நேற்று ஞாயிறு பிரான்சில் சுட்டுக் கொலைசெய்யபட்ட பரிதியின் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதில் உறையாற்றிய த.பாண்டியன், ஒரு இலட்சியத்துக்காகப் போராடும் போராளியின் கனவுகள் அழிவதில்லை எனக்கூறி, தேழர் பரிதி அவர்களைப் பற்றி பேசியிருந்தார். ஜெயலலிதா, ராஜிவ் காந்தி, காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் நம்பிக்கைக்கு உரியவரான தா.பாண்டியன் இலங்கையில் இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் போரை நடத்தியபோது இந்திய இராணுவத்தை ஆதரித்தவர்.
1990 இல் தா.பாண்டியனின் உரை ஒன்றின் பகுதி வருமாறு:
“1987ம்ஆண்டு ஐனாதிபதி ஜே.ஆர் ஜேயவர்த்தனா அரசு வடமராட்சியில் இருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் இராணுவநடவடிக்கையை பாதுகாப்பு அமைச்சர் அத்துலக்முதலி ஒப்பரேசன் லிபரேசன் என்றுபெயரிட்டு மேற்குநாடுகளின் பெரும்படைப்பலத்துடன் மேற்கொண்டார். அந்தநேரத்தில் அனைத்து தமிழ் இயக்களையும் புலிகள் அழித்தநிலையில் தாங்கள் தனியொரு இயக்கமாக இராணுவத்துடன் தாக்குப்பிடிக்க இயலாமல் தப்பிஒடினர் அச்சுவேலிவரை இராணுவம் முன்னேறிவிட்டது. வடமராட்சிமக்கள் இலட்சக்கணக்கில் அகதிகளாக வெளியேறினர். அந்தநேரத்தில் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதையும் அவர்கள் இலட்சக்கணக்கில் அகதிகள் ஆக்கப்படுவதையும் பட்டினிபோட்டு பணியவைப்பதையும் மத்திய அரசு பார்த்துக்கொண்டிருக்காமல் செயலில் இறங்கவேண்டும் என தமிழகக்கட்சிகள் ஒற்றுமையாக குரல்கொடுத்தனர் பின்னர் புலிகள் சிங்கள அரசோடுசேர்ந்து தமிழர்களுக்கு கிடைக்க இருந்த உரிமையை செயல் இழக்கச் செய்தார்கள்.”
இந்திய இராணுவத்திற்கும் இலங்கை அரசிற்கு எதிராகவும் தொடர்ந்து உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களதும் போராளிகளதும் பெயாரால் நடத்தப்படும் புலம்பெயர் வியாபார அரசியல் இது.
தொடர்புடைய பதிவு:
பரிதியின் அஞ்சலிக் கூட்டத்தில் தா.பாண்டியன், ‘ஒரு இலட்சியத்துக்காகப் போராடும் போராளியின் கனவுகள் அழிவதில்லை’ எனத் தோழர் பரிதி அவர்களைப் பற்றி பேசியிருந்தார்.
புலிகளுக்கு எதிராகவே இயங்கிவந்த தா.பாண்டியன் உண்மையிலே மனம்மாறி வந்தாரா, அல்லது எஞ்சியுள்ள புலிகளும் அழிவதுகண்ட ஆனந்தத்தில் வந்தாரா, அடிக்கிற கைதான் அணைக்கும் எனக் கருத்துக்கூறி ஏற்றுக்கொள்ளவும் இடமுண்டு. தமிழன் இன்று இருதலைக் கொள்ளி எறும்பு.
தோழர் பரிதியைப்பற்றியும் பல்வேறு விதமான கருத்துக்களை அவரோடு நெருங்கி இருப்பவர்களும் வெளியிட்டு வருவதால் அவருடைய செயற்பாடுகளும் தா.பாண்டியன் போன்றவர்களைக் கவருவதாக இருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்து நிற்கிறது.
No more fighting except with words in any part of the world. All must follow law and order.
ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதையும் அவர்கள் இலட்சக்கணக்கில் அகதிகள் ஆக்கப்படுவதையும் பட்டினிபோட்டு பணியவைப்பதையும் மத்திய அரசு பார்த்துக்கொண்டிருக்காமல் செயலில் இறங்கவேண்டும் என தமிழகக்கட்சிகள் ஒற்றுமையாக குரல்கொடுத்தனர் பின்னர் புலிகள் சிங்கள அரசோடுசேர்ந்து தமிழர்களுக்கு கிடைக்க இருந்த உரிமையை செயல் இழக்கச் செய்தார்க எனபதே உண்மை, தீபாவளி வாழ்த்துக்கள்,
ஈழத்தமிழர்களைக் கொல்வதும், அவர்களை இலட்சக்கணக்கில் அகதிகள் ஆக்குவதும், பட்டினிபோட்டு பணியவைப்பதும் சிறீலங்கா அரசுதான். அதற்கு தொன்றுதொட்டு ஊக்கமும், உதவியும்புரிந்து வருவதுதான் மத்திய அரசு. உதவிபுரிவதை அவர்கள் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளனர். தமிழர்களுக்கு கிடைக்க இருந்த உரிமையை வழங்கும்படி சாத்வீக வழியில் போராடிய திலீபனை சாகடித்தார்கள் என்பதே உண்மை,
தீபாவளி தமிழர்களை அரக்கர்களாக உருவகித்துக்காட்டும் ஒரு விழா. இதன் வாழ்த்துக்கள் தமிழருக்குப் பொருந்தாது. உங்களுக்குப் பொருந்தினால் கொண்டாடுங்கள், வாழ்த்துங்கள்.
உள்ளூர்ல ஓணான் பிடிப்பதைவிட வெளியூரில் புலிபிடிப்பது படு ஈசியப்பா… நெஜமாலுமே புலிகளுக்கு அஞ்சறிவுதானப்பா………..
மனம்மாறி வந்தாரா றோ அனுப்பி வந்தாரா?
இந்த கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட பாண்டியனின் பேச்சின் மூலம் என்ன? அது ஒரு புத்தகமாக இருந்தால் அதனது பெயரினை தெரிவிக்க முடியுமா?