நேபாள மாவோயிசக் கட்சியின் அதிகாரத்தை முழுமையாகக் கையகப்படுத்தும் அதன் தற்போதைய தலைவர் பிரச்சண்டா செயற்படுவதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சி அதிகாரம் நிறுவப்படும் வேளையில் வர்க்க மோதல்கள் உருவாவது இயல்பானது எனக் குறிப்பிடும் ஆய்வாளர்கள், பிரச்சண்டா மற்றும் பாபு ராம் பட்டாராய் ஆகியோர் இந்திய மற்றும் மேற்கின் தாக்குதலைத் எதிர்கொள்ளும் பலம் மக்களிடம் இல்லை என்று வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் கட்சியின் பெரும்பான்மைப் பலம் கிரான் அணியிடம் இருப்பதாகவும் இவரது அணியினர் மன்னராட்சியும், ஏகாதிபத்தியப் உற்பத்தி முறையும் அழியும் வரை போராட வேண்டும் என மீண்டும் மக்கள் அமைப்புக்களைப் பலப்படுத்தி வருவதாகவும் மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சர்வதேச முற்போக்கு ஜனநாயக சக்திகள் கிரன் அணிக்கு ஆதரவு வழங்குமாறு அவர்கள் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்படுள்ளதாகத் தெரியவருகிறது.
மிகவும் பயன்னுள்ள தகவல்!. பகிர்ந்தமைக்கு நன்றி
நன்றி,
ஜோசப்
இது அவர்கள் ஒற்றுமையை சீர்குழைக்கும் கருத்து. கிரனும், பிரசந்தாவும் ஒரே அணி தான் அது உழைக்கும் மக்கள் அணி. கருத்துகள் பரிமாறலாம் அதற்காக இது போன்ற பொய்யான தகவல்களை பரப்ப கூடாது