நான் எழுதுவதை விட எழுத நினைப்பது அதிகம். எத்தனை கவிதைகள் எழுதி முடித்தாலும் சில கவிதைகளைப் படிக்கும் போது இந்தக் கவிதைகளை நான் எழுதவில்லையே என்ற ஆதங்கம் ஆழ்மனதில் ஊர்ந்து போகும். மரபுக்கவிதைகளில் இருந்து புதுக்கவிதையில் வடிந்து ஹைக்கூக்கள் வரை கவிதைகளில் பல விதங்கள் இருந்தாலும் இந்த அவரசர வாழ்க்கையில் நான் விரும்பி ஒரு சில நொடியாவது நின்று வாசித்துப் போவது அதிகம் புதுக்கவிதைகள் தான். அப்படி நின்று படித்து சுவைத்த கவிதைகளை பகிர்ந்து கொள்ளவே இந்த தொடரை எழுதத் தொடங்குகின்றேன்.
ஈழத்துக் கவிதைகள், தமிழகக் கவிதைகள் மற்றும் புலம் பெயர் வாழ் தமிழ் மக்களின் கவிதைகள் என்று அனைத்து கவிதைகளிலும் பொறுக்கி எடுத்து நான் ரசித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளுதல் கட்டுரையின் நோக்கு. ஆழமாக கவிஞர்களைப்பற்றி எழுதுவது அல்ல நோக்கம். கவிஞர்களையும் அவர்தம் சில கவிதைகளையும் அறிமுகப்படுத்துவதற்கே.
இலக்கியப் படைப்புலகிற்குள் செல்வோமானால்…
நாம் ஏன் எழுதுகிறோம்? நாம் ஏன் படைக்கின்றோம்? கலையும் இலக்கியங்களும் மனிதர்களுக்கு எவ்வகையில் தேவைப்படுகின்றது என்ற கேள்விகள் எனக்குள்ளே எழுந்திருக்கிறது. அதற்கு நானே கண்டு கொண்ட சில விடைகளைக் குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன்.
தரமான படைப்புகளுள் எப்பவும் ஒரு அதிசயமான ரகசிய உயிர் ஒழிந்திருக்கும். எம் வழமையான தினசரிகள் முடியும் பொழுது விடியப்போகும் அடுத்த நாளை நோக்கி ஒரு தொடர்வுடன் சரிகிறது. இலக்கியங்களில் முடிவு, சுகம், முகம் தெரியாத மனிதர்களுடனான நேசம், ஒழித்து வைக்கப்படும் விருப்பங்கள், மர்மங்கள், கோபங்கள், காதல் என்று பல உணர்வுகள் எம்மை அதிர்வடையச் செய்கின்றன.
வெறும் கறுப்பு நிற எழுத்துக்காலலேயே நாம் பல நிறங்கள் தெறிக்கும் புதிய உலகொன்றிற்குள் புகுந்து வாழ்ந்து வரும் அற்புதம் நிகழ்கின்றது. படைப்புலகம் பற்றியும் இலக்கியங்கள் பற்றியும் பேசி கொண்டே போகலாம்தான்.. ஆனால் நாம் பகிர்ந்து கொள்ள வந்த விடயம் பற்றி மறந்து விடக்கூடாது. நாம் கவிதைகளுடன் நீண்ட தூரம் போக இருப்பதால் இடைஇடையே படைப்புலகத்தையும் வழித்துணைக்கு அழைத்துக் கொள்வோம்.
எந்த கவிதையுடன் ஆரம்பிக்கலாம்? சில கவிதைகளைப் படிக்கும் போது முகம் தெரியாமலேயே அந்த கவிதையின் படைப்பாளி மீது காதல் பிறந்து விடுகிறது. அப்படி என்னை முதன் முதலில் காதலில் விழச்செய்த முண்டாசுக் கவிஞனுடன் இந்த பகிர்தலைத் தொடங்கலாம் என்று நினைக்கின்றேன்.
