பேரழிவுக்கு வித்தாக இருக்கும் டைனமெட்டைக் கண்டுபிடித்த சுவீடனைச் சேர்ந்த அல்பிரட் நோபலின் பிறந்த தினத்தன்று, 10 மார்கழியில் அமைதிக்கான நோபல்பரிசு நோர்வேயில் வளங்கப்பட்டு வருகிறது. நோர்வே அன்று முதல் இன்று வரை அமைதியை விரும்பும் அமைதிக்காகப் பணிபுரியும் நாடு எனக்கருதியதால் அமைதிப்பரிசை நோர்வே கொடுக்கவேண்டும் என்பது அல்பிரட் நோபலில் விருப்பாக இருந்தது. இந்த நோபல் பரிசானது 1901ல் இருந்து தொடர்ச்சியாக நோர்வேயில் இருந்தே வளங்கப்பட்டு வருகிறது.
2014க்கான அமைதிப்பரிசு இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ; சத்தியாதிக்கும் பாக்கிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய்கும் வளங்கப்படுகிறது. இருவரும் நேற்று ஒஸ்லோ விமானநிலையத்தை வந்தடைந்தார்கள். இம்முறை நோபல்பரிசானது குழந்தைகளின் உரிமைக்காகப் போராடியவர்களுக்கு மொத்தம் 278 பேரில் இருவருக்கு வளங்கப்படுகிறது. இந்த நோபல்பரிசு வழங்கும் நிகழ்வில் 6000 குழற்தைகள் பங்கு பற்ற உள்ளார்கள். இப்பரிசுக்கான 16கரட் தங்கப்பதக்கமும் பெரும்தொகை பணமும் காத்துக்கொண்டு இருக்கிறது.
இந்தியாவில் மத்தியபிரதேசமான விதிஷh மாவட்டத்தில் 11.01.1954ல் பிறந்த கைலாஷ; சத்தியார்த்தி ஒரு பொறியில்துறையில் முதுமானி பட்டம் பெற்றவர். 25வருடங்களுக்கு மேலாக குழந்தைகளின் உரிமைக்காக திட்டமிட்டு, அமைப்புரீதியாக வரையறுத்து செயற்பட்டு வந்துள்ளார். முக்கியமாக குழந்தைத் தொழிலாளர் பிரச்சனைகளை முடிவுகட்ட ஏழ்மை, கல்வியறிவின்மை, வேலையில்லாப்பிரச்சனை, மக்கள் தொகைப்பெருக்கம், சமூக உள்வெளி கட்டமைப்புக்களின் சீர்கேடுகள், கல்வி வளங்காமை போன்ற பிரச்சனைகளுக்கு எதிராகவும் போராடிவந்தார். முக்கியமாக இவர் குழற்தைத்தொழிலாளர் ஒழிப்பில் 80000க்கு அதிகமான பிள்ளைகளை பாதுகாத்து கல்வியறிவு கொடுப்பதற்காகப் போராடி வெற்றியும் கண்டுள்ளார்.
மலாலா யூசப்சாய் இவர் 12.07.1997ல் பாக்கிஸ்தானில் பிறந்த 17வயதுடைய சிறுமியாவர். இவர் தலிபான் எனும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பால் கொடூரமாகத்தாக்கப்பட்டு சாவின் விழிம்பை எட்டித்தொட்டவர். இவரை மேற்குலகின் உதவியுடன் காப்பாற்றினார்கள். இவர் இஸ்லாத்தில் பெண்களின் கல்வி குறித்துப்போராடி வந்துள்ளார். இதற்கு அவரின் தந்தை ஜியாவுதீன் யூசப்சாய் இன் தாக்கமும் அதிகம் இருந்தது. இவர் தந்தையின் பாடசாலையில் படித்துவரும் வேளை பிபிசியில் பேசும் வாய்புக்கிடைத்தது. அங்கே பெண்கள் கல்வி பற்றிப்பேசிய உரை பெருவரவேற்பைப் பெற்றதால் தலிபான்களால் கொலைமிரட்டல்களும் அழுத்தங்களும் ஏற்பட்டது. இவர் பள்ளிப் பேருந்துவில் சென்று கொண்டிருந்தபோது சரமாரியாக தலிபான்களால் சுடப்பட்டு காயமுற்று ஐரோப்பா கொண்டுவரப்பட்டு உயிர்பிழைத்தார். இவர் இலண்டனிலுள்ள பேமிங்காம்பில் தனது படிப்பைத்தொடரும் வேளையும் தனது போராட்டத்தை பெண்கள் கல்விக்காக முன்னையதைவிட மூச்சாக ஈடுபட்டார்.இன்று நோபல்பரிசு பெற்றவர்களில் மிகக்குறைந்த வயதுடையவர் மலாலா ஆவார்.
