Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

நோர்வே கொலையாளியை உருவாக்கியவர்கள் ? : சபா நாவலன்

இனியொரு... by இனியொரு...
07/29/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
4
Home பிரதான பதிவுகள் | Principle posts

நோர்வே நாட்டில் அப்பாவிப் பொது மக்கள் மீது ஒரு தனி நபர் நிகழ்திய பயங்கரவாதக் கொலை வெறித் தாக்குதல் கனவுகள் சுமந்த மனித உயிர்களை கண நேரத்தில் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிவிட்டது. ஏன் கொல்லப்படுகிறோம் என்று தெரியாமலே மாண்டு போனார்கள். நோர்வேயின் அத்தனை தெருக்களிலும் மரணத்தின் ஓலம் ஒலிக்கிறது. நோர்வேயின் வலது சாரிக் கட்சிகள் பன்முகக் கலாச்சாரத்தின் தோல்வியே தாக்குதலுக்கான காரணம் என்கின்றன. ஆளும் கட்சி சட்டவிதிகள் இறுக்கமாக்கப்படும் என்று கூறுகின்றன.

மேற்கு நாடுகளில், வன்முறை குறித்து அதிகமாகப் பேசப்படாத நோர்வேயில் இத்தாக்குதல் ஒரு குறித்த அரசியல் பின்னணியின் அடிப்படையில் நிகழ்ந்துள்ளது. இஸ்லாமிற்கும் மார்க்சிசத்திற்கும் குறிவைக்கப்பட்டதாக தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதி வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஏற்கனவே இந்து அடிப்படை வாதிகளும், இனவாதிகளும் முன்வைக்கின்ற அதே சுலோகங்கள் இன்னும் ஒரு முறை பதியப்பட்டது. இந்து அடிப்படை வாதிகள் சாரிசாரியாக மக்களைக் கொன்று போட்டுவிட்டு கூறிய அதே நியாய தர்மங்களின் பின்னர் தெற்காசிய அரசியல் கட்சிகள் நடந்துகொண்ட அதே வகையில் தான் நோர்வேஜியக் கட்சிகளும் செயற்பட்டன.

Anders Behring Breivik என்ற தனி மனிதனை உருவாக்கிய சமூகப் புறச் சூழல் ஐரோப்பா எங்கும் உருவாகி வருவது இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இந்தப் பகைப் புலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் ஐரோப்பிய நாடுகளில் மீளவும் நடைபெற வாய்ப்புகள் உண்டா? இதன் பின்புலத்தில் செயற்படுபவர்கள் யார் என்ற வினாக்கள் மனித குலத்தை அச்சுறுத்தும் விடைகளையே தரவல்லன.

ஐரோப்பிய அமரிக்கப் பொருளாதார நெருக்கடிக்கும் இராணுவமயமாக்கலுக்கும்(relationship between economic crisis and the militarization) இடையாயான உறவு குறித்த விசாரணையிலிருந்து சில விடயங்கள் தெளிவாகலாம்.

உலகின் மிகப்பெரும் பொருளாதார இராணுவ வல்லரசான அமரிக்காவிற்கு சர்வதேச நாணய நிதியம் கடந்த மாதம் எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அதன் சாராம்சம் அமரிக்கா தனது கடன் எல்லையான 14.3 ரில்லியன் டாலர்களை உயர்த்தாவிடின் நாடு திவாலாகிப் போகும் என்பது தான் அது. ஐரோப்பியக் கூட்டமைப்பு இனிமேலும் நிலை பெற முடியுமா என்ற நிலை உருவாகிவிட்டதாக பல பொருளியலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கிரேக்கத்தை மறுபடி தூக்கி நிறுத்துவதற்கு இன்னும் மூன்றாவது தடவையாகப் பண உதவி வழங்கப்பட்டுள்ளது. போத்துக்கல் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக ஜூன் மாதத்தில் 80 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டது. ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியின் உச்சத்தை அடைந்துவிட்டன. இந்த நாடுகளை மீட்பதற்கான வலு தம்மிடம் இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே கையை விரித்துவிட்டது.

பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் இதை விட அதிகமான நெருக்கடிக்குள் தள்ளப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. இன்னும் ஐந்து வருடங்களுக்கு உள்ளாக இத்தகைய நெருக்கடி இந்த மூன்று நாடுகளிலும் உருவாகும் என பொதுவாக எதிர்வு கூறப்பட்டாலும் கால எல்லை குறித்த பல முரண்பட்ட கருத்துக்கள் கூறப்படுகின்றன.

இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து தற்காலிகமாக மீள்வதற்காகவும் தமது நாடுகள் சரிந்து விழுவதைத் தவிர்ப்பதற்காகவும் மூன்று பிரதான திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன.

1. சர்வதேச வங்கிகளிடையேன ஒத்துழைப்பு.
2. எண்ணை மற்றும் கனிம வழங்களைக் கொண்ட நாடுகளைச் ஆகிரமித்தலும் சுரண்டுதலும்.
3. மேற்கு நாடுகளின் உள்ளே மக்களுக்கான சமூக உதவித் திட்டங்களை அழித்தல்.
இவற்றிற்கான அரசியல் ஒழுங்கு பல சிக்கலான சமூகப் பொறிமுறைகளைக் கொண்டதாக இயங்குகிறது. இந்தச் சமூகப் பொறிமுறைகளின் தொகுப்பே புதிய உலக ஒழுங்கு என அழைக்கப்படுகின்றது.

இந்த மூன்று திட்டங்களில் முதல் இரண்டும் நீண்டகால நோக்குடையவையும் பல நிகழ்ச்சித் திட்டங்களூடான நீண்ட நடவடிக்கைகளும் ஆகும். இதற்கான செயல்வடிவங்களாக மத்திய கிழக்கின் மீதான ஆக்கிரமிப்பு, இந்திய பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்கள், ஆப்கான் மீதான ஆக்கிரமிப்பு போன்ற பல நிகழ்வுகளைக் காணலாம்.

ஏகபோக அரசுகள் தமது நாட்டின் எல்லைக்குள்ளேயே மக்களின் வாழ்க்கைத் தரத்தைச் மூன்றாமுலக நாடுகளின் தரத்த்திற்குக் குறைப்பதற்கான திட்டங்களை வகுத்துக்கொள்கின்றன. குறிப்பாக சமூக உதவித்திட்டங்கள், சுகாதார சேவை, ஓய்வூதியம் போன்றன கேள்விக்குள்ளாக்கப்படுகின்ற அதே வேளை வரித் தொகை, வாழ்க்கைச் செலவு போன்றன எதிர்பாராத வகையில் அதிகரிக்கின்றன. இவை அனைத்திற்கும் மேலாக வேலையற்றோர் தொகை பல மடங்காக அதிகரித்துள்ளது.

இவற்றிற்கான அடிப்படைக் காரணமாக உலகப் பொருளாதார நெருக்கடி முன்வைக்கப்பட்டுகின்றது. உலகப் பொருளாதார நெருக்கடிக்கான அடிப்படைக் காரணமே உலக முதலாளித்துவத்தின் அதீத வளர்ச்சி என்பது கூறப்படுவதில்லை. உலக முதலாளித்துவம் மாறாக உலக முதலாளித்துவமோ, மக்களின் பாவனைக்காக எஞ்சியிருக்கின்ற பணத்தை எவ்வாறு உறிஞ்சுவது என்பதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது.

1. மூன்றாம் உலக நாடுகளின் மூலவளங்களைச் சுரண்டுதல்.
2. மூன்றாம் உலக நாடுகள் உழைப்பு மூலதனத்தைச் சுரண்டுதல்.
3. தமது நாடுகளில் வரி கொடாமை.

இவற்றின் வழியாக அளவிற்கு அதிகமாகப் பணக் குவிப்பை மேற்கொண்டுள்ள உலக முதலாளித்துவமே பொருளாதார நெருக்கடியின் பிரதான காரணமாகும்.

