Thursday, May 8, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பயங்கரவாதம் – லண்டன் ஒலிம்பிக்ஸ் சொல்லும் செய்தி : வியாசன்

இனியொரு... by இனியொரு...
07/30/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
12
Home பிரதான பதிவுகள் | Principle posts

மரணம் துப்பாக்கிகளோடு தெருக்களில் அலைவதும் மக்களைப் பாதுகாப்பதாக மிரட்டுவதும் மூன்றாம் உலக நாட்டு தெருக்களைக் கடந்துவந்த மனிதர்களுக்கு புதியதல்ல. கஷ்மீர், அசாம், மத்திய இந்தியா, வன்னி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார் என்று ஒவ்வொரு மூலைக்குள்ளும் பச்சை மனிதர்களும் காக்கி மனிதர்களும் மனிதக் கொல்லிகளோடு உலா வருவதை வெறுப்போடு பார்த்த “பெறுமானம் அற்றுப்போன” மனிதக் கூட்டங்களைத் தான் பார்த்திருக்கிறோம்.

பிரித்தானியாவின் பொருளாதாரம் இப்போது செத்துக்கொண்டிருக்கிறது என அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின. ஆரம்பபிப்பதற்கு முன்னமே அரங்கம் அமைக்கப்பட்டிருக்கும் சுற்றாடல் முழுவதும் இராணுவ வலயம் போன்று காட்சிதர ஆரம்பித்திருந்தது.

இரண்டாம் உலக யுத்ததின் பின்னர் அதிக அளவில் இராணுவப் பிரசன்னம் காணப்படுகின்ற முதலாவது நிகழ்வாக லண்டன் ஒலிம்பிக் வர்ணிக்கப்பட்டது.

13500 இராணுவத்தினரும் அவர்களோடு பொலீஸ் படையும் பாதுகாப்பில் ஈடுபட ஆரம்பித்தன. இந்தத் தொகை ஆப்கானிஸ்தானில் பிரசன்னமாயிருக்கும் பிரித்தானிய இராணுவத்தின் தொகையை விட சற்று அதிகமானதாகும்.

வீட்டுக் கூரைகளில் விமான எதிர்ப்ஏவுகணைகள் பொருத்தப்பட்டன. 11 மைகள் தொலை வரை மின்சார வேலிகள் அமைக்கப்பட்டன.

மக்களைப் பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதற்காகவும் குண்டு வெடிப்பு அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவுமே இவ்வளவு பாதுகாப்பு என்று பிரித்தானிய அரசு அறிவித்தது. சிரியாவிலும், லிபியாவிலும், மத்திய கிழக்குக் கடற்பரப்பிலும், இன்னும் உலகின் ஒவ்வோர் மூலையிலும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கி அரசுகளுக்கு எதிராக ஜனநாயகம் என்ற பெயரில் தாக்குதல் நடத்தும் இந்த நாடுகளைவிட வேறு பயங்கரவாதிகளும் இருப்பார்கள் என இவர்கள் அறிவித்தபின்னர் தான் பலர் அதிசயித்தனர்.

பிரித்தானியாவின் முற்போக்கு ஜனநாயக சக்திகள் மத்தியிலிருந்து முன்னெப்போதும் இல்லாத எதிர்ப்பலைகள் உருவாகின.

அவர்கள் எதிர்த்தது வெறுமனே இராணுவ ஆக்கிரமிப்பை மட்டுமல்ல. உலக்த்தின் அனைத்து சிக்கல்களையும் உருவாக்கி மக்களைச் சிறுகச் சிறுகக் கொன்றொழிக்கும் பல்தேசிய கோப்ரட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பிற்கும் எதிராகத் தான்.

