முன் _சிறு குறிப்பு:
இன்றைய சூழலில் தமிழ்பேசும் மக்களாகிய நாம்,நமது அரசியற் தலைவிதியை நாமே தீர்மானிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.நமது ஓட்டுக்கட்சி அரசியலை நாம் அடியோடு விட்டுத்தொலைத்தலும் முடியாதுபோன அவலச் சூழலில்,புரட்சிகரமான கட்சியின் அவசியம் இன்னும் வலிமையான வெற்றிடமாகவே இருக்கிறது.
எங்களுக்குள் நீடிக்கும் வெளிப்படையற்ற அரசியல்-தோழமையற்ற போட்டி வெற்றுக் கூச்சலும்,வேடிக்கை மார்க்சியச்சவடால்களும் தோழமைகளை நொருக்கி வர்க்க உணர்வற்ற ஜடங்களாக நம்மை மாற்றியுள்ளது.இந்த நாமே இன்றைய இலங்கைப் பாசிச அரசுக்கும்,அந்நியச் சக்திகளுக்கும் ஏதோவொரு வகையில் கூஜாத் தூக்குவதில் போட்டியிடுகிறோம்.
எங்கள் தலைமையில் மக்களைக் குறித்தும் கனவுகாணும் நாம்,முதலில் புரிந்துகொள்ளவும் பாடங்கற்கவும் வரலாற்றுப் புரிதல்களும்,மக்களுமே மிச்சமாக இருக்கிறது-இருக்கிறார்கள்.இதுள் தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு தளமும் நமது தலைவிதியை நாமே திறம்பட நிர்ணயிக்க முடியுமாயின் இந்த மொழிபெயர்ப்பில் எனது உழைப்பும் ஏதோவொரு அர்த்தங்குறித்து…
கீழ்வரும் பேட்டியின் டொச்சு மூலத்தை வாசிக்கத் தெரிந்தவர்கள் இங்கே சென்று வாசிக்கலாம்: http://www.jungewelt.de/2011/07-16/001.phpதோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்.
01.08.2011
வார விவாதம்
16.07.2011 Junge Welt -வார மஞ்சரி.
“நாம் மார்க்சியத்துள் கலந்து போகின்றோம்.”
Li Junru வோடான பேட்டி இஃது.
சீனக் கம்யூனிசக் கட்சினது செயலூக்கம் மற்றும் ஆளுங்கட்சியாக இருக்கும் தறுவாயில் எழுங் கஷ்டங்கள் குறித்தும்.இக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு இப்போது 90வது அகவையில்காலடி எடுத்து வைக்கும் தறுவாயில் இது உலகிலேயே அதிக உறுப்பினர்களைக்கொண்ட கட்சியுமாகும்.மார்க்சியத் தத்துவார்த்தக் கோட்பாட்டு நூலிற்கு முன் மார்சியர்களது செய்வினைப் பயன்.
பேட்டி காண்பவர்: செபஸ்டியன் கார்ல்லென்ஸ்[Sebastian Carlens]
தமிழில்:ப.வி.ஸ்ரீரங்கன்.
[இலீ யூன்று (Li Junru பி. 1947) சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு (PKKCV) என்ற நிலை குழு நீண்டகால உறுப்பினராக உள்ளார். அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி,கட்சி வரலாற்றியல் ஆராய்ச்சி மையத் துணை இயக்குனராகவும்,சீனக் கட்யூனிசக் கட்சியின் உயர் நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் அவர் இருக்கிறார். ]
90 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 1921 ஆம் ஆண்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி அரசாங்கத்தைக் கொண்டியக்குகிறது.அனைத்து ஆட்சி அதிகாரத்துக்கும் அதுவே பொறுப்பானது.ஒரு விவசாய நாடாகவிருந்த சீனத் தேசம்,தொழிற்றுறை வளர்ச்சியூடாக இன்று உலகின் மிக பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக, அடிப்படையில் மாறிவிட்டது. இந்த வளர்ச்சிக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பங்களிப்பு என்ன?
சீன கம்யூனிஸ்ட் கட்சி நாட்டின் வளர்ச்சிக்கு மூன்று குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளது.
1: சீனாவின் ஒரு பகுதி காலனித்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ சமூகமாக இருந்தது.கூடவே,சீனத் தேசமானது ஏகாதிபத்திய வாதிகளது அடக்குமுறைக்கும்,அவமானப்படுத்துலுக்கும் உட்பட்டு நலிந்தது.சீனக் கம்யூனிசக்கட்சியானது சீனத்தை விடுவித்து அதை விடுதலையுடைய நாட்டாக்கி மக்கள் சீனத்தை உருவாகியது அல்லது நிறுவியதென்று சொல்ல முடியும்.
2: சீனக் கம்யூனிசக் கட்சியின் வாயிலாகச் சீன மக்கள் தாமும் உலகத்து மக்கள்கூட்டத்துக்கு நிகரானவர்களென நிரூபித்து உயர்ந்துள்ளனர்.மேலும், சீனா ஒரு வகையில் ஒரு பொருளாதார மற்றும் கலாச்சாரத்துள் பின்தங்கிய நாடக இருந்தது. ஒரு அமைதியான சோசலிச மறுசீரமைப்பு மூலம், சீன கம்யூனிஸ்ட் கட்சி சீனாவில் ஒரு சோசலிச அமைப்பு நிறுவப்பட்டது.
