வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளின் மாவை. சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம்.அடைக்கலநாதன், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி ஆகியோரும், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மிகவும் ஆபத்தான காலத்தில் தமிழ் சமூகம் உள்ள நிலையில் தியாகிகள் தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கவிதை ஒன்று வாசிக்கப்பட்டது. பிரபாகரனின் தீர்க்கதரிசனத்தால் தமிழ் மக்கள் பலம் பெற்றுள்ளனர் என வரிக்கு வரி கூறிய தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் நடைபெற்று இக்கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதையில் வரிக்கு வரி “பத்மநாபாவைக் கொன்றவர்கள் நந்திக் கடலருகில் கோவணத்துடன்” என்று விழிக்கப்பட்டத்து. வாக்குப் பொறுக்குவதற்காக எதையும் பேசத்தயங்காத இந்தக் கும்பல் நாளை மண்டையன் குழுவைப் புதுப்பித்தாலும் வியப்படைவதற்கில்லை.
உண்மை துணிவு உலகத்தின் வெற்றியை தீர்மானிப்பது. . அதனைப்போல் உண்மைக்காக போராடியஇனம் உலகத்துடன் வாதாடினாலும் ஊழல்களினால் தம்மைதாம் அர்பணிக்க நேர்ந்தமை எமது இனத்தின் சாபக்கேடு அதனால் உலகம் ஒருநாள் உண்மைக்கு மதிப்புக்கொடுப்பதனைபஇபோல் உயிர்தியாகங்களினது உண்மைநிலையை உலகத்தமிழினம் உணர்ந்தாக வேண்டும் . காரணம் தமிழினம் தம்மை அடையாளப்படுத்தும் தமிழ் தேசியக் ட்டமைப்பும் உலகத்தை வியக்கவைத்த நா.க.த.அரசாங்கமும் உயிர்தியாகங்களால் தமிழினத்திற்கான அடையாளம் அதனால் தமிழினம் ஆனாதைகள் இல்லை என்பதற்கான அடையாளம் உருவாக்கப்படுவதற்கும் யாரும் காரணமாக முடியாது அதனால் எமது இனத்தினது ஒறஇறுமையும் ஒருங்கிணைந்த செயல்பாடும் வெற்றி பெற வேண்டுமானால் எமக்குள் வளர்கப்படும் ஊழல்களை கண்டறியப்பட வேண்டும். . அதனால் நாம் அவலத்தை சந்தித்த இனமாக இருக்கலாமே தவிர எதிரியிடம் தோற்கப்பட்ட இனம் அல்ல. என்பதனை சகல தரப்பும் புரியும் போது கடந்தகாலப்போராட்டத்தின் தீர்க தரிசமும் புரிந்தாகும்.
கைக்கூலிகள் மேலோங்கிப் போகிறார்கள்,கவிதை வரிகளால்.