இலங்கை அதிபர் ராஜபக்சவின் அழைப்பின் பேரில் இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் இன்று இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்டு அவருடன் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்திய அயலுறவுச் செயலராக இருக்கும் நிருபமா ராவ், விரைவில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக பணியில் அமரவிருக்கிறார்.
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக அவர் விரைவில் பொறுப்பேற்றுக்கொள்ள உள்ள நிலையில், ராஜபக்சவின் அழைப்பின் பேரில் 3 நாள் பயணமாக இன்று காலை இலங்கை வந்தார் நிருபமா.
அவருக்கு இன்று காலை இலங்கை அதிபர் ராஜபக்ச பிரிவு உபசார விருந்து அளித்தார்.
பிராந்திய நலன்களின் அடிப்படையில் 80களின் ஆரம்பத்திலிருந்தே ஈழப் போராட்டத்தைத் தனது கட்டுப்பாட்டு எல்லைக்குள் வைத்திருந்த இந்திய அரசு. முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசுடன் இணைந்து கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்று குவித்தது. அழிவின் பின்னர் இந்தியப் பல்தேசிய நிறுவனங்களின் குடியேற்றப் பிரதேசமாக இலங்கை மாறி வருகிறது.