முதலில் டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் லண்டன் ஒலிம்பிக்ஸ் இன் பிரதான நன்கொடையாளர். யூனியன் காபைட் நிறுவனம் இந்தியாவில் நிழக்த்திய காப்ரட் பயங்கரவாதத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். 1984 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இந்தப் பயங்கரவாதப் படுகொலைகள் நிமிடங்களுக்குள் பல்லாயிரம் உயிர்ளைப் பலிகொண்டது. ஊனமுற்ற ஒரு சமூகத்தை உருவாக்கியது. அந்த நிறுவனத்தின் தலைவர் அண்டர்சன் அமரிக்காவிற்குத் தப்பியோடிவிட்டார்.

இன்றும் அதன் பாதிப்பிலிருந்து மக்கள் விடுபடவில்லை. நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்காமல் காலத்தைக் கடத்திய யூனியன் காபைட் நிறுவனத்தை டவ் கெமிக்க்கல்ஸ் சுவீகரித்துக் கொண்டது. மக்களுக்கு நட்ட ஈடு கொடுப்பது தங்கள் வேலையல்ல அது யூனியன் காபைட்டோடு முடிந்துபோனது என நிராகரித்த டவ் கெமிக்கல்ஸ் £64 மில்லியன் பவுண்ஸ் தொகையான பணத்தை ஒலிம்பிக்கிற்கு நன்கொடையாக வழங்கியது. அதிலும் ஒலிம்பிக்கின் அழகான தொடக்கவிழாவிற்கு 7 மில்லியன் பவுண்சை வழங்கியது.

தாம் இந்தப் பணத்தை வழங்கியதற்காகப் பெருமைப்படும் டவ் கெமிக்கல்ஸ் புதிய உலகத்தை உருவாக்கப் போவதாக தமது இணையத்தில் காட்சிப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இதை பிரித்தனியப் பிரதமரிடம் ஊடகங்கள் வினவிய போது டவ் நற்பண்புள்ள நிறுவனம் என நட்சான்று பத்திரம் வழங்கினார். அதிலும் ஒருபடி மேலே போன அமிதப் பச்சன் டவ் அமைத்த மேடையை நோக்கி ஒலிம்பிக் விளக்கை கொண்டு ஓடிய போது போபால் தீ ஒலிம்பிக் தீபத்தில் எரிந்தது.

இதை எல்லாம் கண்டு கொள்ளாத ஈழத் தமிழ் குறுந்தேசிய கோமாளிகள் அங்கு ஒரு மூலையில் புலிக் கொடியைக் செருகி வைத்துவிட்டு தமது விசிலடிச்சன் ஊடகங்களில் ஒலிம்பிக்கில் தமிழ் ஈழ தேசியக் கொடி பறப்பதாக எழுதி மகிழ்ந்தனர். இவர்களின் அருவருப்பான கோமாளித்தனதிற்கு எல்லை முடிவிலியில்தான்.

ஒலிம்பிக்ஸ் ஆரம்பவிழாவைப் பார்த்துப் புல்லரித்துப் போன ஆங்கிலம் பேசும் இந்திய மேட்டுக்குடிகள் “வாட் ஏ பியூட்டி யார்” என புளொக்கிகளில் எழுதினர். பேஸ் புக் மூட்டைப் பூச்சிகளும் கடித்துக்கொண்டன. பிரித்தானியாவில் இவர்கள் ஆங்கிலம் பேசினாலே ஏளனமாகப் பேசும் பெரும்பானமையான மக்கள் மத்தியில் தமது தாய் மொழி ஆங்கிலம் என அடிமைகளாகக் தலைகுனிந்து வாழும் இந்தக் கூட்டம் ஆயிரம் டவ் களுக்கு அடியாட்களைத் தயாரிக்கும்.

