10.04.2011 ஞாயிறு நடைபெற்ற புதிய திசைகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் மேற்கு லண்டனில் நடைபெற்றது. பல் வேறு அரசியல் முரண்பாடுகளைக் கொண்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை தெளிவாகவும் விரிவாகவும் முன்வைத்தனர். மாலை ஐந்து முப்பது மணிக்கு ஆரம்பித்த உரையாடல் முன்னிரவு ஒன்பது முப்பது மணிக்கு நிறைவடைந்தது.
ஒன்று கூடல் அதனைத் தலைமை தாங்கிய புவியின் புதிய திசைகள் குறித்த சிறிய குறிப்போடு ஆரம்பமானது. புதிய திசைகள் விவாதக் குழு என்பதற்கு அப்பால் தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய விடுதலைக்கான போராட்டத்தில் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு புதிய அமைப்பு உருவாவதற்கான காத்திரமான உந்துசக்தியாக அமைய முடியும் என்றார்.
நிகழ்வின் முதலில் உரை நிகழ்த்திய நாடுகடந்த தமிழீழத்தைச் சேர்ந்த தயாபரன் தமது அமைப்பு தோற்றம் பெற்ற வரலாற்றிலிருந்து ஆரம்பித்து சமகால வேலை முறைகள் குறித்து தனது உரையை வளர்த்துச் சென்றார். நாடுகடந்த தமிழீழம் தேசியக் கோசத்தை இன்றும் தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பதாகவும், தமிழீழத்தை ஏற்றுகொள்கின்ற அனைத்து அமைப்புக்களுடனும் உடன்பாட்டின் அடிப்படையில் செயற்படத் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தர்.
சிங்கள மக்களைத் தாம் எதிரிகளாகப் பார்க்கவில்லை என்றும் இலங்கை அரசிற்கு எதிராக அவர்களுடனும் இணைந்து செயலாற்ற அவர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். தவிர, தென் சூடானில் தமக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் ஏனைய பல்வேறு நாடுகளுடனும் பேச்சுக்களை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார். ஏனய ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுடன் கூடப் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டர்.
தயாபரனைத் தொடர்ந்து உரையாற்றிய இதயச்சந்திரன், உலகத் தமிழர் பேரவையின் அரசியல் திட்டம் குறித்துப் பேச தான் அழைக்கப்பட்டிருந்தாலும் அந்த அமைப்பிடம் அப்படிக் குறிப்பான வேலைத் திட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில் அவர்களின் சில நடவடிக்கைகளின் அரசியல் பின்புலம் குறித்துப் பேசுவதாகத் தனது உரையை ஆரம்பித்தார். இன்று இலங்கை அரசிற்குத் தமது நலன்கள் சார்ந்து மேற்கு நாடுகள் ஒரு புறத்தில் அழுத்தங்களை வழங்குகின்றன. மறுபுறத்தில் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் இலங்கையை முழுதுமாகக் கைவிட்டால் அங்கு புரட்சிக்கான சூழலும் புரட்சியும் உருவாக வாய்ப்பிருக்கும் என்ற நிலையில் ஐ.எம்.எப் போன்ற நிறுவவனங்களூடாக இலங்கை அரசிற்குப் பொருளாதார உதவிகளையும் வழங்குகின்றன என்றார்.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்றன காணாமல் போவோர் குறித்த பிரச்சனைகளை அதிகமாகக் கண்டித்து வருவதாகவும், இதே வேளை அமரிக்க அரசின் அரசியல் அழுத்தங்களும் கூட அதனை மையப்படுத்தியே அமைந்திருப்பதாகவும், ஐ.எம்.எப், மனித உரிமைகள் கண்காணிப்பகம், அமரிக்க ஐரோப்பிய அரசுகள் போன்றவற்றின் நடவடிக்கைகளிடையே ஒழுங்கமைக்கப்பட்ட தொடர்பு ஒன்றைக் காண முடியும் என்றும் குறிப்பிட்டர்.
இலங்கைப் பிரச்சனையில் அமரிக்காவிற்கு குறிப்பான அவர்கள் நலன் சார்ந்த நிலைப்பாடுகள் காணப்பட்டாலும் இந்திய அரசியல் நலன்களைப் பாதிக்கின்ற அளவிற்கு அமரிக்கா இலங்கைப் பிரச்சனை நடந்துகொள்ளாது என்றார். இதன் அடிப்படையிலேயே உலகத் தமிழர் பேரவை முன்னதாக சோனியாவுடன் பேச்சு நடத்தியதாகவும் பின்னர் ரொபேர்ட் ஒ பிளக்குடன் பேசியதாகவும் தெரிவித்தார்.
இதன் பின்னர் பிரித்தானிய தமிழர் பேரவையைச் சேர்ந்த சிவராஜன் கருத்தாற்றிய போது பிரித்தானிய தமிழர் பேரவை தமிழர்கள் செறிவாக வாழும் இடங்களில் ஒன்று கூடல்களை நடத்தி அதன் உப பிரிவிகளை உருவாக்கி வருவதாகவும், அதனூடாக ஈழத் தமிழர்கள் இறைமையுடைய தேசிய இனம் என்பதை பிரச்சாரப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். வேலைத் திட்டம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் மூன்று பிரிவாகப் பிரிக்கப்படும் பேரவையின் உறுப்பினர்கள் பிரித்தானியாவின் மூன்று பெரும் கட்சிகளிலும் இணைந்து செயற்பட்டு வருவாதாகத் தெரிவித்தார்.கொன்சர்வேட்டிவிற்கான தமிழர்கள், தொழிற் கட்சிக்கான தமிழர்கள், லிபரல் கட்சிக்கான தமிழர்கள் என்ற இந்தப் பிரிவுகளூடாக இக் கட்சிகளை தமக்குச் சார்பானதாக மாற்றும் வேலை முறைகளில் ஈடுபட்டிருப்பதாக மேலும் கூறினார்.
இதன் பின்னதாக உரையாற்றிய சபா நாவலன், இலங்கையில் வடகிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லீம் தமிழர்கள் போன்ற தேசிய இனங்கள் பிரிந்து போவதுடன் கூடிய சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பது தவிர்க்க முடியாத அரசியல் சூழல் காணப்படுவதை வலியுற்த்தினார். தவிர, பிரித்தானியத் தமிழர் பேரவை தேசிய இனங்களையும், தமது சொந்த நாட்டு மக்களையும் ஒடுக்கும் அரசுகளோடும் கட்சிகளோடும் உறவுகளை வளர்த்துக்கொள்வது மட்டுமன்றி அவற்றில் இணைந்து கொள்வதென்பது தமிழ்ப் பேசும் மக்களை அவர்களின் உண்மையான நண்பர்களான ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரிடமிருந்து அன்னியப்படுத்துகின்றது என்றும் எம்மை ஜனநாயக விரோத, ஆணவம் மிக்க, சுயநலமிகளாக உலகில் பரந்திருக்கும் சமுகப்பற்றுள்ள ஜனநாயக வாதிகளும் முற்போக்கு சக்திகளும் கண்கிறார்கள் என்றார். இவ்வாறு ஒரு தேசிய இனத்திற்கு மக்கள் விரோத விம்பத்தைப் பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகள் பல நீண்ட வருடங்களுக்கு போராட்டத்தைப் பின் தள்ளும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்றார்.
தவிர, இன்று பலமடைந்து வருகின்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளுடனும், போராடும் அமைப்புக்களுடனுமான இணைவும் பரஸ்பரப் பரிமாற்றங்களும் போராட்டத்தையும் மக்கள் விடுதலையையும் விரைவுபடுத்தும் என்றார். இதற்கான வேலைத்திட்டம் வரையப்ப்பட வேண்டும் என்றும் மேலும் குறிப்பட்டார்.
அடுத்ததாகக் உரையாற்றிய மாசில் பாலன் இது வரை நடைபெற்ற போராட்டம் என்பது தேசிய விடுதலைப் போராட்டமா என்பதில் தனக்குச் சந்தேகமிருப்பதாகவும் தேசியப் போராட்டத்திற்கான எந்த அடையாளமும் இருப்பதாக தெரியவில்லை எனத் தெரிவித்தார்.
தேசிய விடுதலைப் போராட்டம் என்பதே அடிப்படையில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரானது ஆனால் நாம் ஏகாதிபத்தியங்களின் தயவில் போராட்டங்களை நடத்த முயல்கிறோம் இது தான் இங்குள்ள முரண் நகை என்றார்.
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் என்பதை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டம் ஒன்றை முன்வைப்பதும் அதனை அடுத்த நிலையை நோக்கி வளர்த்துச் செல்வதும் அவசியமானது என்றார்.
இதனிடையே ஈ.என்.டி.எல்.எப் அமைப்பச் சேர்ந்த ராம்ராஜ் தனது உரையில் இலங்கை இந்திய ஒப்பந்ததை இந்தியாவின் ஆதரவோடு நிறைவேற்றுவது இன்றைய சூழலுக்கு உகந்த செயற்பாடு எனத் தெரிவித்தார்.
