுமா?//
நீங்கள் குறிப்பிட்ட அத்தனை விடயங்களைக் குறித்தும் பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். இந்தக் கட்டுரைக்குள் மீண்டும் அவற்றை உள்ளடக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள். அது வேண்டுமானால் ஒரு நூலாக இருக்கலாம். தவிர, சிங்கள தேசியம் என்பது வேறு பெருந்தேசியம் என்பது வேறு. இதுகுறித்தும் விவாதிக்கப்பட வேண்டும்.
//குறுகியதேசியவாதிகள், பிழைப்புவாதிகள்,புலம்பெயர் இனவாதிகள், இனவாத பிழைப்புவாத இணையங்கள், இனவாத பிழைப்புவாத புலம்பெயர் பிரமுகர்கள், அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழினவாதிகள், தமிழ் குறுகிய தேசியவாத இனவாதிகள் என்றெல்லாம் கோபவெறியுடன் திட்டுவதுவதுடன், இவர்கள் மக்கள் பலத்தில் தங்கியிருப்பவர்கள் அல்ல, பதிலாக சர்வதேச நாடுகளின் காய்நகர்த்தும் வால்பிடிஅரசியலுக்குள் நுழைந்தவர்கள், கொலைகாரர்களின் காலடியில் வசிக்கும் ஐந்தாம்படையினர் என்றும் சாடுவதுடன் கவனமாக நிறுத்திக் கொள்கிறார். மறந்தும், மருந்துக்கேனும் அத்தரகர்களின் வர்க்க அபிலாசகளை பேசவில்லை. சர்வதேசமூலதனத்துடன் அவர்களுக்கிருக்கும் மரபுரீதியான விசுவாச உறவுகளை சுட்டிகாட்ட தவறியுள்ளார்.//
தரகர்களின் வர்க்க நிலை எதுவாக இருக்க முடியும் தேசியத்திற்கு எதிரான விதேசியமாக மட்டும்தானே அது. இன்றைய புதிய உலக நிலையில் தேசிய சுலோகங்களே விதேசியத்திற்காக பல்தேசிய வியாபாரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதுக்குமான உண்மை. அதற்கான வர்க்க அடிப்படையிலான காரணமும் உண்டு. தேசிய முதலாளித்துவ வர்க்கம் என்பதன் இருப்பு சாத்தியமற்றது என்பதே அது. ஆக தேசியப் போராட்டங்களே ஒடுக்கப்படும் தொழிலாள விவசாயிகளின் தலைமையில் மட்டுமே சாத்தியமானது.
நீங்கள் குறிப்பிடும் சர்வதேச சமூகத்துடனான உறவு என்பது இன்னொன்று.
சமீர் அமீன் என்ற எழுத்தாளர் கூறுவது போன்று ஜனநாயகம், சர்வதேசம், சர்வதேச சமூகம் போன்ற ‘சொல்லாடல்கள்’ 60 களின் எழுச்சி அனுபவங்களின் பின்னர் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டுக் கடத்தப்பட்டு சமூகத்தின் மீது உமிழப்பட்டுள்ளது.60 களுக்கு முன்னர் புரட்சிகரமான போராட்ட சக்திகளுக்கு மட்டுமல்ல சமூகத்தின் பொதுப் புத்தியிலேயே சர்வதேச சமூகம் என்பது உலகில் பெரும்பானமையான மக்களே தவிர அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் அதிகாரவர்கங்கள் அல்ல. என்னைப் பொறுத்தவரைக்கும் சர்வதேச சமூகம் என்பது உலகில் 90 வீதமான ஒடுக்கப்படும் மக்கள் மட்டுமே. உங்களைப் பொறுத்தவரை சர்வதேச சமூகம் என்பது 10 வீதமான ஒடுக்கும் அதிகார வர்க்கமே. இன்னொரு தடவை, ஒவ்வொரு போராட்டத்தையும் அதன் வர்க்க சார்பு நிலையையும் வழிமுறையும் மட்டுமே இந்தச் ‘சொல்லாடல்களையும்’ தீர்மானிக்கும்.
