Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பயங்கரவாதப்பணமுதலீட்டு வேட்டையில் நெடியவன் கைது : நோர்வே நக்கீரா

இனியொரு... by இனியொரு...
05/22/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
47
Home பிரதான பதிவுகள் | Principle posts

நோர்வேயில் ஓலசுண்ட எனும் பகுதியில் வசித்துவரும் முன்னைநாள் புலிகளின் முக்கிய நபர்களின் ஒருவரான நெடியவன் என்பவர் பெருந்தொகை பணமுதலீடு குறித்து நெதலாந்து (Holand) இருந்து வந்த வேட்டைக்குழுவின் கைகளில் அகப்பட்டுக் கொண்டார். இவர் தனது வதிவிடமான ஓலசுண்டில் உள்ள ஒரு பாலர்பராமரிப்பு நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த போதே  கைதானார். இவர் இலங்கையில் சித்தங்கேணியைச் சேர்ந்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் மையப்பகுதி உறுப்பினரான இவர் நோர்வேக்கு திருமணம் செய்து கொண்டதன் மூலமாகவே நோர்வேக்கு வந்தார் என்று கருதப்படுகிறது.

சர்வதேசபுலனாய்புக் பகுதியில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் கொலண் குழுவினால் நெடியவனின் வதிவிடம் சட்டவரைமுறைக்குள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சோதனைக்குக் காரணம் இவர் புலிகளின் முக்கியமான மையப்பகுதியைக் கொண்டவர் என்றும் பயங்கரவாதத்திற்காக பெருந்தொகையான பணமுதலீடு செய்பவர் என்ற சந்தேகத்தின் பெயரிலேயே இந்த வேட்டை நடந்தது.

நெதலாந்து  புலனாய்புப்பிரிவின் தகவல்படி நெடியவன் மில்லியன் கணக்கில் புலிகளுக்குக் முதலிட்டுள்ளார், பங்களித்துள்ளார் என்பதாகும். இதை சுருக்கமாக இப்படி விளங்கிக் கொள்ளலாம். அதாவது நோர்வே  வாழ் தமிழர்களின்  பணமும், முதலீட்டுக்காக புலிகளின் பணமும் கொலண்டின் ஊடாக மாற்றப்பட்டுள்ளது.

சென்றவருடம் 7 புலிகள் கொலண்டில் பிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இதனுடன் நெடியவனும் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற காரணத்தினால்; இவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நோர்வேயிய தொலைக்காட்சியான ரிவி 2ன் செய்திப்படி



http://www.tv2nyhetene.no/innenriks/norsk-tamil-i-hemmelige-terroravhoer-3497196.html

கொலண்டின் வேட்டைக் குழுவினால் விசாரிக்கப்பட்டார். ஒரு கொலண் நீதியரசருக்கும் 5 வழக்கறிஞர்களையும் கொண்டகுழு நெடியவனை விசாரித்தது என்ற செய்தி அறியப்படுகிறது.

பயங்கரவாதத்துக்கான பணமுதலீடு காரணமாக 7தமிழர்கள் கொலண்டில் கைது செய்யப்பட்டும் 16க்கு மேற்பட்டவர்கள் விசாரிக்கவும் பட்டுள்ளனர். தேசியப்பாதுகாப்பு இரகசிய இலாகா குறிப்பிடத்தக்க அளவு பெரும்தொகை பணத்தை புலிகள்  முதலிட்டுள்ளனர் என்பதை கண்டறிந்துள்ளது.

இதில் 52வயதுடைய கணக்காளர் ஒருவர்தான் கொலண்டுக்கு புலிகளுக்குத் தலைவன் என்பதும் அறியவந்துள்ளது. இந்த நெடியவனை பற்றிய விபரங்களை ஊடகவியலாளருக்குக் கொடுக்க மறுத்த நோர்வே உளவு இலாக கொலண் குழுவிற்கு தாம் உதவினோம் என்பதை தெழிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.

உலகில் பலநாடுகள் புலிகளை பயங்கரவாதப்பட்டியலில் சேர்த்திருந்தாலும், இராஜதந்திர உறவுகள் காரணமாக நோர்வே இதைச் செய்யவில்லை என்பதை பலர் உணர்ந்திருப்பார்கள். இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தைகளுக்கு நோர்வே அனுசரணையாளர்களாக இருந்ததே இதற்கு முக்கிய காரணம் எனலாம். பலநாடுகளின் கண்களில் புலிகளின் சுயாதீன அசைவுக்குரிய இடமாக நோர்வே இருப்பதாகக் கணிக்கப்பட்டாலும் ஐரோப்பிய ஒன்றிய நடைமுறைகளுக்கு நோர்வேயும் கட்டுப்பட்டு ஆகவேண்டும் என்ற நியதியுள்ளது என்பதை மறக்காது இருப்பது அவசியம்.

எது எப்படி இருந்தாலும் நோர்வே பயங்கரவாதத்துக்கான பணமுதலீடு நெடியவன் குறித்த நிகழ்வுகளை போதியளவு இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் போல் லொன்செத் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் அவை, நாடுகடந்த தமிழீழம் என்று இருபிரிவுகளாக புலிகள் நோர்வேயில் இயங்கிவருகின்றனர். நெடிலன் மறைமுகத்தலைமையின் பின்னாலேயே நோர்வே தமிழர் அவை இயங்குவதாக அறியப்படுகிறது.

2003 இலைதளிர்காலத்தில் நோர்வேயின் சோசலிச இடதுசாரிக்கட்சி, எரிச் சூல்கெய்மைச் சந்திக்க பாராளுமன்றம் சென்ற புலிகளின் குழுவில் நெடிலன் பின்வரிசையில் நிற்கும் படத்தின் இணைப்பை கீழே பார்க்கவும்:

வெளிநாட்டு பாதுகாப்பு அமைச்சின் வலதுசாரிக்கட்சியைச் சேர்ந்த பேத்தர் எஸ் கித்மார்க் நெடிலன்குறித்த செய்திபற்றி மிக எதிர்மையான கருத்துக்களை வெளியிட்டார். இப்படியான பயங்கரவாதத்திற்கான பணமுதலீடுகள் இலங்கையில் ஒரு ஆயுதப்போராட்டத்துக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிட்டிருந்தார். அத்துடன் புலிகளின் சுதந்திரமான அசைவுகளும் சுதந்திரமான பயங்கரவாத முதலீடுகளும் அயல்நாடுகளுடன் முரண்டநேருகிறது என்றும் இப்படியான விடயங்கள் மீண்டும் பொதுமக்களை அழிக்கும் ஒரு ஆயுதப்போராட்டத்துக்கு வளிவகுக்கும் என்று மேலும் குறிப்பிட்டிருந்தார்.

 

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டால் போர்க்குற்ற விசாரணை கைவிடப்படுமா? : இதயச்சந்​திரன்

Comments 47

  1. sivamathi says:
    15 years ago

    நெடியவன் மில்லியன் அளவில் பணம் வைத்திருந்தால் எப்படி பாலர் பள்ளியில் வேலைசெய்வார். இப்படியான காட்டி கொடுப்புகளை செய்வது பிரித்தானியாவில் கே.பி இன் மருமகனின் தலைமையில் இயங்கும் ஒரு குழு என்பது தெரிந்தது. இவர் நாடுகடந்த தமிழ் ஈழம் நபர்களுக்கு நெருக்கமானவர். அரசாங்கத்தோடு நெருங்கி வேலை பார்பவர். நெடியவன் விசாரணைக்கு அழைக்கப்படு விடுவிக்கப்பட்டார் என்பதே உண்மை. கட்டுரையாளர் ஏன் இந்த உண்மையை மறைக்கிறார். பதில் சொல்லவும்.