இவர் விமானநிலையத்தால் அழைத்துவரப்படும்போது அவர் கூறினார் நான் ஒருமுஸ்லீம் என்பதில் பெருமையடைகிறேன் இஸ்லாத்தில் கல்வி என்பது உரிமையல்ல கடமையாக வேண்டும் என்றார்.
சத்தியாதியும், மலாலாவும் அமர்ந்திருந்த கூட்டத்தில் சத்தியாதி மலாலாவைக் கேட்டார் ‘எனக்கு மகளாக வருகிறாயா’ என்று. அதற்கு அவளும் சம்மதித்தாள் இதேவேள்வியை நோபல்குழு தலைவர் யாகலாண்டிடம் கேட்டபோது ‘ நீ அவளை உன்மகளாக ஏற்பாயா’ அவர் அழித்தபதில் ஆச்சரியமாக இருந்தது. ‘ ‘அது உணர்வு சம்பந்தமானது, நோபல்பரிசு அவர்களின் செயற்பாட்டுக்குக் கொடுக்கப்படுகிறது’ என்றுசமாளித்தே பதில் அளித்தார். இங்கேதான் இந்த கீழத்தேய சத்தியார்த்தியையும் மேற்கத்தைய யாகலாட்டையும் ஒரேதராசில் நிறுத்திப்பார்க்க நேர்ந்தது. மனத்தின் முடிவு சொன்னது ‘சத்தியார்த்தியின் செயற்பாடு உணர்வு பூர்வமானது’ யாகலாண்டின் செய்ற்பாடு கடமை பூர்வமானது. அதாவது ஒரு மிசினும் கடமைபூர்வமானதே என்ற எண்ணத்தை என்மனதில் நிறுத்தலாம்.
விமர்சனம்:-
பேரழிவாயுதங்களுக்கு ஆரம்ப கர்த்தாவான டைனமயிட்டைக் கண்டுபிடித்த அல்பிரட் நோபல் அமைதிப்பரிசுக்காக தன்பணத்தை ஒதுக்கி அதுவும் சுவீடனைச் சேர்ந்த ஒருவர் நோர்வேயை அமைதிப்பரிசை வளங்குமாறு பணித்தமை எதிரும் புதிருமான செயல்களே.
பொறியிலாளர் என்பவர் பொருட்கள், தளபாடங்கள் பற்றிய அறிவுடையவர். இப்படிப்பட்ட ஒரு மனிதர் சத்தியாதி குழந்தைகள், குழந்தைத்தொழிலாளிகளின் உரிமைக்காக தன்னை அர்ப்பணித்தார் என்பதும் எதிரும் புதிருமானதே. கீழத்தேய நாடுகளில் கல்வி என்பது தொழில், பணம், புகழ் சம்பாதிப்பதற்காகவே என்பதை இவரின் வாழ்க்கை சுட்டிக்காட்டுகிறது. கல்வியானது உணர்வு, ஆர்வம் என்பனவற்றில் அடிப்படையில் அமைந்தால் மட்டுமே கல்வி வாழ்வுடன் ஒன்றியமாக அமையும்.
