தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் என்னும் தேர்வு அநீதியானது. நீட் தேர்வுக்கு தயாராக படிக்கவே லட்சக்கணக்கில் ரூபாய் தேவை என்னும் நிலையில் கிராமப்புற மாணவர்கள் இதில் தெரிவாவது கடினம். மேலும், இந்த தேர்வு மோசடி நிறைந்த ஒன்றாக இருக்கிறது.
இந்நிலையில் நேற்று தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இன்று நிதி அறிக்கை மீதான சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா தாக்கல் ஆகிறது.
முன்னதாக ஆட்சிக்கு வந்த திமுக நீட் தேர்வு குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க ராஜன் குழுவை நியமித்திருந்தது. அந்தக் குழுவின் அறிக்கையின் படி இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தால் தமிழ்நாட்டில் நீட் இல்லாமலயே மருத்துவச் சேர்க்கை நடத்த முடியும். ஆனால் முந்தைய அதிமுக அரசே நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரி தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், இப்போதைய திமுக அரசு நீட் தேர்வுக்கு எதிராக சிறப்புச் சட்டம் இயற்ற முயல்கிறது.