பாரதி
காலம் கடந்த கவிஞன் அவன். இலக்கணக் கட்டுக்களைத் தகர்தெறிந்தவன். புதுக்கவிதை என புகழப்படும் பாமரரும் கேட்டுணரும் வசனக் கவிதையை தமிழுக்குத் தந்தவன். அரண்மனை மாடங்களில் பொற்கிளிகளுக்காய் சிம்மாசனங்களின் பின் சாமரம் வீச விழுந்து கிடந்த கவிதையின் கைகளை கரம் பிடித்து முற்றத்திற்குக் கொண்டு வந்தான். உயரத்தில் இருந்தோர்க்கு முதுகு சொறிந்த கலங்கத்தைத் துடைத்து கவிதைகளுக்கும் கவிஞர்களுக்குமான நிமிர்வை முள்ளந்தண்டில் ஏற்றி போனவன் சொல்கிறான்….
”தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையென்ப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”
உணர்வுபூர்வமாய் இயங்கும் மீசைக் கவிஞனின் வரிவீச்சுக்கள் இவை. அவன் தீவிரமாய் உணர்ந்த சில கோபத் துளிகளின் வீழ்ச்சி இது. இல்லை இவை சொற்களின் எழுச்சி என்றுதான் சொல்லவேண்டும்.. கவிஞன் பாரதி எப்போதும் தன்னை உயரத்திலே வைத்து எம் சமூகத்தை குனிந்து பார்த்துக் கொண்டிருந்தவன். “ஏய் பராசக்தி உனது மகன் உயர்ந்த ஒரு பீடம் அமைத்து அந்த உயரத்தில் அமர்த்திருக்கிறேன். நான் அங்கே இருந்து கொண்டு எல்லாவற்றையும் அவதானிக்கின்றேன்”. என்று சக்தியிடம் இறுமாப்பாய்ச் சொன்னவன்.
சாதிகள் பற்றியும் சமூக அமைப்புகள் பற்றியும் அவன் விட்டுச் சென்ற கவிதைகள் ஏறாளம். ஒரு கவிதையில் சொல்கிறான்.
சாம்பல் நிறத்தொரு குட்டி
கரும் சாந்தின் நிறம் ஒரு குட்டி
பாம்பின் நிறம் ஒரு குட்டி
வெள்ளைப் பாலின் நிறம் ஒரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஒரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இக்து ஏற்றம் என்றும் சொல்லலாமோ
எமது சமூதாயத்தில் வேறூன்றி மண்டிக்கிடக்கும் சாதி பிரிவுகள் தொடர்பாக தனது கருத்தை நேரடியாக தாக்கமல் உவமானத்தால் அழகுறச் கவி செய்த வரிகள் இவை. அதே போல் தனது காதல் உணர்வுகளை பல கவிதைகளில் உணர்வு பொங்க பாடியிருப்பதை காணலாம். தீர்த்தக்கரையினிலே என்ற கவிதையில் தனது காதல் சோகத்தினை இப்படிப் பதிவு செய்கிறார்.
தீர்த்தக் கரையினிலே…
சென்பகத் தோட்டதிலே
பார்த்திருந்தால் வருவேன் – வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறி விட்டாய் – அடி கண்ணம்மா!
மார்பு துடிக்குதடீ!
பார்த்த இடத்திலெல்லாம் – உன்னைப் போலவே
பாவை தெரியுதடீ!
காதலை காவியமாக்கும் திறம் கொண்ட கவியின் சுட்டும் விழிச் சுடர்தான் என்ற இன்னொரு பாடல் வரிகளில். நான் காதல் கொண்டிருக்கிறேன். பயம் மேவி நீ சாத்திரம் பேசுகிறாய் என்பதை தான் காதல் கொண்ட வாலைக் குமரியிடம் சொல்கிறான்
சாத்திரம் பேசுகிறார் – கண்ணம்மா!
சாத்திரமேதுக்கடி!
ஆத்திரங் கொண்டவர்க்கே – கண்ணம்மா!
சாத்திர முண்டோடீ!