3: கம்யூனிஸ்ட் கட்சி அதன் சீர்திருத்தம் மற்றும் திறந்த அரசியல் செய்ல்பாட்டை- கொள்கையூடாக ஒரு வலிமையான, ஜனநாயக, நாகரீக மற்றும் இசைவிணக்கமான சோசலிச நாட்டை அமைப்பதற்கு முனைகிறது,சீனாவென்பது ஒரு ஏழை நாடாகவும்,பலவீனமான தேசியவினத்தையும் கொண்டிருக்கும் சூழலில் இதை நோக்கிக் கொம்யூனிசக் கட்சி அதற்கு மாற்றானவொரு வலிமையானதும்,ஜனநாயக பூர்வமானதுமான குடிசார் சமுதாயத்தைப் படைத்துக்கொண்டிருக்கிறதென்பதை உலகம் புரிந்தாகவேண்டும்.இந்தச் செயற்பாடானது முழுச் சீன மக்களுக்குமானதும் கூடவே ஒவ்வொரு சீனனுக்குமானதும் என்பதை விளங்கியாகட்டும்.சீனக்கொம்யூனிசக்கட்சியானது ஆளுங் கட்சியாக இருந்தபடி தனது நீண்ட வரலாற்றில் மேம்பட்ட பண்பாடு, மேம்பட்ட உற்பத்தி சக்திகள் மற்றும் பெரும்பான்மையான மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற ஒரே ஒரு கட்சி, இந்த நோக்கையெல்லாம் நாம் நீண்ட காலத்தில் நிறுவ முடியுமென நம்புகிறோம்-உறுதியாக இருக்கிறோம். சீனக் கொம்யூனிசக் காட்சியாகிய அது “பிரதிநிதிகள்” என்ற உண்மையில் சரியாக மூன்று முறை கோட்பாடு உள்ளது. இந்த கட்சி எப்போதும் முற்போக்கானதாக இருக்கவேண்டும். இருக்கவேண்டுமென்பது கட்சியை பலமடங்கு வேகத்தோடு முற்போக்கான சிந்தனையோடு வைத்திருக்க வேண்டும். மற்றும் கட்சி எப்போதும் மக்களின் வளர்ந்து வரும் தேவைகளை சந்திக்க வேண்டும்.அதை நிவர்த்தி செய்தாவேண்டும்.
சீன மக்கள் குடியரசானது, 1989 இல் சரிந்து விழுந்த சோவியவிற் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய வீழ்ச்சி குறித்து விவாதிக்கும்போது,இது வரையான ஸ்த்திரமான அரசியல் கட்டமைப்பைக் எங்கிருந்து மக்கள் சீனம் பெற்றது?
ஐரோப்பியச் சோசலிச முகாங்களது வீழ்ச்சியின் பின்னணிக்கு முன்பே சீனக் கொழ்யூனிசக் கட்சியானது மிகச் சரியான சோசலிச வளர்ச்சிக் கட்டுத்துடன் சீனாவில்உயர்ந்து உருப்பெற்றிருந்தது.ஏனெனில்,நாம் மட்டுமேதாம் ஒரு சரியான பாதையைக் கொண்டிருந்தோம்:சோசலிசமானது சீனாவினது சிறப்புக் கூறுகளையும் அதன் வலயத்துக்கேற்ற தேவைகளையும் கவனித்துக் கருத்திற்கொண்டிருக்காது செயற்பாட்டில் சாத்தியமாக்கிப் பயணித்தது.
1989 இல் ஐரோப்பிய முகாங்களது வீழ்ச்சியின் பலாபலன்களிலிருந்து எமக்குமுன் இரண்டு தெரிவுகள் மேலெழுந்தது:
ஒன்று:எமது மறுசீரமைப்புத் திட்டங்களும் சோவியற் வீழ்ச்சியைப் போலவே வீழ்ந்து நொருங்கிவிடப்போகிறதென்று பலர் அச்சப்படுத்தினார்கள்-எச்சரித்தார்கள்.அந்தோ அஃது பூர்ச்சுவா நிலையைக் குறித்துரைத்தது.எனவே,சீனாவானது மரபுசார்ந்த சீனவினது சோசலிசப் பாதைக்கு திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை.இந்த இரண்டாவது தெரிவினூடாக-யோசனையூடாக கிழக்கு ஐரோப்பிய-சோவியற் சோசலிச முகாங்களது உடைவை வரலாற்றுத் திருப்பு முனைவழியாக ஆழ்ந்து ஆய்வு செய்வதாக இருக்க வேண்டுமென்பது காலக் கட்டளை.அதன்வழி சீனாவானது முதலாளித்துவ லிபரல் முறையை உட்புகுத்த வேண்டிய தேவை உணரப்பட்டது.சீனக் கொம்யூனிசக் கட்சியானது இந்தத் கேள்விகளை மிகத் தீவராமாக ஆய்வுக்குட்படுத்தியது.அதன் வழி இத்தகைய இறுதி முடிவு எட்டப்பட்டது:
மீளப் பழைய பாதைக்குத் திரும்புவது முட்டுச்சந்தி.
