தம்மைச் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கா விட்டால் தாம் சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பலாலியில் இருந்து இடம்பெயர்ந்து வசிக்கும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பலாலியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் சுமார் 30 வருடங்களாக நலன்புரி நிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் வசித்து வருகின்றனர். இடம்பெயர்ந்து நீண்ட காலம் கடந்துள்ளபோதும் இவர்களை மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் எவையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
வலி.வடக்கில் தற்போது பல பகுதிகளிலும் மக்கள் மீளக் குடியமர்வதற்கு இராணுவம் அனுமதித்துள்ளது. எனினும் பலாலிப் பகுதி மக்களின் மீளக் குடியமர்வு தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
இடம்பெயர்ந்து நீண்ட காலமாகத் தாம் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருவதாக அந்த மக்கள் கூறுகின்றனர். எனினும் எமது விடயத்தில் அரசு சற்றேனும் அக்கறை கொள்ளவில்லை என அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் இது விடயத்தில் உடனடியாக கவனம் செலுத்தப்படாது விட்டால் தாம் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை இவ்விடத்தில் மக்களைக் குடியமர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணையிலிருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேதிந்த்திதுக்கு யுன்பியும் தேசிய கொடி அமைப்பும் பொய் செய்தவிடயம் .இவ்விடத்தில் மக்களைக் குடியமர்த்தக் கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியது…….யுன்பியும் தேசிய கொடி அமைப்பும் இலட்சனுக்கு போட்டும் போ ட்டு உன்னாவிரதமும் செய்யா. இவர்கலுக்கு கட்சி எதட்கு…. மக்களை முட்டால் ஆக்கத்திட்டமா…
Now, this is something to talk about in the parliament. Honourable Tissa Attanayake the General Secretary of the United National Party said that they will look after the day to day problems of the Tamil people. He said something about the civilian casualties at Vakarai, then. Let us thank him.
தமது உரிமைகளைக் கூட பெற்றுக் கொள்ள முடியாது மக்கள் தவிக்கும் போது சிங்கள இனவாதிகளுக்கு கோவணக் கொடிபிடித்து ஆட்டித் திரிகின்றார்கள் எங்கள் பரதேசிப் பிரதிநிதிகள். நாங்கள் உண்ணாவிரதம் இருந்தால் முன்னால் வந்து நின்று படத்திற்கு போஸ் கொடுத்துவிட்டுப் போக வருவார்கள்.