தகவல் தொழில் நுட்பத் துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சிஸ்கோ(CISCO) 7 மில்லியன் வரியை எவ்வாறு கொள்ளையடித்தது என்பது குறிப்பிடத்தக்க உதாரணம். தனது உப அலுவலகங்களை சுவிட்சிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிற்கு மாற்றியதனூடாகக் கடந்த 2009 – 2010 ஆம் ஆண்டுகளில் 7 மில்லியன் வரிப்பணத்தைச் செலுத்தாமல் தக்கவைத்துள்ளது. அதே வேளை அமரிக்காவில் கடந்த பத்தாண்டுகளில் 2.9 மில்லியன் தொழில்கள் வெளி நாடுகளை நோக்கி நகர்ந்துள்ளன. பிரான்சிலும் பிரித்தானியாவிலும் 1.9 மில்லியன் தொழில் வாய்ப்புக்கள் வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதே வேளை இந்த நாடுகளில் எல்லாம் உலகப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு என மக்களிடமிருந்து வரிப்பணம் அறவிடப்படுகிறது. ஏழ்மையும், வேலையின்மையும் இந்த நாடுகளின் இருப்பையே கேள்விகுள்ளாக்கியிருக்கின்றது, இன்னும் ஐந்தாண்டுகளுக்குள்ளாக இந்த நாடுகளின் தற்போதைய வாழ்க்கைத் தரம் தலை கீழாக மாறிவிடும் என எதிர்வு கூறப்படுகின்றது. இவற்றீற்கெல்லாம் எதிரான அரசியல் உறுதியானதாக இல்லாதிருப்பினும், புதிய எழுச்சிகளும் போராட்டங்களும் ஐரோப்பாவையும் அமரிக்காவையும் அச்சத்திற்கு உள்ளாக்குகின்றன..
இன்னும் குறுகிய கால எல்லைக்குள் இவ்வாறான போராட்டங்கள் புதிய எதிர்ப்பியக்கமாக வலுப்பெறும் “அபாயம்” காணப்படுவதாக அமரிக்க உளவுத்துறை ஆலோசனை மையயம் அச்சம் தெரிவிக்கின்றது.

இதனை எதிர்கொள்வதற்காக ஐரோப்பாவையும் அமரிக்காவையும் இராணுவ மயமாக்கும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பமாகிவிட்டது.

இதன் நுளைவாசலாக உலகத்தை ஆயுத மயமாக்கலையும் உலகை சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு ஒவ்வாத பிரதேசமாக்குவத்ற்கும் நவீன ஏகாதிபத்திய அரசுகள் இஸ்லாமிய எதிர்ப்பு வாதத்தையும், அதனை எதிர்கொள்ள சாரி சாரியான மனிதப் படுகொலைகளையும் தீர்வாக முன்வைத்தன. இவ்வாறான மனிதப் படுகொலைகள் சமூக அங்கீகாரமாகவும் சமூகத்தின் பொதுப் புத்தியாகவும் மாற்றப்பட்டது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அப்பாவிகள் சாரி சாரியாகக் கொல்லப்படும் போது, ஏகபோகங்களின் படைகள் இரத்தக்குளிப்பு நடத்தும் போது மேற்கின் ஊடகங்கள் மூச்சுக்கூட விடுவதில்லை. அதே வேளை மேற்கின் இராணுவம் தாக்குதலில் கொல்லப்பட்டால் தேசத்திற்காக உயிரிழந்த மா வீரர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர்.

நோர்வேயில் கொலை நிகழ்ந்த அதே நாள் இன்னொரு நாள் போன்று ஆப்கானில் விடிந்தது. ஐந்து அப்பாவிக் குழந்ததைகள் நேட்டோ படைகளின் குண்டுகளால் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகினர்.

ஆக, கடந்த தசாப்தம் உருவாக்கிய உலகன் பொதுச் சிந்தனையின், பயங்கரவாததிற்கு எதிரான யுத்தம் என்ற முழக்கத்தின் இன்னொரு பிரதினிதி நோர்வே கொலையாளி. அதன் மற்றொரு பிரதினிதி ராஜபக்சவும் கூட.

நோர்வே வின் கொலைகாரன் இந்த நாடுகள் தாம் ஆக்கிரமிக்கும் நாடுகளின் நடத்துகின்ற அதே கொலைகளை அதே சுலோகங்களோடு உள்நாட்டிலேயே நடத்தி முடித்துள்ளான்.

இரண்டிற்கும் அடிப்படையில் சித்தாந்தப் பின்னணி ஒன்றுதான். மார்க்சியத்திற்கும் இஸ்லாமிற்கும் எதிரான ஜனநாயக யுத்தம் என்பதுவே இரண்டும். இவை இரண்டையும் இணைத்து ஏகாதிபத்தியங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என அழகிய தலையங்கத்தை வழங்கியுள்ளன.

இலங்கையில் பேரினவாதிகளும், அவற்றின் பிரதிநிதிகளும், ராஜபக்ச குடும்பத்தினரும் வன்னியில் நடத்திய தர்பார், கோரக் கொலைகளையும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்றே பெயரிடுகின்றனர்.