மலாலாவுக்குக் கொடுக்கப்படும் நோபல்பரிசின் சமிஞ்சை என்ன? பெண்கள் கல்விக்காக போராடும் பலர் இருந்தபோதிலும் மலாலாவுக்கு எதற்கு இந்தப்பரிசு? முக்கியமாக இவர் தலிபான் எனும் இஸ்லாமிய அமைப்புக்கு எதிராக பேசினாள். அவர்களால் தாக்கப்பட்டாள். இந்த நோபல்பரிசானது இஸ்லாமிய தீவீரவாதிகளுக்கு விடும் எச்சரிக்கை சமிஞ்ஞையே ஆகும். நோபல்குழுத்தலைவர் தன்செவ்வியில் கூறினார் குழந்தைகளுக்கும் இளைஞர் யுவதிகளுக்கும் கொடுக்கும் நம்பிக்கை என்றார். நோர்வே இந்த சமிஞ்ஞை நாளை இன்நாட்டில் இஸ்லாமியத் தீவீரவாதச் செயல்களுக்கு வித்திடும் என்பது உறுதி.
எதற்காக இப்பரிசு இவர்கள் இருவருக்கும் கொடுக்கப்பட்டது? முரண்பாடுகளைக் கொண்டு இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாட்டவர்களுக்கும், முரண்பாடுடைய மதங்களைக் கொண்டவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. காரணம்தான் என்ன? முரண்பாடுகளைத் தாண்டி குழந்தைகளின் உரிமைக்காகப் உழைத்தவர்கள் என்பதற்காக இருக்கலாம். ஆனால் இப்படிபட்டவர்கள் பலர் உலகம் முழுவதும் உள்ளனர். இருந்தும் இவர்கள் இருவரும் ஐரோப்பாவுடன் அதிகம் தொடர்வுடையவர்கள் என்பதை யாரும் மறந்துவிடல் ஆகாது. சத்தியார்தியினதும் மலாலாவினதும் பிற்புலத்தைப் பார்த்தால் இது புரியும்.
இவை அனைத்தையும் மீறி நோர்வே அமைதிக்கான நோபல்பரிசைக் கொடுப்பதற்குத் தகுதி உடையதா? என்ற கேள்வி மனதை இடறத்தான் செய்கிறது. உலகவல்லரசுகளுக்கே அதியுயர் தொழில்நுட்பம்கொண்ட பேரழிpவாயுதங்களைத்தயாரித்து வினையோகிக்கும் நோர்வே இந்த அமைதிக்கான நோபல்பரிசைக் கொடுப்பதற்குத் தகுதி உடையாதா? ஆயுதம் என்றுமே அமைதியைக் காத்ததில்லை. ஆயுதம் என்பதே பலாற்காரத்தின் குறியீடு. இதை வினையோகிக்கும் நோர்வே தன்படையையும் படைக்கலன்களையும் மத்திய கிழக்கிலும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் நேட்டோவினூடாக நிலைநிறுத்தியுள்ளது. ஆயுதங்களையும் போரையும் கட்டிக்காக்கும் நோர்வே அமைதிப்பரிசை வளங்க உரித்தடையா?
அல்பெர்ட் நோபலில் இருந்து இன்றுவரையுள்ள அமைதிக்கான நோபல் பரிசில் எதிரும் புதிருமான நிகழ்வுகளையே காணலாம். நோபல்பரிசே எதிரும் புதிருமானதா?
நோர்வே நக்கீரா
10.12.2014
Ceremony date (2014): December 10, 2014
சார் என்ன சொல்ல வர்றார், அடுத்தவட்டி அந்த பரிசை ஒரு தலிபானுக்கும் கொரியன் கிம்முக்கும் குடிதிடலாமுன்னா. யாரு விட்டாங்க உங்களை,நீங்களே ஒரு பரிசை உண்டாக்கி நோர்வேயுல குடுக்கலாமே.நோர்வேக்காரன் வேணான்னு சொல்லமாட்டான்.
தற்போது நடந்து முடிந்த நிகழ்ச்சி இது. இணைப்பைச்சுடுக்கி நோபல் பரிசு கையளிக்கும் நிகழ்வைக்காணலாம்
hவவி://றறற.எப.ழெ/லொநவநச/நைெெசெமைள/ழெடிநடள-கசநனளிசளை/அயடயடய-தநப-எடை-வயமமந-கயசநn-அin-கழச-யவ-hயn-மைமந-எபைெநமடippநவ-அநப/ய/23353134/
http://www.vg.no/nyheter/innenriks/nobels-fredspris/malala-jeg-vil-takke-faren-min-for-at-han-ikke-vingeklippet-meg/a/23353134/
DIFFERENT VIEW..GOOD!