ராம்ராஜின் உரைக்குப் பதிலளித்த இதயச்சந்திரன், இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்தியாவின் பிராந்திய நலனை உள்ளடக்கிய ஒப்பந்தம் என்றும், வடக்குக் கிழக்கு இணைந்த மாகாண சபை என்பது கூடத் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்தார். இவ்விணைவு என்பது கிழக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்ட பிரதேசங்கள் உள்ளடங்கிய பிரதேசங்களை இணைத்து நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
கேள்வி நேரத்தின் போது பிரித்தானியத் தமிழர் பேரவையைச் சார்ந்த ஸ்கந்ததேவா, தமது புனர்வாழ்வு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.
கடந்தகாலத் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கருத்தாற்றிய பாண்டியன், புலிகளின் தவறுகள் ஒரு தேசிய இனத்தின் நியாயமான போராட்டங்களை அழித்திருக்கிறது என்றும், ஏகப் பிரதிநிதித்துவத்தை நிராகரித்து பரந்துபட்ட மக்கள் ஐக்கிய முன்னணி என்பது இன்று அவசியமானது என்றார்.
பின்னதாகக் கருத்துத் தெரிவித்த சிறி, ஐக்கியம் என்பதற்கு வேலைத்திட்டங்கள் கொள்கை வகுப்பு என்பதற்கு அப்பாலான உளவியல் அடிப்படையிலான பாகுபாடுகளை எதிர்கொள்ள வேண்டும் என்றார். எம் எல்லோர் மத்தியிலும் குழுவாதப் போக்குக் காணப்படுவதாகக் குறிப்பிட்ட சிறீ, போராட்டங்களின் தோல்வியில்ருந்து மட்டுமல்ல வெற்றியிலுருந்தும் கற்றுக்கொள்ளலாம் என்றார். குழுவாதப் போக்கை எதிர்கொள்ள வேண்டுமாயின் புலிகளின் அமைப்புக்களாகக் கருதப்படும் அமைப்புக்கள் பரந்துபட்ட விடுதலையில் அக்கறையுள்ளவர்களை உள்வாங்கிக்கொள்ள வேண்டும் எனக்குறிப்பிட்டர். இந்த நிலையில் ஏனைய இயக்கங்களைச் சார்ந்த போராளிகளையும் விடுதலைக்காக உழைத்தவர்கள் என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவ்வாறான அங்கீகாரத்தின் குறியீடாக பிரபாகரன், உமா மகேஸ்வரன், பத்மநாபா, சிறீ சபாரத்தினம், பாலகுமார், ஒபரோய் தேவன், அமர்தலிங்கம், விஸ்வானந்த தேவர் போன்ற இன்னும் பல தலைவர்களை போராட்டத்தில் பங்களித்தவர்களாக, வழி நடத்த முனைந்தவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்றார்.
இதற்குப் பதிலளித்த தயாபரன் இந்த முன்மொழிவை கருத்தளவில் தான் ஏற்றுக்கொள்வதாகவும், தமது அமைப்புடன் பேசிய பின்னர் இது குறித்து இறுதி முடிவெடுப்பதாகவும் கூறினார்.
பிரித்தானிய தமிழர் பேரவையும் இதே கருத்தைத் தெரிவித்தனர்.
ஈசன், பிரதீபன், நடா மோகன் போன்ற பலர் இந்த ஒன்று கூட ஆரோக்கியமான முன் முயற்சி எனப் பாராட்டுத் தெரிவித்தனர்.
தொகுப்பு – இனியொரு
பிரபாகரன் சிறிசபாரத்தினம் உமாமகேஸ்வரன் பாலகுமார் இவர்கள் எல்லாம் தலைவர்களா? அவர்களுக்கு அங்கீகாரமா? என்ன கொடுமை இது?
இந்த இதயச்சந்திரன் ஆய்வுகளும் கருத்துக்களையும் பிரபாகரனின் மண்டைக்குள் அல்லவா ஏற்றியிருக்க வேண்டும்? அவரை விட்டு விட்டு ………………!! முள்ளிவாய்க்கால் கண்ட பின்தான் இவர்களுக்கு ஞானம் பிறந்திருக்கிறது. கவனம் தேவை.
நல்ல விசயத்தை தவறவிட்டதன் குற்ற உணர்ச்சி எதையோ செய்கிறது,கூட்டத்திற்கு வந்து உரையாடலில் கலந்து கொண்டிருந்தால் இன்டெலெக்சுவல் கடலில் நீந்தி எழுந்திருக்கலாம் ஆனால் குடுப்பினை இல்லாமல் வண்டி அல்பேர்ட்டனில் நின்றூ விட்டது.இங் கு ஈழபதீஸ்வரர் ஏதோ கார் கராஜில் அடைபட்டது போல கிடக்கிறார் அருகில் இஸ்லாமிய் உறவுகள் அழகான பள்ளீவாசல் கட்டி இருப்பதோடு தமக்கான ச்மூக அமைப்பையும் கட்டி எழுப்பி உள்ளார்கள்.சும்மா எடுத்ததெற்கெல்லாம் ச்ண்டை பிடித்துக் கொண்டிராது, குற்றங் குற் காணாது நாமெல்லாம் ஒரு ச்மூகமாக இணந்து செயற்பட வேண்டும்.மொட்டையாய் கிடக்கும் முற்றத்தில் குரோட்டன் கள் வைத்து அழகு பார்ப்போமே.
இதனிடையே ஈ.என்.டி.எல்.எப் அமைப்பச் சேர்ந்த ராம்ராஜ் தனது உரையில் இலங்கை இந்திய ஒப்பந்ததை இந்தியாவின் ஆதரவோடு நிறைவேற்றுவது இன்றைய சூழலுக்கு உகந்த செயற்பாடு எனத் தெரிவித்தார்.ராம்ராஜின் உரைக்குப் பதிலளித்த இதயச்சந்திரன், இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்தியாவின் பிராந்திய நலனை உள்ளடக்கிய ஒப்பந்தம் என்றும், வடக்குக் கிழக்கு இணைந்த மாகாண சபை என்பது கூடத் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்திய அரசு முல்லைதீவில் 1000 ஏக்கர் காணி கொடுத்து அபிவிருத்தி செய்ய ஈ என் டி எல் எவ் பரந்தன் ராஜனை பொறுப்பாய் போட்டுள்ளது என்று அவுஸ்ரேலியாவில் உள்ள லோயர் ரவிந்திரன் கூறிப்பிரச்சாரம் செய்கிறார். ரவீந்திரன் முல்லைதீவில் 4 நட்சத்திர கொட்டல் கட்ட முதலீட்டாளர்களையும் தேடித்திரிகிறார். அண்மையில் பரந்தன் ராஜன் குழுவின் டில்லி நடைபயணத்துக்கு லண்டனில் நடந்த ஆதரவு கூட்டத்தில் ரவீந்திரனின் அறிக்கையும் வாசிக்கப்பட்டது.
இந்தியபடை இலங்கையில் இருந்த காலத்தில் தான் வட கிழக்கு மாகாண சபை முதல்வர் வரதராஜப்பெருமாள் தமிழீழ பிரகடனம் செய்தவர். தமிழீழ பிரகடனம் செய்த வரதரை தான் இந்தியா 22 வருடமாக இந்தியாவில் பாதுகாத்து வருகிறது.
இந்தியா தமிழீழத்துக்கு ஆதரவா? வடகிழக்கு மாகாண சபைக்கு ஆதரவா?
ராம்ராஜ் இப்போது பதில் எதை இந்திய ஆதரவோடு நிறைவேற்றப்போகிறீர்கள்>
தமிழீழ பிரகடனம் செய்த வரதரை இன்று தமிழீழம் சாத்தியமா என்று கேட்டால் , இல்லை என்று தான் சொல்லுவார். அப்ப இந்திய ஆதரவுடன் தானே இந்த பிரகடனத்தை செய்தீர்கள் என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவார்?