  2. Nackeera says:
    15 years ago

    சிவமதி
    முதலில் இது கட்டுரை அல்ல இது செய்தி. அது பாலர்பள்ளி அல்ல பாலர்களைப் பராமரிக்கும் பாலர் பூங்கா. ஏன் பாலர்பூங்காவில் வேலை செய்தார் என்பதை நீங்கள் நெடியவனிடமே கேட்பது உசிதமானது. காட்டிக்கொடுத்தது யார் என்பது எல்லாம் ஊகங்களே தவிர ஆதராம் இல்லை.  இச்செய்தி எழுதப்படும் வரை நெடியவன் விடுவிக்கப்பட்டதாகச் தகவல் கிடைக்கவில்லை. பிந்திய தகவலின் படி அதுவும் அவரின் குடும்பத்தின் செய்திப்படி நீதிமன்ற விராரணையின் படி விடுவிக்கப்பட்டார் என ஊஜிதப்படுத்தாத செய்திகள் கிடைக்கப்பட்டன.  உடனடியாகத் தடுப்புக்காவலில் வைக்கும் அளவுக்கு உடன் நடந்த ஒரு பயங்கரவாதச் செயலோ கொலையே அல்ல அதனால் உடன் தடுப்புக்காவலில் வைக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது. நெடியவன் விடுதலை செய்யப்பட்டார் என்பது அவர் குற்றமற்றவர் என்றோ குற்றம் செய்தவர் என்றோ அர்த்தமாகாது. அதைத்தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம். நெடியவனை விட்டாலும் தொடர்ந்து வரும் விசாரணைகளுக்கு நெடியவன் முகம் கொடுக்க வேண்டியிருக்கும்-

  3. Raj says:
    15 years ago

    Sivamathi

    it is not new. they may do things for the movement. but it dose not mean that they are living in that money. for their day to day expenses they do work. the money what they collect is not for their well being. as Nediyavan has a family he has to work to look after them. he may handle big amount of money but it it is not his money to use for his personnel needs.

      

    • THAMILMARAN says:
      15 years ago

      ஓசாமா எனும் மானிடன் மதம் எனும் போர்வையில் ப்தினேழு வயது பெண்ணோடு குடும்பம் நடாத்துவதும்,பொழுது போக்குக்கு பாலான படம் பார்பதும் ஓகே ஆனால் அப்பாவி மக்கள கொல்லும் fபாக்டரி நடாத்தினான் அவனை ஆண்டவனின் தூதன் என அழைத்து மகிழும் உலகில் நெடியவன் வேலை செய்தே வாழ்கிறான் என்பது மகிழ்வான செய்தி.

      • Solomon says:
        15 years ago

        28,000+ young Tamil boys send by a man to commit suicide and the same man said to be lived with young kids..(who he thought can send them to killing field)
        Osama killed people in the name of religion.  Praba killed people in the name of language. only one different. Osama killed without raising white flag and also
        on. Praba got killed with white flag and forced lots of people to die with him.

        • Suppu says:
          15 years ago

          You statment is absolutly right. Prabakran killed people “not name of language” Tamil is not only language, but also race. He killed people for name of tigers as a mafias. His a real mafia and the tigers are mafia grupe. It is not dought.

  4. யோகா.எஸ் says:
    15 years ago

    உலகில் நடக்காத ஏதோ ஒன்று நோர்வேயில் நடந்து விடவில்லை!இந்த அகிலம் முழுவதும் ஏதோ ஒரு தேவைக்காக,அது பயங்கரவாதமாக இருக்கலாம்,மனிதாபிமான உதவிக்காக இருக்கலாம்,விடுதலை வேண்டிப் போராடும் நபர்களுக்காக இருக்கலாம் பணம்,பொருள் சேகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.நாடுகளில் அங்கீகாரம் பெற்று பொது ஸ்தாபனங்களாக பதிவு செய்து,வங்கிக் கணக்கு திறந்து பிரதிநிதிகள் மூலம் மனிதாபிமான உதவிகள் வழங்குதலும் நடைபெற்றே வருகிறது.பல அமைப்புகள் சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் கூட ஈடுபடுகின்றன!எமது மக்களால் நிறுவப்படும் மனிதாபிமான தொண்டர் நிறுவனங்கள் இலங்கை அரசின் பிரச்சார,மற்றும் அழுத்தங்கள் காரணமாக சந்தேகக் கண் கொண்டே பார்க்கப்படுகின்றன.இதன் மூலம் நெடியவனுக்கு நான் வக்காலத்து வாங்குவதாக எவரும் எண்ணி விடாதீர்கள்.உலகெங்கும் தமிழ் அரசியல் அல்லது மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவது அன்றில் விசாரணைக்கு முகம் கொடுப்பது ஒன்றும் புதிதல்ல.ஏதோ நெடியவன் ஒரு மாபெரும் சக்தியாக பிரச்சாரப்படுத்தப்படுவது ஏன்?இதுவும் ஒரு வகையில் புலம்பெயர் தமிழர்களின் உளவரணை,வேட்கையை மழுங்கடிப்பதே நோக்கம்.சும்மா ஒவ்வோர் இணையமும் தங்கள் தளத்துக்கு இத்தனை வாசகர்கள் என்று புள்ளிவிபரம் காட்டி பெருமையடித்துக் கொள்வதற்கே இந்தச் செய்தி உதவும்!சர்வதேச நாணய நிதியத்தின் நிறவேற்றுப் பணிப்பாளர் டொமினிக் ஸ்ரவுஸ் கான் விவகாரத்தால் உலகப் பத்திரிகைகளும் இணையங்களும் குளிர் காய்வதற்கும் நெடியவன் பெயர் சில நாள்களாக தமிழ் உட்பட ஒரு சில வேற்று மொழிப் பத்திரிகைகளில் “அடிபடுவதற்கும்” எந்த வித்தியாசமும் இல்லை.மேலும் ஏதோ இன்று,நேற்றுத் தான் உலக உளவு அமைப்புகள் ஈழத் தமிழரை குறி வைத்துப் பின் தொடர்கின்றனர் என்பது கூட மிகைப்படுத்தப்பட்ட ஒர் செய்தியே!சுமார் இருபது ஆண்டுகளாக நாம் கண்காணிக்கப்படுகிறோம்!இற்றை வரை அவர்களுக்கு நாம் வேண்டியவர்களாயிருந்தோம்!சமீப காலமாக வேண்டப்படாதவர்கள் ஆகி விட்டோம்,நாம் புரிந்து கொள்ளத் தவறினோம் அவ்வளவு தான்!

    • THAMILMARAN says:
      15 years ago

      எதற்காகவும் இருந்து விட்டுப் போகட்டும்.ஒன்றப் புரிந்து கொள்வோம் வாழ்க்கை என்பதும் விளயாட்டு சரியாக ஆடவில்லை என்றால் சறூக்கல்கள் நிச்சயம் அதிலும் அதிக அவதானமாக இருந்தால் தவறூகள் சாத்தியம்.எல்லாமே கிளீத்தட்டுக் கேம்தான்.அது சரி யாருங்கோ இந்த நெடியவன்?

    • para says:
      15 years ago

      ஏதோ சும்மா வீம்புக்காக கதைக்கும் பிரச்சனையா இவை. உண்மையில் மக்கள் குடுத்த பணத்தை ஒரு சிலர் அபகரித்து சுகபோக வாழ்க்கை நடத்துகிறார்கள். சிலர் இலங்கையில் முதலிட்டு உள்ளார்கள். இதற்கு இவர்கள் கணக்கு காட்ட வேண்டும். இலலையேல் கம்பி என்ன வேண்டும்.

      • THAMILMARAN says:
        15 years ago

        க்ண்க்கும் அதுக்கு வழக்கும் என வாழ்க்கை முழுவதையும் இழந்து விட்டு வாழ்க்கையை முழுமையாக வாழவில்லையே என வ்ருந்தும் மூடராக இல்லாமல் வாழ்க்கையை அநுபவித்து வாழ்பவர் மீது பாய்வது நமது பழக்கமாய் போயிடுச்சு.நெடிய வாழ்க்கைப் பயணத்தில் நெடியவனும் ஒரு இன்றூ ந்ம் பேச்சில் அதெல்லாம் சரி தோசைக்கு சுவை சம்பலா? சாம்பாறா?