மேற்கு தனது நலன்களுக்காக உருவாக்கிய மனிதம் மரத்துப் போன, கொலைகளை அங்கீகரிக்கும் பொதுப் புத்தி இன்னும் ஆயிரம் கொலைகளை கட்டவிழ்க்கும். லண்டனின் நடந்த நிறவாதிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறும் நோர்வே கொலைகாரனின் கூற்று ஐரோப்பியத் தொழிலாளர்களை, வேற்று நாட்டவரை எச்சரிக்கின்றது.

Anders Behring Breivik ஐயும் அவனின் மனிதத் தன்மையை மரத்துப் போகச் செய்த மேற்கின் அரசுகளும், ஊடகங்களும் இன்னும் நிறுத்தியாகவில்லை. பிரித்தானிய தொழில்கள் பிரித்தானியர்களுக்கே என்று மீண்டும் ஒரு முறை மிடுக்கோடு கூறியிருக்கிறார் பிரித்தானியத் தொழிலமைச்சர். மூன்றாம் உலக நாடுகளின் வளங்களைச் சுரண்டுகின்ற தமது கோழைத்தனத்தை அவர்கள் எப்போதும் பேசியதில்லை.

மேற்கின் அரசுகளை ஆட்டம்க்காணச் செய்யும் அரச எதிர்ப்புப் போராட்டங்களைத் திசைதிருப்புவதற்கு நோர்வேயின் கொலைகாரன் எவ்வாறு அவசியமாகின்றானோ அவ்வாறே மூன்றாமுலக நாடுகளின் ஆக்கிரமிப்பு யுத்ததை முன்னெடுக்க ராஜபக்ச போன்றோர் அவசியமாகின்றனர்.

உலக முதலாளித்துவம் உருவாக்க முனையும் புதிய உலக ஒழுங்கின் மரத்துப் போன சிந்தனை முறைகளைம் மீறி மக்களின் போராட்டம் உலகின் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்கும் புதிய சகாப்தத்திற்குள் பிரவேசித்துக்கொண்டிருக்கிறோம். இங்கு இறுதித் தீர்மானத்தை பெரும்பான்மையான ஒடுக்கப்படும் மக்களே மேற்கொள்வர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கொலைஞர்களே கொலைகளை விசாரணை செய்ய வேண்டும்!

Comments 4

  1. P.V.Sri Rangan says:
    15 years ago

    நாவலன்,
    தங்கள் கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்துக்களும்,நாசியத்தின் முனைப்புக்குமான பொருளாதாரக்காரணிகள்-அரசியல் பின் புலங்கள் குறித்த நிலைப்படு சரியானதே.இத்தோடு இன்றைய நவநாசிய முனைப்புக்கும்-முகிழ்புக்கும் இந்த உலகமகா பகாசூரக்க கம்பனிகளது பல் தேசிய மூலதனப் பாச்சலும்,அதனாற் பாதிப்படைந்த சிறு முதலாளிகளது ஒத்துழைப்புமே நாசியத்தை மீளக் கட்டியமைக்கிறது.இதற்கு நல்ல உதாரணம்: கங்கேரியத் தேசம்.

    நடுத்தர முதலாளிகளது தோல்வியும்,சிதைவும் அந்நிய மூலதனத்தை எதிர்ப்பதிலிருந்து அந்நியத் தொழிலாளர்களது பக்கம் திரும்பும்போது,அங்கே யூதவின எதிர்ப்பாளர்கள்,சிந்தி ரோம மக்கள்மீதான எதிர்ப்பாளர்கள் மற்றும் போலி முதலாளிய எதிர்ப்பாளர்களெல்லாரும் சென்றடையும் ஒரே இடம் நவபாசிசக் கட்சிகளே!இத்தகைய கட்சிகள் பலவீனப்பட்ட நடுதர முதலாளிகளிடமிருந்த தமக்கான நிதிகளைத் திரட்டும்போது,பாதிக்கப்பட்ட ஐரோப்பியத் தொழிலாளிகள் அடியாட்படையாக இணைந்துகொள்கிறார்கள்.சமீபத்துக் கங்கேரியத் தேர்தல்களில் நவ பாசிசக் கட்சிகளுக்கு வெற்றியும்,அடியாட்படையும் திரண்டுவருவதில் கிட்லரது மறு வருகைபோன்றே புலப்படுகிறது.

