அமரிக்க அரச விமானப்படையின் உத்தியோகபூர்வ இணையத்தில் வெளியாகியிருக்கும் வாசகங்களின் தமிழாக்கம்:* தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற மிருகத்தனமான பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் போராடி வெற்றிபெற்றது. போரின் முடிவில் மில்லியன் கணக்கான கண்ணி வெடிகள் மோதல் நடைபெற்ற இடங்களில் விட்டுவைக்கப்பட்டிருந்தன. இலங்கையினதும், ‘சர்வதேச சமூகத்தினதும்’ போருக்குப் பின்னான பிரதான முயற்சிகளில் கண்ணிவெடிகளை அகற்றி அந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்களைக் குடியேற்றுவதும் ஒன்றாகும்.”
இலங்கை அரச படைகளுடன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது நன்மை தருகிறது என்கிறார் இலங்கையில் தங்கியிருக்கும் அமரிக்க விமானப்படையைச் சேர்ந்த ஜோசுவா கென்னடி
இலங்கை அரசபடைகளுக்கு மருத்துவ தொழில் முறையைக் கற்பிப்பதற்காக தாம் அங்கு தங்கியிருப்பதாக அமரிக்க அரச படையின் மற்றொரு கொமாண்டர் கூறுகிறார்.
யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்றவேண்டும் என்று மக்களும் உலகம்முழுவதும் ஜனநாயக முற்போக்கு சக்திகளும் போராடும் அதே வேளை யாழ்ப்பாணத்தில் அமரிக்க இராணுவத்தின் பிரசன்னத்தை நெருக்கமாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது என்று குறித்த சில பகுதிகளின் மக்கள் தெரிவிக்கிறார்கள்.
பசிபிக் ஏஞ்சல் என்ற அமரிக்க இராணுவத்தின் உதவிப் பிரிவைச் சேர்ந்த பொறியியலாளர்கள் இலங்கையில் தங்கியிருப்பதாக அமரிக்க அரசபடைகளின் **பசிபிக் பிராந்திய இணையம் கூறுகிறது. கடற்படை, விமானப்படை, தரைப்படை ஆகியவற்றைச் சேர்ந்த பொறியியலாளர்கள் அங்கு தங்கியிருப்பதாக கூறும் இணையம், பாடசாலைகளைப் புனரமைக்கும் பணிகளிலும் கட்டுமானப் பணிகளிலும் ஈடுபட்டு குழந்தகளுக்கு கல்வி பெற யாழ்ப்பாணத்தில் வசதி செய்கிறோம் என்கிறது அமரிக்க அரச படைகளின் இணையம்.
2013 ஓகஸ்ட் மாத ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள பசிபிக் ஏஞ்ஜல் நடவடிக்கைக்காக நூறு அமரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கண்ணிவெடி அகற்றும் நோக்கத்திற்காக நூற்றிற்கும் அதிகமான அமரிக்கப்படைகள் நிலை கொண்டுள்ளன எனத் தெரிவிக்கின்றன.இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் பல்வேறு அளவுகளில் நிலைக்கொண்டுள்ள அமெரிக்கத் துருப்புகளை ஆசிய பசிபிக் கட்டளையகம் Pacific Command (USPACOM) கட்டுப்படுத்துகிறது..
ஆசியாவில் 36 நாடுகளைக் குறிவைத்து இயங்கும் அமரிக்க அரசின் பிராந்தியப் பாதுகாப்பு அமைப்பிற்கு இலங்கை அரசும் இனப்படுகொலை நடத்திய இலங்கை அரச படைகளும் நெருக்கமான பங்காளிகள். பல வழிகளில் இவர்கள் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
ராஜபக்சவைத் தூக்கில் போடப்போவதாக தமிழ்ப் பேசும் மக்களுக்கு அமரிக்க அரசு , அவர்களின் கூலிகள் ஊடாகப் பிரச்சாரம் மேற்கொள்ளும் அதே வேளை இலங்கை அரசின் தெற்காசியப் பங்காளிகளாக செயற்பட்டுவருகிறது.