மூத்தவர் சந்திதியில் – வதுவை
முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப் பேனோடீ – இதுபார்
கன்னத்து முத்தம் ஒன்று!
சிறிய கருத்து என்றாலும் அது சரியான கருத்து என்றால் நிச்சயம் அது அதன் பயனாக எங்கு போய் சேரவேண்டுமோ அங்கே போய் சேரும் என்பதை வீச்சு மிஞ்ச ஒரு கவிதையில் இப்படிச் சொல்கிறார் பாரதி.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்
பாரதி புலப்படாத எவற்றையும் நம்பும் தன்மையில்லாதவன். அத்தகைய அறிவு நிலையினை அடைய தாகமெடுத்து அலைந்ததில் விளைந்த ஆயிரம் கவிதைகளால் ஏற்பட்டு கிடக்கும் கவிதைகள் அவன் காலம் மீறிய கவிஞன் என்பதை இன்றும் சொல்லிப்போகிறது.
எம் அகத்திற்கும் முரண்பட்ட புறச்சூழலுக்கும் இடையிலான போராட்டதின் போது வெடித்துப் பாயும் சொற் சிதறல்களுக்கு வலிமை அதிகம். இதனால் படைப்புலகில் மனித ஆளுமை எழுச்சி பெறுகிறது. ரசனையும் அனுபவங்களும், ஆளுமையுடன் மோதி கலை பிழம்பாய் சாத்தியமாகிறது. பாரதியில் இருந்து இனி நாம் சமகாலத்திற்கு இறங்கி வருவோம்.
தொடரும்…
சிறப்பான பதிவு. கவிதா. ஈழ தமிழ் கலைஞர்களை எமக்கு அறிமுகப்படுத்துங்கள். இனிவரும் பதிவுகளை ஆர்வத்துடன் எதிர் பார்க்கிறேன்.
ஈழத்துத் தமிழ்க் கவிதைச் சூழல் என்பது இப்போது ஒரு சில ஆதிக்க சக்திகளின் கைகளிலேயே உள்ளது.குறிப்பாக இந்திய தழிழ்நாட்டுப் பத்திரிகைகளில் தனது ஒரு கவிதையாவது வர மாட்டாதா என ஏங்கும் நிலையிலேயே ஈழத்துக் கவிஞன் உள்ளான். அப்படி அவனது ஒரு கவிதை தமிழகத்துப் பத்திரிகையில் வந்து விட்டால் அவன் நட்சத்திர எழுத்தாளனாகி விடுகின்றான். தற்போதைய புலம் பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள் கவிஞர்கள் இதற்காக தமிழ்நாட்டுக்குப் படையெடுப்பதுவும் அங்கு தமது பண பலத்தினால் பத்திரிகையாளர்களையும் படைப்பாளிகளையும் விலை கொடுத்து வாங்குவதும் அவர்களைக் கொண்டு தமமைப் புகழ்விப்பதும் மிகவும் சாதாரணமாகிப் போய் விட்டது.முன்பு கவிஞர் வைரமுத்து தனக்குத் தானே கவிப்பேரரசு பட்டம் கொடுத்துக்கொண்டது மட்டுமல்லாது தனது பிறந்த தினத்தை கவிஞர்கள் தினம் எனத் தானே அறிவிக்கவும் செய்தார். அன்றே கம்பன் இன்னொரு முறை இறந்திருப்பான். கண்ணதாசனும் எரிந்த தன் சாம்பல் கூட்டிலிருந்து ஒரு முறை எழுந்து சிரித்திருப்பான்.அவ்வாறேயே சில ஈழத்துக் கவிஞர்களும் கவிதை அரசியல் செய்கின்றனர். இவர்களில் குறிப்பாக வ.ஐ.ச. ஜெயபாலன் சேரன் தமிழ்நதி போன்றவர்களைக் குறிப்பிடலாம். இவர்களது குரோணர்களும் டொலர்களும்தான் தற்போது ஈழத்துக் கவிதைப் பரப்புகளைத் தீர்மானிக்கின்றன.மன்னவனும் நீயோ உனையறிந்தோ தமிழை ஓதினேன் என்ற நீதி செத்து விட்டது.