    நவநாசியத்தின் அதியூக்கமான நவ பாசிச ஆண்மையானது தினமும் கங்கேரியில் சிந்தி-ரோமா மக்களை வேட்டையாடி வருகிறது.கடந்த காலாண்டுக்குள் பல நூறு மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.கிராமங்களை-குடியிருப்புகளை விட்டுத் துரத்தப்பட்ட சிந்தி-ரோமா மக்கள் இருமேனியாவில் அடைக்கலம் புக,அந்தத் தேசத்து நிலவரமோ இன்னும் கேவலமானது.

    இது குறித்த இரண்டு கட்டுரைகளது லிங்கை இதுள் இணைக்கிறேன்.

    http://www.hintergrund.de/201106151590/politik/politik-eu/neofaschismus-und-krise-in-osteuropa.html
    http://www.hintergrund.de/201107121647/feuilleton/zeitfragen/sieg-oder-holocaust.html
    http://www.hintergrund.de/201107291663/globales/terrorismus/anders-behring-breiviks-stichwortgeber-und-vordenker-kommen-aus-der-mitte-der-gesellschaft.html

    டொச்சு மொழி புரிந்தவர்கள் வாசிக்கட்டும்.

    உங்கள் கட்டுரை இது குறித்து இன்னும் ஆழமாக இவ் விடையத்தை அணுகப்பட்டிருக்க வேண்டும்.பிரஞ்சியத் தேசத்து நாசியக் கட்சிகளது வழியில் சரகோசியின் அத்துமீறிய ஜிப்சிகள்மீதான தாக்குதல்-நாடுகடத்தல் மற்றும் நாசியத்தின் மீள் கட்டமைவு,ஐரோப்பா தழுவிய வலைப்பின்னலும்,அதனூடாக மக்களைக் காயடிக்கும் கருத்துப் பரப்புரையும் எப்படி மக்களை அவர்களுக்கான ஆதரவாளர்களாக்குகிறதெனவும் பேசப்பட்டிருக்கவேண்டும்.
    இதுகுறித்தவொரு ஆய்வையும் கீழ்வரும் பி.டி.எப் லிங்கில் வாசிக்கலாம்.
    http://www.kulturbuero-sachsen.de/dokumente/Vom%20Rand%20zur%20Mitte%282006%29.pdf

    http://www.kulturbuero-sachsen.de/dokumente/Ein%20Blick%20in%20die%20Mitte%282008%29.pdf
    http://www.kulturbuero-sachsen.de/dokumente/Heitmeyer.pdf
    நட்புடன்,
    ஸ்ரீரங்கன்

    • நாவலன் says:
      15 years ago

      உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி. மத்தியதர வர்க்கத்தின் கீழணிகளும் நவ தாராள வாதத்தின் பாதிப்பிற்கு உள்ளான சிறு உற்பத்தியாளர்களும் நாசிகளின் ஆதரவு சக்திகள் என்பது உண்மையே. இது குறித்தும் வன்முறையைப் பொதுப் புத்தியாக மாற்ற முனையும் அரசியல் குறித்தும் அவற்றை எதிர்கொள்வதற்கான அரசியல் குறித்தும் நிறைய எழுதப்பட வேண்டும். இவை தனிமனிதர்களது முயற்சியாக அன்றி கூட்டு முயற்சியாக முன்வரும் போது ஆழமான ஆய்வுகள் உருவாகும்.