90 களிலிருந்து மத்திய கிழக்கை இராணுவ மயப்படுத்தி அப்பிரதேசத்தில் இரத்த ஆறு பெருக்கெடுக்கச் செய்த அமெரிக்க அரசுக்கு தெற்காசியாவிலும் இலங்கையிலும் அப்படி என்ன அதீத அக்கறை? இன்றைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக்கு வந்த பொழுது இனிமேல் அமரிக்காவின் கவனம் ஆசிய
நாடுகளை நோக்கித் திரும்ப வேண்டும் என்று ஆசிய திரும்பல் புள்ளி (Asia Pivot) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அமெரிக்க அரசின் முன்னை நாள் வெளியுறவுத்துறை செயலாராகவிருந்த ஹில்லாரி கிளிங்டன் அமரிக்காவின் பசிபிக் நூற்றாண்டு என்ற ஆக்கத்தை பல ஆய்வாளர்கள் குறித்துக்க்காட்ட ஆரம்பித்தனர். ‘ஈராக் புயல் ஓய்ந்துவிட்டது, ஆப்கானிஸ்தானிலிருந்து அமரிக்கா தனது துருப்புக்களை விலக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் அமரிக்கா ஒரு திரும்பல் புள்ளியில் நிற்கிறது. அந்த இரண்டு நாடக அரங்குகளில் மகத்தான எமது வளங்களைச் செலவு செய்துள்ளோம். எதிர்வரும் பத்து வருடங்களில் நாம் ஒழுங்குபடுத்தப்பட்டும், கம்பீரமாகவும் எமது வலுவை எங்கு பயன்படுத்துவது என்பதைத் திட்டமிட வேண்டும். அப்போது தான் அமரிக்காவின் நலன்களையும், பெறுமானத்தயும், தலைமையையும் நாம் உறுதிசெய்யமுடியும். எதிர்வரும் பத்தாண்டுகளில் ஆசிய பசிபிக் பிராந்தியத்துல் பொருளாதார, தந்திரோபாய, ராஜதந்திர மற்றும் ‘வேறுவழிகளில்’ எமது முதலீட்டை மேற்கொள்வது அமரிக்க ஆட்சிக் கலையைக இருக்கவேண்டும்.’
இவ்வாறு ஆரம்பிக்கும் *** ஹில்லாரி கிளிங்டனின் கட்டுரை,
ஆசியா பசிபிக் உலக அரசியலைத் தீர்மானிக்கும் கருவியாக மாறியுள்ளது.’ என்று தொடரும் போது, அமெரிக்கா ஆசியப் பிராந்தியத்தில் எவ்வாறு இரத்தக்களரியை ஏற்படுத்தப்போகிறது என்பதற்கான பருமட்டான பார்வையைத் தருகிறது.
வியட்னாம் ஆக்கிரமிப்பில் அமரிக்கா பல்வேறு மனிதப் படுகொலைகளைத் திட்டமிட்டு நடத்தியும் வெற்றிபெற இயலவில்லை. அமரிக்காவிற்கு அனுப்பப்பட்ட இராணுவத்தின் உடல்களுகளைக் கண்ட அமரிக்க மக்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தனர். இறுதியில் வியட்னாமிலிருந்து எஞ்சியவற்றைச் சுருட்ட்க்கொண்டு அமரிக்க பயங்கரவாத இராணுவம் வெளியேறியது.
இதன் பின்பு அமரிக்க அரசின் ஆக்கிரமிப்பு இராஜந்திரம் மாற்றமடைந்தது. அமெரிக்க அரச அதிபர் ஜிம்மி காட்டரின் அதிகாரத்தின் கீழ் புதிய தந்திரோபாயம் மீண்டும் திட்டமிடப்பட்டது. நாடுகளை ஆக்கிரமிக்கவும், அடக்கியாளவும், சுரண்டவும் அமரிக்க ஏகாதிபத்தியம் புதிதாக ஒழுங்கமைக்கப்படுகிறது. அந்தவேளையில் உள்நாடுகளில் சர்வாதிகாரிகளையும், பயங்கரவாதக் குழுக்களையும் திட்டமிட்டுத் தோற்றுவித்து அவற்றை அழிப்பது என்ற தலையங்கத்தில் ஆக்கிரமிப்புக்களை நடத்துவது என்பது அமரிக்காவின் திட்டமிடலாக அமைந்தது.