முதலாளித்தவத் தாரளவாதம்-லிபரல்,மற்றும் முதலாளித்துவம்கூடவொரு முட்டுச் சந்தியே.எனவே,சீனாவானது கண்டிப்பாகத் தனக்கானவொரு சொந்தப் பாதையை வகுத்தாகவேண்டும்.இந்த வகைச் சோசலிசப் பாதையானது சீனாவினது சிறப்பியல்வுகளை மூன்று முக்கிய வகைகளில் கண்டடைந்து:
1)முக்கியமான மத்திய வேலைத் திட்டமானது பொருளாதார வளர்ச்சியை-அபிவிருத்தியை ஊக்குவித்தல்.
2)சீனாவானது சோசலிச வளர்சிப்படிகளை சீனக் கொம்யூனிசக்கட்சியின்கீழ் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது.
3)மறுசீரப்மைப்புப் பொருளாதாரத்தைக்கொண்டு சீனாவைத் திறந்த தேசமாக்குவது.இந்தப் பரிசோதனை-செயற்றிறன் இன்றெமக்கு ஊட்டும் பாடாமானது: இந்தப்பாதையே சரியானதென்பதையும்,இதனூடாக மீளச் சீனமக்கள் எழுந்து பயணிப்பதையும் சாத்தியாமாக்கியுள்ளதென்பதையும் பாடமாகச் சொல்கிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம்( காங்கிரஸ் )2012 இல்திட்டமிடப்பட்டுள்ளது, அங்கு ,ஒரு புதிய தலைமை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. கட்சியின் பொது செயலாளர், ஜனாதிபதி ஹு ஜின்டாவோ மற்றும் பிரதமர் வென் ஜியாபாவோ, பிரதம மந்திரி மற்றும் பொலிட்பீரோ உறுப்பினர், வேட்பாளர்களாகப் போட்டியிட முடியாது. ஒரு புதிய தலைமுறை மக்கள் சீனத்தைப் பொறுபேற்க இருக்கிறது.இந்தத் தலைமுறை மாற்றம் சீனாவில் அரசியல்-பொருளாதார கொள்கை மாற்றத்தைச் சாத்தியமாக்கிவிடுவதில் போய்முடியுமா?
பதினெட்டாவது கட்சிக் காங்கிரஸ் மகாநாடானது சீனக் கொம்யுனிசக் கட்சியின் வழி புதிய தலைமுறையை சீன அரசியல் மேடைக்கு அரங்கேற்றப்போகிறது.திறந்த சீனாவைச் சிருஸ்டித்தவர்களது என்ணங்களுக்கேற்றவொரு புதிய தலைமுறையினர் அவர்களர் வார்ப்பிலேயே கட்சியின்வழி தலைமையைத் தோந்தெடுப்பார்கள் என நினைக்கிறேன்.இவர்கள் தடால்புடாலாகவொரு கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார்களென நான் சிந்தகவில்லை.இவர்கள் தத்துவார்த்த அடிப்படைகளையும்,கட்சியின் சட்டவொழுங்குகளையும் கடைப்பிடிக் வேண்டும்.இதன்னூடாகவேதாம் இன்றைக்கு, எதிர்காலத்துக்கான நடைமுறைகளும்,யதார்த்த பூர்வமான வேலைத்திட்டப் பொருத்தங்களும்கூடிய சோசலிசத்துக்கான பாதையைத் சீனவுக்கான சிறப்பியல்வுகளுடன் எடுத்தாள முடியும்.சீனக் கொம்யூனிசக் கட்சியானது பொருளாதாரச் சீரமைப்பையும் திறந்த சீனக் கொள்கையையும் கடைப்பிடித்து வைத்திருக்க வேண்டும்.அதன்வழியின் முலமே கட்சியினது உறுப்பினர்களதும்,சீன மக்களதும் பங்களிப்பு-ஒத்துழைப்புக் கிடைக்கும்.எவரொருவர் இதைக் கடைப்பிடிக்கத் தவறுகிறாரோ அவருக்கு எந்த ஒத்துழைப்பும் கிடைப்பதிற்கில்லை!இத்தகையவர்களைக் கட்சியின் தலைமையாகவும் தேர்ந்தெடுப்பதில்லை.
21 வது நூற்றாண்டின் இரண்டாவது தசாப்பத்துள் எந்தப் பணிகளைப் புதிதாகத் தேர்வு செய்து, தலைமை முன்னெடுக்க வேண்டுமெனக் கருதுகிறீர்கள்?
