நுறு மனிதர்களோடு
அவர்கள் மறுபடி வந்தார்கள்.
அழுக்குப்படியாத சப்பாத்துகள்
பச்சை நிற உடை,
சூடாறிய நீண்ட சுடுகலன்கள்,
வரவுக்காய் நான் காத்திராவிட்டாலும்
அவர்கள் வரவு
உன் அசைவு நிறுத்தப்பட்டதாய்
உணர்த்தியது.
இது எங்கள் நிலமென்று
சூழுரைத்து அவர்கள் வந்தார்கள்.
கொல்லப்பட்டதால் குரைப்பதற்கு
தெரு நாய்கள் கூட இல்லை.
மௌனம் கிழித்து
புரியாத மொழி பேசி
ஆணவத்தோடு அவர்கள் வந்தபோது..
நான் புரிந்துகொண்டேன்
எம்மோடு நீ இல்லையென்று.
நானோ,
நீ கடந்து சென்ற ஆலமரத்தின்
அடிவாரத்தில்.
உனது வரவுக்காய் காத்திருக்கவில்லை.
விடுதலை, போர் என்று
உன்னால் கொன்று போடப்பட்ட
ஆயிரம் மனிதர்கள் போல,
நகங்கள் பிடுங்கப்பட்டு,
கண்கள் பறிக்கப்பட்டு,
அங்கம் இழந்து போன
இன்னொருவன் போல அல்ல!
அன்று உன்னை நேசித்தவன் – ஆயினும்
உனது வரவுக்காய்
காத்திருக்கப் போவதில்லை.
உனக்காகச் சாகடிக்கப்பட
எம்மில் யாரும் எஞ்சியிருக்கவில்லை.
நீ துரோகிகளாக்கி
தெருவோரத்தில் கொன்றொழித்த
மனிதர்களின் நிழல் கூட எம்மிடம் இல்லை.
நீ மீண்டும் வரவேண்டாம்
நாம் காத்திருக்கவில்லை.
ஆனால்,
அவர்களின் வருகை,
சூடாறிய சுடுகலன்களோடு
அவர்களின் பிரசன்னம்,
ஆதிக்கம், ஆணவம், அதிகாரம்
எல்லாமே சொல்கிறது..
நீ நிறுத்தப்படுவிட்டாய்.
அண்ணா, உங்களை எத்தினையோ முறை கொன்று முடித்தார்கள் எதிரிகள், துரோகிகள்-ஆனால் அத்தனை முறையும் நீ உயிரோடு மீண்டு வந்திருக்கிறாய். சூரியனை மேகங்கள் மறைப்பதால்,அது சூரிய வரவுநிறுத்தப்பட்டதாய் கூக்குரல் இட்டு ஆர்ப்பரிக்கமுடியாது முட்டாள்களே
ஆயிரம் நட்சத்திரங்கள் ஓரு போதும் ஒரு சூரியனுக்கு ஈடாகாது-ஆயிரம் தலைவர்கள் இருந்தாலும், இறந்தாலும் உன்னைப்பபோல் ஒரு தலைவன் கிடையாது ஆமாம், ஈழத்தமிழராம் எங்களது இதயங்களில் சிம்மாசனம் போட்டுநீங்கள் வீற்றிருக்கும் போது,நாங்கள் எதுக்கு உங்கள் வரவுக்காய் காத்திருக்கப்போகிறோம்! மாவீரனுக்கு ஏதடா மரணம் பைத்தியக் காரா……
“நாங்கள் எதுக்கு உங்கள் வரவுக்காய் காத்திருக்கப்போகிறோம்! மாவீரனுக்கு ஏதடா மரணம் பைத்தியக் காரா…”
இந்த வரியை நான் மிகவும் ரசித்தேன். பிரபாகரனைப் பைத்தியக்காரன் என்று சொல்ல அசாத்தியத் துணிச்சல் வேண்டும்.
மிக நிதானமான நல்ல கவிதை
இன்றை ஈழத்தை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. சோகம் படர்ந்த கவிதை. நுஹ்மனின் தாகத்தைக் காண முடிகிறது.
இன்றைய ஈழ தமிழரின் நிலையை ,துயரத்தை,அரசியல் கையறு நிலையை மிக நிதானமாக சொல்லும் கவிதை.
சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட ஒரே தமிழ் தலைவர் பிரபா கரன் மட்டுமே மற்றவர்கள் எல்லோரும் பிரபாகர னால் கொல்லப்பட்டவர்களே. வருவார் பாத்துக்கொண்டு இருங்கோ உங்கட சூரியதேவன் வந்து மிச்சமுள்ள தமிழர்களையும் சுட்டுப் பொசுக்குவர் பார்த்து கொண்டு இருங்கோ நடக்கிற வேலையை பார்ப்பதை விட்டிற்று இருக்கிறதையும் அளிக்க முயலல் வேண்டாம் .
கவிதைக்கு பொய் அழகு
அப்போ, உங்கள் வரி அழகான கவிதையா?