/அங்கீகாரத்தின் குறியீடாக பிரபாகரன், உமா மகேஸ்வரன், பத்மநாபா, சிறீ சபாரத்தினம், பாலகுமார், ஒபரோய் தேவன், அமர்தலிங்கம், விஸ்வானந்த தேவர் போன்ற
இன்னும் பல தலைவர்களை போராட்டத்தில் பங்களித்தவர்களாக
/
அப்படியே கருணா,டக்கிளஸ்,பிள்ளையான் போன்றோரையும் இணைத்தால் இன்னும் விசேடமாய் இருக்கும்
//
தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் ஒற்றுமையாகவும், ஓர் சமூகமென்ற உணர்வுடனும் வாழ்வதே முதல் அவசியம். அதோடு மட்டுமல்ல அந்தந்நாட்டு மக்கழும் தமிழரென்ற இனமுண்டு என்று எண்ணும், மதிப்பளிக்கும்
நிலமை வரவேண்டும். கடந்த 30 காலத்தில் புலம்பெயர் நாடுகளிலும், இலங்கையிலும்
நடந்த கொடுமைகளிற்கெல்லாம் காரணமாயிருந்தவர்கள் மன்னிப்புக்கேட்க வேண்டும். தவறின் இந்த கூட்டம் கூடுபவர்களில் யார் எந்தப்புற்ரில் இருந்து
வந்த விச நாகபாம்பெனெ யாருமே அறிய முடியாது.-துரை
ஈதயம்……. ஒடுக்கப்படும் மக்களின் விடுதலை என்ற நோக்கத்தில் உறுதியாக ,கவனமாக இருங்கள். இதயச்சந்திரனின் ஆய்வுகளை நீங்கள் விளங்கிக் கொண்டால் சரி. பல கட்டுரைகளில் இந்தியா ,அமெரிக்காவின் பூகோள நலனை துல்லியமாக எடுத்துக் காட்டியுள்ளார்.
எத்தனை பேர் தமிழ் மக்களுக்குள் கொஞ்சமாவது தர்க்க ரீதியாக ஆராயக் கூடியவர்கள் இருக்கிறார்கள்? அன்னை சோனியா கண்களில் ஈரம் தெரிகிறது என்ற வகையில் தான் தலைவர்களே இருக்கிறார்கள். இருக்கிற கொஞ்சப் பேரையும் இதயம் போன்ற பன்னாடைகள் ஏப்பம் விட்டுவிடும் போலிருக்கிறது.
your behavior is everything that you say and do,behaviour breeds behaviour.
புதிய திசைகள் புதியஎண்ணங்கள் எல்லாம் குட்டிமுதாலித்துவ குணாம்சங்களே!. அதற்கு முதல் குட்டிமுதாலித்துவ-சிந்தனையென்றால் என்னா?
லாபத்திற்கான உற்பத்தியை தொடர்ந்து இருக்கத்போகிறது கூலிஉழைப்பு அடிமைமுறையும் என்றும் சாத்விகமானது எனகருதுபவர்கள் மானிடவரலாற்று விஞ்ஞாயணத்தை புரியமறுப்பவர்கள் குறிப்பாக முதாலித்துவஅமைப்பு முறையை ஏற்றுக் கொள்பவர்களையையே “குட்டிமுதாலித்துவ சிந்தனை” வாதிகள் என்கிறோம்.
விடுதலைஎன்பது உழைப்பாளர்கள் பொருளாதாரரீதியில் விடுதலை பெறவேண்டும்.அவர்களின் வாழ்வுக்கு அவர்களின் உழைப்பு சமன்படுத்தல் படவேண்டும். இதுவே விடுதலையென்பது.
இங்குகருத்துக் கூறியவர்களில் மாசிலாபாலனின் கருத்தே யதார்தத்துடன் ஒட்டு ஓடுகிறது. அதாவது ஏகாதிபத்திற்கெதிரான-சொந்தநாட்டு முதாலித்துவத்கெதிரான போராட்டங்கள் இல்லையேல் எதுவும் சாத்தியம் இல்லை.
முப்பதுவருடபோராட்டங்களில் நமது உழைப்பாளர்களை போட்டுதள்ளுவதில் தமிழ்-சிங்கள முதாலித்துவவாதிகளுக்கு 100 சதவீத பங்குயிருக்கிறது என்பதை புதியதிசை உணர்ந்தால் அடுத்து கூட்டத்தொடர் எப்படி பட்டதாக அமையும்?.
திரும்பவும் சர்வதேசஉழைப்பாளர்கள் குறிப்பாக தொழிலாளவர்க்கம் 2011 இருந்து 1930 ஆண்டு காலப்பகுதிக்கு பின்தள்ளப்பட்டிருக்கிறது என்பதைவிட அதற்கு பதில் சொல்லவேண்டிய கடமைப்பாட்டையும் கொண்டிருக்கிறது. …. இதில்…
சிங்களவன் தமிழன் இந்தியன் சீனக்காரன் ஐரோப்பியன் அமெரிக்கன் ஆபிரிக்கன் என வேறுபாடுகளை உருவாக்கிக் கொண்டு ஆழம்தெரியாத நீரிலேயோ பொசிங்கி விடும் நெருப்பிலேயோ எம்மைநாம் அழித்துக் கொள்ளப் போகிறோமா? இல்லை மேற்குறிப்பிட்ட நாடுகளில் தொழிலாளவர்கத்துடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு இந்த லாபநோக்கு கொண்டசமுதாயத்தை விரட்டிஅடித்து இந்த புவிப்பரப்பை சுத்தம் செய்யப்போகிறோமா?.
இதுகாலம் தாழ்ந்த உபதேசம் அல்ல. உலகத்தை மறுபங்கீடுசெய்ய ஏகாதிபத்தியவாதிகள் தயாராகிவிட்டார்கள் என்பதை லிபியாவிலும் ஐவரிகோட்ஸ்சிலும் நிசர்சணஉண்மையாகிக் கொண்டிருப்பதே இன்றைய காட்சிகள். நாளை அவர்களின் சொந்தநாட்டு தொழிலாவர்கத்திற்கெதிரான தாக்குதல்கள் காட்டுமிராண்டித்தனங்கள் இன்னும் மோசமாக இருக்கும் என்பதை புதியதிசை அறியுமா? அறிந்தால்…..மகத்துவமே.
றாசா தங்கம்,உமக்கு புண்ணீயமாய் போகும் இப்படி அறூ, அறூ எண்டு அறூக்காத மோன்.நானப்பு உம்மட பேச்சைக் கேட்டு என்ர மூச்ச விட்டிருவன் போல கிடக்கு.தம்பி இந்த சன் பேப்பரை படி ராசா,உல்கைப் புரிந்து பேசப்பபு.உப்புப் புளீ இல்லாத முருங்கைக்காய் குழம்பு மாதிரி நீர் வைக்கிற விருந்த சாப்பிட முடியேல்ல அப்பு.கேட் குதே ராசா.என்ர தங்கம்.
நாம் அகதிகளாக கிழக்கு போ்ளினில் இறங்கியபோது இந்த ஞானங்களெல்லாம் நமக்கு இருக்கவில்லை இருந்திருந்தால் (கிழக்கு அப்போது கம்யூனிஸ நாடு) அங்கேயே தஞ்சம் கோரி அடியும் வாங்கியிருப்போம்,அப்போது நமக்கிருந்த ஒரேயொரு வெறி மேற்கு ஐோ்மனியை அடைந்துவிடுவது. இப்போது மேற்கு தந்த அரவணைப்பால் கொஞ்சம் புத்தகங்களை படித்துவிட்டோம்,சும்மா இருக்கமுடியுமா நமக்கும் விடயங்கள் தெரிந்துவிட்டதாக காட்டவேண்டாமா.
இப்படிப்பட்ட யதார்த்தத்தை தொலைத்து எந்த விடயத்திற்கும் ஒரே பல்லவியை பாடும் மனிதா்களால் எந்தப்பயனும் இல்லை.
நமக்குத்தேவை முதலில் விடுதலை அதன் பின்புதான் எப்படிப்பட்ட அரசியல் பொருளாதார கொள்கைகளை முன்னெடுப்பது என்பதை முடிவெடுப்பது அதுவும் மக்களின் விருப்பிலேயே தங்கியுள்ளது அதை விட்டு ஆட்டுக்குள் மாடும் மாட்டுக்குள் யானையையும் புகுத்த முனைவது பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலேயே சாத்தியம்.
விடுதலையா? யாரிடமிருந்து? இலங்கையில் “படித்தவர்கள்” பலரும் பரலொகம் போனது தெரியாதா?
மூண்டு வேலைத்திட்டம்,இரண்டு விளாசல் எண்டு விளம்பரப்படுத்தி,கடைசியில ஒண்டையும் காணல்ல.ஏவறைக்காரர் என்ன சொன்னவை? யாருக்காவது விளங்குதோ.
” நடந்த கொடுமைகளிற்கெல்லாம் காரணமாயிருந்தவர்கள் மன்னிப்புக்கேட்க வேண்டும். தவறின் இந்த கூட்டம் கூடுபவர்களில் யார் எந்தப்புற்ரில் இருந்து
வந்த விச நாகபாம்பெனெ யாருமே அறிய முடியாது”… என துரை
நன்றாக சொல்லியுள்ளார்.
இதயசந்திரன் எழுதுவதெல்லாம் வைத்து அவரை நம்ப முடியாது. புலிகளின் விசுவாசி அவர்.