Thanks Shan
நோர்வேயினால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் ஆயுதங்களை வாங்குபவர்கள் தொடர்ந்து விற்பனை செய்தல் ஆகாது என்ற உடன்படிக்கையில் நோர்வே இன்னமும் கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பித்தக்கது. அதாவது நோர்வேயிய ஆயுதங்களால் அப்பாவி மக்கள் குழந்தைகள் கொல்லப்படவில்லை என்ற உத்தரவாதத்தை நோர்வே அளிக்க முடியாது. கொன்றாஸ்சிலும் பாலஸ்தீனத்திலும் நோர்வேயிய ஆயுதங்கள் பாவிக்கப்பட்டுள்ளன என்பது ஊடகங்களூடாக நாம் அறிந்ததே. இரத்தம் தோய்ந்த கைகளிலால்தான் இந்த அமைதிக்கான பரிசு வழங்கப்படுகிறதா? என்றகேள்வி மனச்சாட்சியைத் தட்டத்தான் செய்கிறது.
உபாமாவுக்கும் நோபல்பரிசு கொடுத்ததை அனைவரும் அறிவர்.அமைதிகாக்க உபாமா உழைக்காதபோதும் அவருக்கு எதற்கு நோபல் பரிசு என்று கேட்டதற்கு நோபல்குழு கொடுத்தபதில் மாற்றங்கள் நிகழ்த்துவார் என்று . மாற்றங்கள் என்ன? மாற்றங்கள் நடந்தன. ஆயுதங்களும் போர்கலங்களும் மத்திய கிழக்குக்கு அனுப்பப்பட்டன. அப்பாவி மக்களும் முக்கியமாகக் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். ஐ எஸ் ஐ எஸ் என்ற அமைப்பு அமெரிக்கா போன்ற மேற்குகளால் உருவாக்கப்பட்டு அவர்களுக்கே காலனாக நிற்கிறது. இதுதான் அமைதிக்கான மாற்றமா? இரத்தம் தோய்ந்த கரங்களுக்கு வெள்ளை கையுறையா? இன்னும் பலகேள்விகளுடன் உண்மையின் கரங்கள் ஓங்கி அடிக்கின்றன. பதில் என்ன? இரட்டை வேடமா? இலங்கையில் ஆடிய இரட்டை வேடத்தின் முடிவு என்ன? சரி பிழை எப்பக்கம் இருந்தாலும் குழந்தைகளுக்காக பரிசளிக்கும் நோர்வே நாடு இலங்கையில் பச்சிளம் பாலகர்கள் கொல்லப்பட்ட போது கண்மூடி மெளனமாக இருந்தது ஏன்? நோபல் பரிசளிக்கும் கரங்கள் தூய்மையானவையா? குழந்தைகளைக் கனம் பண்ணும் கரங்கள் இரக்கமுள்ளனவா? இன்னும் மனச்சாட்சியை நோகடிக்கும் ஒரு கேள்வி குழந்தைகளுக்கா உழைக்கும் இவர்களுக்கு பரிசு கொடுக்கத்தான் நோர்வே தகுதியுடையதா? கேள்விகள் சரமாரியாகின்றன: பதில்களை உங்களின் மனச்சாட்சியிடம் விட்டுவிடுகிறேன்.
எதிா்கால அரசியல் இலாபங்களை கணிப்பிட்டே இந்த பாிசில்கள் வழங்கப்படுகின்றன இதில் நீங்கள் குறிப்பிட்டபடி நோா்வே தகுதியுடயதா இல்லையா என்பதை நோக்கினால் யாா்தான் தகுதியுடயவா்கள் என்று கேட்கத்தோன்றும் நாம் வாழ்வது ஒரு ஜிம்மிக் உலகம் வெளியே ஒன்றும் உள்ளே வேறொன்றும் என்பதே யதாா்த்தம் இதைப் புாிந்துகொண்டால் மட்டுமே வாழலாம்.