  2. chandran.raja says:
    15 years ago

    அபரிமிதமான உற்பத்தி… ஆதாயத்திற்கான பொருள்தேடல்(பணம்) இறுதியில் பல கோடிமக்களை முட்டுசந்தியில் நிறுத்திவிடுகிறது. இதில் காண்பது என்ன என்பதென்றால் உழைத்தவன் ஒட்டாண்டியாகி நிற்பதையும் கபடவாழ்க்கை வாழ்ந்தவன் நீதிமான் மாதிரி காட்சிதருவதையே காண்கிறோம். இந்த நீதிமான் தனது பணவலிமையால் உலகபிரச்சார யந்திரத்தையே தன் காலடியில் வைத்திருக்கிறான். உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிற உழைப்பாளர்களோ தமது கருத்துக்கள் வலிமைபெறாமலும் தமக்கென இருந்த ஸ்தாபனங்கள் சிதறிக்கப்பட்டதாலும் நாளும் நிமிடமும் தேனீயாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
    தேனீயாக உழைத்தவர்களை முதாலித்தவம் தனது தேவைகளுக்காக இந்ததேனீகளை பீரங்கிசாப்பாடகவும் மாற்ற முயல்கிறது. இதற்காக தான் சுரண்டிய பணத்தில் ஒருபகுதியை மேலும்சுரண்டுவதற்காக ஒதிக்கிவைக்கிறது.
    இங்கிருந்துதான் உழைப்பாளர்களை பிரிவினைசெய்து அவர்களின் சக்திகளை சிதறப்பதும் தோன்றுகிறது. அது இனக்கலவரமாகவும் மதக்கலவரமாகவும் தொண்டு
    நிறுவனங்களாகவும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவனை சர்வதேசநீதிமன்றத்தில் நிறுத்தவேண்டுமென போர்குரலாகவும் எழும்புகிறது. இதுதான் கடந்த எழுபதுஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஸ்டாலினாகவும் ஒரு அடேல்ப்:
    கிட்டலாகவும் ஒரு முசலோனியாகவும் தரிசனம் செய்தோம். இன்று……….
    உழைப்பாளர்கள்-தொழிலாளர்ஐக்கியத்தை சிதறடிப்பதற்கு மீண்டும் ஆதாயத்திற்காண உற்பத்தியை கொண்டுசெல்வதற்கு உழைப்பாளர்சக்தியை கூறுபோடு உலகத்தை மறுபங்கீடுசெய்வற்கு செயற்கையாக ஒருவெறிகூசியை ஏற்ற
    வேணண்டிய தேவையுள்ளது. இந்த பாஸிச ஊசியின் பிரச்சாரவடிவமே! பிரைவீக். இந்த ஊசியின் தற்காலசெயல்வடிவம் யார் என்றால்?….. சக்கோசி அங்கேலாமேக்கர் டேவிட்கமரோன் ஒபமா. இவர்களின் பொம்மலாட்டத்தையும் சுயநலப்போராசையும் முடிவுக்கு கொண்டுவர சக்தி படைத்தவர்கள் யார் என்று கேட்டால்.. சாட்..சாட்.. சர்வதேச தொழிலாளர்வர்கமே! ஆகவே! மாக்ஸியத்தின் அறிவுறுத்தலால் தோற்றிவிக்கப் பட்டதே அகிலம். அதற்கு முதாலாம் அகிலம் என்றும் சொல்வார்கள். இந்த அகிலக்காரர்கள் சுமந்தசுமைகளும் நடந்தபாதைகளும் கேட்கப்பட்ட அவலச்சொல்களும் கொஞ்சமல்ல. இருந்தாலும் எதற்காக சுமந்தார்கள்? எதற்காக நடந்தார்கள்? என்பதான கேள்வி மனிதமனம் உள்ளவர்களின் நெஞ்சில் என்றும் ஊஞ்சலாடும்.

  3. Nackeera says:
    15 years ago

    புதியசெய்தி
    நோவேயியப் பயங்கரவாதியும் வெறிபிடித்த கொலைஞனுமான பிரேவிக் தண்டனையில் இருந்து தப்புவதற்கான சாத்தியக் கூறுகிகள் உண்டு. நோவேயிச்சட்டம் 102 இன்படி அவனது நடவடிக்கைகளும் வாக்கு மூலமும் வெகு சுலபமாக அவனை வெளியே கொட்டுவரலாம். இது இவனின் பின்னால் நின்று செயற்படும் பழைய சோவித்தின் பின்னணி என்றே கருதப்படுகிறது. இவனது வாக்கு மூலப்படியும் எழுத்துகளின் படியும் ஐரோப்பா ஒரு பேராபததில் உள்ளதாகவே இவன் குறிப்பிடுகிறான். சுயசெயற்பாடற்ற தன்மை என்று கருதமுயன்றான் கொலையாளி வெற்றியாளனே. நோவேயின் அதிகூடிய தண்டனைக்காலம் 30வருடம் வளங்கப்பட்டாலும் அந்த முழுதண்டனைக்காலத்துக்குள் இவன் ஒரு சர்வதேசமனிதஉரிமை மீறலாளன் என்ற பெயரில் வெளியில் வழக்குகளை நடத்தி இவன் பின்னால் நிற்கும் அந்த மாட்டர் மைண்டுகள் அவனை வெளியே கொண்டுவரும் உதாரணமாக கே.பி யைப்போன்று.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...