பாரதி !! மற்று கருத்துள்ளோரை “பன்னாடைகள் ” என வசை பாட வேண்டாம். ப்ளீஸ் ! நூறு கருத்துக்கள் மோதட்டும் நூறு பூக்கள் மலரட்டும்
மாற்றுக் கருத்து என்றால் என்ன? மாற்றவற்களை வசைபாடுவதா? கருத்துக்களை கருத்துக்களால் மோதுங்கள். அப்படியா இங்குநடக்கிறது. இல்லையே! புலிகளில் இருந்தவர்களில் தேசிய வாதிகள் உண்டு, வியாபாரிகள் உண்டு, புலிகள் மட்டுமே இருந்த போது மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என நினைத்தவர்கள் உண்டு. இதயச் சந்திரன் எப்போதும் தனது கருத்தை விட்டுக் கொடுக்காமல் தான் எழுதுகிறார். தனி நபர் தாக்குதல்களை மாற்று கருத்து என்று கருதாமல் கருத்தைக் கருத்தால் மோதுங்கள். உங்கள் முற்றத்து வெளிகள் எங்கும் எண்ணற்ற பூக்கள் மலரும்.
சரியாய்ப் போச்சு.இதயச் ச்ந்திரன் ரசிகர் மன்றம் வைச்சிட வேண்டியதுதான்.
இங்கு ஒரு பூவும் மலர , சிலர் விடுகிறார்களில்லை. இப்படி கூடிப் பேசாமல் இருந்து, நல்ல விடயங்களை வாசிக்காமல் இருந்துதான் உந்தப் பிரச்சனை. இப்படியான கூட்டங்களுக்கு, அடம் பிடிக்காமல் வாங்கோ. மனிசர்தானே நடத்தினம்.
தமிழீழம் என்று புறப்பட்டவர்கள் தமிழர்களின் எந்தப் பிரச்சனையைத் தீர்க்கப் புறப்பட்டார்கள் என்று யாருக்காவது தெரியுமா? தமிழர்களின் பிரச்சனைகள் எதுவென்றே தெரியாதபடியால்த்தான் தங்களுக்குள் கொலை செய்து தொலைந்து போனார்கள்.
இதில்நஷ்டமடைந்தவர்கள் சாதாரண மக்களே ஆவர். இன்று வன்னியில் பிச்சைக்கு கையேந்து மக்களுக்கு யார் உதவுகிறார்கள்?
இயக்கங்களோடு தொடர்புடையவர்கள் தங்களின் “கொள்ளைக் கும்பல் தலவர்களுக்கு” இன்னமும் அங்கீகாரம் தேடுகிறார்கள். தமிழ் தலைவர்கள் என்று வந்தவர்களுக்கு “தமிழ் பிரச்சனை” எதுவென்று இன்னமும் தெரியாமல் அல்லாடுகிறார்கள்.
மிகவும் நல்ல ஆரம்பம். கருத்து வேறு பாடுகளுக்கு துப்பாக்கியைத் தூக்கிய போக்குகள் நிராகரிக்கப் படும் புள்ளியில் இருந்தே, நமது விடுதலைக்கான எதிர்கால அரசியல் ஆரம்பமாகும். பிரச்சினைகளில் இருந்து பேசுகிற புதிய கலாச்சாரம்தான் நமது எதிர்கால விடுதலையின் கலாச்சாரமாக இருக்க முடியும். விடிவில் நம்பிக்கைதரும் இத்தகைய சந்திப்புகளை வாழ்த்த்தி வரவேற்க்கிறேன். இத்தகைய முயற்சிகளுக்கு என்றும் எனது ஆதரவு இருக்கும்.
அறம் பாடி தன்னினமழித்த கவிஞரே!
அதுதானே கவிதைத்தனமாய்,
துப்பாக்கிகளை மௌனித்து,
குண்டுகளை சீரணிக்க வைத்து விட்டு,
பழைய முட்டியில் புதுக்கள் போல,
புதுசாய் நுரை விடும் பழசுகளை வாழ்த்துங்கள்.
கவிஞரைப் போல் நம்பிக்கையுடன் எதனையும் பார்ப்போம். நாமும் எதனையும் செய்யாது மற்றவர்களையும் செய்ய விடாது வைக்கோற் பட்டடை ….. போல ..
அனைவரும் தங்களுக்குச் சரியெனப் பட்டவழியில் முயற்சிக்கட்டும். எதுசரியென்பதைக் காலம் காட்டட்டும். நாம் எதற்கு முந்திரிக்கொட்டை போல் முந்த வேண்டும்
சகல அறிவுக்களஞ்சியங்களுக்கும் அறியத்தருவது என்னவெனில் நீங்கள் எழுதியெழுதிக் குவிச்சி கிழிச்சது இதுவரை ஒன்றுமில்லை. மிகவும் களைத்தும் இளைத்தும் விட்டீர்கள் கொஞ்ச நாளைக்கு அம்மணமாக சும்மா அங்கங்கே கிடவுங்கள் அதன்பிறகாவது முடிந்தால் மக்களுக்கும் எதிர்காலத்துக்கும் சாத்தியமானதும் யதார்த்தமானதும் கூடிய பொன்னான பொறிகளைக்கொண்டு வர முயலுங்கள் அல்லது உதவுங்கள். அல்லாவிடின், பொழுபோகவில்லையென்றால் ஆளாளுக்கு சோணைகளில் மலர் சூடும் களியாட்டத்தை தொடர்ந்து ஆடுங்கள் ஆடுங்கள் ஆடிக்கொண்டேயிருங்கள்.
கலந்தூரைஅடலுக்கு வந்து பேசிய அனைவரும் தாம் யார். முன்பு எந்த கள்ளர்ரோடு சேர்ந்து இருந்தார்கள் என்பதை சொல்லவேண்டும்.
பிழை செய்தவர்கள் ஏமாற்றியவர்கள் மனிப்பு கேட்டால் போதாது. அவர்கள் ஒதுங்கி இருப்பது நல்லது. தற்போது பழைய கள்ளர் புதுத்தோல்
போர்த்தி வருகிறார்கள். நாம் கவனமாக இருப்பது நல்லது. பிரபாகரன் என்ற முட்டாளை நம்பியது போல் கண்முடித்தனமாக நம்பாமல் ஆராய்ந்து செயல்படுவது நல்லது.
நாடு கடந்த அமைச்சர் யார் என்டது படத்தை பார்த்த பிறகு தான் எனக்கு புலப்படட்து. இவர் தான் தலைவரின் மனைவி இருந்த உண்ணா விரதத்திற்கு தலைமை தாங்கி தென்பகுதிக்கு படிக்க போகமாட்டம் என்ற பல்கலைக் கழக மாணவர் போராட்டத்தினை 1983 இல் நடத்தினவர். இவரை பெல்பொட்டம் தயாபரன் என்றும் அழைப்பார்கள். உண்ணாவிரதம் புலிகளினால் குழப்பப்பட்ட பின்னர் இவரும் புலிகளுடன் இயக்கத்தில் இணைந்து புலிகளின் மிகமுக்கிய பொறுப்பாளராக பல வருடங்களாக இருந்தவர். புpன்னர் இயக்கத்தின் வெளிநாட்டு முக்கிய பொறுப்பாளராக அனுப்பி வைக்கப்பட்டவர். இங்கு வந்து அகதி அந்தஸ்த்து பெற்று புலிகளுடன் நேரடித் தொடர்பில் இறுதி வரை இருந்தவர்.
மேலதிகமாக கூறுவதாயின் ரொலோ இயக்க அழிப்பில் நல்லூர் பகுதியில் ஆயுதத்துடன் நின்று எமது அப்பாவி இளைஞர்களை கொன்றதில் முன்னணியிலிருந்தவர் எனக் கதைக்கின்றனர். அதையெல்லாம் விடுவம். இவர் இயக்கத்தில் முக்கிய பொறுப்பிலிருந்த காலத்தில் தான் புலிகள் மாற்று இயக்கத்தினர்களையும் அப்பாவி மக்களையும் மிகமோசமாக படுகொலை செய்தனர். பல்லாயிரக்கணக்கான மனித விரோத செயல்களையும் புரிந்தனர். இன்று தலைமை முற்று முழுதாக அழிந்த பின்னர் தான் ஏனைய இயக்கத் தலைவர்களையும் போராளிகள் என அங்கிகரிக்கின்றார். ஆனால் இன்னமும் புலிகளின் தலைமை அழிக்கப் பட்டுவிட்டதனையோ அன்றி போராட்டத்தின் தோல்விக்கு புலிகளின் அரசியல் பாதை தான் காரணமாயிருந்தது என்பது பற்றிய எந்த விதமான பகிரங்க விளக்கமும் கிடையாது. இதன் காரணத்தினால் இவர்கள் குறித்த மிகுந்த எச்சரிக்கை தேவை. இன்றைய தமது அழிவு நிலையிலிருந்து மீள எழமுயலும் கபட நாடகமாவும் இருக்க முடியும்.
