தமிழக முதல்வர் கருணாநிதி மாநிலப் பணிகள் தொடர்பாக டில்லியில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் பார்வதியம்மாள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிருகு பதிலளித்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின். ” பார்வதியம்மாள் தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டால் பரிசிலீக்கத் தயார் என்று முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதையே நீதிமன்றத்திலும் அரசுப் பதிலாக தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த 30-ஆம் தியதி தமிழக அரசுக்கு பார்வதியம்மாளிடம் இருந்து ஈமெயில் மூலமாக சிகிச்சையளிக்கும் படி கோரிக்கை வந்தது. இக்கடிதத்தின் படி மத்திய உள்துறைக்கு தமிழக முதல்வர் நிபந்தனைகளுக்குட்பட்டு பார்வதியம்மாளுக்கு விசா வழங்கலாம் என்று கடிதம் எழுதியுள்ளதாக துணை முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.