பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை!: பிம்ஸ்டெக் அமைப்பு கூடவுள்ளது.

15.08.2008.

பிராந்தியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு உடன்படிக்கையொன்றை இறுதி நிலைப்படுத்துவதற்காகப் பிம்ஸ்டெக் அமைப்பு எதிர்வரும் 29ம் திகதி இந்திய புதுடில்லியில் கூடவுள்ளது.

வங்காள விரிகுடாவின் பல்துறை தொழிநுட்பப் பொருளாதார ஒத்துழைப்பு நாடுகளை அங்கத்துவமாகக் கொண்டதே இந்த பிம்ஸ்டெக் அமைப்பாகும்.

இந்த அமைப்பில் இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், தாய்லாந்து மற்றும் மியன்மார் ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இந்த நிலையில் இந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் எதிர்வரும் 29ம் திகதி புதுடில்லியில் கூடவுள்ளனர்.

இவர்கள் பிராந்தியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான உடன்படிக்கையை இறுதிநிலைப்படுத்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.

இந்த மாத ஆரம்பத்தில் கொழும்பில் இடம்பெற்ற தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் மாநாட்டின் போது, எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமையவே இந்த ஒன்றுகூடல் இடம்பெறுகிறது.