கவிதையும், காலை நேரத்துக் காபியும் மனதை உற்சாகப்படுத்துகின்றன.நம் வாழ்வின் நிமிடங்கலை மறூபடி,மறூபடு உயிர்ப்பிக்கின்றன.இலங்கையில் சேரனின் கவிதைகள் போராட்டத்தின் புயல் முகவரிகள்.சோ.பத்மனாதன் மரபு வழி பாடும் கவிஜன்.புதுவை இரத்தினதுரை ஒரு போர் மேகம்.இன்னும் சு.வில்வரத்தினம் என்றூ தமிழ் கவிக்குரலாய் எம்மிடையே ஒலிப்போர் பலர்.செல்லக்கிளீ, மேமன் கவி என்றூ இந்த வரிசையின் நீளம் அதிகம்.
ஆரோக்கியமான அந்த இலக்கியக் காலம் மறூபடி உயித்தெழுந்து வர வேண்டும்.எம் மக்களீன் வாழ்க்கையில் நம்பிக்கைகள் மலர வேண்டும்.
நாங்கள் பெடியலாய் இருந்த காலத்தி இலைஜனாய் இருந்த யெயசீலன் என்ற இளங்கமப் பாரதி, அற்புதக் கவிஜன் வைரமுத்துவையே விஜ்ஜியவன்.இன்னொருவன் பாக்கியராசா
அந்தி மலர் உதிருகின்ற இந்த வேலை ஆயிரமாம் எண்ணத்தில் அவளூம் ஒன்றூ பைந்தமிழில் கவிதை பாட் ஆசை கோடி பாடுகிறேன் நானும் இங்கே இதயவானில்——————என்றூ எமக்குள்ளே சிலிர்ப்பை ஏற்படுதிதியவன். நிலவும், கோயில் மர மணல் நிலமும் நாம் கவிதை பேசிக் கொண்ட காலம் அது.போர் ஒரு பக்கம் நாம் அதில் ஒரு பக்கம் இலக்கியம் தமிழ் என்றூ இயங்கிக் கொண்டிருந்தொம்.
இளங்கம்ப பாரதி சிறப்பான கவிஜன்,கம்பன் கழ்க கவியரங்குகலைக் கலக்கியவன்.இன்றூ எங்கே இருக்கிறானோ? என்ன செய்கிறானோ?
பாரதிக்கு உடாக ஆரம்பிக்கும்> உங்கள் கலை இலக்கியப் பயணத்தை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! கலை கலைக்காகவா? மக்களுக்காகவா? என்பதையும்!
வ.ஐ.ச. ஜெயபாலன் சேரன் ஆகியோர் யார் என்று தெரியாத காலத்திலேயே தமிழ்நாட்டில் கால் பதித்தவா;கள். இன்று பலா; இவா;களது கவிதைகளை உருமாற்றி கண்ணனுக்கும் மனுசயபுத்திரனுக்கும் விருந்து வைத்து கவதை கடைவிரிக்கின்றார்கள்.
அவர்கள் இவர்களது கவிதைகளைத்தான் உருமாற்றினார்கள்! இவாகள் தங்களையே உருமாற்றிவிட்டார்கள்!
GREETINGS KAVITHA! DO YOUR BEST! DO IT NOW! GOD BLESS YOU!
வாசகர்களுக்கு என் வணக்கங்கள்!
தெரிந்தவை புரிந்தவைகளை வைத்து எழுதிக்கொண்டிருந்தேன். இனி எழுதுவற்காக தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருப்பதாக உணர்கிறேன். நிச்சயமாக எனது ரசனையினூடாக நான் எழுதப்போகும் விடயங்கள் உங்கள் அனைவருக்கும் பெறுமதியானதாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
அனைவருக்கும் எனது நன்றிகள்.
