விடுதலை புலிகளுடனான போரின் பின் சரணடைந்த பெண்போராளிகளை அடைத்து வைத்திருந்த மானவர்விடுதி கட்டிடம் மீள கையளிக்கப்பட்டபின் அங்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு புதிதாக தங்க வைக்கப்பட்ட வவுனியா வளாகத்தின் சிங்கள மாணவர்கள் விடுதி சுவர் அசுத்தமாக உள்ளது என்று கடிதம் ஒன்றை எமது மாணவர் ஒன்றியத்துக்கு கையளித்தார்கள். உடனே விடுதி சுவரை வர்ணப்பூச்சு செய்து தாருங்கள் என்று வளாக முதல்வருக்கு கடிதம் எழுதிவிட்டு சுவர்களை புகைப்படம் பிடித்து கடிதத்துடன் இனைபதற்க்காக புகைப்பட கருவியுடன் அங்கு சில நண்பர்களுடன் சென்றேன்.
அங்கு சுவர்களை பார்த்ததும் ஏற்ப்பட்ட உணர்வுகளை எனக்கு சொல்ல தெரியவில்லை … சுவர் முழுவதும் தடுத்து வைக்கப்பட்டுருந்த பெண்போராளிகளின் உணர்ச்சி கிறுக்கல்கள் கொட்டிகிடந்தன. எல்லாவற்றையும் பார்த்து முடிந்தவுடன் எழுதிய கடிதத்தை கிழித்து போட்டுவிட்டு நானும் நண்பர்களும் கனத்த இதயங்களுடன் வெளியேறினோம். அந்த சுவர்களில் அவர்கள் காதல்,கடவுள் ,அம்மா என தங்கள் எண்ணங்களை கீறி இருந்தார்கள் அங்கே சொடுக்கிய புகைப்படங்களில் சில இதோ……
.
http://senppagam.blogspot.com/2011/05/2.html?utm_source=BP_recent#comment-form











very touching,,
துன்பங்களும் கண்ணீரும் எமக்கு புதியதல்ல புதினமுமல்ல. இனியும் நாம் கண்ணீர் விடுவோம் கதறுவோம். இப்படியான நிகழ்வுகளில் இருந்து தப்பி-மறைந்து வாழ்ந்து விடுவோம் என்பது தான் பொய்மையாக இருக்கக்கூடும்.
புலியியக்கம் என்பது பொய்மையானது தல்ல. அதன்பின் இருந்து தனியொருவன் இயக்கினான் என்பதும் முற்றுமுழுதான் உண்மை அல்ல. உலகமயமாக்கலின் ஒருவிளைவே ஈழத்தமிழர்களின் ஒருபகுதி வசதி வாய்புகளை தேடிக் கொண்டவர்கள். அவர்களின் கனவே நந்திக் கடலில் அஸ்தனமாகியது.
இனியும் கண்ணீர் விடுவோம். அர்த்தத்தை வரவளைத்து கண்ணீர் விடுவோம்.ஈழத்தமிழர்களின் வாழ்வுகள்-அரசியல்கள் ஈழத்தமிழருக்கே உரியதென புதுவழி செய்வோம்.வேலியை தாண்டிப் போன நாய்களுக்கு என்ன அக்கறை என கொட்டி மேளம் கொட்டுவோம்:.