100% உண்மை-துரை
கலந்தூரைஅடலுக்கு வந்து பேசிய அனைவரும் தாம் யார். முன்பு எந்த கள்ளர்ரோடு சேர்ந்து இருந்தார்கள் என்பதை சொல்லவேண்டும்.
பிழை செய்தவர்கள் ஏமாற்றியவர்கள் மனிப்பு கேட்டால் போதாது. அவர்கள் ஒதுங்கி இருப்பது நல்லது. தற்போது பழைய கள்ளர் புதுத்தோல்
போர்த்தி வருகிறார்கள். நாம் கவனமாக இருப்பது நல்லது. பிரபாகரன் என்ற முட்டாளை நம்பியது போல் கண்முடித்தனமாக நம்பாமல் ஆராய்ந்து செயல்படுவது நல்லது.
Indran சொன்னதைய நானும் முன்மொழிகிறேன்.
இவர்கள்யாரென்பது தெரியாது இவர்களின் பின்னால் பெரியதொரு கள்ளக்கூட்டம் இருப்ப்து உறுதி. அல்லாவிடில் வட்டிக்கு பணம் கொடுத்து
வாழும் தமிழன் இன்னொரு தமிழனிற்காக தனது சொந்தப்பணத்தில் உலகம் சுற்ரி
வருவானா?-துரை
You feel intimidated you deal with others through intimidation
மற்றவனை பாத்து கெட்டவன் கெட்டவன் எண்டுறவை உங்களிட்ட ஏதாவது நற்சான்றிதழ் இருந்தா இங்கை போடுங்கப்பா பாத்திட்டு நாலுபேர் உங்களை பின்தொடரலாம்….. போடுற பிச்சைய(எலும்ப) ஆராவது மண்டேல மசாலா உள்ளவனுக்கு போட்ட என்ன?
If you hang around people who are always complaining about how bad everything is ,you start believing what they say. It will affect your attitude in a negative way.
கவியர் ஜெயபாலன் குறித்து எனக்கு விமர்சனம் உண்டு. அவர் கடந்த காலத்தில் சொன்ன பல விடயங்களில் எனக்கு உடன்பாடும் உண்டு அதிதீவிர எதிர்ப்பும் உண்டு. ஆனால் அவர் இங்கு கூறிய வார்த்தைகள் மிகவும் நேசிக்கப் படவேண்டிய வார்த்தைகள்.
பிரச்சினைகளில் இருந்து பேசுகிற புதிய கலாச்சாரம்தான் நமது எதிர்கால விடுதலையின் கலாச்சாரமாக இருக்க முடியும்.இந்தியாவின் ஆதரவோடு நிறைவேற்றுவது இந்தியாவின் பிராந்திய நலனை உள்ளடக்கிய ஒப்பந்தம். தமிழர்கள் ஒற்றுமையாகவும் உணர்வுடனும் செயல்படுவது நல்லது.
இத்தகைய முயற்சிகளுக்கு என்றும் எனது ஆதரவு இருக்கும்.பிரித்தானியத் தமிழர் பேரவைஆனால் இன்னமும் புலிகளின் தலைமை அழிக்கப் பட்டுவிட்டதனையோ அன்றி போராட்டத்தின் தோல்விக்கு புலிகளின் அரசியல் பாதை தான் காரணமாயிருந்தது என்பது பற்றிய எந்த விதமான பகிரங்க விளக்கமும் கிடையாதுஇவர்கள் குறித்த மிகுந்த எச்சரிக்கை தேவைமீள எழமுயலும் கபட நாடகமாவும் இருக்க முடியும்.
கபட நாடகமென்ன. கபடமேதான்.. புலம்பெயர் நாடுகளில் எங்கெல்லாம் தமிழர் வசிக்கின்றார்கள். அவ்ர்களிற்கெல்லாம் .பிரித்தானியத் தமிழர் பேரவைதான்
தலைமை தாங்குகின்றார்களா? இவர்களிற்கு யார் அதிகாரமளித்தது?
உலகிலுள்ளபுலிகளின் திருட்டுப் பண்த்திற்கு புகலிடமும் ஆழுமையும் பிரித்தானியாவிலேயே உள்ளது. அந்த்ப் பண்த்திற்கு ஏதாவது
செய்து கணக்கு காட்ட் வேண்டும். அதற்குத்தான் இந்த் தமிழின் பெயர் சொல்லும் அமைப்புக்கள்.-துரை
பேரவையைச் சார்ந்த ஸ்கந்ததேவா பேன்ற கபட நாடகமாடுபவர்களை. பகிரங்கமாக விமர்சிக்க வேண்டிய உண்மைகளை வமர்சித்து இவர்களிற்கு யார் அதிகாரமளித்தது
என்ற கேள்வியை கேட்கணே;டும்
If you ask me Silly stuff Nothing on it
.பிரித்தானியத் தமிழர் பேரவை / உலகத்தமிழர் பேரவை எல்லாம் தங்கள் இருப்பைத்தக்கவைக்க நல்லவர்களை பயன்படுத்திக்கொள்வதும் மக்களை ஏமாற்றவும் நன்கு பழக்கப்பட்டவர்கள்
சுகந்தனை ஒரு பகடக்காயாக பிரித்தானியத் தமிழர் பேரவை பாவிப்பதும்
அருட்தந்தை இமானுவேல் அவர்ககள உலகத்தமிழர் பேரவை பயன்படுத்திக்கொள்வதும் வழமையான விடயம்
Life is too short to permit discouragers close to us. People are like elevators they take you up or down. A great joy in life is doing what people say you can’t do. — thamil maran
ராம்ராஜ் இந்தியாவின் ஈ.என்.டி.எல்.எப் விசுவாசி
அவர்கள் இந்தியாவின் அடிவருடிகள். நீங்கள் அமெரிக்க அடிவருடிகள். நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன? நக்கிப்பிழைப்பதென்ற முடிவிற்கு வந்தபின் இதில் யார் உசத்தி என்ற சண்டையெதற்கு ?
சும்மா பீலா விடாதீர்கள் சுகந்தன். இந்தியா என்பது 120 கோடிமக்களையும் குறிக்கிறதா? இல்லை இந்திய முதாலித்துவத்தை குறிக்கிறதா? அல்லது சபாநாவலன் குமார் போன்றேரின் கண்டுபிடிப்புக்குள் அடங்கிய பன்னாட்டுமூலதனத்துக்குள் அடங்கியுள்ளதா? என்பதை தெளிவுபடுத்துங்கள். சந்தியில் நின்று புளுதியை வாரி எறிந்து திட்டிவிட்டு தப்பி ஓடாதீர்கள். திரும்பவும் நான்கேட்கிறேன் யார் அந்த கீலி சுலோட்டர்?.பதில் சொல்ல முடியுமா? உங்களால்.
இது தான் எமது வேலைத் திட்டம் , இந்த பாதையால் போனால் மட்டுமே நம் இனத்திற்கு விடிவு என்று எங்கள்
கருத்துக்களை தர்க்கீகரீதியாக முன் வைப்பதை விடுத்து முத்திரை குத்தும் பழக்கம் நாம் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளவேயில்லை என்பதை மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தவே உதவும்
திருடனை திருடன் என்று சொன்னால் ஏன் வரலாற்றிலிருந்து பாடம்படிக்கவில்லை என்று புலம்ப வேண்டும்.திருடர்கள் எல்லாம் சேர்ந்து தான் கொஞ்ச காலம் ” வங்கம் தந்த பாடம் ” படிப்பித்தார்கள்.திரும்பவும் இந்த
” வங்கம் தந்த பாடம் ” பாட புத்தகத்தை படிக்க தமிழ் மக்கள் தயாராக இருக்க மாட்டார்கள்.
கல் எறிந்து விட்டு ஓடி தப்ப எண்ணுபவர்கள் தான் இந்த காரியங்களை மீண்டும் .மீண்டும் செய்ய துடிக்கிறார்கள்.
ஏன் ?
புலிகளின் இந்திய தூதுவர் வித்தியாதரனை விடுதலை செய்யாவிட்டால் காட்டு ராச்சியம் முடிவுக்கு வரும் எச்சரித்த சி….ர் மே…ன். = TBC றாம்றாச்சை துரோகி என ஒதுக்கிடமுடியாது என அடித்தக்கூறிய பொட்டு, இதனை உறுதிபடுத்திய பிரித்தானிய சட்ட ஆவணம்.