கவிதா (நோர்வே)
பாரதியின் கட்டுரைகள் இதற்கு நேர்மாறானவை. வேண்டுமானால், http://mathimaran.wordpress.com சென்று பாருங்கள். <a href='http://sites.google.com/site/askmathi/" ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி', பாரதி பக்தர்களின் கள்ள மவுனம் என்ற தலைப்பில் பாருங்கள் தெரியும்.
அறீவுடடைநம்பி என்ற என் உறவுக்கு அடிப்படையில் நாம் சைவர்கள் நமது நெறீயானது சைவநெறீ என்பதால் தாங்கள் குறீப்பிடும் சாக்கடையில் குப்பைகளீல் எலி செத்த நாற்றமே வீசுவதால் தக்க மருந்து அங்கில்லை.மற்றூம் பெரியார் என்ற கன்னடரால் விலைந்த நாசங்களீல் ஒன்றூதான் பாரதியை கொச்சைப்படுத்துதல்.
தமிழன் என்ற உணர்வை இங்கு ஊட்டியவர் தந்தை பெரியார்தான்,பெரியார் இல்லையென்றால் தமிழகத்தில் தமிழன் பார்ப்பனர்களுக்கு முற்றிலும் அடிமையாக கிடக்கும் சூழல் இருந்திருக்கும், முதலில் பெரியாரையும் அவர் வாழ்க்கை முறையையும் படித்து விட்டு பிறகு விமர்சனம் செய்யுங்கள் அரைகுறை கருத்துக்களை தெரிவிக்கவேண்டாம், தோழர் வே.மதிமாறனின்‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’, பாரதி பக்தர்களின் கள்ள மவுனம் நூலை படியுங்கள் பாரதி என்ற விசக்கிருமியைப் பற்றி பயங்கொள்ளுங்கள்,
//அடிப்படையில் நாம் சைவர்கள் நமது நெறீயானது சைவநெறீ//வெங்காயம்! சைவானாயிருந்தால் நீங்களும் நானும் உறவாயிருக்க முடியாது அப்படி இருந்தாலும் அது பார்ப்பனிய ஜாதி அடிப்படையான உறவாயிருக்கும்,பெரியாரை கன்னடன் என முத்திரை குத்தும் புளித்து போன வாதத்திற்கு தந்தை பெரியார் அவர்கள் அன்றே பதில் கூறி விட்டார். தமிழனாக இருந்தால் உறவு என்றழைக்கலாம் சைவனாயிருந்தால் அங்கு சாதி இடையில் நிற்கும்,தமிழா இன உணர்வு கொள் என்றவர் யாரென்று தெரியுமா? அது தந்தை பெரியார்தான். நாம் சொல்கிறோம் தமிழா வர்க்க உணர்வு கொள்
தமிழை காட்டிமிராண்டி மொழி என்றூ சொல்லியவர் பெரியார்.அவர் சொன்ன இன உணர்வு திராவிட உணர்வு.வர்க்க உணர்வு என்பது தமிழனிடம் இருப்பதால்தான் அவன் சைவக்காரன். சாதியும் பேதமும் இல்லாநெறீயே சைவனெறீ.அன்பும் அரனும், அன்பும் சிவமும் ஒன்னெனறநெறீ. நம்மிடம் சாதி இருக்கவில்லை நமது வாழ்வியல்தான் சமயம்.
இங்கு “கவிதா” அவர்களின் -கவிதைகளுடனும் கவிஞர்களுடனும் ஒர் தொடர் பயணம்- என்ற பகிர்வுகளுக்கு அப்பால் இப்பகிர்வுகளின் ஊடாக சமூகம் கலை இலக்கியங்கள் சார்ந்த விடையங்களும் அவற்றின் படைப்பாளிகளும் தமிழ் சமூகத்தினரால் மறக்கப்பட்டுவரும் தந்தை பெரியார் போன்றோரின் தமிழ் சீர்திருத்தங்கள் சிந்தனை வாதக் கொள்கைகள் போன்றவற்றை மீழ்பரிசீலணைக்கு உட்படுத்தி வாதப்பிரதிவாதங்கைள மேற்கொண்டு தெரியாமல் இருக்கக்கூடிய மிக அற்புதமான விடையங்களையும் கருத்துக்களையும் இப்பகுதியில் வாசிக்கவும் போது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. எனவே -அறிவுடை நம்பி- தமிழ்மாறன்- ஒருவாசகன்- போன்றோரின் பதிவுகள் அரசியல் கலப்படங்கள் எதுவுமின்றி இதே பாணியில் செல்லவேண்டும் என்று வேண்டுகின்றேன் வாதங்கள் அருமையாக இருக்கின்றது.