        • Suppu says:
          15 years ago

          கக்கூசு கழுவி உழைத்த காசைக்கூடக் களவெடுத்து தாயகவிடுதலை மண்மீட்பு என்று ஏமாற்றி முதல்களாக உறவினர்கள் பெயரிலும் மற்றவர்கள் பெயரிலும் பதுக்கி வைத்திருக்கும் திருடர்களை விட்டு விட்டு தோசைக்கு சம்பலா சாம்பாறா என்கிறீர்கள். மனிதனின் உழைப்பைச் சுரண்டிய புலிகள் கம்பி எண்ணுவது மட்டுமல்ல அப்பணங்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். காசுக்கே கணக்கு விடும் புலிகளா எம்மக்களுக்கு வாழ்க்கை அமைக்கப்போகிறார்கள். செத்தபுலிக்குச் சமாதி கட்டலாமே தவிர உயிர்பிக்க ஏலாது. புலி புலி என்று கத்துகிறது எல்லாம் மீதியாக புலத்துத் தமிழர்களின் பணத்தைப் புளிந்த எடுப்பதற்கே.

          • thurai says:
            15 years ago

            சுப்பு தொடர்ந்தும் எழுதுங்கள்.
            என்னிடம் 15 வருடங்களிற்கு முன் புலியின் பணம் திரட்டும் ஒருவர் சொன்னார் தம்மிடமும் இன்னொரு அயல்நாட்டு நண்பரிடமும் பல லட்சம் டொலர் இருப்பதாகவும் ஏதாவுது
            வழியில்முதலீடு செய்ய வேண்டுமெனவும் விரும்பினார். அவ்ர் செய்த வேலையோ மணிக்கும் 5 டொலர் சம்பளம்.
            பின்பு கேள்விப்பட்டேன் அவர் 5 மாடிகட்டமோன்றை வாங்கி வாடகைக்கு கொடுத்துவிட்டு சும்மா இருக்கின்றாரென்று.

            இப்படி உலகம் முழுவதும் எத்தனையோ?-துரை

      • Suppu says:
        15 years ago

        உண்மை பரா! கோடிக்கணக்கில் முதலிட்டுள்ளார்கள். அதுமட்டுமா எதிரியான அரசுடன் சேர்ந்து முதலிட்டுள்ளமை தான் சிந்திக்வேண்டியது. இது கொள்ளை படு கொள்ளை.

  5. யோகா.சு. says:
    15 years ago

    புரிந்து கொள்ளுங்கள்,உறவுகளே!சிறீ-லங்கா பேரினவாதம் இவ்வாறான பிரச்சாரங்களை தங்கள் பேரினவாத பரம்பலுக்கு வலு சேர்க்கும் விதமாகக் கையாள்கிறது!அவர்கள் நிகழ்ச்சி நிரலின்படி தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள்! நாம் என்றுமே மடையர்கள் தான்.அவர்கள் இவ்வாறான பிரச்சாரங்கள் மூலம் சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதுடன் நின்று விடாது நிகழ்ச்சி நிரலுக்கூடாக தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருக்கிறார்கள்!நாம் தான் இணையச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து(அது உண்மையாக இருந்தாலென்ன;பொய்யாக இருந்தாலென்ன)நமக்குள் மோதிக் கொள்கிறோம்.அவர்கள் போல் (பேரினவாதிகள்) இல்லாமல் இவ்வாறான கவைக்குதவாத பிரச்சாரங்களுக்கு வலு சேர்ப்பதை விட்டு விட்டு,இன அழிப்பை முன்னிறுத்தி,விடுதலைக்கு ஒத்துழைப்போமென்று சபதமெடுத்துக் கொள்வோம்.இப்போது வேண்டியது அது தான்,அது மட்டுமே தான்!

    • Bharathi says:
      15 years ago

      நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டு அவ்வாறான பிரச்சாரங்களை எவ்வாறு முறியடிப்பது என்பதை சிந்திப்போம்.
      குற்றங்களை முடி மறைப்பதல்ல அதற்கு வழி. அது நாம் இலங்கை அரசிற்குப் பயன்படும் ஓட்டைகளைக் கொண்டவர்கள் ஆகிவிடுவோம். அப்போ என்ன செய்வது?
      1. சிறீ லங்கா அரசைத் தொடர்ச்சியாக அம்பலப்படுத்துவது.

      2. நாம் வெளிப்படையாக நடந்தவற்றை முன்வைப்பது அல்லது உரியவர்களை முன்வைக்கக் கோருவது.
      3. தவறு செய்தவர்கள் தம்மை வெளிப்படையான சுய விமர்சனத்திற்கு உட்படுத்துவது அல்லது அதற்கான கோரிக்கையை ஏனையோர் அவர்களை நோக்கி முன்வைப்பது.
      இவை நடக்காவிட்டால் நெடியவன் போன்றவர்கள் சிறீ லங்கா அரசின் பயன்பாட்டிற்கு உட்பட்டுப் போவார்கள் என்பது உறுதி.

      • Suppu says:
        15 years ago

        நெடியவன் மக்களின் பணத்தை எங்கு எங்கு முதலீடு செய்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்களா? மக்கள் கோடிக்கணக்கில் கொடுத்த பணங்கள் எங்கே? நாட்டில் புலிகளுக்குப் போய் சேரவில்லை என்பது அங்குள்ள புலிகளின் வாக்கு மூலம். அப்படியானால் அது புலத்தில்தான் இருக்க வேண்டும். அது எங்கே யாரிடம் எப்படியாக உள்ளது? நெடியவன் கஸரோ கே.பி சுவீஸ்புலிகள் நந்தவனத்துக்குத் தெரியாமல் இருப்பதற்குச் சந்தர்பமே இல்லை.

    • thurai says:
      15 years ago

      புலம்பெயர் தமிழர்களே விடுதலையென்னும் வார்த்தையை உச்சரித்து
      அதனை கொச்சைபடுத்தாதீர்கள். உடுக்கடிக்க ஆடும் பேய் பிடித்தவ்ர்கள் போலும்,
      பாம்பாட்டி முன்னாடும் பாம்பு போலும் உசுப்பேத்துவர்கள் பின்னால் போகும் உங்களிற்கு என்னந்டக்கும் தெரியுமா? எலிகளை அழிக்க குழல் ஊதி வெளியே வரவழைத்து எலிகளை ஆற்ரில் கொண்டுபோய் ஒருவன் இறக்கினான் தெரியுமா? அதே நிலைமைதான் ஏற்படும். வாழும் நாட்டவ்ர்களிற்கு முதலில் மதிப்புக் கொடுங்கள்.
      எல்லோரும் உலகில் கெட்டவ்ர்கள் தமிழர்தான் தலை சிற்ந்தவ்ர்களென சொல்லியே உங்கள் தலைகளை விலை பேசுகின்றார்கள்.இதுவே
      முள்லிவாய்காலில்நடந்தது.-துரை

      • Suppu says:
        15 years ago

        சுப்பராய் சொன்னீர்கள் துரை

    • THAMILMARAN says:
      15 years ago

      யோகா சொல்வ்து மசாலா தோசை கூடாது வெறூம் தோசையோடு சாம்பார் இருந்தால் போதும் என்றூ.முடியாதே? நாமெல்லாம் முட்டாளாக இருந்தே ப்ழக்கமாயிற்றே எப்படி மாறூவது?