18 ஏப்ரல் 2011 10:04:26 NADARAJAH SETHURUPAN From OSLO 47 944 944
புலிகள் மட்டும் பூண்டோ அளியக்காரணம் அவர்கள் நேரடியாக நியூடில்லியுடன் 2006 – 2009 தொடர்பை பேணாமையே. ஆனால் அன்ரன் பாலசிங்கம் மரணிக்கும்வரை புலிகள் நியூடில்லியுடன் அன்ரன் பாலசிங்கம் ஊடாக தொடர்பில் இருந்தனர். பாலசிங்கத்தின் மரணம் புலிகளின் நியூடில்லி தொடர்பையும் மரணித்து விட்டது. மற்றய தமிழ் இயக்க தலைவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் நியூடில்லியுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் இண்றும் உயிர் வாழ்கின்றனர். நியூடில்லி தொடர்பு இல்லாத எந்த தமிழனும் இலங்கையில் ஆயுதம் ஏந்தினால் அல்லது அரசியல் செய்தாலோ பாகிஸ்தான் உளவுத்துறை ஊடுருவி இரக்கும் முஸ்லீம் மற்றும் சிங்கள இராணுவ அரசியல் கட்டமைப்புகள் அல்லது வெளிநாட்டு உளவுத்துறைகள் ஊடுருவி இருக்கும் இலங்கையின் தீவிரவாத அமைப்புகள் அல்லது இலங்கை தேசிய வீறாப்புடைய உளவுத்துறைகள் உங்களை பதம் பாத்துவிடும். இதை எழுதுவதால் எனக்கான குறைந்த பட்ச தண்டனை மரணமாகவும் அமையலாம். நான் உயிருடன் இருக்கும்வரைதான் புலிகள் உயிர்வாழும் நான் புலிகளை 7 தடவைகள் அளிவல் இருந்து காப்பாத்திவிட்டேன் இனிமேல் நான் சாகப்போகிறேன் புலிகளை காப்பாற்ற எவனும் வரமாட்டான் எவனாலும் காப்பாற்றவும் முடியாது. புலிகள் அளிக்கபட்டுவிடுவார்கள் – அன்ரன்பாலசிங்கத்தின் இறுதி வார்த்தைகள்.
அன்ரன் பாலசிங்கத்திற்கு பிறகு வித்தியாதரனே இந்திய தரப்பை கையாள புலிகளால் நியமிக்கபட்டார். வித்தியாதரன் நியூடெல்லியில் இருந்து வன்னிக்கு பல தொலைபேசி அளைப்புகளை ஏற்படுத்தினார். இவை எல்லாத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்கவே இலங்கை அரசு வித்தியை கடத்தியதும் வித்தி கடத்தபட்டு கொலை செய்யபடும் தறுவாயில் இருந்தபோது சி….ர் மே…ன் நேரடியாக மகிந்தவை அச்சுறுத்தியதும் பலரக்கு தெரியாத இரகசியம். வித்தியாதரன் கடத்தபடாமல் விட்டிருந்தால் புலிகளின் நியூடெல்லி உறவு சாதகமான பலாபலனை புலிகளுக்கு கொடுத்திருக்கும்.
சமீபத்தில் நமது புலம்பெயர் சூழலில் மூண்று சந்திப்புக்கள் நிகழ்ந்தன. ஒன்று இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவியான சோனியாவுடன் நிகழ்ந்தது. மற்றையது அமரிகாவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை இராஜங்கச் செயலர் றொபட் ஓ பிளேக் உடனான சந்திப்பாக அமைந்தது மற்றயது ஈ.என்.டி.எல்.எவ் சர்வதேச பொறுப்பாளன் (ஈ.என்.டி.எல்.எவ் றாம்றாச்சை துரோகி என ஒதுக்கிடமுடியாது புலிகளுக்கு மிகவும் வேண்டிய ஒரு இரகசிய செயற்பாட்டாளன் என அடித்தக்கூறிய பொட்டு) ரி.பி.சி றாமறாச் புலிகள் சந்திப்பு.
இது பிரித்தானிய நீதிமன்ற (ENDLF) சட்ட ஆவணம்.
இவ் சந்திப்புக்களையூம் தொடர்ந்து அதுவரை உறக்க நிலையில் இருந்த சில புலம்பெயர் தேசியவாதப் புலிகள் என்போர் (உண்மையான புலிகள் அல்ல) வெகுண்டு எழுந்தனர். 11 நிமிடங்கள் மட்டுமே நிகழ்ந்த மேற்படி சந்திப்பின் போது சோனியா காந்தி ஈழத் தமிழர்கள் குறித்து ஒரு சில விடங்களை பேரவை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பிளேக்குடனான சந்திப்பும் சோனியாவுடன் நிகழ்ந்த சந்திப்பை ஒத்த ஒன்றே. ஆனால் நமது சில ஆய்வாள ஜாம்பவான்கள் இந்தச் சந்திப்பை மிகச் சிறந்த ராஜதந்திர நகர்வாகத் குறிப்பிட்டிருப்பதுதான் இதிலுள்ள ஆச்சரியம்.
இது குறித்து தனது ராஜதந்திர ஆய்வை மேற்கொண்ட முள்ளிவாய்க்கால் புகழ் இதயச்சந்திரன் – சர்வதேச அரசியல் நகர்வில் உலகத் தமிழர் பேரவை – என்ற தலைப்பில் தனது ஆய்வை வெளியிட்டிருந்தார். இதே இதயச்சந்திரன் புலிகளின் தலைமை முள்ளிவாயக்கால் பொறியில் அகப்பட்டுக் கிடந்த வேளையில் கூட அங்கு ஒரு தந்திரோபாயம் இருக்கிறது என்று மக்களை பேய்க்காட்டிக் கொண்டிருந்தவர். எல்லாம் முடிந்தவுடன் இலங்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய சீன-இந்திய முரண்பாடு உருவாகப் போவதாகவும் அதன் மூலம் தமிழீழம் உருவாகும் என்றும் சாத்திரம் ஓதிக் கொண்டிருந்தவர். இப்போது சர்வதேச அரசியல் காய்நகர்த்தல் பற்றிப் பேசுகின்றார். புலிகள் அமைப்பில் ஆறுமாத காலம் கூட இருக்காதவர்களும் 1985களுக்கு பின்னர் நாட்டிலேயே இருக்காதவர்களும் சமாதான காலத்தில் பெரிசை சந்தித்து படம் எடுப்பதற்காக சென்றவர்களுமே இன்று புலிகள் பற்றிப் பேசிவருகின்றனர். இதன் விழைவே அரசல் புரசலாக புலிகள் பற்றி தாம் அறிந்து கொண்டதைக் கொண்டு ஆய்வுகளைச் செய்ய முயல்கின்றனர்.
புலிகள் இந்தியாவுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக மேற்கொண்ட முயற்சிகள் சிலவற்றை இங்கு தொகுத்துத் தர முயல்கின்றோம்…
++ இன்று சோனியாவை சந்தித்ததை தூக்கிப் பிடிப்போர் பலருக்கும் ராஜீவ் கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் கூட புலிகள் பேச்சுக்களில் ஈடுபட்டே வந்தனர். இந்தப் பேச்சுக்களில் ஈடுபட்ட காசி ஆனந்தன் பிரித்தானியாவை சேர்ந்த அர்ஜீனா சிற்றம்பலம் ஆகியோர் இன்னமும் உயிருடனேயே இருக்கின்றனர்.
++ இதேபோன்று இந்திய அரசின் அனுசரணையுடன் இந்தியாவில் நீண்டகாலமாக முகாமிட்டுள்ள ENDLF இயக்கத்துடன் 1996 ஆம் ஆண்டில் தாயகத்திலேயே புலிகள் இரகசியமாக பேசினர். இந்த பேச்சில் தலைமை வகித்த அப்போதைய துணை அரசியல் பொறுப்பாளர் கரிகாலன் சிறிலங்காவிடம் சரணடைந்தவர்களில் ஒருவர். பேச்சில் கலந்துகொண்டவர் ரி.பி.சி வானொலி பணிப்பாளன் றாமறாச் ஈ.என்.டி.எல்.எவ் சார்பாகாவும் புலிகளின் உளவுத்துறை முக்கியஸ்தர் சிலரும் கலந்துகொண்டனர் இவர்கள் இன்னமும் உயிருடன்தான் உள்ளார்.
++ வாஜ்பாய் அரசு காலத்தில் (2000) புலிகள் அமைப்பு இந்தியாவுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் சில முயற்சிகளை மேற்கொண்டது. இதன் பயனாக ஜேர்மனியில் ஒரு சந்திப்பும் நிகழ்ந்தது. இந்த சந்திப்பு ஆரம்பத்தில் இந்தியாவிலேயே இடம்பெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
++ 2003ம் ஆண்டு RAW வின் ஆள் என அடையாளப்படுத்தி வந்த EROS இயக்கத்தின் தலைவர் சங்கர்ராஜியை இரகசியமாக புலிகளின் தலைவரே சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. இதனை ஏற்பாடு செய்த பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் EROS அமைப்பை சேர்ந்த குகன் உயிருடன் தான் இருக்கின்றார். இந்த இரகசியத்தை குகன் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் சொல்லும் வரைக்கும் புலிகள் இதனை இரகசியமாகவே வைத்திருந்தனர். இந்தத் தொடர்பாடலில் வே.பாலக்குமாரனும் யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஓர் பணியாளரும் பங்கேற்று இருந்தனர். இந்திய தூதரக தகவல் கசிவினால் இந்துஸ்தான் ரைம்ஸ்சில் P.K. பாலச்சந்திரன் இந்தத் தகவலை எழுதும் வரை சங்கர்ராஜியை சந்திப்பதாகவே இருந்து பின்னர் சந்திப்பை புலிகள் தவிர்த்துக் கொண்டனர்.
++ போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலத்தில் பத்திரிகையாளர் வித்தியாதரன் மூலமும் TNA சம்பந்தர் மூலமும் புலிகள் இந்தியத்தரப்பினருடன் தொடர்பு வைத்திருந்தனர். இந்த பின்புலத்திலேயே அக்காலத்தில் இந்தியா தொடர்பான சில அபிப்பிராயங்களை புலிகள் வெளிப்படுத்தியுமிருந்தனர். மேலும் இந்திய உறவை விரும்புவதான புலிகளின் தலைவரின் 2008ம் ஆண்டிற்கான மாவீரர் தின உரையும் எழுதப்பட்டது.
++ பாலசிங்கம் இறப்பதற்கு முன்னர் பிரித்தானியாவில் உள்ள இந்திய தரப்பு ஒன்றின் ஊடாக டில்லி தரப்புடன் தொடர்பை வைத்திருந்தார். துன்பியல் சம்பவத்துக்கான நாசூக்கான மன்னிப்புக்கோரல் கூட பாலசிங்கத்தால் செய்யப்பட்டதால் புலிகளுக்குள் வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன. இது குறித்து பகிரங்கமாக தமிழ்செல்வனால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் செய்திகளாகவும் வந்திருந்தது.
++ போர் மும்முரமாக நடந்துகொண்டிருந்த போதும் கூட இப்போதும் துரோக இயக்கமாக எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கத்தின் தலைமையுடன் தொடர்புகொண்ட புலிகளின் தலைமைப்பீடம் இந்திய தரப்புடன் தொடர்பை ஏற்படுத்தி யுத்தத்தை நிறுத்த ஆவன செய்யும்படி கோரிய வரலாறும் உண்டு.
++ இதே போன்று இன்னொரு துரோக அமைப்பாக சொல்லிக்கொள்ளும் அமைப்பின் தொடர்பாளராக இருந்த ஒர் பிரபலமான தமிழ் திரைப்படமொன்றின் தயாரிப்பாளர் மூலம் இந்திய உளவு அமைப்பான RAW வுடன் புலிகள் தொடர்ந்தும் பேசிக்கொண்டு இருந்தனர். இவ்வாறு இந்திய தரப்புகளுடனும் புலிகளால் துரோகிகளென முத்திரை குத்தப்பட்டவர்களுடனும் புலிகள் இயக்கம் கடந்தகாலத்தில் வெளித்தெரியாமல் தொடர்பில் இருந்துகொண்டுதான் இருந்தனர்.
++ தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட முன்னர் துரோக இயக்கத் தலைமைகள் என்று அறியப்பட்ட மண்டையன் குழு EPRLF சுரேஸ் பிறேமச்சந்திரனுடனும் TELO செல்வத்துடனும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் குமார் பொன்னம்பலத்துடனும்: தமிழரசு கட்சி மாவை சேனாதிராஜாவுடனும் இன்னும் வெளியில் அறியப்படாத பலருடனும் புலிகள் இயக்கம் இரகசியமாக தொடர்பில்தான் இருந்துகொண்டிருந்தது என்பது இன்று இரகசியமான விடயங்களல்ல.
இங்கு இவர்கள் விளங்கிக் கொள்ளாத விடயம் புலிகள் இந்திய எதிர்ப்பு அரசியலை வெளியில் சொல்லிக் கொண்டே இந்தியாவுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுவதற்கு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வந்திருக்கின்றனர். இந்தியா ஈழத் தமிழர்கள் தொடர்பில் நடந்துகொண்டதற்கு பழி தீர்க்கும் வகையில்தான் புலிகள் ராஜீவ்காந்தியை கொலை செய்தனர். இன்று இதில் பங்கு கொண்ட எவரும் உயிருடன் இல்லை. எனவே பழைய விடயங்களின் அடிப்படையில் அரசியலை நோக்காமல் புதிய நிலைமைகளை விளங்கிக் கொண்டு நாம் செயலாற்ற வேண்டும். இலங்கை அரசியலில் கரிசனை கொள்ளும் அனைத்து சக்திகளுடனும் நாம் உறவினை ஏற்படுத்தத்தான் வேண்டும். சோனியாவுடன் பேச வேண்டியதை சோனியாவுடன்தான் பேச வேண்டும். பிளேக்குடன் பேச வேண்டியதை பிளேக்குடன்தான் பேச வேண்டும். இந்த அடிப்படையில் சிந்திப்பதுதான் இன்றைய உலக ஒழுங்கிற்கு பொருத்தமான அரசியல் காய்நகர்த்தலாகும்.
மனித வரலாற்றின் ஆதார சுருதியே எப்பவும் இருக்கும் நம்பிக்கை என்கிற நூல் ஏணிதான். உலக வரலாற்றில் எதிரி பற்றிய விமர்சனம் எப்பவும் எல்லா தரப்புகள் மதியிலும் இருப்பதுதான். ஆனால் மீண்டும் நிமிர்ந்து வென்றவர்கள் மத்தியில்தான் சுய விமர்சனமும் அதன் அடிப்படையில் புது அவதாரம் எடுத்தலும் நிகழ்ந்திருக்கிறது. சுயவிமர்சனத்தில் இனி தவறுகள் இடம்பெறாது என்கிற நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்த்து விடுதலைக்கான முனைப்பை காப்பாற்றிய இனங்களே வரலாற்றில் வெற்றி பெற்றுள்ளன. புதிய நிலமைகளை நம் மத்தியில் இடம்பெற்றிருக்க வேண்டிய அவசியமான ஆய்வுகளோ அவசியமான விவாதங்களோ ஒளி சேர்க்கும் கலை இலக்கிய வெளிப்பாடுகளோ இடம்பெறவில்லை. இன்னும் நாம் உடைந்த படகின் பாகங்கலைப் பற்றிக்கொண்டுதான் வெவ்வேறு திசைகளில் எதிர்காலத்துக்கு எங்கள் விவாதத்திறமையே முக்கியம் என நினைக்கிறோம். ஆனால் களத்தில் உள்ள மக்களின் அனுபவங்களும் பட்டறிவுமே முக்கியம்.
களத்தில் புண்பட்டு எதிரியின் மத்தியில் விழுந்து கிடந்தபோதும் நமது மக்கள் இணைந்த வடக்குக் கிழக்கு சுயாட்ச்சி என்கிற கோரிக்கையை பற்றிப் பிடித்திருக்கிறார்கள். தோல்வியின்[பின்னர் இதற்க்குச் சமமான மாவீரம் நம் மத்தியில் இல்லை. அவர்கள் நிராகரித்தவை பற்றியும் அவர்கள் ஆதரித்த குறைந்த பட்ச்ச நிலைபாடு பற்றியும் புரிந்துகொள்வது இன்றைய பணி என்ன என அங்கலாய்க்கும் புலம் பெயர்ந்த தமிழருக்கு அவசியம். அது எங்கள் இலக்கின் இறுதிப் புள்லியில்லாவிட்டலும் அதுதான் நம் இலக்கை நோக்கி மக்களுடன் செல்வதற்க்கான , நமது மக்களுடன் சேர்ந்து ஆரம்பிபதற்க்கான தொடக்கப் புள்ளியாகும். அது பற்றிய விசாரணைகள் கதையாடல்கள் சாத்தியமான வகையில் மக்களுடன் நேரடியாகவும் அவர்கள் இன்றைய பணிக்காக தெரிவுசெய்த பிரதிநிதிகளுடனும் இடம்பெறுதல் அவசியம். வீரமோ அடிப்படையிலும் வரலாற்றின் அடிப்படையிலும் பிழை திருத்தி சரிகளை வலுப்படுத்தும் வகையிலும் உண்மைகளைத்தேடி பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் அவசியம். ஆனாலும் அத்தகைய தலைமை பெண்களதும் தலித்துகளதும் பிரதி நிதிதுவத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் நாம் மனதில் இருத்த வேண்டும். இதைவிட வடகிழக்குச் சார்ந்து சக மக்களான முஸ்லிம் மக்ககளின் தலைமைகளோடும் நாம் பொது கருத்துக்களை உருவாக்க வேண்டும். நமது புவி பிரதேசத்திலும் சர்வதேச அரங்கிலும் இயன்ற விட்டுக் கொடுப்புக்களோடு நாம்மை பலப்படுத்த வேண்டும். எதிரிகள் மத்தியில் உள்ள நன்நோக்குள்ள அணிகளை வென்றெடுக்க வேண்டும். இதெல்லாம் சாத்தியமா? உண்மையில் இவையெல்லாம் இலகுவான சவால்கள் இல்லை. வரலாற்றில் இன விடுதலைதான் மிக கடினமான சவால்.. கடந்த காலங்களில் பரந்து படுதலுக்கான இத்தைகைய சவால்களை எதிர்கொண்டோமா அல்லது துப்பாக்கி முனையில் அவற்றை முடக்க நினைத்து தனிமைப்பட்டோமா என்கிற கேழ்வி எம் முன் உள்ளது.
