மத்திய கணக்குத் தணிக்கைக்குழு நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஒப்பந்த புள்ளிகள் வரவேற்பு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யாமல் இஷ்டத்துக்கு ஒதுக்கியதால் 1.86 லட்சம் கோடி அரசுக்கு நஷ்டம் என்று கூறியதையடுத்து, இன்னும் நிலக்கரி தோண்டும் பணியே தொடங்கவில்லை நஷ்டம் எப்படி வரும் என்று எதிர்க் கேள்வி எழுப்பியுள்ளது.
நிலக்கரி சுரங்க முறைக்கேட்டை எதிர்கொள்ள ‘அன்னை(!) சோனியா’-வின் அறிவுரைகளுக்கு இணங்க பதிலடி கொடுக்க மத்திய அரசு ப.சிதம்பரம், ஜைஸ்வால் உள்ளிட்டோரை வைத்து பேசத் தொடங்கியுள்ளது.
எதிர்கட்சிகள் முதலில் நாடாளுமன்றத்திற்கு வரட்டும், பிரதமர் மன்மோகன் சிங் இது குறித்து அறிக்கை தருவார். அவர் அப்படி தரவில்லையெனில் மக்களிடம் இதனை எப்படிக் கொண்டு செல்வதென்று எங்களுக்குத் தெரியும் என்று பேசியுள்ளார் ப.சிதம்பரம்.
1994ஆம் ஆண்டு முதல் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கடைபிடிக்க நடைமுறைகளையே இந்த அரசும் கடைபிடித்தது. இதற்காக எங்களை தேவையில்லாமல் குற்றம்சாட்டுவதா என்கிறார் ப.சிதம்பரம்.
“அரசுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டதாக சி.ஏ.ஜி. கூறிய 1.86 லட்சம் கோடி என்ற குற்றசாட்டு தவறானது. இந்தத் தவறுகளை பல முக்கியமான எழுத்தாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
நிலக்கரி இன்னும் தோண்டப்படாதபோது பூமித் தாயிடம் அது இன்னமும் புதையுண்டு கிடக்கும்போது நஷ்டம் எப்படி? நிலக்கரி தோண்டியபிறகே நஷ்டம் ஏற்படலாம். அதாவது நிலக்கரியை ஒத்துக் கொள்ளமுடியாத விலைக்கு விற்கும்போது மட்டுமே பேசவேண்டும். நிலக்கரி தோண்டப்படவில்லையெனும்போது நஷ்டம் எங்கிருந்து வந்தது?” என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
இந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி எப்படி மூடி மறைத்து இழுத்து மூடி ஊழலைக் கொண்டு செல்வது என்பதில் கை தேர்ந்தவர்களானதையே ப.சிதம்பரத்தின் பேச்சு எடுத்துரைக்கிறது
India has a lot of coal like America. Coal powered plants are something that Sri Lanka should look forward to for future electrical power needs.
Sir, there is lot more to power generation and distribution tha. what you think it is. Have you heard about smart grids for instance?
இந்தியாவிலா ஊழல்…??? நம்பவே முடியாமலிருக்கிறது…!!!!