எதிர்வரும் ஜனவரி 14ம் திகதி ஆரம்பமாகவுள்ள யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தின் கற்கைச் செயற்பாடுகளில் பங்குபற்றப் போவதில்லை என்று கலைப்பீட மாணவர்கள் தீர்மானித்திருக்கிறார்கள்.
பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சக மாணவர்களை விடுதலை செய்யும் வரை கற்கைச் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என்று தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக அனைத்துப் பீட மாணவர்களும் கடந்த நவம்பர் 29ம் திகதி முதல் வகுப்புக்களைப் பகிஷ்கரித்து வந்தனர்.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தை மீள இயக்கும் முயற்சியில் படைத்தரப்பின் பின்னணியோடு பல்கலைக்கழக நிர்வாகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அனைத்துப் பீடாதிபதிகளை அழைத்த துணைவேந்தர் பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பதன் மூலமே அவர்களது விடுதலையை விரைவுபடுத்த முடியும் என்று துணைவேந்தர் பீடாதிபதிகளுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில் இன்று காலையில் கலைப்பீட மாணவர்கள் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது தொடங்கப்படுவது குறித்து தர்க்கங்கள் பல இடம்பெற்றன.
இறுதியில் ஜனவரி 14ம் திகதி வரை நிலைமைகளை அவதானித்து அதன் பின் ஆரம்பிப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் மருத்துவ பீடாதிபதியின் முயற்சியினால் மருத்துவ பீட மாணவர்களுக்கான விரிவுரைகள் கடந்த வாரம் முதல் மீள ஆரம்பித்துள்ளன.
தற்போது கலைப்பீடம், விஞ்ஞான பீடங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்களும், மாணவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவித்த பின்னரே கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்ற போதிலும்,
வணிக முகாமைத்துவ பீடம் மற்றும் விவசாய பீடம் ஆகியன விரிவுரைகளைத் தொடங்க வேண்டும் என்பதில் முனைப்புக்காட்டி வருகின்றன
அன்பரே. வணக்கம்
எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
கலை , விஞ்ஞானம் , மருத்துவம் , சட்டம் என்றில்லது யாழ பல்கலைக் மாணவர்கள் ஒன்றிணைந்து தீர்மானிக்க வேண்டும்.
மருத்துவ பீட மானவனை விடுதலை செய்தமை மருத்துவர்கள் என்ற கட்ட்மைப்புக்கு அஞ்சித்தான் . அத்துடன் பிரித்தாளும் தந்திரத்தின் ஒரு அங்கம் தான் . கலைப் பீட மணவர் , விஞ்
ஞான பீட மாணவர் எனப் பிரிப்பதும் பிரித்தாளும் தந்திரம் தான் .
மானவர்கள் ஒன்றிணைந்து விட்டாது பார்க்கும் தந்திரம் தான் இது . தமிழர்கள் ஒன்றிணைந்து விடாது ஊடுருவல்களை வைத்து சிங்களம் நன்றாகவே நாடகம் ஆடுகின்றது. தமிழர்கள் மட்டும் சுயனல அடையளங்களின் பின் நின்று சிதறுண்டு GTF-BTF-TGTE-TNA-TNPF…xyz —abc ..என
அழிந்து தொலகின்றார்கள்.
சிங்களம் எம்மை பார்த்து எக்காளம் இடுகின்றது . இதோ ஒரு சிங்களத்தின் பதிவு .
Thanks NT.
“March 1960
A.T. Duraiappah (Independent) 6,201 votes
G.G. Ponnambalam (Tamil Congress) 5,312 votes
S. Kathiravelupillai (Federal Party) 5,101 votes
July 1960
A.T. Duraiappah (Independent) 6,313 votes
G.G. Ponnambalam (Tamil Congress) 6,015 votes
S. Kathiravelupillai (Federal Party) 5,644 votes.”
Federal Party = Illankai Tamil Arse Kachchi (ITAK)
The key is to DIVIDE AND RULE Tamils. When ACTC and ITAK was divded, our man could win. NOT OTHERWISE.
So if the govt wants to defeat TNA, DIVIDE Tamils, Tamil parties and pit them against EACH OTHER.
NEVER EVER let Tamils unite!!
ஆதாரம் லங்கா வெப்http://www.lankaweb.com/news/items/2012/06/06/new-chapter-in-tamil-struggle-for-political-rights-a-response-i/
இடதுசாரி வலதுசாரி என பிரித்தார்கள் . சாதியின் பேரால் பிரித்தார்கள். பிரதேசத்தின் பேரால் பிரித்தார்கள், மதத்தின் பேரால் பிரித்தார்கள் , இப்பொழுது மருத்துவம் , விஞ்ஞானம், விவசாயம் , சட்டம் , முகாமைத்துவம் , ஆசிரியர் , முன்னாள் போராளிகள், புலம் பெயர்தோர் , தலமை செயலகம் , அனைத்துலக செயலகம் இப்ப்டியே திட்டமிட்டு பிரிவினைகள்……. நாமும் ஆணவதால் அழிகின்றோம் . அடுத்த ஆண்டாவது மார்றத்தை ஏற்படுத்தாதா என்பது தான் என் கனவு…………………
Yes, we must keep hope alive in 2013.