அவர்களது பணியுங்கூடக் கட்சியினது முழுமொத்த முக்கிய பணிகளே.நாங்கள் 2020 க்குள்ளான சில நோக்கு நிலைகளை சம்பிரதாய முறையிற்றெரிருந்து முன்கணித்துள்ளோம்: இந்தக் காலத்துக்குள்சீன மக்கள் சமுதாயத்தின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி அவர்களது நல்வாழ்வைச் சிறப்புற வைக்கும் ஆயத்தத்தைத் தொடக்குவது.இதுவே,புதிய தலைமைக்கான மிகப்பாரிய கடமை.இந்த வேலைத் திட்டத்தை முன்னகர்த்தி முடிக்கும்போது நமது நீண்ட தூர இலக்கை 2050 க்குள் அடைந்துவிடுவதுதென்பது சீனாவினது நவீனப்படுத்தல்கள் முற்றுப் பெறுவதென்பது அர்த்தமாகும்(2050 க்குள்).இத்தோடு,புதிய தலைமையானது நமது கட்சிகள் இருக்கும் முரண்பாடுகளை-பிரிதிவாதங்களைத் தீர்ப்பதும் இன்றைய காலத்தின்…
சீனக் கம்யூனீசக் கட்சிக்குக்முன் என்ன முரண்பாடுகள் அண்மித்து நிலவுகறது?
உதாரணமாக, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சி இடையேயுள்ள ஏற்றதாழ்வுகள், பல்வேறு பிரதேசங்கள் மற்றும் மாநிலங்கள் , நகரம் ஆகியவற்றுக்குள் நிலவும் சமச் சீரற்ற பொருளாதார ஏற்ற தாழ்வுகள் மற்றும் நாட்டில் உள்ள வேறுபாடுகள், நாம் சமூக அமைதியை உருவாக்க வேண்டும்.
சீன அரசாங்கம் 62 ஆண்டுகளில், சீன கம்யூனிஸ்ட் கட்சி வழியாக பஞ்சத்தை மக்களிடமிருந்து கூடியளவு அகற்றியிருக்கிறது.அனைத்துச் சீனமக்களுக்குமான சுபிட்சம் அதிகரித்தது. அதே நேரத்தில் ஒரு இடைவெளி, நகரம் மற்றும் நாட்டின் கிழக்கு கடற்கரை ,மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்குள் நிலவுகிறது.மக்களது வாழ்க்கை தரம் இடையே, ஏழை மற்றும் பணக்காரர் இடையே நீறுபூர்த்த நெருப்பாக முரண்பாடுகளை உருவாக்கி சமூகப்பதட்டத்துள் சீனம்நிலவுகறிது.சீனக் கொம்யூனிசக் கட்சி இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளும்-என்ன நடவடிக்கைகள் அவற்றை போக்கிக்கொள்ள எடுக்கப்படும்?
முதலாவதாகப் புரிந்துகொள்ள வேண்டும்:இந்தப் பாரிய முரண்பாடுகளைச் சீனக் கொம்யூனிசக்கட்சி ஏற்படுத்தியதோ-கொணர்ந்ததோ இல்லை என்பதே.அத்தோடு இவைகளெல்லாம் சீனாவினது வரலாற்றோடு இணைந்தே வந்தவை.கிழக்குக்கும்,மேற்குக்குமான பாரிய இடைவெளி,மற்றும்செல்வந்தர்களுக்கும்,ஏழைகளுக்குமான வித்தியாசங்கள்,நகரத்துக்கும் கிராமத்துக்குமான வித்தியாசங்கள் அனைத்தும் சீன வரலாற்றின் விளைவே.
இரண்டாவதாக: சீனக் கொம்யூனிசக் கட்சியினது கடந்த 30 ஆண்டுகால மறுசீரமைப்பு மற்றும் திறந்த அரசியல் வேலைத் திட்டமானது இந்த முரண்பாட்டை ஓரளவு தீர்ப்பதில்ஒரு திட அடிப்படைய உருவாக்கி வெற்றியடைந்துள்ளது.மூன்றாவதாக: கட்சியானது இந்த முரண்பாடுகளை தீர்ப்பதற்கான வகைகளில் அனைத்து அளவு முறைகளையும் பிரயோகிக்கிறது.கூடியவரை இம்முரண்பாடுகளை ஓரங்கட்டிவிடவேண்டும்.நாங்கள் யதார்த்தவாதிகள்.இந்த முரண்பாடுகளை.ஏற்றத் தாழ்வுகளைக் குறுகிய காலத்துள் அகற்றிவிடமுடியாது,இஃது, நீண்டகாலப் பொறிமுறையைக்கொண்டது.
இதை நாமும் அறிந்தே உள்ளோம்.இப்போது நாம் சாதகமான காலக் கட்டத்துள் இருக்கிறோம்.இதைச் சீனமக்களும் பார்த்தே வருகிறார்கள்,அதாவது, சீனக் கொம்யூனிசக் கட்சியானது இந்த ஏற்ற தாழ்வுகளை-வித்தியாசங்களைக் குறைத்து,நிவர்த்தி செய்வதில் முனைப்புடன் இருப்பதாக.அத்தோடு மக்கள் நம்புகிறார்கள் சீனக்கொம்யூனிசக் கட்சியால் இதைச் சாதிக்க முடியுமென.