குமாரின் பார்வை நியாமானது. தகுதிகளை வளர்த்துக் கொள்ளும் தகுதி நோர்வேக்கு உள்ளது. இதே போல் யப்பானும் 2ம் உலகயுத்தத்தின் பின் தனது படையை வேறுநாடுகளில் நிறுத்துவதில்லை என்ற கொள்கையை ஒரிரு ஆண்டுகளுக்கு முன்வரை கடைப்பிடித்திருந்தது.யப்பான் அழிவாயுதங்களைத் தயாரித்து விற்பதில்லை. கியூபா போனற வறிய நாடுகள் இன்றும் எல்லை கடந்த வைத்தியர் அமைப்பை உருவாக்கி தமது வைத்தியர்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டுள்ளார்கள்.
பாக்கிஸ்தானில் பள்ளிகூட சிறார்கள் கொலை செய்யப்பட்டது மலாலாவுக்குநோபல் பரிசு கொடுத்ததற்காக – இதற்குத்தானே ஆசைப்பட்டாய்நோர்வேநக்கீரா – இப்ப திருப்திதானே நோர்வேநக்கீரா –
நக்கீராவால் புரிந்து கொண்ட இந்தவிடயம் ஒரு நோபல்குழுவுக்கு தெரியாமல் போனது எப்படி? பரிசு கொடுத்தது வாழ்த்துதற்குரியது. ஆனால் பயங்கரவாதிகளுக்கு சவால் எதற்கு? இந்தச்சவாலின் பின்புலம் என்ன நோக்கம் கொண்டிருக்கிறது என்பதை மேற்குலகச்சிந்தனையில் நின்று சிந்திக்க முடிகிறது. அப்படிச் சிந்தித்திருந்தால் உங்களது கேள்வி அர்த்தமற்றது. முதலில் செய்தி விமர்சனம் இரண்டையும் நடுநிலையில் நின்று வாசித்துப் புரிந்துகொண்டபின் விமர்சிப்பதே ஆரோக்கியமானது. மேலுள்ள செய்திவிமர்சனம் உங்களுக்கு புரியில்லை என்பது தெளிவாகிறது. மீழ்வாசிப்புச் செய்து புரிந்து கொள்ளுங்கள்
Here we go again, when you are caught red handed you and people of your caliber try to escape like the Indian rope trickster. What you have written and its intent is not Einstein’s quantum theory of light for one to struggle to understand. If you can have so much negativity about the Nobel peace price for that girl I can imagine how bad it can be with the Taliban. You too have contributed to their hatred and in way incited them. Learn to take responsibility for for irresponsible writing first. It will help people to live in peace.
ஆங்கிலத்தில் மட்டும் தான் எதையும் சரியாக எழுதி வாசிப்பீர்களோ? தமிழின் நிலை இப்படி இருக்கிறது. ஒரு செய்தியைப் பலகோணத்தில் அலசி ஆராய்பவன்தான் ஒரு விமர்சகன் என்பதை அறிக. உங்களுக்கு சிலவேளை குவான்டம் தியறியை விளங்கிக் கொள்ளமுடியும் இச்செய்தி விமர்சனத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லை என்பதான் ஆதங்கத்துக்குரியது. விமர்சனம் என்பது நன்மைகளை மட்டுமல்ல எதிர்மறையானவற்றையும் கூறும் என்பதைக் கூட அறியாமல் எழுதுகிறீர்கள். இதனால்தான் உங்களின் முதல் பதிவுக்கு பதில் தராது அரட்சியம் செய்தேன்.
//சார் என்ன சொல்ல வர்றார்இ அடுத்தவட்டி அந்த பரிசை ஒரு தலிபானுக்கும் கொரியன் கிம்முக்கும் குடிதிடலாமுன்னா. // இப்படி இருக்கிறது உங்களின் புரிதலும் வாசிப்பும்: இதன்பின் நேரத்தைத் தொலைப்பதை விடசொல்வதற்கு என்ன இருக்கிறது. உங்களுக்கு என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதும் ஒரு செய்தியாளன் விமர்சகன் எப்படி எழுதவேண்டும் என்பதையே புரியவில்லை என்பதும் உங்கள் பின்நோட்டத்தில் தெரிகிறது.