  6. ravi says:
    15 years ago

    துரை முள்ளிவாய்க்காளில் யார் தமிழர்களைக் கொன்றார்கள் என்பதை பன்னாட்டு விசாரணை ஒன்றின் மூலமாக முடிவு செய்து தண்டனை வழங்கலாமே?மீதமுள்ள ஈழத்தமிழர்கள் கட்டுப்பாடற்றமுறையில் கருத்துரைக்க உங்கள் பேரினவாத சிங்களஅரசு அனுமதிக்கலாமே?

    • thurai says:
      15 years ago

      பேரினவாத அரசு இலங்கையில். அக்திகளாக வந்து இலங்கை அரசாங்கம் கொல்லுது என்று சொல்லி விசா எடுத்தாச்சு. போயும் வரலாம். தென்னிலங்கையில்வீடு வாங்கலாம்முதலிடலாம். அதுவும் புலத்திலை உசுப்பேத்தி சுருட்டிய பணத்திலை. சிங்களவ்ரின் காலில்விழுந்து கட்டிப்பிடித்து
      முத்தமுமிடலாம். அது யார் தெரியுமா? தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரமுகர்கள்தான்.. துரோகிகள் என்று நீங்கள் சொல்பவரெல்லாம் வெறும்கையோடு கத்தியது தான் மிச்சம். இனியாவது ஏமாறாமலிருங்கோ.-துரை

    • Suppu says:
      15 years ago

      ரவி!
      அன்று புலிகளின் பிழைகளைச் சுட்டிக்காட்டினால் துரோகிகள் இப்போ பேரினவாதத்தின் கூலிகள். சுயமாகச் சிந்திக்கப்பழகுங்கள். துரை எழுதியதில் எந்தப்பிழையும் கிடையாது. புலிகள் தமிழர்களைக் கொல்லவில்லை என்கிறீர்களா? இராணுவத்தை விட மோசமான முறையில் தமிழ்மக்களை கொன்றவர்கள் புலிகள். ரொலோவை அழிக்கும் போது உயிருடன் ரயர்போட்டு கொழுத்தியதை பார்த்திருக்கிறோம். மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் குண்டை வைத்துவிட்டு புலிகள் ஓட ஆயுதமே இல்லாமல் சூடுவாங்கிச் செத்தவர்கள் எங்கள் மக்கள். மக்களுக்காகப் போராடுகிறோம் மண்ணை மீட்கிறோம் என்று மக்களுக்குள்ளே ஒழிந்த பேடிகள் புலிகள் தான். ஊரான் பிள்ளைகளுக்கு சயனைட்டு புலிகளுக்கு சரணடைவா. இவர்களுக்கு மட்டம் வாழ ஆசை. நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள். எம்மினத்தை புத்தியற்ற ராஜதந்திரமற்ற மிருகங்கள் அதாவது புலிகள் தான் அழித்தார்கள். இதை ஆரம்பித்து வைத்தவர்கள் தமிழ் அரசியல்வாதிகள். செட்டியில்; பற்குணம் என்று அமிர்தலிங்கள்; பிரேமதாசா வரை கூட இருந்து கைகோர்த்த பின் கென்றது புலிகளளே (பிரபாகரன்) மகிந்தவிடம் இது பலிக்கவில்லை. கடசியில் கூட இருந்த கே.பி: கர்ஸரோ; நெடியவன் போர்றோராலும் கூட இருந்தவர்களாலும் பிரபாரன் கொல்லப்பட்டான். நீ என்ன செய்தாயோ அதுவே உனக்கும். ரவி!உங்கள் பேரினவாதம் என்று துரையைச் சுட்டிக்காட்டும் நீர் துரையை எவ்வளவுக்கு அறிந்துள்ளீர். பன்னாட்டு விசாரணை பற்றிக் கதைக்கிறீர்கள். பன்னாட்டை முகவர்களின் முன்தானே பேச்சு வார்த்தை நடந்தது. பன்னாட்டை தானே பன்னாடைகள் என்று அழைத்தார்கள். எந்தப் பன்னாட்டுப் பன்னாடை புலிகளை மனிதராகக் கணித்தார்கள். மிச்சம் மீதியையும் கொல்வதற்கும் வெளிநாட்டுத் தமிழர்களின் பணத்தை பிளிந்து எடுக்கவும் செத்த புலிகளை எழுப்புகிறார்கள். பிரபாகரன் இருக்கிறார் என்று கதைவிடுகிறார்கள். உயிருடன் இருக்கிறார் என்று தெரிந்தாலே மக்கள் அடித்தே கொல்வார்கள். அப்படி இருந்தால் மக்கள் முன் நிராயுதபாணியாக வரச் சொல்லுங்கள் பார்க்கலாம். கொத்தும் குலையுமாய் பலிகொடுத்துவிட்டு வாழ்க்கை தேவைப்படுகிறது. சரி இப்ப உயிருடன் இருந்த என்ன பண்ணப்போகிறார்?

  7. யோகா.சு. says:
    15 years ago

    மாறலாம்,மாற வேண்டும் தமிழ்மாறன்!இப்போது விட்டால் இனி எப்போதுமே முடியாது என்று ஆகி விடும்.உலக அரங்கில் மாறும் அரசியல் காட்சிகளை பாருங்கள்!பராக் ஒபாமாவின் இஸ்ரேல் பலஸ்தீனம் தொடர்பான கூற்றை கவனித்தீர்களா?இஸ்ரேல் தனது எல்லையை 1967-ல் இருந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற அறிவிப்பின் சூழ்ச்சுமம் என்ன என்பதை கவனியுங்கள்.இன்னுமின்னும் பேரினவாதம் எல்லைகளை,ஆக்கிரமிப்பை விரித்துக் கொண்டே செல்கிறது.தடுக்க முடியாமல் கையறு நிலையில் அனைத்து தமிழ் தலைமைகளும்!புலம்பெயர் தமிழர்கள் மட்டுமே ஜனநாயக நாடுகளில் வாழ்வதால் சுமை பெரியது என்று எண்ணாமல் செயற்பட வேண்டிய வேளை இது.தாயக மக்கள் மெளனிக்கப்பட்டிருக்கிறார்கள்!குரல் வளை நசுக்கப்பட்டிருக்கிறது.முடியாதது என்று எதுவுமே இல்லை.மே-18 ல் ஒன்றுபட்டது போல்,இன அழிப்பின் போது ஒன்றுபட்டுக் குரல் எழுப்பியது போல் தொடர வேண்டும்,முடியும் நம்மால் முடியும்.திருத்த முடியாத,திருந்த முயலாதவர்களை கணக்கில் எடுக்க வேண்டியதில்லை.அப்படிச் செய்தார்கள்,இப்படிச் செய்தார்கள் என்று பழம் கதை பேசும் வேளை இதுவல்ல,செயற்பட வேண்டிய வேளை இது,அவ்வளவே!

    • Suppu says:
      15 years ago

      இப்போது விட்டால் எப்போதும் முடியாது. இப்படிச் சொல்லிச் சொல்லியே தமிழினத்தை அழித்தது போதாதா? இப்போ இப்போ இது எப்போது நடக்கும்? /1967-ல் இருந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற அறிவிப்பின் சூழ்ச்சுமம் என்ன என்பதை கவனியுங்கள்./ எமது போராட்டம் மேலே சொன்ன மாதிரி 1977க்கு போயுள்ளது. திரும்பி வாருங்கள் பல இயக்கங்களை ஆரம்பித்து ஒருவரை ஒருவர் கொன்று தின்று அல்ல கொன்று எறிந்த உயிருடன் கொழுத்தி வெறியாட்டமாடி இன்னுமொரு முள்ளிவாய்கால்…..!!!!  யேகா ஒன்றுபடுவது எமக்குப் பிரச்சனை இல்லை மந்தைகள் மாதிரி ஒன்று பட்டு தெருத்தெருவாய் கத்திப் பிரயோசனம் இல்லை. மனிதராக கடவுள் தந்த புத்தியை பாவித்து நடப்பதே அறிவுசார்ந்தது. அங்குள்ள மக்களைப்பற்றிக் கவலைப்படுபவர்கள் இங்கு செய்யும் நடவடிக்கைகளிலும் அவதானமாக இருப்பது அவசியம். புத்தத்தமிழர்கள் புலியை எழுப்பி பணம் புளிய நிற்கிறார்கள். ஒற்றுமையைப்பற்றிக் கதைப்பவர்கள் முதலில் புலிக்கொடியைக் கீழே போடுங்கள் எல்லோரும் வருகிறோம். ஒற்றுமையின் எதிரி புலியே. வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால் புரியும் புலிகளே ஒற்றுமையின் எதிரிகள்.

