2017-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அறிவித்தது. பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரி சிறப்புச் சட்டம் இயற்றி அதை கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், அதை கிடப்பில் போட்டுள்ளார் கவர்னர்.
இந்நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கவர்னரைச் சந்தித்து நீட் தேர்வை தமிழ்நாட்டில் ரத்து செய்யும் சிறப்பு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதன் அவசியம் குறித்து அறிவுறுத்தினார்கள்.இது தொடர்பாக சென்னை அரும்பாகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும் போது,” நீட் தேர்வு ரத்து மசோதா குறித்து முதல்-அமைச்சரின் அறிவுறுத்தல் பேரில் உயர் அலுவலர்கள் கவர்னரிடம் எடுத்துரைத்துள்ளனர். விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்கிறோம்” என்றார்.