டவ் தனது பயங்கரவாத முகத்திற்கு ஒலிம்பிக்ஸ் முகமூடி அணிந்துகொண்டது போக கொக்கா கோலா நிறுவனம் நடத்திய “ஒன் த ஸ்பொட்” கொள்ளை அளப்பரியது. 30 நாடுகளின் நேரடி ஒலிபரப்பை சுவீகரித்துக்கொண்ட கொகா கோலா, ஒலிம்பிக் திடலுக்குள் ஏனைய பானங்களின் விற்பனைக்குத் தடைவிதித்தது. தண்ணீர்ப் போத்தல்களுடன் யாரும் உள் நுளைய முடியாது. மூன்று மடங்கு விலையில் விற்பனையாகும் கோலா பானங்களை மட்டுமே மக்கள் அருந்த முடியும்.

லிபியாவில் கடாபி ஆட்சியில் வழங்கப்பட்ட நீர்ப்பாசனைத்தை அழித்துவிட்டு அங்கே முதலில் சென்றடைந்தது கோலா என்ற நச்சுப்பானம் தான் என்றால் ஆரோக்கியமான உணவு குறித்து நாளாந்தம் பேசுகின்ற பிரித்தானியாவின் மெய்வல்ல்லுனர் உலகப்போட்டியில் கொக்க கோலாவின் ஆக்கிரமிப்பு மக்களை விரக்திக்கு உள்ளாகியது.

தவிர ஹேனிக்கன் பியர் நிறுவனம், அமரிக்கன் சாப்பாடுக்கடை மக்டொனால் போன்ற மனித சுகாதாரத்தை அழித்து உடல் ஆரோக்கியத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் அத்தனை திருடர்களும் நன்கொடை வழங்கி நடத்தப்படும் ஒலிம்பிக்ஸ் உலகிற்கு இன்னொரு செய்தியைச் சொல்கிறது. சிலம் டோக்ஸ் மில்லியனர் புகழ் டானி பொயில்ஸ் வடிவமைத்த ஆரம்ப விழா சொல்லும் செய்திய விட உரத்த குரலில் அந்தச் செய்தி மக்களின் கதவுகளைத் தட்டுகிறது.

அரச இராணுவங்களின் துணையோடு நடத்தப்படும் கோப்ரட் பயங்கரவாதத்திலிருந்து மக்கள் தம்மைத் தற்காத்துக்கொள்ளப் போராடவேண்டும் என்பதே.

தொடர்புடைய பதிவுகள்:

ஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது!

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

டெசோ மாநாடு : கருணாநிதி மாவை சந்திப்பு

Comments 12

  1. Pingback: Indli.com
  2. veeran says:
    13 years ago

    நாய் விற்ற காசு குரைக்காது!— நாய் எப்படி காசை விற்கும்

    • Roopan says:
      13 years ago

      நாய் எப்படி குரைக்கும் மொதல்ல?

    • அரிச்சந்திரன் says:
      13 years ago

       நாய் எப்படி காசை விற்கும், அனுபவப்பட்ட எனக்கல்லவோ தெரியும்.

  3. Mahendra says:
    13 years ago

    பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கி ஜனநாயகம் பேணும் பயங்கரவாதிகளையும், மக்களைக் கொன்றொழிக்கும் பல்தேசிய கோப்ரட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பையும், யூனியன் காபைட், கொக்கா கோலா, ஹேனிக்கன் பியர், மக்டொனால் போன்ற நிறுவனங்களின் பயங்கரவாதத்தையும் விலாவாரியாக வெளியிட்டு, இன்றைய போலி ஜனநாயகவாதிகள்பற்றி உலகத்திற்கு வியாசன் சொல்லமுயல்வது என்ன?. இவர்களுக்கு எதிராக போராடவேண்டும் என்று மக்களை அழைக்கின்றாரா?. அப்படியானால் எந்த அடையாளத்தை வைத்துப் போராடுவது?. தமிழினம் ஈழத்தில் அழிக்கப்படுகிறது. அது பிரபாகரன் படை தோன்றுவதற்கு முன்னரே அழிக்கப்பட்டுவரும் ஒரு இனம். சரியோ, தவறோ தமிழினம் என்பதால் தனது அடையாளங்களை வெளிக்காட்டாது அதனை அடக்கிக்கொள்ள வேண்டும் என்று சொல்லவருகிறாரா?. வன்புணர்வுக்கு ஆளாக்க முயல்பவனோடு எதிர்த்துப் போராடாமல் இணங்கிப்போய்விட்டால் அது துன்பமாகத் தெரியாது என ஒரு அறப்படித்த அறிவாளி எழுதியது நினைவில் வருகிறது.