//ஆனால் மேலே பல்வேறு பெயர்களில் ஆசிரியரால் திட்டப்பட்டவர்கள் மட்டுமே அமைப்பு ரீதியாக தம்மை ஒழுங்குபடுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதையும். புலம் பெயர் மக்களுடன் தொடர்புகளை பேணிவருகிறார்கள் என்பதையும் அவர்களால் மட்டுமே லட்சக்கணக்கில் இல்லாவிட்டாலும் சில பத்தாயிரக்கணக்கிலாவது மக்களை வீதிகளில் இறக்க முடியுமென்பதையும் மிக லாவகமாக மறந்து விடுகிறார்.//
ஹில்டர் என்ற சர்வாதிகாரிக்கு இருந்த மக்கள் அணி வேறு யாருக்கும் இருந்ததில்லை. வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் பாசிசக் கும்பலுக்குப் பின்னாலும், பிரான்சில் தேசிய முன்னணி இனவாதக் கட்சியின் பின்னாலும் கணிசமான மக்கள் ஆதரவு அணி இருக்கின்றது. ராஜபக்ச கும்பலுக்குக் கூட அதே மக்கள் ஆதரவு உள்ளது. மகள் ஆதரவு மட்டுமே அவர்களை ஆதரிப்பதற்கான காரணமாகாது. சிறுபான்மையாக இருந்தாலும் இல்லை தனிமனிதானாக இருந்தும் கூட நியாமான சரியானவற்றிற்காக குரலெழுப்ப, போராட கற்றுக்கொள்ளுங்கள். அது மற்றொரு பொழுதில் மாபெரும் சக்தியாகத் தோற்றம் பெறும். கால்மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அகிலத்தை அறிவிதத போது அந்தக் கூட்டத்திற்கு இரண்டு பேர்மட்டுமே சென்றார்கள்.
ஒன்று கார்ல் மார்க்ஸ் மற்றது ஏங்கல்ஸ். இன்று உலக அரசியலின் ஒவ்வொரு அசைவிலும் மார்க்ஸ் பேசப்படுகிறார்.
அவரின் எதிரிகளை அவர் பெயரை பேசாமல் அரசியல் நடத்த முடிவதில்லை. பாரிஸ் கம்யூன் அணிதிரட்டாத மக்களையா நாங்கள் அணிதிரட்டி வைத்திருக்கிறோம். ஆக, பெரும்பான்மை என்பதல்ல தீர்மானிக்கும் காரணி. பெரும்பான்மை தவறான வழிமுறைகளுக்குள் கட்டுண்டு கிடக்கிறது என்று கருதினால் அதனை மன உறுதியோடு சிதறடித்து அழிவிலிருந்து மீட்டு புதிய மக்கள் சார்ந்த அரசியலை முன்வையுங்கள். இத்தகைய போராட்டத்தில் நான் தனியாளாக எஞ்சிப் போவது குறித்து எனக்கு எந்தத் துயரமும் இல்லை. நான் செத்துப்போன பிறகாவது ஒரு சமூகம் தவறுகளைத் திரும்பிப்பார்க்குமானால் அது தவறுகளுக்குத் துணை போவதை விட மேலானது.
//முத்து ஆகிய நானும் இந்த நாமுள் வருகிறேனா என்ற ஐயம் இயல்பாகவே எனக்குள் எழுவதுடன், நான் ஏன் சுயவிமர்சனம் செய்யவேண்டும் என்றும் அபத்தமாக எண்ணத்தூண்டுகிறது. கட்டுரை.//
முத்து ஆகிய நீங்கள் மட்டுமல்ல முத்து அல்லாத கற்கள் கூட சுய விமர்சனத்திற்குத் தம்மை உட்படுத்தல் என்பது அவர்களைச் செழுமைப்படுத்தும். நீங்கள் உங்களைச் சுயவிமர்சனம் செய்ய மறுத்தால் உங்களது எதிரிகள் அதனைக் குற்றச்சாட்டாக முன்வைப்பார்கள். சுயவிமர்சனம் என்பது சேற்டிப்பல்ல. அது சரியான அரசியல் வழிமுறையைத் தேர்ந்தெடுப்பதற்குரிய போராட்ட களம். அங்கு நாம் ‘புனிதமடையாவிட்டாலும்’ தவறுகளைக் கழுவிக்கொள்கிறோம். அதனை மற்றவர்களுக்குக் கற்பிக்கிறோம். நாம் கற்றுக்கொள்கிறோம்.
Where do we go from here?
அமெரிக்கா கருப்பர்களை அடிமைகளாக வைத்திருந்தது , பிரித்தானியா கருப்பர்களை அடிமையாக வைத்திருந்தது .
எனவே அவர்கள் இனி மனித உரிமை பற்றி பேச முடியாது என்று சொல்லலாமா ??
அதே போல இந்த கட்டுரையில் வழுநிலை விவாதம் (fallacious argument ) களை கட்டி நிற்கின்றது .
அவற்றுள் சில ,
சரவணபவன் பிழை ஆகவே விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் கொண்டாட முற்பட்டது பிழை .
மற்றைய போராளிகளுக்கு கொண்டாடவில்லை எனவே புலிகளுக்கு மாவீரர் தினம் கொண்டாட முற்படுவது பிழை .
