காத்மாண்டு, மார்ச் 20- நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா (87) இன்று காலமானார்.
பல மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் கொய்ராலா. கடந்த புதன்கிழமை அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். அவரது உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில், இன்று மதியம் 12.10 மணியளவில் அவர் காலமானார்.
நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவரான அவர் 5 முறை அந்நாட்டின் பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொய்ராலாவின் இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
நேபாள முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவின் உடல் தகனம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
நேபாள நாட்டின் பிரதமராக 5 முறை பதவி வகித்த கிரிஜா பிரசாத் கொய்ராலா நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு தனது 85-வது வயதில் சனிக்கிழமை இறந்தார்.
இதைத் தொடர்ந்து அவரது உடல் தசரத மைதானத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக ஞாயிற்றுக்கிழமை வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருந்து மலர்தூவி கொய்ராலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் பலர் தங்களது தலையை மொட்டையடித்து கொய்ராலாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து தசரத மைதானத்திலிருந்து உடல் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. சுந்தர ரத்னா பூங்கா, பாக் பஜார், தில்லி பஜார், மைதிதேவி, ஓல்டு பனேஷ்வர், பட்டிஸ்புடாலி, கெüஷாலா பகுதி வழியாக 4 கிலோமீட்டர் தூரத்துக்கு இறுதி ஊர்வலம் நடந்தது. இறுதியாக ஆர்யாகாட் பசுபதிநாத் பகுதிக்கு கொய்ராலாவின் உடல் கொண்டு வரப்பட்டது. வழிநெடுகிலும் கொய்ராலாவின் உடலுக்கு பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலத்தில் சுமார் 5 லட்சம் பேர் கலந்துகொண்டனர். ஊர்வலத்துக்கு கிரிஜா பிரசாத்தின் ஒரே மகள் சுஜாதா கொய்ராலா தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் நேபாளி காங்கிரஸ் கட்சியின் பொறுப்புத் தலைவர் சுஷில் கொய்ராலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்யாகாட் பசுபதிநாத் பகுதியில் ஈமச் சடங்குகள் முடிந்த பின்னர் கிரிஜா பிரசாத்தின் சிதைக்கு அவரது மகள் சுஜாதா கொய்ராலா தீமூட்டினார்.
அப்போது நேபாள ராணுவத்தினர், தேசிய கீதத்தை வாசித்து முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்தியத் தலைவர்கள்: கொய்ராலாவின் இறுதிச் சடங்கில் இந்தியாவிலிருந்து மக்களவைத் தலைவர் மீரா குமார், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, எஸ்.எம். கிருஷ்ணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நேபாள பிரதர் மாதவ் குமார் நேபாள், துணைப் பிரதமர் விஜய கச்சத்தர், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரும் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
தடியடி: இறுதிச் சடங்கில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டதால் தகனம் நடந்த ஆர்யாகாட் பகுதியில் லேசான நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தினரை போலீஸôர் லேசான தடியடி நடத்திக் கலைத்தனர். அதன் பின்னர் அமைதி ஏற்பட்டது.
நன்றி! தினமணி
“நேபாளத்தில் முடியாட்சி அழியவில்லை”
நாட்டு மக்கள் விரும்பும் பட்சத்தில் நேபாளத்தில் மன்னராட்சிக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க முடியும் என்று தான் நம்புவதாக அந்நாட்டின் முன்னாள் மன்னர் கூறியுள்ளார்.
முடி இழக்க நேரிட்ட நேபாள மன்னர் கியானேந்திரா அந்நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள அரிதான ஒரு பேட்டியில், மன்னராட்சி அகற்றப்பட்டது குறித்தும், தற்போதைய சூழலில் தனது அரசியல் லட்சியங்கள் என்ன என்றும், தான் தற்போது என்ன செய்து வருகிறார் என்பது பற்றியும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
நேபாள மக்கள் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டுவர விரும்புகிறார்கள் என்றால், தாங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டபோது, “இது கற்பனை அடிப்படையிலான ஒரு கேள்விதான் என்றாலும், தங்களுக்கு என்ன வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டியது மக்கள்தான் என்றும், மக்களின் விருப்பங்கள் மதித்து நிறைவேற்றப்பட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
நேபாளத்திலே மன்னராட்சி முறை என்பது முற்றுப்பெற்றுவிட்டது என்றுதான் கருதவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் அரசாங்கத்துக்கும் மாவோயிய கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் ஒரு தசாப்தகாலம் நடந்த உள்நாட்டு யுத்தம் 2008ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தபோது அந்நாட்டின் 240 வருட கால மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டிருந்தது.
கடைசி மன்னராக இருந்த மக்கள் செல்வாக்கு அற்றவரான கியானேந்திரா, 2005ஆம் ஆண்டு நாட்டின் உச்ச நிறைவேற்று அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தார்.
அவர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது மக்கள் கிளர்ந்தெழுந்து ஜனநாயகம் கோரி காத்மாண்டு வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் செய்ய வழிவகுத்திருந்தது.
அண்மைய சில மாதங்களாக, கியானேந்திராவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துவருகிறது. திருவிழாக்களின்போதும், கோயில் வழிபாட்டுக்கு அவர்ச் செல்லும்போதும் பெருந்திரளான மக்கள் கூடவும், உடன் செல்லவும் துவங்கியுள்ளனர்.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக வேஷம் போடுகிறார் என்ற குற்றச்சாட்டை கியானேந்திரா மறுத்துள்ளார். தற்போதைய அரசியல் சூழநிலை குறித்து சிந்தித்துக்கொண்டு அமைதிகரமாக தனது நாட்களை கடத்திவருவதாக அவர் தெரிவித்துள்ளார். – BBC
அண்மையில் நேபாளத்தில் நடந்த மக்கள் ஊர்வலங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் பற்றி பி.பி.சி. என்ன சொல்லுகிறது?
கொலைகார ம்ன்னன் ஞானேந்திராவை மறுபடி முடி சூட்ட இந்தியாவும் மேற்குலகும் துடிக்கின்றன. எகிப்தின் fபரூக், ஈரானின் பஹ்லவி இப்படி… போனவர்களின் வரிசை வெகுநீளம்.
யாருமே திரும்பவில்லை. சில வழிகளில் வரலாறு ஒற்றையடிப் பாதை தான்.