******1979 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மதசார்பற்ற அரசிற்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளை அமரிக்காவே ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கி உருவாக்கியது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் காரணமாகக் கொண்டு ஆப்கானிஸ்தானை அமரிக்கா ஆக்கிரமித்தது. ஈராக்கில் சதாம் ஹுசைனைத் தீனிபோட்டு வளர்த்த அமரிக்கா பின்னர் அந்த நாட்டை ஆக்கிரமித்தது மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றொழித்தது. கிரனெடா, பனாமா, யூகோஸ்லாவியா போன்ற நாடுகளை ஆக்கிரமிக்க இதே வகையான தந்திரோபாயத்தைப் பயன்படுத்தியது.
இந்த நூற்றாண்டின் ஆரம்பம் முதல் சீனா, லத்தீன் அமரிக்க நாடுகளின் பிரதான வியாபார பங்காளர்களாக அமரிக்காவைப் பிரதியீடு செய்தது. சில ஆபிரிக்க நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் சீனா அமரிக்காவைப் பிரதியீடு செய்தது.
2008 ஆண்டில் அமரிக்காவின் உள்ளேயே தெளிவாகத் தெரிந்த பொருளாதார நெருக்கடி அமரிக்காவின் பல்தேசிய நிறுவனங்களுக்கான பொருளாதாரக் கொள்கை குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியது. உள் நாட்டிலேயே பல போராட்டங்கள் எழுந்தன. இவற்றின் மத்தியில் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு அமரிக்க அரச செலவீனத்தின் ஒரு பகுதியைத் தின்றுகொண்டிருந்தது. ஆப்கானிஸ்தானை முற்றாகச் சுரண்டி அழிக்க முடியாமல் எதிப்புப் போராட்டங்கள் முடக்கின.
இந்த நிலையில் அமரிக்காவின் ‘கடைக்கண் பார்வை’ ஆசிய நாடுகள் மீது விழுந்தது.
இதற்காக அவர்கள் மிட்டெடுத்து பலப்படுத்திய இராணுவ ஆக்கிரமிப்பு அலகே ஆசிய பசிபிக் கட்டளையகம். 1947 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமரிக்க அரசின் யுத்தப்பிரிவான இந்த அணிக்கு இப்போதெல்லாம் மனிதாபிமானம் மட்டுமே பிறக்கிறது.
ஹில்லாரி கூறுவது போன்று ஆசிய பசிபிக் பிராந்தியம் அமரிக்க ஆக்கிரமிப்பின் மையப்புள்ளி என்றால் அதன் தெற்காசியப் பிராந்தியத்தின் தளமாகப் பயன்படுவது இலங்கை.
ஆசியப் பிராந்திய ஆக்கிரமிப்பிற்கு அமரிக்காவின் தந்திரோபாயம் வேறுபட்டது.
1. முதலில் சிக்கலுக்குரிய பாசிச அரசுகளைத் தோற்றுவிப்பது.
2. அச் சிக்கல்களைத் தீர்ப்பதாகக் கூறி அரசுகளை மிரட்டியோ அன்றி வேறு வழிகளிலோ இராணுவ ஆக்கிரமிப்பையும் பிரசன்னத்தையும் உறுதிப்படுத்துவது.
இந்த நடவடிக்கைகளுக்காக ஏனைய நாடுகளையும் அமரிக்க அரசு பயன்படுத்துவதைக் காணலாம்.
இந்த வகையில் ராஜபக்ச கிரிமினல் அரசு அமெரிக்க அரச ஆக்கிரமிப்பிற்கு வரபிசாதமாக அமைந்தது.. உள் நாட்டின் இனப்படுகொலையை எந்த எதிர்ப்புமின்றி அமரிக்க ஆதரவோடு கனகச்சிதமாக நடத்திமுடித்த இலங்கை அரச படைகள் தெற்காசியாவில் அமரிக்க அரசின் நெருக்கமான நண்பர்கள். முதலில் இனப்படுகொலையைப் போர்க்குற்றமாக மாற்றிய அமரிக்க அரசு மிக நீண்ட காலத்திற்கு ராஜபக்ச அரசுகுறித்த அழுத்தங்கள் உலகின் எந்த மூலையிலும் இருந்து எழாதவாறு பாதுகாத்தது.
