இந்தியாவில் மாட்டிறைச்சி உண்போருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டு விட்டது. இந்நிலையில் கால்நடை வளர்ப்பைத் தொழிலாளக் கொண்ட ரபாரி சாதியினரிடம் பேசிய குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, “இந்துக்களின் படுக்களை காக்கவும், நிலப்பறிப்பு, சங்கிலி பறிப்புக்கு எதிராகவும் சட்டம் கொண்டு வந்து விட்டோம். இந்துப் பெண்களைக் காதல் வலையில் வீழ்த்துவதைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. அதைக் கடுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் தெரிவித்த நிலையில், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. அகமதாபாத்தில் கவர்னர் மாளிகை சென்ற அவர் கவர்னரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
2016-ஆம் ஆண்டு குஜராத் முதல்வரான் விஜய் ரூபானி தேர்தலுக்காக மாற்றப்பட்டிருக்கிறார்.