பல மேற்கத்திய ஊடகங்களில் பல ஆண்டுகளாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி இறுதியில் “வெடிக்கும்” என்று ஊகிக்கப்பட்டு எழுதப்படுகிறது.குறிப்பாகக் கட்டுமானத்துறையில் இந்த வகை வளர்ச்சியானது ஒரு அபரிதமான “சவுக்கார நுரைக் குமிழி” உற்பத்தையைப் போன்றதே என்பது அவர்களது கணிப்பு.இஃது,எப்போதாவது வெடித்தே தீருமென்று கூறுகிறார்களே. குறிப்பாக சொத்து துறையில் “குமிழி” உற்பத்தி, என சந்தேகிக்கப்படுகிறது …
சீனாவினது பொருளாதாரம் குறித்து மேற்குலக ஊடகங்கள் தொடர்ந்து பல கெட்ட கனவுகளைக் காணுகிறார்கள். அத்தகையவொரு வீழ்ச்சியைச் சிதைவை எண்ணி எழுதுகிறார்கள்.சீனப் பொருளாதாரம் பொறிந்து சிதைவதில் அவர்கள் விருப்பங்கள் எழுத்துகளாக மாறுகிறது.ஆனால்,அவர்களது இதுநாள் வரையான கணிப்புகள்-திட்ட முலாங்கள் யாவும் தோல்வி கண்டுவருகிறது.காரணம்,சீனப் பொருதார வடிவங்குறித்த அவர்களது ஆய்வுகள் யாவும் சரியான முறையில் ஆய்வைச் செய்யவில்லை.அத்தோடு சீனக் கொம்யூனிசக் கட்சிக்கு ஒரு பலமான காரணி உண்டு:அதாவது கட்சியானது மனிதவரலாற்றிலிருந்து அனைத்து நன்மையான அநுபவங்களை தனக்குள் செரிக்கிறது.அத்துடன்,உலக நிலவரங்களையும் உள்வாங்கி ஆராய்கிறது.இன்னொரு பக்கம் எந்தப் பிரச்சனையையும் மிகத் தீவிரமான வெறியோடு சவாலாக ஏற்று ஆய்ந்து அறிவதில் விழிப்பாகச் செயற்படுகிறது.இவைகளே எங்களது அரசாங்கத்தின் இலாயக்கு.இவைகளை மேற்குலக ஊடகங்கள் புரிந்துகொள்ளவேயில்லை.உலகப் பொருளாதார நெருக்கடியை ஓரங்கட்ட நம்மிடம் பாரிய பொருளாதாரப் ஊக்கப் பொதி உண்டு.
… மொத்தவிட்டமாக இருக்கும் € 1.2 டிரில்லியன் யூரோக்கள் தானே? .
ஏற்றுக்கொள்கிறேன்.நாம் இந்த நெருக்கடியை நன்றாக் தீர்ப்பதில் வெற்றிகண்டோம்.முதன் முதலாகச் சீனாவே உலகத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டும் உள்ளது.
எதனால்,எப்படி முடிந்தது?
இந்த நெருக்கடியை ஓரங்கட்டித் தீர்ப்பதில் மட்டும் நாம் கவனத்தைக்கொண்டிருக்கவில்லை.இதன் நெருக்கடி குறித்த சரியான புரிதலை”ஏன்-எதற்கு”என்பதையொட்டிப் புரிந்து சீனாவினது பொருளாதார நகர்வில் மாற்றங்களைச் செய்வதும் நமது விருப்பாக இருந்தது.எங்களது பொருளாதாரக்கட்டமைபின்வழி நாம் அதிக உயர் சேவையைப் பெற விரும்புகிறோம்.இதன் வழியாக எதிர்காலத்தில் வரும் பொருளாதார நெருக்கடியை மிகச் சுலபமாக எதிர்கொண்டு நிவர்த்தி செய்ய முடியுமெனப் புரிகிறோம்.உதாரணமாக:பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றம்,உற்பத்திச்சாலை பொறிமுறைமாற்றம் மற்றும்வர்தகப் பொறி முறை மாற்றங்களைக் கவனப்படுத்துகிறோம். இவைகளின் மேம்பாட்டை நாம் இன்னும் எட்டிவிடவில்லை.இதுவே எமுக்குமுன் பாரிய கடமையாக இன்று உள்ளது.
பொருளாதாரத்தின் வெடிப்புக்கேற்ற சுடு நிலையினது தீவிரமான அபாயம், அதீத பணவீக்கத்தை ஏற்படுத்தும் ,உண்மை எந்தளவில் உள்ளது?