  8. Suppu says:
    15 years ago

    புலிகள் பெயர்களின் உலகம் முழுக்க இயங்கிக் கொண்டிருந்தார்கள். இது போல ஒன்றுதான் நெடியவன் வேலை செய்வதும். வேலை செய்யாமல் பெருந்தொகைபணம் எப்படி வந்தது என்று கேட்டால் என்ன செய்ய முடியும். உண்மைகளையும் புலிகளின் பிழைகளையும் கதைத்தால் துரோகி என்றார்கள: இறுதியில் புலிகளுக்கு துரோகம் செய்து புலிகளையே அழித்தது புலிகள் தான். இப்போது புதுப்பாட்டுப் பாடத் தொடங்கியிருக்கிறார்கள் அரசின் கையாட்கள் அரசின் நிகழ்ச்சி நிரல் என்று. உண்மையை உண்மையாக ஏற்க முடியாதவர்கள் காரணம் தேடி முடியாது போகவே பட்டங்கள் கொடுக்கிறார்கள். நெடியவனின் மகளின் சாமத்தியச்சடங்கு மூன்றரை இலட்சம் குரோண்களில் நடந்ததாம். இது எப்படி வந்தது? எமது மக்களின் விடுதலைக்காக போராடுபவர்களாகக் காட்டிக் கொண்டவர்கள் அங்குள்ள மக்கள் அவலப்படும் போது சாமத்தியச்சடங்கு கொண்டாடினார்கள் எப்படி. எல்லாம் வேசம்.

  9. thava says:
    15 years ago

    யோகா,

    மக்கள் இன்னும் மந்தைகள் இல்லை. நடந்த தவறுகளை ஒத்துக் கொள்ளுங்கள். விமர்சனத்தை முன்வையுங்கள். இப்போது உங்கள் திட்டம் என்ன என்று கூறுங்கள். நாங்கள் உங்கள் பின்னால் வருகிறோம். இலங்கை அரசு புலிகளின் தவறுகளையும் பலவீனத்தையும் வைத்து தான் அரசில செய்கிறது. நீங்களோ அதே தவறுகளை கேட்டு கேள்வி இல்லாமல் ஒத்துக்கொள்ல சொல்கிறீர்கள். நீங்கள் யார்பக்கம் ? இலங்கை அரசா மக்களா??

    • Suppu says:
      15 years ago

      தவா! நன்றாகக் கேட்டீர்கள். அரசு மட்டுமல்ல தமிழ் அரசியல்வாதிகளும் புலிகளும் எம்மக்களை வைத்தே அரசில் வியாபாரம் செய்தார்கள் செய்கிறார்கள் இன்னும் செய்வார்கள். இதை முறியப்பது மிக முக்கியம். யார் யார் பக்கமாகவும் இருக்கட்டும் நாம் மக்கள் பக்கமே இருப்போம். அரசை நாம் கட்டிக்கும் வேளை புலிகளையும் கட்டித்தாக வேண்டும். அரசு மக்களுக்கு எதிரி ஆனால் புலிகள் துரோகிகள். இனிப்புலி வேண்டாம். மக்களாய் மக்களுக்கு மனிதராய் செயல்படுவோம்

  10. யாழ் says:
    15 years ago

    எமக்குள்ள ஒற்றுமையை கொலைவெறி அரசு நன்றாக வே  உபயோகப்படுத்துகின்றது. அதற்கு தமிழன் என்று சொல்லும் ஒரு சில இழிபிறப்புகள் துணை.   பயங்கர வாதிகள் என்று இந்த உலகம் யாரைக் கூறுகிறது. பாதிக்கப்பட்வர்க்காக போராடுபவர்களையா? அப்படியாயின் இனஅழிப்புச் செய்தவன் அண்டை நாட்டுக்குள் அடாவடித்தனமாக நுழைந்தவன் இவர்களை எப்படி அழைக்கப்போகின்றது உலகம்.  ஒரு சிலர் ஈனத்தனமாக நடந்து கொண்டார்கள் என்று எல்லோரையும் அதே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது ஏன்?  

    • Suppu says:
      15 years ago

      உங்களை நீங்களே குற்றம் சொல்லிக்கொண்டு இருங்கள் தமிழீழம் கிடைக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடியது புலிகளா? கேளிக்கைக்குரியது. யாழ்பாணத்தில் இருந்து மக்களை இழுத்துவந்து பின் அவர்களையே பயணக்கைதிகளாக்கிக் கொன்றபின்பும் மக்களுக்காகப் போராடியவர்கள் இரட்சகர்கள் என்கிறீர்களே. உங்களைப்போன்றவர்களை யாராலும் இரட்சிக்க இயலாது. நாம் எதிரியைப் பற்றிக் கதைக்குமுன் எம்மைப்பற்றிக் கதைக்கவும் சிந்திக்கவும் வேண்டியுள்ளது. வன்னிப்போல் முள்ளிவாய்கால் என்கிறீர்களே தயவு செய்து புலிகளின் வரலாற்றைத் திரும்பிப்பாருங்கள் அவர்கள் செய்த படுகொலைகளையும் வேட்டைப்பற்களில் ஒழுகுகிற இரத்தத்தையும். இவர்களை நியாப்படுத்த முயலாதீர்கள். பாதிக்கப்பட்டுவர்கள் பற்றிப் கதைக்கிறீர்கள். யாழ்பாணத்தில் மேஜராக இருந்த துரையப்பா ஏழைகளுக்குச் செய்த உதவிகளை மறந்தீர்களா? யாழ்பாணத்தை எப்படி உருவாக்கினார் என்பது நினைவிருக்கிறதா இநதத் துரையாப்பாவைத் துரோகியாக்கிக் கொன்றது யார்? பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல ஏழை எழிய சனத்துக்குக் கூட உதவியவர் துரையாப்பா. சரித்திரங்களைத் திரும்பிப்பார்த்து முடிவுகளைச் சரியாக எடுங்கள். உங்களுக்கு புலிதேவையாக இருக்காலாம் சிலருக்க புலத்துப் பணம் பிடுங்க. அங்குள்ள மக்களுக்கு என்ன தேவை என்பது தான் அவசியமே தவிர. புலிகள் அல்ல

  11. யோகா.சு. says:
    15 years ago

    /////.திருத்த முடியாத,திருந்த முயலாதவர்களை கணக்கில் எடுக்க வேண்டியதில்லை.அப்படிச் செய்தார்கள்,இப்படிச் செய்தார்கள் என்று பழம் கதை பேசும் வேளை இதுவல்ல,செயற்பட வேண்டிய வேளை இது,அவ்வளவே!////

    • Suppu says:
      15 years ago

      யோகா- உதைத்தானே காலம்பூராய் சொல்லி காசு சேர்த்து முள்ளிவாய்காலில் கவிட்டுக் கொட்டினீர்கள். போதாதா? புலிகளுக்கு 30வருடம் கொடுக்கப்பட்டதே காணாதா? இன்னும் மிச்சம் மீதியுள்ள சனத்தை அழித்துவிட புலிகளை எழுப்புகிறீர்களா? புலிகள் செயற்பட்டவிதம் பார்த்தோம் தானே. உணர்வு ‘பூர்வமாய் எழுந்து நின்று சன்னதாம் ஆடாமல் உண்மையை விளங்கி செயற்படுங்கள். ஆறுதலாய் இருந்தாலும் ஆழமாக இருக்கட்டும்