நான் கவிதை என்று சொன்னேனா > அது உங்கள் பார்வை. இது வைரமுத்துவின் வைர வரிகள்.
நான் சொன்னது அந்தக் கருத்தே பொய்யானது என்பதைத் தான் வேறொன்றையுமல்ல.
(நான் வைரமுத்துவைக் கொண்டாடும் ஒருவனல்ல.)
நீ இருந்தாய் எனது நகங்கள், கண்கள், அங்கம் இருந்தன
நான் உன்னை நேசித்தேன்.
இன்று நீ இல்லை கொலையாளி துரோகி வீண் உனது சகவாசம்
வேண்டாம் நீ எனக்கு தேவையில்லை.
ஆதிக்கம், ஆணவம், அதிகாரம் போதாது
அடிமைத்தனம் இன்னும் வேண்டும் எனது இரட்சகர் இதோ வந்து விட்டார்
ஆகா இதுவோ சுதந்திரம்
இனி எனக்கு அவர்கள் மொழி புரியும்.
கடந்த இரவு நான் கனவு கண்டேன் பிரபாகரன் வந்து நிற்கிறார்.உறனது போகிறேன்.சத்தமிட வாயைத் திறக்கிறேன் வார்த்தைகள் வரவில்லை.தலைவா நீ நீந்திய கடலில் மீன் வருடிய உன் உடல்,நான் பாடிய தேவாரம் நீ ஆக்கிய விடுதலையின் உரம்.திலிபனை நீ வாழ வைத்திருக்கலாம் ஆனால் சாகும்வரை உண்ணாவிரதம் என அதை பெருமைப்படுத்தினாய்.மாத்தயாவை மன்னித்திருக்கலாம் ஆனால் அவரை தியாகி ஆக்கினாய்.தலைவ என்னையும் மாமனிதர் ஆக்காதே அதற்கு எனக்கு தகுதி இல்லை.அருள் சகோதரர் தமிழ்மாறன்.
யாரும் சம்பந்தனை யோ கருணாநிதியையோ இப்படிக் கிண்டல் செய்தால் உங்கள் சைவத் தமிழ் நெஞ்சம் எப்பாடு பட்டிருக்கும்!
இறந்தவர்களை விமர்சிக்கலாம், வலிந்து நிந்திக்கத் தேவையில்லை.
(நான் என்றுமே புலி ஆதரவாளனல்ல)
கவிதையின் உள்ளோட்டம் நன்றாயிருக்கிறது. தலைவனின் இழப்பை அறிந்ததன் பின்னரேயே இராணுவம் உள்ளே வரமுடிந்ததென்பதனைப் பூடகமாகக் கவிதையில் தருகின்றார். ஆதிக்கம் ஆணவம் அதிகாரம் இவையாவும் கொண்டு எதிரிகள் இதுவரைவராதிருந்தது உன்னால்தான் என்று அழகாக விபரிக்கின்றார். தவறுகள் சொல்லப்பட முடியாதவன் ஒருவன் உண்டென்றால் அவன் எதுவுமே செய்யாதவனாய் இருப்பவனாய் இருப்பான். ஒற்றுமையில்லாத எம்மத்தியில் நீ மீண்டும் வராதே என்று அன்பினால் கவிஞர் கூறுவதாகவே எனக்குப்படுகினஇறது
பின்வரும் வரிகளும் அது போன்ற பிறவும் நீங்கள் கூறும் விளக்கத்துடன் உடன்படுவதாகத் தெரியவில்லையே:
அன்று உன்னை நேசித்தவன் – ஆயினும்
உனது வரவுக்காய் / காத்திருக்கப் போவதில்லை.
உனக்காகச் சாகடிக்கப்பட / எம்மில் யாரும் எஞ்சியிருக்கவில்லை.
நீ துரோகிகளாக்கி /தெருவோரத்தில் கொன்றொழித்த
மனிதர்களின் நிழல் கூட எம்மிடம் இல்லை.
வலிந்து பொருள் கொள்ளல் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.
நண்பரே
நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்வோமே. யாருக்கு எனக் கேட்டுவிடாதீர்கள். கவிதையில் கோபம் கொப்பளிக்கின்றது. அதனால் வார்த்தைகள் நிதானமாக இல்லை. தவறுகள் எங்கும் உண்டு. அதற்காக அவர்கள் செய்த நற்செயல்களை மறக்க முடியாதல்லவா?
நட்புடன் உமா,
நல்லதை எடுத்துக் கொள்வது என்பது நாம் விரும்பியவாறு பொருள் கொள்வதல்ல.
ஒரு படைப்பாளி கருதாத ஒன்றை, அவர் அவ்வாறு கருதியதாக எண்ணச் சான்றே இல்லாதவிடத்து, அவரது கருத்தாக விளக்க முற்படுவது படைப்பையும் படைப்பாளியையும் அவமதிக்கும் செயலாகும்.
“ஆசிரியன் இறந்துவிட்டான்” என்கிற பின்னவீனத்துவவாதிகள் கூட இவ்வாறு எதிர்மறையாகப் பொருள் கொள்ளக் கூசுவர்.