இது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. உற்பத்தி முறையில் மாற்றம் ஒப்பிடுகையில் பணவீக்கம் பிரச்சனை. ஆனால் அது ஒரு துணை வினைதாம்,நமது விருப்பமெல்லாம் பொருளாதாரப் பொறிமுறையில் மாற்றத்தை செய்வது,கூடவே,நிச்சயமாக, நாம் மேலும் பணவீக்க பிரச்சினைக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.பணவீக்க அபாயம் குறித்த அடிப்படை ஆய்வுகள் நம்மிடம் இருக்கிறது.நாங்கள் அதன் காரணங்கள்,வகை நிகழ்வுகள் குறித்த ஆய்வுக்குள் கண்டடைந்தது,இந்தப் பணவீக்கமானது பழைமையான பிரச்சனையிலிருந்து வேறப்பட்டதே அல்லது வேறானதே என்பதே.முன்னைய பிரச்சனையானது எமது ஊக்கமின்மை,அறிவிலித்தனம் அல்லது அறுவடை வீழ்ச்சியிலிருந்து எழுந்தன,அல்லது வேறு பொருளாதாரக் காரணிகளால் ஏற்பட்டது.அத்தோடு இதுவே பணவீக்கமாகப் புரியப்பட்டது.இம்முறையோ பணவீக்கத்தின் காரணமானதுக்குள் அதிகமான பணப்புழக்கமே காரணமாக இருக்கிறது.அத்தோடு இன்னுஞ்சில காரணங்களில், எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் பணவியல் கொள்கை. ஆனால், நமது சொந்த அரசியற் கொள்கைகளும் பணவீக்கத்தின் மிகபெரும் காரணமாக இருக்கிறது.எங்களது கணிப்பின்படி இந்தப் அதிதீவரப் பணவீக்கத்தை க் கட்டுப்படுத்த முடியும்.அத்தோடு நாம் அதைக் கட்டுப்படுத்திப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.அது, பாதிப்பை ஏற்படுத்துவதற்குள்ளும் தனிமனிதர்களைப் பாதிப்பதற்குள்ளும் இப்பிரச்சனைக் குறைத்துக்கொள்ள முடியும்.நாங்கள் பல அளவுகோலை இந்தப் பணவீக்கத்துக்கு எதிராக முன் தள்ளியுள்ளோம். எடுத்துக்காட்டாக:ஊதியத்தைக் கூட்டுவது,அதன் பலாபலனை மக்களுக்குள் இனம் கணாத்தக்கதாக இருந்தது.
மீளவும்,இன்னொரு முறை பொருளாதார நெருக்கடி குறித்த கேள்விக்கே செல்வோம்:ஐரோப்பியக்கூட்டமைப்பானது அதன் உறுப்பு நாடுகளது கடன் பளுவையிட்டு அதீத அச்சத்துக்குள் இருக்கிறது.திவாலுகும் அரசுகள் வரிசையில் ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள்பல திவாலகுமென கூறப்படுகிறது.மக்கள் சீனமோ இத்தகைய தேசங்களுக்கு உதவுவதாகவும்,அரச கடன் பத்திரங்களை வேண்டுவதுமாகக் கூறிக்கொண்டிருக்கிறது. கடன் செலுத்த முடியாதளவுக்கான தீவிரக் கடன் பளுவைச் சுமக்க முடியாத தேசங்களது வரிசையில் கிரேக்கம்,சிலவேளை போர்த்துக்கல்சாத்தியமானவரை அயர்லாந்து எனத் தொடர்கிறது.இதுகுறித்து மக்கள் சீனம் எத்தகைய சிந்தனையோடு-சிபாரிசோடு உள்ளது?இந்த நாடுகள் குறுகிய காலவெளிக்குள் மீளவும் தமது சொந்தக் காலில் நிற்கும் பொருளாதாரப் பலத்தை பெறுவார்களென எப்போதாவது கணித்திருக்கிறதா, இல்லையா…
சீனா மிக பெரிய அந்நிய செலாவணியைக் கொண்டிருக்கிறது, நாம் இன்னும் இதுகுறித்து எப்படிச் சமாளிப்து என்பதே பாரிய கேள்வி.முன்னர், நாம் முக்கியமாக அமெரிக்க கடன் பத்திரங்களை வாங்கிக்கொண்டோம்.அதுவே பாரிய இடர் சிக்கலுக்குரியதாக இருக்கிறது. ஆனால் , இப்போது நாம் ஆபத்தை குறைக்க விரும்பினோம் எனவே மற்ற நாடுகளின் அரசாங்க பத்திரங்களை வாங்க வேண்டும் என விரும்புகிறோம். சீனா பொருளாதார உலகமயமாக்கல் மற்றும் வர்த்தக தாராளமயமாக்கலை ஆதரிக்கிறது.
இதன் மூலமாக அனைத்து நாடுகளும் இதைப் பயன்படுத்தி நன்மை அடையுமென நம்புகிறோம் நாம்.இதைவிட்ட அதீத பாதுகாப்பு வாதமானது அனைத்தையும் பாதிப்புக்குள் தள்ளிவிடுகிறது.ஐரோப்பியக் கூ ட்டமைப்பு நாடுகளது அரச கடன் பத்திரங்களை வேண்டுவதனூடாக நாம் சுதந்திர வர்தகத்துள் எமது பாத்திரத்தை ஆற்ற முனைகிறோம்.
அத்தோடு நாம் விரும்புவதெல்லாம் நியாமான போட்டியை வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் வளர்முக நாடுகளுக்கிடையிலும் சாத்தியமாக்க விரும்புகிறோம். அதே போல் ஒரு “வெற்றி, வெற்றி” சூழ்நிலையை உருவாக்க நாம் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்குள் ஒரு சாத்தியமான சூழலை உருவாக்க முனைகிறோம்.