மக்கள் மத்தியிலிருந்து எழக்கூடிய கொந்தளிப்பை ஒடுக்குவதற்காக தானே இலங்கை அரசைத் தண்டிக்கப்போவதாக படம் காட்டியது. அமரிக்க அடியாள் படையான ஐக்கிய நாடுகள் சபையும், புலம் பெயர் கூலிகளும், தமிழ் நாட்டின் இனவாதிகளும் அமரிக்காவின் இந்த நிகழ்ச்சி நிரலுக்குத் துணை போயினர்.
ஒரு புறத்தில் இலங்கை அரசைப் பாதுகாத்துக்கொண்டு மறுபுறத்தில் அதற்குச் சமந்தரமாக இலங்கையில் தனது பொருளதார இராணுவ ஆக்கிரமிப்பை ராஜபக்ச அரசோடு இணைந்து அமெரிக்க அரசு மேற்கொண்டது. ****ஆசிய பசிபிக் ஏஞ்சல் என்ற ஆசிய பசிபிக் கட்டளையகத்தின் கீழ் இயங்கும் அமைப்புக் குறித்து பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி தனது தெளிவான நிலைப்பாட்டை முன்வைத்தது. பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணிப் பிரிவான தேசிய ஜனநாயக முன்னணி, \அமரிக்க அரச விமானப்படை மனிதாபிமான உதவி என்ற பெயரில் பிலிப்பைன்ஸ் அரசுடன் இணைந்து ஆக்கிரமிப்பிலும் உளவு வேலைகளிலும் ஈடுபடுகிறது என்று கூறியது’. மற்றொரு நிகழ்வில் வட கொரியாவிற்கு உளவு விமானங்களை அனுப்பும் வேலைகளில் ஈடுபட்டது இந்த அணியே என்றது.
அமரிக்க இராணுவத்திற்கும் இலங்கை அரசிற்கும் இடையேயான உறவு அரச பயங்கரவாதிகளிடையேயான உறவு.
இலங்கையைச் சேர்ந்த இலத்திரனிய பாதுகாப்பு அமைப்பான CICRA– the premier cyber security training and consultancy organisation in Sri Lanka அமக்காவின் ஆசிய பசிபிக் கட்டளையகத்துடன் உடன் (United States Pacific Command (USPACOM)) இணைந்து இலத்திரனியல் பாதுகாப்பு பயிற்சி ஒன்றை தாய்லாந்தில் நடத்தியுள்ளது. அமெரிக்கா இலங்கைக் கடற்படையோடு இணைந்து பல பயிற்சிகளை நடத்தியுள்ளது.
