பணயக்கைக்திகள் மீட்பு : 6 வருடங்களின் பின்

கொலம்பிய பராக் ஆயுத குழுவினரால் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரான்ஸ்- கொலம்பிய வாதியான இன்கிரிட் பெட்டன்கோட் மற்றும் 14 பேர் கொலம்பிய இராணுவ நடவடிக்கையொன்றின் மூலம் மீட்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள் இன் கிரிட் பெட்டன்கோட் 6 வருடங்களுக்கு மேலாக பணயக் கைதியாக தடுத்துவைக்கப்பட்டிருந்தார் அரச சார்பற்ற நிறுவன பணியாளர்கள் போல் வேடமணிந்த கொலம்பிய இராணுவ வீரர்கள் பராக் ஆயுத குழுவின் முகாமிற்கு உலங்கு வானூர்தியில் ஆயுதக்குழுவின் தலைவர் அல்பொனோ கனோவை கந்திக்கவுள்ளதாக கூறி வானூர்தியில் சென்று பணயக்கைதிகளை மீட்டுள்ளனர். மீட்க்கப்பட்ட இன் கிரிட் பெட்டன் கோட் மற்றும் 14 ஏனைய 14 பேரும் பொகோட்டாவிலுள்ள கடம் இராணுவ விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்படமையடுத்து இன்கிரின் தாயார் யோலேண்டா பொலோசியா, கணவர் யுவன் கார்லோஸ் ஆகியோர் வரவேற்றனர்.

2002 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பார்க் ஆயுதகுழுவின் எல்லைப்பகுதியில் வைத்து கொலம்பிய-பிரான்ஸ் அரசியல்வாதியான இன் கிரிட் பெட்டன்கோட் பராக் ஆயுதகுழுவினரால் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொலம்பிய அரசிற்கெதிராக 40 வருடங்களுக்கு மேலாகப் போராட்டம் நடாத்திவரும் பராக் மேலும் நூற்றுக் கணக்கான கைதிகளைக் கொண்டிருந்த போதிலும் பெற்றன் கூர்ட் மிக முக்கியமானவராகக் கருதப்பட்டார்.

இவருடன் விடுவிக்கப்பட்ட ராணுவ உதவியாளர்களை பொறுப்பேற்க அவர்களது குடும்பத்தினர் கொலம்பியாவுக்குச் செல்கின்றனர்.