ஆபிரிக்க மீதான சீனாவினது அதீத ஈடுபாடு மேற்குலகோடு முட்டிமோதுகிறது.இது ஜேர்மனியோடும் என்றாகிறது.இது குறித்து மேற்கில் அதிகமாக விசனத்துக்குள்ளாகிய நாடுகள் கடுமையாக விமர்சிக்கின்றன.ஆபிரிக்க நாடுகளில் சில சீனாவோடான தமது பொருளாதாரவுறவை மிக நெருக்கமாகப் பேணிவருகின்றன. இவைகள்மீது மேற்குலக அரசுகள் சில அழுத்தங்களை பிரயோக்கிறது:சூடான் பிளவுபடப்போகும் நிலை,லிபியாவோ தினமும் குண்டுத்தாக்குதலுக்குள் உட்பட்டுள்ளது.இந்நிலையில் அங்கு சர்வதேசப் பலப் பரீட்சையில்-உறவுகளில் ஒரு மாற்றம் புலப்படுகிறதே.இது சீனாவினது வெளியுறவுக்கொள்கையில் ஏதாவது அர்த்தங்கொள்ளத்தக்கதா?
சீனாவானது ஆபிரிக்கத் தேசங்களது வளர்ச்சியில் அதிக ஆர்வமுள்ளவொரு நாடு.ஆபிரிகத் தேசமானது காலனித்துவ வாதிகளாலும்,ஏகாதிபத்தியவாதிகளாலும் பாதிப்படைந்து இருப்பது வரலாறு.சீனமக்களுக்கும் இந்த அநுபவ வரலாறு உண்டு.இந்த அடக்குமுறையின் தாக்கமானது ஏகாதிபத்தியத்தின் வினையே.
ஆப்பிரிக்கா மக்கள், எங்கள் ஆப்பிரிக்க நண்பர்கள் .அவர்களுக்கு எங்கள் உதவி வேண்டும், நாமும் அவர்களுக்கான உதவிகளைச் செய்கிறோம்.எங்கெங்கு உதவிகள் அவசியமாகத் தேவைப்படுகிறதோ அங்கே எங்கள் உதவிகள் உண்டு.இதுவே,சமவுரிமை உதவி.இஃது இருபக்கத்துக்கும் உட்டபட்ட நட்புரீதியான உறவு.அத்தோடு இந்த வகையிலான உதவிகள் இரண்டு தரப்புக்குமே சாதகமான விளைபயனைத் தரும்.நாங்கள் விரைவில் ஆப்பிரிக்க மக்களதுவறுமை மற்றும் பின்தங்கிய நிலையை அகற்ற விரும்புகிறோம்.இந்தக் கேள்விகளது திசையில் நமக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை.நாம் எந்தவிதக் காலனித்துவத் தூண்டுதல்களையும் கொண்டிருக்கவில்லை.இதுகுறித்து ஆபிரிக்க மக்களே சீனாவைக் குறித்து நன்றாக அறிந்துள்ளார்கள்.மேற்குலக அரசியல்வாதிகளே நெடுகப் புலம்புகின்றனர்,சீனாவானது உள்நோக்கத்தோடு ஆபிரிக்காமீது ஈடுபாடுகாட்டுவதாக.இதுவொரு அவதூறத்தை தவிர வேறென்ன.அத்தொடு இத்தகைய கேள்விகளைத் தொடரும் நாம் அவர்களது உள்விவகாரங்களோடு பிணைவதில்லை.ஆபிரிக்த் தேசத்தவர்களது உள்நாட்டு அரசியலில் நமது உறவுகள் எந்தத் தாக்கத்தையும் செய்வதில்லை,அவர்களுக்கு எமது உதவிகள் கிடைப்பினுங்கூட.
இத்தகைய தேசங்களில் பிரச்சனைகள் இருந்தால் அவர்களே அதைத் தீர்த்துவிடுவார்கள் என்றே நாம் கருதுகிறோம்.கூடவே,அந்தந்தத் தேசத்து மக்கள் இத்தகைய பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆற்றலுடையவர்களென்றே நாம் கருதுகிறோம்.அவர்களுக்கு அந்த ஆற்றலுண்டு,மாற்றார் அவசியமில்லை.இதுவே,எங்களுக்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்குமிடையிலான பாரிய வித்தியாசம்.
சீனக் கம்யுனிசக் கட்சியின் அதியுயர் கல்வி நிறுவனமான மத்திய குழு உயர் கல்லூரியின் துணைவேந்தராக இருந்தீர்கள்.அதவாது,இது சீனக் கொம்யூனிசக் கட்சியின்அதியுயர் கல்வி-அறிவுத்துறையானது. எனவே,சீனாவில்இன்று, மார்க்சிசம் எந்தப் பாத்திரத்தில் வினையாற்றுகிறது என்பதை விளக்க முடியுமா?