    • viyasan says:
      13 years ago

      மகேந்ரா,
      முதலில் ஆர்வத்திற்கு நன்றி. போபால் அழிவுக்கு எதிராக ஒலிம்பிக்கை நிராகரிக்கக் கோரி பல அமைப்புக்கள் இந்தியாவில் கடந்த வாரம் போராடின. கோப்ரட் பயங்கரவாததுக்கு எதிராக உலகம் முழுதும் மக்கள் பல்லாயிரக்கணக்கில் போராடுகிறார்கள். இவர்கள் தான் தமிழ் மக்களுகாகவும் போராடுவார்கள்.
      நீங்களோ கோப்ரட் மேடையில் உங்கள் கொடி பறக்கிறது என்று தமிழ் மக்களைப் போராடுகிறவர்களின் எதிரிகள் ஆக்குகிறீர்கள். அவர்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்குறீர்கள். அதே வேளை தமிழர்களின் போராட்டத்தையும் காட்டிக்கொடுக்குறீர்கள்.
      30 வருடமாக போராடும் மக்களோடு இணைவுக்கு வராமல் தடுத்ததே இந்த வழிமுறைதான்.
      காட்டிக் கொடுத்தவர்களுக்கு கொடுக்குற தண்டனையாக அவர்களை அம்பலப்படுத்துவோம். புதிய போராட்ட வழிகளை அறிவிப்போம்.

  4. roopan says:
    13 years ago

    ” சிரியாவிலும், லிபியாவிலும், மத்திய கிழக்குக் கடற்பரப்பிலும், இன்னும் உலகின் ஒவ்வோர் மூலையிலும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கி அரசுகளுக்கு எதிராக ஜனநாயகம் என்ற பெயரில் தாக்குதல் நடத்தும் இந்த நாடுகளைவிட வேறு பயங்கரவாதிகளும் இருப்பார்கள் என இவர்கள் அறிவித்தபின்னர் தான் பலர் அதிசயித்தனர்.

    ” அதாவது உங்களுக்கு கடாபியும், முபாரக்கும், அந்த கொலைகாரப்பாவி அசாத்தும் தேவலை இங்குறீங்க

  5. saro says:
    13 years ago

    லணடனுக்கு வரும் மகிந்தாவுக்கு லண்டன் தமிழர் கொடுக்கும்மரியாதையை லணடனிலிருந்து இலங்கைக்கு செல்லும ;தமிழருக்கு சிங்களவர்கள் கொடுக்கத் தொடங்கினால் எப்படி இருக்கும்?

  6. Mahendra says:
    13 years ago

    தமிழருடைய அடையாளம் தமிழர்கள்தான். அந்த அடையாளத்தை தொன்றுதொட்டு வெளிப்படுத்தி வருவது புலிச்சின்னமே. பிரபாகரனின் இராணுவம் அதனை தனது கொடியில் பாவித்ததால் அவருடைய இராணுவத்துக்கு மட்டுமே அது சொந்தமானதாக கொள்ள முடியாது. யதார்த்தம் புரியாமல் நான் எழுதுவதாக நீங்கள் எண்ணி தமிழர் அழிவுக்கு என்னைப்போன்றவர்கள் முயற்சிப்பதாகவும் வையலாம். உண்மையில் புலிச்சின்னம் பதித்த தமிழர் கொடியை உலகமக்கள் வெறுக்கவுமில்லை ஒதுக்கவுமில்லை. புலிக்கொடி ஏந்துவதால் தமிழர்களை எதிரிகளாக பாவித்து ஆதரவுதர மறுத்ததும் இல்லை. தமிழர்கள் தங்களை வெளிப்படுத்த எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும் அவற்றை அசிங்கப்படுத்தி, தமிழர்கள் அனைவரையும் எதிரிகளாகப் பார்ப்பது இந்தியாமட்டுமே.