கவிதையில் கோபம் கொப்பளிக்கிறதாகத் தெரியவில்லை. ஏமாற்றம் தெரிகிறது. வசை ஒன்றும் கிடையாது. நிதானமான ஒரு பின்னோக்கிய பார்வை மட்டுமே தெரிகிறது. உடன்பாடும் உடன்பாடின்மையும் வேறு விடயங்கள்.
ஒத்துக் கொள்கின்றேன். நம்பிக்கைகள் கண்முன்னேயே கானல்நீராகிக் காட்சிதருகின்றன. யாரை நம்புவது என்றே புரியவில்லை. புகழ்பாடியவர்கள் சேறடிக்கின்றனர். தாம் சொல்வதனை ஏற்காதார் துரோகிகளாகின்றனர். இந்நிலையில் நடந்ததை மறந்து நடப்பதைச் சிந்திக்க வேண்டின் மீண்டும் மீண்டும் ஒருவர் மீது குற்றம் சுமத்தாமல் இருப்பதே அனைவரும் இணையும் வழி என்ற கருத்திலேயே நான் அக்கவிதையில் பொருள்கொண்டேன். எனது கருத்தால் படைப்பாளிக்கு அவமானம் நேர்ந்திருந்தால் மன்னிக்கவும்.
நமது வாழ்வின் துயரத்தை கவிதை அழகாகச் சொல்லிவிடுகிறது.
இனவாதத்திற்கெதிரான போராட்டம் சனநாயகமானதாக மக்கள் சார்ந்ததாக அமைய வேண்டியதன் அவசியத்தை கவிதை கூறுகிறது.
கவிதை குறித்த உமாவின் பார்வை சரியானதே. பிரபாகரனின் மரணத்தையும் அவர் மரணத்தின் பின்னரேயே எதிரியின் கொடும் பிரசன்னம் சாத்தியமாகிறது என்பதை சொல்கிறான் அத்துடன் கவிதையாளன் குற்ற உணர்ச்சியின் பங்காளனாக மாறி தன் தலைவரின் அல்லது விடுதலி புலிகளின் தவறான பக்கங்களை சுட்டி காட்டுகிறான். மிகவும் வரவேற்கத்தக்கது.
இந்த எட்ட்ப்பர் ஏற்க்கனவே இனம் காணப்பட்டவர், இறந்த மிருகத்தில் இருந்து உண்ணி களருவது போல் களருவதுதான் இவரது தொழில், கவிதையிலே தனது அடிவருடிதனத்தையும் தின்ற வீட்டுக்குள் இரன்டகம் செய்வது எப்படியென்று சிறு விளக்கம் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
“இறந்த மிருகத்தில் இருந்து உண்ணி கழருவது போல்” அப்போ தலைவர் இறந்த மிருகத்திற்கு ஒப்பானவரா? பு.தலைவரை கவிஞர் இவ்வாறு நிந்திக்கவில்லையே.
நண்பரே கருத்துக்களை முன்வைக்கும் சுதந்திரம் யாருக்குமுண்டு என்பதில் தங்களுக்கும மாற்றுக்கருத்து இருக்காது. நாகரிகமாகத் தங்கள் கருத்துக்களை விமர்சனங்களை முன்வைப்பது இவ்விணையத்தளத்தின் மதிப்பினைத் தக்கவைக்கும். எந்தந் சொல்லையும் சுருக்கி எழுதாத நண்பர் புலிகளின் என்ற சொல்லையும் விளக்கமாகவே எழுதியிருக்கலாம்.
நண்பர் உமா! சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. எனது தவறு தற்செயலானது. எவ்வளவு உயர்ந்த இலட்சியங்களாயினும் பன்முகத்தன்மை இன்றேல் சாம்பல்மேட்டில்தான் முடியும் என திடமாக நம்புகின்றவன் என்ற வகையில் மாற்றுக்க்ருத்துள்ளோரை நிந்திப்பது நிச்சயமாக எனது நோக்கமல்ல.
அறிந்தவன் அறிவான் அரியாலை பனாட்டு???.
நீ மீண்டும் வருவதால் பயனேதும் இருக்குமா? சந்தேகமே? ஆனால் இவ்வளவு குழப்பங்களையும் எம் முன் நிறுத்திவிட்டு உன்னால் எப்படி செல்ல முடிந்தது. இரண்டாம் கட்ட தலைவர்கள் உன் அகராதியிலேயே கிடையாது 100 வது நிலையிலாவது ஒருவனை அடையாளம் காட்டு தயவு செய்து ஒரு தடவை ஒரே ஒரு தடவை இந்த ஈனர்களை அடையாளம் காட்ட வந்து சென்றுவிடு தங்கி விடாதே!
பால்ராஜ், தீபன், விதுஷா போன்ற முதல்தரத் தலைவர்களைத்தான் உன்னால் உருவாக்க முடிந்தது. கேடுகெட்ட கூட இருந்து குழி பறித்த கேவலங்களெல்லாம் அடையாளம் காண சாதரண மனித அறிவு போதுமானதே.