  12. யோகா.சு. says:
    15 years ago

    புரிந்து கொள்ளுங்கள்!நான் ஒன்றும் புலிகளுக்கு வக்காலத்து வாங்கவில்லை!அனைத்து நண்பர்களும் எழுதுவது,எழுதியது உண்மையாகவே இருக்கட்டும்!நான் சொல்ல வந்ததே வேறு;புலிகளுக்கு வக்காலத்து அல்ல!எவரும் விமர்சிக்கப்பட தகுதி உடையவர்களே!அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.வலி சுமந்த மக்களுக்கு நீதி கிட்ட வேண்டும்,உரிமை கிடைக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்,வாதம்.காலத்துக்குக் காலம் புலிகளின் கடந்த கால,நிகழ்கால நடவடிக்கைகளை இலங்கை அரசு தூக்கிப் பிடித்து சர்வதேசத்தின் கண்களில் மண்ணைத் தூவி,ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை வலுவிழக்கச் செய்யும் விதமாக பிரச்சாரங்களை மேற் கொண்டு வருகிறது.அதற்குத் துணை போகாமல் இவ்வாறான நெடியவன் மற்றும் காஸ்ரோ போன்றோர் பற்றிய செய்திகளப் புறம் தள்ளுங்கள்,சிறி-லங்கா அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்,ஒன்றுபடுங்கள் என்பதே எனது எழுத்தின் சாரம்.வேறொன்றுமில்லை.நான் உரைத்த கருத்துகளை மீளவும் படியுங்கள்.நன்றி!(என் பின்னால் யாரும் வர வேண்டாம்)

    • thurai says:
      15 years ago

      ஒரு பயங்கரக் கள்வன் வீடுகளிற்கெல்லாம் இரவில் தீவைத்து கொழுத்தி விட்டு

      களவுமெடுத்துக் கொண்டு தப்பி வாழ்கின்றான். நாங்களோ பக்கத்து வீட்டு
      எரிபடாத வீட்டுக்காரனோடு சண்டைபோடுகின்றோம். அந்த கள்வனோ பகலில் எங்களோடும்
      பக்கத்துவீட்டுக் காரனோடும் உற்வு கொண்டாடுகின்றான்.

      இதே நிலமைதான் இன்று இலங்கைத் தமிழ்ர்களிற்கு. சிங்கள அரசுடன் சேர்ந்தே இந்தக் க்ள்வனைப் பிடிக்கமுடியும் பகைத்தால் இந்தக்கள்வர் கூட்டம்
      தொடர்ந்து வாழும். தமிழர்கள் அழிவார்கள் இலங்கையில் மட்டுமல்ல, தமிழ்நாடு அதன் பின்பு உல்கமெங்கும் அடிவாங்குவார்கள் இவர்கள் அடிவாங்க வைப்பார்கள்.

      இப்போ

      பொலிசாரால் பிடித்துவைக்கப்பட்டுள்ள புலிகளை விடுவிக்கும் படி கையெழுத்து வாங்குகின்றார்கள். இனிமேல் உலகில் எங்காவ்து தமிழர் வீட்டில் வரும் கள்வரெல்லாம் தாங்கள் புலிக்கு காசு சேர்க்கின்றோம் என்பார்கள்.
      எனவே எதிர்கால்த்தில் தமிழர், புலிகள், பயங்கரவாதிகள், என்னும்பெயரோடு தமிழர்
      கள்வர்களை, கள்வுகளை அனுமதிப்பவர்கள் என்னும்நிலமை உலகெங்கும் ஏற்படும்.-துரை

    • Suppu says:
      15 years ago

      இது நியாயமானது. போர்குற்றம் என்று வரும்போது புலிகளும் பலபோர்குற்றங்களைகப் செய்திருக்கிறார்கள். புலிகளுக்குப் பொறுப்பு நெடியவன் என்றால் மகிந்தவை நிறுத்துவது போல் நெடியவனையும் நிறுத்தவேண்டும். மகிந்த மட்டுமல்ல மகிந்த கொம்பனியையும் சேர்ந்து. பிரபாகரன் உயிரோடு இருந்தால் பிடித்துக் கொண்டு வந்து மக்களிடம் ஒப்படைப்பது நல்லது. அவர்களே அடித்துக் கொல்வார்கள். மக்கள் என்ற நிலையில் இருந்து பார்த்தால் மகிந்தாவும் பிரபாகரனும் ஒன்றே. மீண்டும் சொல்கிறேன் அரசாங்கத்தை சர்வதேச நீதியின் முன்நிறுத்துவது அவசியம் என்பதற்காக புலிகளின் கீழ் இணைய நாம் தயாராக இல்லை. நாம் எம்மக்களுக்காக அரசாங்கத்தை எவ்வளவு வெறுக்கிறோமோ அந்த அளவு புலிகளையம் வெறுக்கிறோம்

  13. uthyan says:
    15 years ago

    புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் சாட்சியம் (பகுதி 5)

    பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில் தப்பியவரின் வாக்குமூலம்

    ஆம் நாம் மரணத்தின் வாசலில் நின்று எம்மை காக்க கரம் நீட்டும்படி தமிழ் நாட்டு அரசை வேண்டிய பொழுது நாம் என்றும் நம்பிய தொப்பிள்கொடி உறவு செய்த வேலை இப்படி இருந்தது. ஆம் எமது பொறுப்பாளர்களான நடேசன், பாலகுமார்,யோகி, இழந்திரையன் என பலர் தொடர்புகொண்டு முடியாமல் போக கடைசியில் சூசையும் தொடர்புகொண்டு பார்த்தார். தொடர்பை கடைசிவரை ஏற்கவில்லை கருணாநிதி. காரணம் அவர் அந்த நேரத்தில் புலிகளுக்கு ஆதரவு செய்தால் மத்திய அரசிலிருந்து வெளியேற்றப்படும் என சோனியா அம்மையார் கூறியிருந்தாராம். இதை அவரது கூட இதுக்கும் ‘தீனா மானா’ என எமது தலைமையால் அழைக்கப்படும் நபர் எமது தொடர்பகத்துக்கு அப்போது சொல்லியிருந்தார். என்ன செய்ய மக்களை விட கருணாநிதிக்கு சோனியாவின் உதவி தேவைப்பட்டது தனது குடும்ப பதவிகளையும் தக்க வைத்துக்கொள்ள.

    இந்த நிலைமை தொடர்ந்ததால் எமது தலைமைப்பிடம் புலம்பெயர் நாடுகளின் தலைவர்களுடன் பேசிப்பார்க்கும்படி எமது வெளிநாட்டு தொடர்பாடல்களுக்கு பொறுப்பாக இருந்த கே.பி, நெடியவன், காஸ்ரோ, உருத்திரகுமார் போன்றவர்களுக்கு எம் தலைவர் உத்தரவு செய்தார்.

