நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வர நடக்கும் சதியின் பின்னணியில் இந்தியா உள்ளது என்று மாவோயிஸ்ட் தலைவரும், அண்மையில் நேபாள பிரதமர் பதவியில் இருந்து விலகியவருமான பிரசண்டா குற்றம்சாட்டியுள்ளார்.
நேபாளத்தில் 240 ஆண்டு காலமாக இருந்து வந்த மன்னராட்சி 2008 மே 29இல் முடிவுக்கு வந்தது. அதன் பின் நடைபெற்ற தேர்தலில் பிரசண்டா பிரதமரானார்.
அவர் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராகவும், சீனாவுக்கு ஆதரவாகவும் பேசி வந்தார்.
இந்நிலையில் இராணுவ தலைமைத் தளபதி பதவி நீக்கம் தொடர்பாக அந்நாட்டு அதிபர் ராம் பரன் யாதவுக்கும் பிரதமர் பிரசண்டாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து பிரசண்டா பதவி விலகினார்.
தற்போது அவர் மீண்டும் இந்தியாவுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துள்ளார்
இந்தியாவின் பாசிச மேலாதிக்க கைங்கரியம் இலங்கையுடன் முடியவில்லை! நேபாளம் நோக்கியும் செல்கின்றது!