இலங்கையில் நிலைகொண்டுள்ள அமரிக்க இராணுவத்தின் தொகை வெளியிடப்படவில்லை. பலாலி இராணுவ முகாமில் மட்டும் பல நூறு இராணுவத்தினர் நிலை கொண்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. பாங்கொக், பலாலி, ஹம்பாந்தோட்ட ஆகிய விமானத் தளங்களூடாக அமரிக்க விமானப்படைக்குச் சொந்தமன விமானங்கள் நாளாந்தம் பயணிப்பதாக இத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ராஜபக்ச பயங்கரவாத அரசு அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்களுக்கு எதிரானவர்கள் என்பதைக் கூறிக்கொண்டு சிங்கள மக்கள் மத்திய்ட் வாக்களர்களைத் திரட்டிக்கொள்கிறது. அமெரிக்க அரசிற்கு இலங்கை மக்களின் பாதுகாப்பை குத்தகைக்கு விற்பனை செய்துள்ளது. அமரிக்கப் பிரசாஉரிமையுடன் இலங்கையில் இனப்படுகொலை நடத்திய கோட்டாபய ராஜபக்ச கடந்த காலாண்டில் இரண்டு தடவைகள் அரச பயணம் மேற்கொண்டார். ***** நவம்பர் 21 முதல் 23 வரை நடைபெற்ற அமரிக்க இராணுவத்தின் வருடாந்த மாநாட்டிற்கு இலங்கை இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க அழைக்கப்பட்டிருந்தார். நவம்பர் 24ம் திகதி கேணல் தயா ரத்னாயக்க நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்திற்குச் சென்று உயர்மட்ட உறுப்பினர்களைச் சந்தித்தார். மக்கள் தீர்பாயத்தின் அண்மைய முடிவுகள் வன்னிப் படுகொலையின் பின்புலத்தில் அமெரிக்க அரசின் பங்களிப்புக் காணப்படுவதை நிறுவியிருக்கிறது. இவை எதுவும் வியப்புக்குரியவை அல்ல. தேசிய விடுதலைப் போராட்டம் என்பது ஏகாதிபத்தியங்களுக்கு எதிரானது என்பது புதிய கண்டுபிடிப்பும் அல்ல. தேசிய விடுதலைப் போராட்டத்தை விதேசியப் ஆக்கிரமிப்பாக்கி அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்திதில் புலம் பெயர் தலைமைகளதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போன்ற அன்னிய அடியாள் கட்சிகளதும் பங்கு அளப்பரியது. இந்த அழிவு இருளுக்குள் இருந்து மீள்வதற்குரிய ஆரம்ப நடவடிக்கைகள் இனவாத ஒற்றுமையிலிருந்து எழ முடியாது.ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஒருங்கிணைவு தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தைப் பிரதியிடவேண்டும். * ** http://www.pacaf.af.mil/news/story.asp?id=123359467 *** http://www.foreignpolicy.com/articles/2011/10/11/americas_pacific_century#sthash.OYYvOaXp.dpbs **** http://www.philippinerevolution.net/publications/ang_bayan/20120307/cpp-assails-operation-pacific-angel ***** https://inioru.com/?p=38283
****** http://www.pacaf.af.mil/news/story.asp?id=123359467
I value tamil
THAY ARE ALL MUST GO BACK IT AND DON´T TO ALLOWED IT TO STAY IT IN JAFFFNA OR IN ALL CEYLON COUNTRIES ARE TOO MY DEARS!!!…
BEFORE CHINE ALSO TO TRY IT TO STAY IT IN CEYLON ALL COUNTRIES ARE TOO MY DEARS!!!!… NOW AMERICAN WANT TO TRY IT TO STAY IT IN CEYLON ALLCOUNRTRIES ARE TOO MY DEARS!!!… AND THEY ARE TO TRY IT AND TO MAKE IT MORE THAN 300,000th OUR OWN TOO POOR CIVILIANS ARE TOO ARE TO DIEIT FOR THESE BETOWEEN TWO COUNTRIES POWER DEVELOPMENT PLANE ARE TOO IT MY DEARS!!!….((( Before to do it with others are to for that place it and after come to stay it too easy are to that place are too my dears!!!….And15th years before to get it tamileelam are to freedom it so too allowed it for these are all plane it my dears!!!!….So we don´t like it to support it these two countries power develop ment plane it too my dears!!!…))) SO MY DEAR WORLD ALL TAMILS PEOPLES,AND TOO LOVELY WORLD ALL TAMILS STUDENTS, AND TOO LOVELY WORLD ALL TAMILS CHILDREN, AND TOO LOVELY OUR OWN WORLD ALL TAMILS PEOPLES ALL TOO LOVELY FRIENDSMY DEARS!!!!…AND WE ARE ALL TO JOINT IT AND ALL ARE TOGETHER TO THINK IT AND ALL ARE TO DO IT TOO MY DEARS!!!!….AND AL ARE TOO GOOD AND TOO SAFE AND TOO PEACEFUL ARE TOO DO IT WE CAN TO WIN IT TOO
OUR OWN ALL REAL CLAIMS ARE TOO MY DEARS!!!!…