உங்களின் பொறுப்பற்றிய புரிதலற்ற கேள்விக்கு மீண்டும் பொறுப்புள்ளவனாகவே பதில் அளிக்கிறேன்: தலிபானின் கொலைகளுக்கு என்னிடம் எப்படிப் பெறுப்புக்கேட்கமுடியும்? பொறுப்புடன் நடக்கவேண்டிய அரசுகளோ நோபல் குழுவோ தலிபானோ அப்படி நடந்துகொள்ள முடியவில்லை. ஒருசெய்தியாளன் விமர்சகன் செய்தியின் பின் தன்பார்வையின் கோணங்களை ஊடத்தினூடாகப் பகிர்ந்துகொள்கிறான். எனது ஆய்வில் என்பார்வையில் இதற்குச்சந்தர்ப்பம் உண்டு என்பதை எழுத உரிமை உள்ளது. அதை எழுதப்கூடாது என்பதைச் சொல்ல யாருக்கும் உரிமைகிடையாது. ஒரு சாதாரணமாக எனக்கு விளங்கியது அரசுகளுக்கும் நோபல்குழுவுக்கும் ஐன்டயின் தியறிகளையே விளங்கும் உங்களுக்கும் விளங்கவில்லை என்பதுதான் வேடிக்கை நண்பரே. நோபல் பரிசின் பின்புலத்திலும்: ஈழத்தமிழர் போராட்டத்தில் சமாதானப் பேச்சு என்று முகம்காட்டி மறைக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த கரங்களை நாம் பலதடவை முகம் கிழித்துக் காட்டியிருக்கிறோம். சமாதானம் பற்றிப் பேசுகிறீர்கள் ஈழத்தமிழர்கள் கொத்துக கொத்தாய் கொல்லப்பட்டபோது உங்கள் சமாதனத்தின் முகங்களை எங்கே வைத்திருந்தீர்கள்? மனிதநேயத்தின் கண்களை எங்கே திருப்பு பார்வையை எந்தச்சேற்றுக்குள் புதைத்தீர்கள்?ஒரினத்தை அழித்தபின்பு வெறும் நிலத்துக்குத்தான் சமாதானம் என்றால் இதை உண்மையுள்ள உணர்வுள்ள எந்த மனிதனும் ஏற்கமாட்டான். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுதகதையாக இருக்கிறது உங்களின் சாமானம் பற்றிய பேச்சு
மலாலாவுக்கு நோபல் பரிசு கொடுத்ததை நான் என்றும் எதிர்மறையாக் கருதவில்லை. இதன்பிரதிவிளைவுகளையும் ஊடகங்களுக்கு நோபல்குழு கொடுத்த செய்தியின விளைவுகளையே ஆராய்திருக்கிறேன்.தமிழில் நான் சொல்லியதைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால் இதை உங்கள் தந்தை மொழியான ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து வாசிப்பீர்களாக. உங்களுக்கு நன்மைகளே தெரிவதில்லையா? இங்கே பலமுக்கியவிடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்பதை அறிக. நான் இதை எழுதாது இருந்திருந்தால் இந்தபயங்கரவாதத் தாக்குதல் நடக்காது இருந்திருக்குமா? பொறுப்புடன் நடக்கவேண்டியவர்கள் பொறுப்புடன் நடக்கவில்லை என்பதைச்சுட்டிக்காட்டினால் உங்கள்களின் பார்வையில் பொறுப்பில்லாதனம் என்றால் மன்னிக்கவும் அதை நான் தொடர்ந்து செய்வேன். மேலும் பொறுப்பின்றி பதிலளிக்க மாட்டேன்.