    பல உலகநாடுகளில், மக்கள் தங்கள் நகரங்களில் நடைபெறும் தமிழர் விழாக்களுக்கு ஆதரவு தருவதோடு, தங்கள் நகர பிதாக்கள் ஊடாகவும் புலிக்கொடியை ஏற்றச்செய்து சிறப்புச் செய்கின்ற நிகழ்வுகளை ஒளிப்படங்கள் ஊடாக பல இணையங்களும் வெளிப்படுத்தியுள்ளன. தமிழர்களைப் பழிப்பதும், அவர்கள்மேல் காழ்ப்புனர்ச்சியைக் காட்டுவதும் இந்திய மக்களே தவிர உலகமக்களல்ல. தமிழர்களை அரக்கர்களாக்கி தமிழர்களைக்கொண்டே அதனை கொண்டாடச் செய்திருக்கும் இந்தியாவிற்கு இதுபெரும் காரியமும் அல்ல. தமிழர்களுக்கு ஒரு தேசம் அமைவதை இந்தியா அனுமதிக்காது என்பதை பூடகமாக வெளிப்படுத்தியும் உள்ளது. அதற்குச் சான்றாக ஈழதேசம் அமைவதை தடுப்பதற்கு அசிங்கமான, அநாகரிகமான, மலினமான, மனிதகுலமே வெட்கித் தலைகுனியும் வேலைகளையும் அது செய்தது, செய்தும்வருகிறது.

    இந்தியாவின் நாற்றமெடுக்கும் அரசியல் தந்திரமே, இதுபோன்ற பதிவுகளை மேற்கொள்ளவைப்பதோடு, தமிழ்மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தரக்கூடிய உலகமக்களை, புலிக்கொடியை ஏந்துவோர், எதிரிகள் ஆக்குவதாகவும், அவர்களே போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பதாகவும் நம்பவைப்பதில் வெற்றிகளும் பெற்று வருகிறது.

    உலகநாடுகளில் தமிழர்கள் நடாத்திவரும் போராட்டம் போன்று பெரும் ஜனநாயக நாடென்று தன்னைப் பீற்றிக்கொள்ளும் இந்தியாவில் நடாத்த முடியுமா? இந்தியா நாறடித்துவிடும். உலகமயமாக்கலில் மேலைநாடுகளால் அதிகம் சுரண்டக்கூடிய வளமுள்ள நாடாக இந்தியா விளங்குவதால் அவை இந்தியாவுக்கு துணைபோகின்றனவே தவிர, தமிழ்மக்களுக்கு எதிரியாவதால் அவைகளுக்கு எந்த இலாபமும் இல்லை.

  7. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Showing the tiger flag in public means just asking for trouble.  Government of Sri Lanka also cannot sell this terrorist thing anymore anywhere else. Everything could be done in Colombo. There is no need to waste government money flying all over the world.  

    • Roopan says:
      13 years ago

      என்ன பேசுறீங்க இதை விட்டா உலகம் சுற்ற வேற சந்தர்ப்பம் கிடைக்குமா என்னா, புரியாதா ஆளா இருக்கீங்களே சாமி.

  8. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Mahendra, Sri Lankan Tamils will never again support an armed uprising here. Roopan, American Republican Presidential Candidate Mitt Romney is also a Harvard Lawyer. He is in UK with a message for Prime Minister David Cameron about security. The Munich Olympics of 1972. Some one said, too bad that Jews are still dying in Germany. They stared hitting back and it went very nasty especially in Europe. Sri Lankan Tamils need to think about this very seriously.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...