    ஆம் இங்குதான் நம் கூட இருந்து குழிபறிக்கும் கூட்டமும் எப்ப குழிபறிககலாம் சொத்துக்களை சுருட்டலாம் எனவும் காலம் காத்திருந்த அந்த கூட்டம் தம் கைவரிசையை காட்டியது. இதில் கே.பி பொறிக்குள் விழுந்து செய்வதறியாது தடுமாரியதுதான் மிச்சம்.
    எமக்குள் இருந்துகொண்டே முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்கு காரணமானவர்கள் யார் என்று பார்த்தால்.
    என்னை பொறுத்தளவில் நான் நெடியவனையும் காஸ்ரோவையும்தான் சொல்லுவேன் கேபியும் ஒரு காரணம் தான்.கேபி துரோகம் செய்ய தான் முன்னர் செய்த ஆயுத விநியோகத்தைச் செய்ய முடியாமல் 2002க்குப் பின் முடக்கப்பட்டிருந்தமை அவருக்கு எம் தலைமைப்பீடத்துடன் இருந்து வந்த கசப்பு காரணமாக இருக்க முடியும்.
    கேபி வழமைபோல் ஆயுத வழங்கலை, விநியோகத்தை செய்யக் கூடியதாக அப்போது இருந்திருக்குமானால் எமது படையணிகள் இவ்வளது தூரம் பின்வாங்க வேண்டியோ அல்லது தோல்வி கண்டிருக்க வேண்டிய நிலைமையோ ஏற்பட்டடிருக்காது என்பது ஒருபுறம் உண்மைதான்.
    இவ் விடயத்தில் கேபி ஆற்றலும் அனுபவமும் எம்மை அந்த நேரத்தில் வந்து அடைய இவருடன் கூட இருந்த நெடியவனும் காஸ்ரோவும் இடம் கொடுக்கவில்லை தங்கள் சுய நலங்களுக்காக.

    கேபியை முடக்குவதற்குக் காரணமாக இருந்தது இந்த இருவரும் எம் தலைமை பீடத்துக்கு பொய்கள் பலவற்றை கூறி அந்த இடத்தை தங்கள் வசப்படுத்திக்கொண்டன அந்த இடத்தை அவர்களுக்கு கொடுத்ததும் எங்கள் தலைமை விட்ட தவறு என்றுதான் சொல்லமுடியும்.
    பல தசாப்தங்களாக கேபி செய்த ஆயுத விநியோகத்தையும் வெளிநாட்டு தொடர்புகளையும் தாமும் செய்வோம் எனப் புறப்பட்டு, எந்தவிதமான அனுபவமும் அற்ற இவர்கள் முயற்சியில் தோல்வியும் கண்டு கோடிக்கணக்கான பணத்தையும் அநியாயமாய் பறிகொடுத்து கடைசியில் ஒட்டு மொத்த இனமும் நம் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த போராட்டமும் அழிந்ததும் தான் மிச்சம்.
    ……………….

    உண்மையில் அப்போது எம்மிடம் போதிய எறிகணைப்பலம் இல்லை. இத்தகைய ஒரு சூழலில் தலைவரையும், இயக்கத்தையும் மக்களையும் பாதுகாப்பதற்கு ஒரு யுத்த நிறுத்தம் அவசியம் எனவும் அதற்கு வரும்படியும் எமது தலைமை பிடத்தை வலியுறுத்தினார்.
    ஆனால் நமது தலைமை ஒரு நிபந்தனையற்ற யுத்தநிறுத்தத்துக்குத் தயாராக நாம் இருப்பதாக அறிவுறித்தியது. ஆனால் நிபந்தனை அற்ற யுத்தநிறுத்தத்தை எமது தலைமை தெரிவி செய்ததற்கும் இந்த நெடியவனும் காஸ்ரோவும் தான் காரணம்.

    அவர்கள் இருவரும் எமது தலைமை பீடத்துக்கு சொன்ன அந்த நம்பிக்கைதரும் செய்தியான ஐரோப்பிய நாடுகள் காப்பாற்ற ஒத்துவருவதாக கூறியுள்ளார்கள் என்ற செய்தியை நம் தலைமை நம்பியது. இதை நம் தலைமை நம்முவதற்கு காரணம் இவர்கள் இருவர் மீதும் இருந்த நம்பிக்கையும் புலம்பெயர் தேசத்தில் நடந்ததாக எமக்கு அனுப்பப்பட்ட ஆதாரங்களும் தான் காரணம்.

    நிபந்தனையற்ற யுத்த நிறுத்தத்தை அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி இருந்தும் எவ்வாறு யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வருவது என்பதுபற்றி பேச்சுக்கள் நடந்துகொண்டுதான் இருந்தது. நிபந்தனையற்ற யுத்தநிறுத்தத்ததைக் கொண்டுவருதற்கான சாத்தியங்கள் இல்லாத பொழுது யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்கு தந்திரோபாய விட்டுப்கொடுப்புக்களைச் செய்வதில் தவறில்லை என மறுபடியும் கே.பி ஊடாக பாதிரியாரும் இந்திய தலைவர்களும் நோர்வேயும் தெரிவித்தார்கள். இதற்கான திட்டம் ஒன்றையும் தலைவரிடம் முன்வைத்தனர் கே.பி ஊடாக இந்தியவின் நிகழ்ச்சி திட்டத்தின்படி.
    இத் திட்டத்தின்படி எமது ஒரு பகுதி ஆயுதங்களை இயக்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஐ.நா.சபையின் மேற்பார்வையில் ஒப்படைப்பது எனவும் அதன் தொடர்ச்சியாக யுத்த நிறுத்தம் சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிப்பது.
    இதுவே கேபி ஊடாக இந்திய பாதிரியாரும் கனிமொழியும் மத்திய அமைச்சரான சிதம்பரத்துடன் கதைத்து எடுத்ததாக சொல்லப்பட்ட கருத்து.

    நயவஞ்சகர் கூட்டம் தொடங்கிய திட்டம்.

    அழிந்து போகக்கூடிய ஆபத்து இருக்கும் ஒரு சூழலில், அழிவில் இருந்து பாதுகாத்துக் கொண்டு அடுத்து கட்டம் பற்றிச் சிந்திக்கலாம் எனவும் அவர்கள் சொன்னதாகவும் கூறினார்.

    இந்த செய்தியை வேறு நடைமுறைப்பிரச்சினைகளைக் கொண்டுவரும் என்ற காரணத்தைக்கூறித் தலைவர் அதற்குச் சம்மதிக்கவில்லை.
    தாம் புலத்தில் ஒழுங்கு செய்து கொண்டிருக்கும் போராட்டங்கள் நிபந்தனையில்லாமலே யுத்தநிறுத்தத்தைக் கொண்டுவருவோம் என இந்த நெடியவனும் காஸ்ரோவும் வன்னிக்கு அனுப்பிக் கொண்டிருந்த தகவல்களும் எமது தலைமையின் முடிவில் செல்வாக்குச் செலுத்தின உண்மையே .
    இவர்களது இந்த பொய்யான தகவல்களால் பல முயற்சி செய்து பார்த்து இருக்கக்கூடிய வெவ்வேறு வாய்ப்புக்களும் இல்லாது போனது.

    [தொடரும்….]

  14. Kalam says:
    15 years ago

    சரியான நேரத்தில் ஒருபோராளியின் நேரடிக்குறிப்பைப் போட்டிருக்கிறார் உதயன். இதை நான் முழுமையாக நம்புகிறேன். பேச்சுவார்த்தை என்று ஆயுதங்களை எதிர்பார்த்த வேளை அரசு எதுவுமே உள்ளே வராமல் தடுத்துக் கொண்டிருந்தது. நோர்வேயின் மத்தியஸ்தத்தில். ஒழுங்காக இஞ்கிலிசு பேசமுடியாதவர்கள் உலகநாட்டுப் பேச்சு வார்த்தைகளுக்குப் பொறுப்பாக விட்டால் இப்படித்தான் நடக்கும். இவர்களால் பேசமுடியாது பேக்காட்டத்தான் முடியும். உதயன் பகுதி 5மட்டுமே போட்டுள்ளீர்கள். மற்றப்பகுதிகளையும் போட்டால் என்ன?