“மலாலாவுக்குக் கொடுக்கப்படும் நோபல்பரிசின் சமிஞ்சை என்ன? பெண்கள் கல்விக்காக போராடும் பலர் இருந்தபோதிலும் மலாலாவுக்கு எதற்கு இந்தப்பரிசு? முக்கியமாக இவர் தலிபான் எனும் இஸ்லாமிய அமைப்புக்கு எதிராக பேசினாள். அவர்களால் தாக்கப்பட்டாள். இந்த நோபல்பரிசானது இஸ்லாமிய தீவீரவாதிகளுக்கு விடும் எச்சரிக்கை சமிஞ்ஞையே ஆகும். நோபல்குழுத்தலைவர் தன்செவ்வியில் கூறினார் குழந்தைகளுக்கும் இளைஞர் யுவதிகளுக்கும் கொடுக்கும் நம்பிக்கை என்றார். நோர்வே இந்த சமிஞ்ஞை நாளை இன்நாட்டில் இஸ்லாமியத் தீவீரவாதச் செயல்களுக்கு வித்திடும் என்பது உறுதி.”, அதாவது நீர் அதை மறைமுகமாக தூண்டிவுடுறீர்,நோர்வே முசிலீம் யாரும் உம்மிடம் அப்படி கூறினானா ?
“எதற்காக இப்பரிசு இவர்கள் இருவருக்கும் கொடுக்கப்பட்டது? முரண்பாடுகளைக் கொண்டு இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாட்டவர்களுக்கும், முரண்பாடுடைய மதங்களைக் கொண்டவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. காரணம்தான் என்ன? முரண்பாடுகளைத் தாண்டி குழந்தைகளின் உரிமைக்காகப் உழைத்தவர்கள் என்பதற்காக இருக்கலாம். ஆனால் இப்படிபட்டவர்கள் பலர் உலகம் முழுவதும் உள்ளனர். இருந்தும் இவர்கள் இருவரும் ஐரோப்பாவுடன் அதிகம் தொடர்வுடையவர்கள் என்பதை யாரும் மறந்துவிடல் ஆகாது. சத்தியார்தியினதும் மலாலாவினதும் பிற்புலத்தைப் பார்த்தால் இது புரியும்.” , அதிலென்ன பிழை இருக்கிது, அவ்ர்களுக்கு யார் திறமென படுகிறார்களோ அவர்களுக்கு, அவர்களுடை பரிசை அவர்கள் கொடுக்கிறார்கள், இதில் உமக்கென்ன வயித்தெரிச்சல் ? “இவை அனைத்தையும் மீறி நோர்வே அமைதிக்கான நோபல்பரிசைக் கொடுப்பதற்குத் தகுதி உடையதா? என்ற கேள்வி மனதை இடறத்தான் செய்கிறது. உலகவல்லரசுகளுக்கே அதியுயர் தொழில்நுட்பம்கொண்ட பேரழிப்வாயுதங்களைத்தயாரித்து வினையோகிக்கும் நோர்வே இந்த அமைதிக்கான நோபல்பரிசைக் கொடுப்பதற்குத் தகுதி உடையாதா? ஆயுதம் என்றுமே அமைதியைக் காத்ததில்லை. ஆயுதம் என்பதே பலாற்காரத்தின் குறியீடு. இதை வினையோகிக்கும் நோர்வே தன்படையையும் படைக்கலன்களையும் மத்திய கிழக்கிலும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் நேட்டோவினூடாக நிலைநிறுத்தியுள்ளது. ஆயுதங்களையும் போரையும் கட்டிக்காக்கும் நோர்வே அமைதிப்பரிசை வளங்க உரித்தடையா?இவை அனைத்தையும் மீறி நோர்வே அமைதிக்கான நோபல்பரிசைக் கொடுப்பதற்குத் தகுதி உடையதா? என்ற கேள்வி மனதை இடறத்தான் செய்கிறது. உலகவல்லரசுகளுக்கே அதியுயர் தொழில்நுட்பம்கொண்ட பேரழிப்வாயுதங்களைத்தயாரித்து வினையோகிக்கும் நோர்வே இந்த அமைதிக்கான நோபல்பரிசைக் கொடுப்பதற்குத் தகுதி உடையாதா? ஆயுதம் என்றுமே அமைதியைக் காத்ததில்லை. ஆயுதம் என்பதே பலாற்காரத்தின் குறியீடு. இதை வினையோகிக்கும் நோர்வே தன்படையையும் படைக்கலன்களையும் மத்திய கிழக்கிலும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் நேட்டோவினூடாக நிலைநிறுத்தியுள்ளது. ஆயுதங்களையும் போரையும் கட்டிக்காக்கும் நோர்வே அமைதிப்பரிசை வளங்க உரித்தடையா?”, அப்பநீரே சொல்லும் யார் இந்த பரிசை கொடுக்கலாம். உம்மையெல்லம்நோர்வேக்கு உள்ள விட்டவன செருப்பால அடிக்கவேணும்.