உலக வரலாறு முழுவதிலும் உள்நாட்டு யுத்ததிலும் இன விடுதலைக்கான ஆயுதப் போரிலும் விடுதலைக்கான பலமான அரசியல் உள்ள அணிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இந்த அரசியலானது அரசியல் சமூக ஐக்கியமுன்னணிகள்மூலம் சாத்தியமானவைக்கும் பரந்து படுதல் மக்களளுக்கு பணி செய்யும் அடிபடையில் தொடந்து ஆய்வுகளும் விமர்சனம் சுயவிமர்சனம் அடிப்படையில் செம்மைப் படுதல் சரியான அரசியல் பொருளாதார அணுகுமுறை மூலம் விடுதலைக்கு உழைக்கக் கூடிய வர்க்கங்களையும் அணிகளையும் பலப் படுத்துதல், சர்வதேச சமூகத்துடனான உறவுகளை கையாழும் வல்லமையைத் தொடர்ந்து வளர்த்தல் இதற்கான புத்திஜீவிகள் கலைஞர்களுடனான ஐக்கியம் என்பவை அமையும்.
குறுங்காலத்தில் நாட்டில் புண்பட்டுக் கிடக்கும் மக்கள் மீண்டும் பிழைத்தலும் எழுதலும்தான் இன்றைய மிக முக்கியமான பணி. அதே சமயம் நிகழ்ந்த போர்க்குற்றம் தொடரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச ரீதியான போராட்டமும் முக்கியமான பணியாகும். ஆனால் இரண்டையும் ஒரே அணி செய்தல் சாத்தியமில்லை.
அந்தந்த காலக்கட்டத்து அரசியல் இராணுவ மூல உபாயங்களுக்கு strategy க்கு அவசியமான உத்திகளையும் Tactics வேலைப் பிரிப்புகலையும் கண்டடைய வேண்டும். இன்றைய காலக் கட்டத்தில் நாட்டில் புனர்வாழ்வு புனர் நிர்மானப் பணிகளில் ஈடுபடுகிறவர் நாட்டில் உள்ள விடுதலை சார்ந்த சிங்கள அரசு சார்ந்த பல்வேறு சமூக அரரசியல் சக்திகளோடு பணி புரிந்தே இனக்கொலைக்கு முகம் கொடுத்து வீழ்ந்து கிடக்கும் மக்களை தூக்கி விட வேண்டும். இது விடுதலைக்கான இன்றைய பணிகளில் முக்கியமானதாகும். அதே சமயம் நாம் நிகழ்ந்த போர்குற்றம் நிகழும் மனித உரிமை மீறல்கள் என்பற்றுக்கெதிரான போராட்டத்தை சிங்கள அரசுக்கு எதிராக நிகழ்த்த வேண்டும். இரண்டும் ஒரே அணியால் செய்யக் கூடிய காரியமில்லை. எனவே இந்த வகையில் செயல் படும் பல்வேறு அணிகளின் செயல்பாடுகள் நம் வரலாற்ற்ன் தற்காலிகத் தேவையாக உள்ளது. களத்தில் எதிரியின் அனுசரனையுடன் வரலாற்றுப் பணியை ஆற்றும் களம் சார் அமைப்புகளும் எதிரியோடு யுத்தக்குற்றம் மனித உரிமை மீறல் தொடர்பாக போராடும் புலம்பெயர் அமைப்புகளும் நிலமையைக் கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறை அனுபவம் சார்ந்தும் புரிந்து கொண்டு தம்முள் நேரடியாக சம்பந்தப் படாத அதே சமயம் ஒன்றை ஒன்று பலகீனப் படுத்தாத தனித்தனி வட்டங்களாகவே செயல் பட முடியும் என்பதை நாம் ஏற்றுக் கொள்வது அவ
தோல்விக்கு நம்தரப்பு தவறுகளும் காரனம் என்கிற அறிவுதான் எதிர்கால விடுதலைக்கான அறிவின் ஆரம்பப் புள்ளியாகும் . கடந்த கால அரசியல் தவறுகளை திருத்துவது கடந்த காலத்தில் நாம் பகைமை பாராட்டிய நாடுகள் இயக்கங்களுடன் புதிய தொடர்புகள் உரையாடல்களுக்கான சன்னல்கலைத் திறப்பதன்மூலமே ஆரம்பிக்கப் படும்.
நமது மக்களின் விடுதலை நிச்சயம்
வாத்தியார் பிழை திருத்தும்போது எழுதும் குறீப்பு அவனது எதிர்காலத்துக்கான நம்பிக்கைதான்.நாம் விதைத்ததை மாத்திரமே அறூவடை செய்தோம் என வாழாதிருக்காது இன்னும்,இனியும் கம்பீரமாக எழும் விவசாயி போல பருவத்தே பயிர் செய்யும் பக்குவம் நமக்கெல்லாம் வேண்டும்.
நல்ல கருத்து தமிழ்மாறன் ஆனால் புலம் பெயர் தமிழர்களிற்கும் இலங்கைத்தமிழர்களிற்கும் முடிச்சுப் போட்டுத்தான் இவ்வளவு அழிவும்
நடந்துள்ளது. கம்பீரமாக எழ வேண்டியது இலங்கையில் வாழும் தமிழர்கள்.
அவர்களை தரையில் விழுத்தி பிறர் அவ்ர்கள் மீது ஏறி நிற்க வழிவகுத்து
கொடுத்த புலம்பெயர் தமிழர் ஒதுங்கி வாழ்வது அவசியம் என்று தோன்றவில்லையா? -துரை
கடலில் தத்தளீக்கும் மாலுமிக்கு நம்பிக்கை தருவது கரையில் தெரியும் வெளீச்சம், அந்த வெளீச்சத்த போன்றோர் புலம் பெயர்ந்தோர்.அங்கே அடுப்புக்கள் எரிகின்றன என்றால் அது புலம்பெயர்ந்தோரால் மட்டுமே எரிகிறது.நாமெல்லாம் ஒதுங்கி விட்டால் ஊரில் நெருப்பெரியும்.பட்டினியிலும் பசியிலும் தமிழ் இனம் இல்லாமற் போய் விடும்.எது நட்ந்தாலும் இன்னும் தமிழராய் இலங்கையில் தமிழர் இருப்பதே புலம் பெயர்ந்தோரால், நீங்கள் துரையாக இருப்பதால் தமிழ் மக்கள் பிரச்சனைக்கள புரியாமல் இருக்கிறீர்கள்.இறங்கி வாருங்கள் தமிழர் எழுந்து வர எதையாவது செய்யுங்கள்-தமிழ் மாறன். –
புலம் பெயர் நாடுகளிற்கு தமிழர் வருமுன்
இலங்கையில் தமிழர் சீராகக வாழவில்லையா?
தென்னிலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவரிற்கும் புலம் பெயர்நாடுகளிலிருந்தா உதவிகள் கிடைக்கின்றன்? மலையகத் தமிழர்
முதுகுமுறிய அன்று முதலின்று வரை தொழில்செய்யவில்லையா? சிங்கள் மக்கள் அனைவரும் பாலில் குளித்து பழத்தில்
மூழ்கின்றார்களா?
வடகிழக்கில் உள்ள மக்க்ளை
தாங்கள் தான் ஆள வேண்டுமென்ற சுயநலம் கொண்ட அரசியல் வாதிகளே தமிழ தமிழ் என்று
சொல்லியே தமிழரை அழிவிற்குக் கொடுப்பவர்கள். அங்குள்ள சமூகத்தில் அடித்தளத்திலுள்ளவ்னின் சிந்தனையில் பிறப்பது தான் விடுதலை. பணத்தில் மிதப்பவர்கள் பேசுவதெல்லாம். உலகினை ஏமாற்ரவும் சுயநலன்களிற்காக்வும்தான். துரை
குமுறூம் குரலே, அன்பின் துரையே நீங்கள் சொலவது சரியே, ஆனால் அப்போதெல்லாம் முருங்கை நின்றது,கருவேப்பிலை மரங்கள் வளர்ந்தன, மல்லிச் செடி தழைத்தது ஆனால் இந்த கோதாரி விழுவார் வந்து எம்மிடம் இருந்தவை பிடுங்கப்ப்ட்டன், எரியூட்டப்பட்டன.நம் மண்ணே மயான பூமியாயிற்றூ.