இவர்களுடன் கந்தசாமி அவர்களையும் இணைத்துக் கொள்கின்றேன்
அன்புடன் பு.ஜ. வாசகன், தமிழ் மாறனைக் கண்டுகொள்ளாதீர்கள் அவர் சாமனியத் தமிழனின் உணர்வைப் பிரதிபலிக்கும் ஒரு மனிதன். அவரை பு.ஜ வாசகனான நீங்கள் எதிர்கொள்ளத் தேவையில்லை. அவரை அரசியல் மயப்படுத்த வேண்டியது எம் எல்லோரதும் கடமை.
தவிர, உலகில் எங்கெல்லாம் புரட்சிக்கு மாற்றீடாக, சீர்திருத்தம் முன்வைக்கப்படும் போதும் அது அதிகாரத்திற்கு ஆதரவான வேலையைச் செய்யும். தன்னார்வ நிறுவனங்களும் அதைத் தான் செய்கின்றன. பெரியாரும் அதைத் தான் செய்தார். சீர்திருத்த வாதத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்துப் பேசுங்கள். பெரியாரின் வழிவந்த திராவிடக் கோசம் முதலில் பிரித்தானியருக்கு ஆதரவாக சாதியை அரசியல் தளத்தை நோக்கி நகர்த்தியது. அது வரை அது சமுகச் செயற்பாட்டுத் தளத்தில் தான் தமிழகத்தில் இருந்தது.
தமிழ் மாறனைக் கண்டுகொள்ளாவிட்டால் நொந்து போய் விடுவார்.
கண்டுகொள்ளப்படுவதற்காகவே உளறித் தீர்க்கிறவர் அவர்.
அவரை அரசியல் மயப்படுத்துவதை விட இலகுவான மெனக்கெட்ட வேலைகள் பட்டியல் ஒன்று உன்டு.
பெரியாரால் தமிழ்ன் தமிழ் உணர்விழந்தான்,நாயுடுக்களீடமும்,நாயர்களீடமும் நாட்டைக் கொடுத்து விட்டு நடுவீதியில் நிற்கிறான்.சேட்டுக்கள் அவனைக் கடன் காரனாக்கி அவனைப் பிச்சைக்காரனாக்கி விட்டனர்.அசலும்,தலையும்,சூப்பர் ஸ்டார் என்ற போதையில் வீழ்ந்து இன்னும் தமிழன் விடுபவில்லை.திராவிடம் தமிழனை தெரு வீதியில் நிறூத்தி விட்டிருக்கிறது.
வெளீச்சத்தில் வாழ்ந்த தமிழ்ர்கலை இருட்டில் விட்டதே பெரியார்தான்.தமிழனிடம் திராவிட சிந்தனையைத் தந்து தமிழன் என்ற சிந்தனைக்கு ஆப்பு வைததவர் பெரியார்.தமிழர் கழகம் என்றூ ஏன் பெரியார் தமது இயக்கத்திற்கு பெயரிடவில்லை.திராவிடர் என்றால் அது தெலுங்கரையே குறீக்கும்.பெரியாரோ கன்னட பலிஜா அவரோடு இருந்தவரில் ஒருவரான தியாகராஜர் தெலுங் கு பலிஜா இவர்கள் சாதியால் இனைந்து தமிழ்ச் சாதிக்கு வேட்டு வைத்தார்கள். ஆந்திராவைப் பாருங்கள் அங்குள்ள கட்சிக்கு தெலுங் கு தேசம் என்றூ பெயர் தமிழகத்தில் திராவிடம்.திராவிடம் பேசுகிற தமிழனிடம் காய்கறீ வாங்கும் கேரளம் விவசாயத்திற்கு தண்ணீ மறூக்கிறது,
மின்சாரம் பெற்றூக்கொள்ளூம் கன்னடம் நீண்ட காலமாய் காவிரித் தண்னீருக்கு தடை போடுகிறது. தமிழன் திராவிடத்தால் வாழவில்லை. திராவிடத்தால் தன் சொந்த மானிலதிலே வாழ்விழந்து நிற்கிரான்.
