எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு ரிசாட் பதியூதீனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் 7 பேர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் டி சில்வா இவ்வுத்தரவை பிறப்பித்தார்.
மன்னார் நீதிவானை அச்சுறுத்தியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு பதியூதீனிடம் கோரப்பட்டுள்ளது. குறிப்பாக நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஏன் வழக்குத் தொடரக் கூடாது என்பது பற்றிய தன்னிலை விளக்கத்தை நீதிமன்றில் அமைச்சர் அளிக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சாட்சியாளர்கள், வழக்குத் தாக்கல் செய்தவர்கள் போன்றோரை அமைச்சர் அச்சுறுத்தினால், கைது செய்ய நேரிடும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராஜபக்ச குடும்பத்தின்நேரடியான கட்டுப்பாட்டினுள் பாசிச இராணுவ ஆட்சி நடக்கும் இலங்கை போன்ற ஒரு நாட்டில் தாதாக்கள் மட்டுமே அமைச்சராக இயலும்.
I heard he is a holder of a National Diploma in Technology. He said on national television that the Muslims in Jaffna did not even throw a stone at anyone. He should confine his activities to the Northern Province. He should also show restraint with the powers and previlages that he has from his National Cabinet Position.