“ஆங்கிலத்தில் மட்டும் தான் எதையும் சரியாக எழுதி வாசிப்பீர்களோ? தமிழின் நிலை இப்படி இருக்கிறது. ஒரு செய்தியைப் பலகோணத்தில் அலசி ஆராய்பவன்தான் ஒரு விமர்சகன் என்பதை அறிக. உங்களுக்கு சிலவேளை குவான்டம் தியறியை விளங்கிக் கொள்ளமுடியும் இச்செய்தி விமர்சனத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லை என்பதான் ஆதங்கத்துக்குரியது. விமர்சனம் என்பது நன்மைகளை மட்டுமல்ல எதிர்மறையானவற்றையும் கூறும் என்பதைக் கூட அறியாமல் எழுதுகிறீர்கள். இதனால்தான் உங்களின் முதல் பதிவுக்கு பதில் தராது அரட்சியம் செய்தேன். “, உனக்கு யாருப்பா சொன்னான் பெளதீகம் ஆங்கிலத்தில் மட்டும்தான் படிக்கமுடியும் என்று?
தூங்குபவனை எழுப்பலாம் தூங்குபவனபோல் நடிப்பவனை எழுப்புவது இயலாது. விளங்கமாட்டேன் என மறுப்பவனை என்ன செய்யலாம் வாசகர்கள் முடிவு செய்யட்டும். முழுப்படைப்பையும் பிரதிசெய்து ஒரிருவசனத்தைபோட்டு இது பின்நோட்டமாம்.
//அதாவது நீர் அதை மறைமுகமாக தூண்டிவுடுறீர்இநோர்வே முசிலீம் யாரும் உம்மிடம் அப்படி கூறினானா ?// முழுவிளக்கவின்மை இது. நோர்வே முஸ்லீம் எனக்கு என்ன கொம்பா அவனைகேட்டுதான் நான் எதையும் எழுதவேண்டும் என்று உண்டா? நீரும் முஸ்லீமாக இருக்கலாம் என் எழுத்துகளில் விபச்சாரம் கிடையாது அன்பரே
// உனக்கு யாருப்பா சொன்னான் பெளதீகம் ஆங்கிலத்தில் மட்டும்தான் படிக்கமுடியும் என்று?// இங்கே தமிழில் உள்ளபடைப்புக்கும் பினநோட்டத்துக்கும் பதில் ஆங்கிலத்தில் எழுதினால் உமது தந்தை மொழி ஆங்கிலம் என்று கருதாது அரபு என்றா கருதுவது.
//அப்பநீரே சொல்லும் யார் இந்த பரிசை கொடுக்கலாம். உம்மையெல்லம்நோர்வேக்கு உள்ள விட்டவன செருப்பால அடிக்கவேணும்.//
யார் கொடுப்பது என்பதை நான் தீர்மானிப்பதில்லை. ஏன் நீர் கொடுக்க விரும்புகிறீரோ?.
//நோர்வேக்கு உள்ள விட்டவன செருப்பால அடிக்கவேணும்.// அது நீர் சொல்லி நடக்காது . இப்படி அநாகரீகமான எழுதும் உமக்கு பதில் எழுது காலத்தைக் கரியாக்கும் செயல். இதை வாசகர்கள் விளங்கிக் கொள்வார்கள். நன்றி வணக்கம்.