உல்கில் எல்லோருமே நான் மலையாலி, தெலுங்கன்,கன்னடன், இந்தி எனும் போது தமிழன் மட்டும் தன்னை திராவிடம் என்பது எத்தனை பெரிய கொடுமை.
தமிழ் காட்டுமிராண்டி மொழி?கீழே உள்ள சுட்டியை பாருங்கள்http://tamizachiyin-periyar.com/index.php?article=478
//வெளீச்சத்தில் வாழ்ந்த தமிழ்ர்கலை இருட்டில் விட்டதே பெரியார்தான்//
தமிழன் பார்பப்பனிய சாதி இருளில் மூழ்கி கொண்டு இருக்கும்போது அதை பகுத்தறிவு கொண்ட தனது சாட்டையடி நாத்திக பிரச்சாரத்தினால் ஓரளவுக்கு மாற்றியவர் தந்தை பெரியார் அவர்கள்,
//பெரியாரோ கன்னட பலிஜா அவரோடு இருந்தவரில் ஒருவரான தியாகராஜர் தெலுங் கு பலிஜா இவர்கள் சாதியால் இனைந்து தமிழ்ச் சாதிக்கு வேட்டு வைத்தார்கள். ஆந்திராவைப் பாருங்கள் அங்குள்ள கட்சிக்கு தெலுங் கு தேசம் என்றூ பெயர் தமிழகத்தில் திராவிடம்.//
தமிழ்மாறன் நீங்கள் எந்த இடத்தில் வாழ்கிறீர்கள் என்பது எனக்கு தெரியவில்லைஆனால் தமிழ்நாட்டின் நிலை வேறுபட்டது ஒரு தெரு இருக்கிறதென்றால் அதில்இரண்டு தெலுங்கு பேசும் குடும்பம், ஒரு மலையாளி குடும்பம், ஒரு உருது முஸ்லீம் குடும்பம், சில பகுதிகளில் கன்னடர் குடும்பம் வசிக்கிறது, இவர்களெல்லாம் படிப்பது, எழுதுவதெல்லாம் தமிழில்தான் ஈழ படுகொலைசமயத்தில் என்னிடம் இப்படி கொடுமை செய்கிறானே ராஜபட்சே அவன் சாவமாட்டானா என கண்ணீருடன் புலம்பினார் ஒரு நண்பர் அவர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்தான் அவர் தெலுங்கை தாய்மொழியாக பேசினாலும் அவர் தன்னை தமிழனாகத்தான் உணருகிறார் அவர்கள் ஆந்திராவுக்கோ, கர்நாடகாவுக்கோ போகமுடியாது ஏனென்றால் இவர்கள் பேசும் தெலுங்கு,கன்னடம் ஆந்திராகாரனுக்கோ,கர்நாடகாவுக்கோ புரியாது, அதே போல்தான் கன்னடம் பேசுபவர்களும். புலிகள் தூக்கிவைத்து கொண்டாடிய எம்ஜிஆர் மலையாளி, அவர் தன் காலத்தில் மலையாள அதிகாரிகளுக்கு முக்கியம் கொடுத்தவர்,வைகோ தெலுங்கை தாய்மொழியாக கொண்ட நாயுடுதான்(அவருடைய அரசியலில் எமக்கு உடன்பாடில்லை)அவர் தமிழ், தமிழ் என்றுதானே கத்திக்கொண்டிருக்கிறார் மாறன் தமிழை தாய்மொழியாக கொண்ட ப.சிதம்பரம் ஈழப்படுகொலையை கச்சிதமாக முடித்துக்கொடுத்த துரோகி.தமிழனில் துரோகிகள் பட்டியல் உண்டு, மாற்று மொழி பேசுபவர்களில் மாமனிதர்களும் உண்டு, எல்லோருமே தம் வர்க்க நலனில் இருந்தே சிந்திக்கிறார்கள் எனவே வர்க்கமாக அணி திரள்வோம் ! மார்க்சிய பாதைக்கு வாருங்கள்.