    • uthyan says:
      15 years ago

      மற்றப்பகுதிகளையும் போட்டால் என்ன?……….

      http://www.sooddram.com/Articles/SerialArticles/Truth_Mullivaakkal_LTTE_Part1.htm
      http://www.sooddram.com/Articles/SerialArticles/Truth_Mullivaakkal_LTTE_Part2.htm
      http://www.sooddram.com/Articles/SerialArticles/Truth_Mullivaakkal_LTTE_Part3.htm
      http://www.sooddram.com/Articles/SerialArticles/Truth_Mullivaakkal_LTTE_Part4.htm
      http://www.sooddram.com/Articles/SerialArticles/Truth_Mullivaakkal_LTTE_Part5.htm
      http://www.sooddram.com/Articles/SerialArticles/Truth_Mullivaakkal_LTTE_Part6.htm
      http://www.sooddram.com/Articles/SerialArticles/Truth_Mullivaakkal_LTTE_Part7.htm
      http://www.sooddram.com/Articles/SerialArticles/Truth_Mullivaakkal_LTTE_Part8.htm
      http://www.sooddram.com/Articles/SerialArticles/Truth_Mullivaakkal_LTTE_Part9.htm
      http://www.sooddram.com/Articles/SerialArticles/Truth_Mullivaakkal_LTTE_Part10.htm
      ……..to be cont

      • கிறுக்கன் says:
        15 years ago

        எங்களுக்கு இந்தியாவையும் தெரியும் RAWயும் தெரியும் குழந்தை பிள்ளைக்கு புட்டிப்பால் கொடுக்கிறமாதிரி கதை எழுதாதையுங்கோ இனியொரு மாதிரி கொஞ்சம் விளப்பமா கதைக்க(ஏமாத்த)ப்பாருங்கோ….. இப்போ இருக்கும் யாரையும் தமிழினம் நம்ப தயாரில்லை எண்டு RAWவுக்கு   சொல்லுங்கோ ஈழத்தமிழரின் ஒருங்கிணைவை, இன்னுமொரு தலைமை உருவாகாமல் தடுக்கும் கைங்கரியங்களை கொஞ்ச நாளைக்கு ஆறப்போடலாம்…… 

        • thurai says:
          15 years ago

          //இன்னுமொரு தலைமை உருவாகாமல் தடுக்கும் கைங்கரியங்களை கொஞ்ச நாளைக்கு ஆறப்போடலாம்//
          அப்போ உருத்திரகுமாரின் கதி?

        • Suppu says:
          15 years ago

          ஐயோ ஐயோ கிறக்கா கிறுக்குத்தனமாய் எழுதுகிறாயே. நீங்கள் சொல்லுகிறமாதிரி கைங்கரியங்களை ஆறப்போட்டால் மிச்சம் மீதியாக கக்கூசு கழுவி உழைக்கும் மக்களின் புலத்துக் காசுகளை எப்படி புலி என்று கூறிப் புளிந்த எடுப்பது. செத்தபுலிக்கு சமாதி கட்டுறத்தை பிட்டுப்போட்டு ஊசி ஏத்தியேல்லே எழுப்ப நிக்கினம். பழையபுலிகள் எல்லாம் அரசாங்கத்தோடை நிக்குதுகள் புலத்துப் புலிகள் அரசாங்கத்தோடை முதலிடுகிறார்கள். எப்பாத்தாலும் ஒற்றுமை பற்றியே பேசவேணும். ஒன்றுமையாக இருந்தால்தானே ஒற்றுமையாகப் பெருந்தொகை பணம் சேர்க்கலாம். உருத்திரகுமாயர் கேபி நெடியவன் எல்லாம் யார் றோதான். றோவின் வெவ்வேறு பிரிவுகள். தாங்கள் றோ என்பதை அறியாமலேயே றோவுக்கு வேலை செய்வார்கள். பிரபாகனும் றோதான். புலிகள் என்ன விடுதலை இயக்கமா? இந்தியாவின் நலனை பாதிக்கும் எந்த ஒரு வல்லாதிக்கமும் இலங்கையில் காலூன்றாது காத்து றோவுக்கு உதவியாக 30வருடங்களுக்கு மேல் நின்றது புலிகள் தானே. வேறு யார்? பின் றோ தானாகவே இலங்கையில் கால்வைக்கும் நிலை உருவானபோது புலியைப் பொலியடித்தார்கள். இதான் உண்மை.

  15. mamani says:
    15 years ago

    Sivaparan Perinpanayagam
    ——————————————————————————–
    Tall fra Inntekt Formue Skatt
    2009 0 33 980 0
    2008 0 5 422 0
    2007 233 0 50
    2006 33 0 7

    Født: 1976

    Skattefylke: Møre og Romsdal

    Skattekommune: Nesset

    Postnr./sted: 6460 Eidsvåg i Romsd http://skattelister.no/skatt/profil/sivaparan-perinpanayagam-36371923/

    • Suppu says:
      15 years ago

      நெடியவன் எனும் சிவபரன் பேரின்பநாயகம் ஓலசுண்ட எனும் இடத்தில் வசிப்பவர் அல்ல. மோற ஒக் றும்ஸ்டால் எனும் மாநகரசபைக்குள் அடங்கிய நகரசமையான நெசெட் ல் வசிப்பவர்.

      2008ல் அவர் உழைத்தது சுமார் 542 பவுண்கள்; 2009ல் உழைத்தது 3389 பவுண்கள். இவரின் உறவினர்களின் சாமத்தியச்சடங்குகள் பரதநாட்டிய அரங்கேற்றங்கள் குறைந்தது சுமார் 3லட்சத்தில் நடைவெற்றதாம். எப்படி? இப்படியான நிகழ்ச்சிகளுக்கு பிறசெட் கொடுக்கவே இவர் உழைப்புத் பத்தாதே.

      மாமானியின் செய்திகள் உண்மையாகவே உள்ளன.

  16. mamani says:
    15 years ago

    கடந்த நாலு வருடங்களில் நெடியவனின் மொத்த உழைப்பு வெறும் £27 கட்டியவரி £ 6 சொத்து £ 3,800

    • thurai says:
      15 years ago

      நெடியவனையும், புலியையும்காட்டி சுருட்டிய தொகை £ 380 மில்லியனகளிற்கு மேல்.-துரை

      • Suppu says:
        15 years ago

        பெருமாளே இது என்ன கொள்ளை….????

  17. thurai says:
    15 years ago

    30 வருடங்களிற்கு மேலாக உலக்முழுவதும் வாழும் தமிழர்களிடம் அவ்ர்களின் விருப்பத்துடனோ விருப்பமின்றியோ வாங்கிய பண்ம் எவ்வளவு என் யாரிடமும் கண்க்கு இல்லை. ஆனால்ல் ஒவ்வொரு நகரங்களிலும் மக்களிர்குத் தெரியும் யார் பண்ம் வாங்கியதென்று. இவர்கள் முன்பு தலைவரையும் வன்னிப் புலிகளையும்
    காட்டி மக்களை மிரட்டினார்கள். வன்னியில் புலிகள்

    அழிந்த பின் புலம்பெயர் புலிகள் சிலரின் பெயர்க்ளை வைத்து தொடர்ந்தும் மக்களை
    கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்றனர். இதிலொருவர்தான் நெடியவன்.

    இப்போ இவருமகப்பட்டுக் கொண்டார். இனிநாட்டுக் கொரு குட்டிப் புலிகள்
    உலாவும். இவர்களை மக்கள் கவ்னிப்பார்களோ அல்ல்து பொலிசாரிடம் மாட்டுவார்களோ பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இவர்களை விட பெயர் தெரியாமலும்
    முகம் தெரியாமலும் பெரியதொரு புலி மாபியாக்கள் உலக்முழுவதுமுண்டு.
    இவர்களிடமே பெருந்தொகைப் பண்ம் சிக்கியுள்ளது. அநேகமாக அகதியாக
    வந்து
    தொழிலுமின்றி, கையிலில் முதலுமின்றி, வங்கிகளில் கட்னுமெடுக்காமல் சில்ர்
    தொழில் முதலாளிகளாக வாழும்தமிழரிடம் தான் இந்த மாவியாவிற்கான் விளக்க்ம் கிடைக்கும்.-துரை

  18. thurai says:
    15 years ago

    http://www.norwaynews.com/en/terrorist.php

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...