காசிஆனந்தன் பிழை எனவே மாவீரர் தினம் கொண்டாடுவது பிழை .
முன்னர் சாதி அமைப்பு இருந்தது எனவே மாவீரர் தினம் கொண்டாடுவது பிழை .
இப்படி தொடர்கின்றது வியாக்கியானம் .
சரவணபவன் உத்தமர் அல்ல , சாதி வெறி இருந்தது இருக்கின்றது உண்மை , மற்ற போராளிகளை மதிக்க வேண்டும் உண்மை , இப்படி போகலாம் .
இங்கே மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வியை போட்டு ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமை தொடர்பாக குழம்பக் கூடாது .
இதையும் படிக்க ,
நோட்டீஸ் ஓட்டினதாலை தான், யாழில் ஆமி அடிச்சுது எண்டுறா அப்பாச்சி கிழவி !!!!!!
http://tamilwhiteelephant.blogspot.co.uk/2012/11/blog-post_30.html
மாவீரர் தினம் வேண்டாம் என்று யார் சொன்னது. அதனைப் புரட்சிகரமாக தமிழ்ப் பேசும் மக்களின் ஒரு பிரிவிற்கானதக அல்லாமல், எழுச்சியாக அனைத்து பிரிவினரையும் இணைத்துக்கொண்டு முன்னெடுக்க வெண்டும் என்று தானே கூறுகிறோம். அதில் எப்படி முரண்படுகிறீர்கள்.
வெளிப்படையாகவே சொல்கின்றேன் .
மற்றவர்கள் தமது தோழர்களை வணங்கி “வீரியத்துடன்”
புறப்படாமல் தம் உறவை இன்னொருவர் வணங்குவதை புறம் கூறுவது அழகல்ல !!!
மனத்தால் நேசித்து அந்த மறைந்தவர்களுக்காக மற்ற அமைப்புக்கள்
அவர்களுக்காக “வீரியத்துடன்” புறப்பட்டதாய் எனக்கு தெரியவில்லை .
எங்கே சொல்லுங்கள் , என்ன செய்தார்கள் ? எப்போ செய்தார்கள் ?
இப்பொழுது அவர்களை தடுக்க அங்கு புலி இல்லை என்கிறார்களே !!!
இன்னமும் புலிகளைக் புறம் கூறலுக்கப்பால் .மற்றவர்கள் எதுவும் செய்வதை தெரியவில்லை .
இது அவர்தலையில் அவரே கொட்டும் மண் .
புளட்டின் வழியில் சென்று மாலை தீவில் சிக்கியவர்களும் , இந்திய இராணுவத்துக்கு எடுபிடியாய் ஏமாந்தவர்களும் தான் ,
“பாவம் அந்த முன்னணி போராளிகள்” என்ற விடயம் “எல்லா அமைப்பிலும்” காணப்பட்டது என்றே நம்புகின்றேன் . ….
அவர்களை நான் வணங்குகின்றேன் .
தவறான வழியில் வழி நடத்தப்பட்டிருந்தாலும் /சென்றாலும்,
ஆத்ம சுத்தியுடன் மனதளவில் “தேசத்துக்காக மடிகின்றோம் என்ற கனவுகளுடன் மடிந்தவர்கள்”
அத்தனைபேரும் தேசத்தின் புதல்வர்களே.
முதலில் நாம் இன்னமும் ஒரு குறித்த அமைப்பைச் சார்ந்தவர் என்ற குழுவாத எல்லைக்குள்ளேயே இருக்கிறோம். அதை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். இதனை நான் மக்கள் சார்ந்த அரசியல் என்று கருதவில்லை. நான் உட்பட நாம் அனைவரும் தவறுகளோடே நிறுவனமயமாகியுள்ளோம். மக்கள் சார்ந்த புதிய அரசியல் குழுவாதங்களைக் கடந்து முன்வைக்கப்பட வேண்டும். மாவீர்கள், அவர்களின் தியாகம் மதிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அது வெறும் குழுவாத அடையாளங்களைக் கடந்து மக்கள் அரசியலாக மாற்றப்பட வேண்டும். அதனை முன்னெடுப்பதற்கு தடையாக அமையும் அனைத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்தவேண்டும்.
Navalan in the North and East it is the voice of the elected members that count for anything.
Mouleesan, America became International only in 1948 when President Harry S. Truman integrated the United States Armed Forces by executive order. In 1959 David Dwight Eisenhower ordered the Alabama National Guard to escort any Black (Afro) American student that wanted to attend the University of Alabama at Tuscaloosa, Alabama, USA. In 1964 Lyndon Baines Johnson made America a welfare state for all its citizens. He did not waste all his popularity in Vietnam.