கருணாநிதி தெலுங்கு வம்சாவழி தானே!
கோபாலசாமி நாயுடுகாரு!
சல்லடைபோட்டு அரித்தெடுத்தால் தமிழனே மிஞ்ச மாட்டான். (உங்களையும் சேர்த்துத்தான்).
xxxஎன்னுடைய கருத்தில் உங்களுக்கு முரணபாடோ அதை கூறுங்கள்நான் சொல்லுவது தமிழன், தமிழன் என்று நம்மை ஏமாற்றுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள், வர்க்க உணர்வோடு அணி திரளுங்கள் என்பதுதான்,
****சல்லடைபோட்டு அரித்தெடுத்தால் தமிழனே மிஞ்ச மாட்டான். (உங்களையும் சேர்த்துத்தான்****சல்லடைபோட்டு அரித்தெடுத்தால் நீங்கள் தமிழனாக மிஞ்சுவீரோ?
🙂
கலைஜர் இசைவேளாளர் அவர்களது தாய் மொழி தமிழே.தமிழைத் தாயாக் கொண்டதால் தமிழ் இன விரோதிகள் அவரைத் தெலுங்கராக்கியதே நிஜம்.வைகோ தமிழர் என்ற எமது உணர்வை காயப்படுத்தாதவர் அதேநேரம் உள்ளதை உள்ளபடி பேசும் அரசியல்வாதி.
உண்மையே ஏற்றூக் கொள்ளூகிறோம்.ஆனால் பிற மானிலங்களீல் இருந்தி பிழைக்க வருகிறவர்கள் தம் சொந்த மானிலங்கள் மீதான அதிக கவனத்தை தாம் வாழ்கின்ற, பிழைக்கின்ற மண் மீது காட்டுவதில்லை.மாறாக காழ்ப்புணர்வை, குரோதத்தையே காட்டுகிறார்கள்.மலையாளீயான் அஜித் தினது சமீபத்திய பேச்சு அதை வரவேற்ற கன்னடர் ரஜனியின் கைதட்டல் தமிழர் மீதான் காழ்ப்புணர்வே.இதுவே மலையாளம், கன்னடம் என்றால் இவர்கள் உணர்வானது வேறூ மாதிரியாகவே இருக்கும்.
நமது பெருந்தன்மையை, நமது மென்மையான போக்கை இந்த வந்தேறீகள் உணர்வதே இல்லை இதுவெ நம் உணர்வைக் காயப்படுத்துகிறது.
அருமையான பகிர்தல் கவிதா.
ஈழத்தின் கவிஞர்களைப் பற்றிய அறிந்து கொள்ள ஆர்வமாயிருக்கிறேன்.
‘அகநாழிகை‘ இலக்கிய இதழுக்கு படைப்புகள் அனுப்பச் சொல்லுங்கள்.
நன்றி.
– பொன்.வாசுதேவன்
“தமிழ்வாழ நாம் வாழ்வோம்
”
தமிழ்தாழ நாம்
தாழ்வோம்”
என்ணும் உணர்வுடன் கலைஞர் தொல்காப்பியத்தை
உருவாகினான்ன
அந்த வழியில் நிகழும் தோன்றி
முன்னால் கவியரசர்களின் பொன்மொழி குறிக்கோளாக கொன்று
மக்கள் மத்தியில் கொன்டு செல்லா என் வாழ்துகள்