சீனக் கொம்யூனிசக் கட்சியினது உலகக் கண்ணோட்டத்தைத் தீர்மானிக்கும் அடிப்படைத் தத்துவார்த்தக் கருவியாக மார்சிசம் இருக்கிறது.எங்களது சிந்தனைப்போக்கில் இந்த மார்க்சிசமானது சீனச் சூழலுக்கேற்ற, அந்த மண்ணினது விசேசத் தன்மைகளுக்கேற்ப,அதைப் புரிந்துகொண்ட மார்க்சிசமே:மார்க்சிசம்,லெனியம்,மாவோயிசம் மற்றும் டெங்கினது சிந்தனைகள் இணைந்த “மூவகைப் பிரதிநித்துவம்”என்பதோடு, அறிவியல் ரீதியான அபிவிருத்தித்திட்டமாக மார்சிசம் பங்காற்றுகிறது.மார்க்சியத்தை நாம் மறுக்க முடியாத-மாற்ற முடியாத தத்துவமாகக் கற்கவில்லை.மாறாக,மார்க்சியத்தைச் சீனாவினது யதார்த்த நிலைமைக்கொப்ப இணைக்க விரும்புகிறோம்.அதையே செயற்படுத்துகிறோம்.
ஒரு மார்க்சிச வாதியாக,சீனாவினது குணாதிசயங்கள் கொண்ட சோசலிசப் பண்ணபக்கொண்டு, உலக சோசலிச அபிவிருத்தியில் ஏற்படும் முரண்பாடுகளைத்தீர்க்க எந்தப் பதிலைத் தரமுடியும்?
நாங்கள் மார்க்சிசத்தை எங்களுக்குள் கலப்புற வைக்கின்றோம். கட்சிச் செயற்பாட்டாளர்களும்,உறுப்பினர்களும் மார்க்சியத்திலிருந்து இரண்டு அளவுகோல்களைக் கற்கின்றனர்.முதலாவதாக, நாங்கள் மார்க்சினது முக்கியமான கட்டுரைகளைத் தேர்கிறோம்,இவற்றின்வழியாக சீனாவினது வளர்ச்சியைக் கற்கிறோம்.மார்க்சினது ஆய்வுகள்-கட்டுரைகள் யாவும் கட்சி உறப்பினருக்குக் கட்டாயமான பாடமாகும்.இவற்றை அவர்கள் தொடர்ந்து வாசிக்க- கற்றுக்கொள்ளவேண்டும். இரண்டாவது, நாம் மதிப்பிடுவது,மார்க்சியத்தினது முக்கியமான வரலாற்று அநுபவங்களிலிருந்து பிரச்சனைகளைத் தீர்ப்பது அணுகுவது.மார்க்சிய முறை வழியில் சீன யதார்த்த நிலைக்கொப்ப பிரச்சனைகளைத் தீர்ப்பது நமது விருப்பமாகும்:
மக்கள் சீனாமானது,மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் மொத்தத் தொகுப்பையும்[MEGA]மொழி பெயர்த்து முடித்த கையோடு பாரிய நூற் தொகுதிகளாகச் சீன மொழியில் வெளியிட்டது.இப்போதும் அவ்வண்ணம் மேலும் மார்க்சியப் பகுப்பாய்வு நூல்களைத் தெரிந்தெடுத்து,மதிப்பீடுசெய்து, பதிப்பிலிட்டு வெளியிடுவீர்களா?
கடந்த ஆண்டு நாம் இரண்டு முக்கியமான திட்டங்களை நிறைவு செய்து வெளியிட்டோம்.முலாவதாக,மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்சினது 10 தொகுதிகளான மேகா பதிப்பு.மற்றும்,5 தொகுதிகளடங்கிய லெனினது தேர்வு நூல்கள்.நாம் இந்த 15 தொகுதிகளது உள்ளடக்கங்களை மதிப்பீடுசெய்து அவற்றைத் தொகை நூலாக்கி இணைக்கிறோம். இந்தத் தொகை நூற்றொகுதியே எங்களது கட்சிச் செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினகளுக்கான கட்டாயப் பாட நூற்கள்.
http://www.jungewelt.de/2011/07-16/001.php
டொச் மொழியிலிருந்து தமிழில்:
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
01.08.2011
நன்றி சிறிரங்கன் தங்களின் மொழிபெயர்ப்பிற்கு…இளைஞர் உலகம் சஞ்சிகை உணமையில் பலனுள்ள தகவல்களால் நிரப்பப்பட்டிருந்தாலும் இப்பேட்டி இன்றைக்கு அவசியமா? என்கின்ற ஒரு கேள்வி எழுகின்றது.சீனக்கம்யூனிசம் மார்க்சீயத்திற்குள் கலந்து புகுந்துள்ளது என்பது உண்மையில் விசனத்திற்கும் வியப்பிற்குமுரியது.சீனப்பேராசிரியரின் கூற்றுக்கள் பலவிடங்களில் அங்குள்ள யதார்த்தவாழ்வியலோடு பொருந்திப் போகவில்லை. ஆபிரிக்க ஏக்கத்தைத் துடைக்கத் துடிக்கும் மாந்தர்கள் அருகிலிருக்கும் திபெத்தியரின் ஏக்கத்தைப் புரிந்தவராகவில்லை.சவர்க்காரநுரைக்குமுழி போன்று சீனப்பொருண்மியம் வெடிப்புறும் என்பது சாபமல்ல.அது ஆய்வு கந்தகப்புகைகளாலும்,பாரியகழிவுகளாலும்,நிலமகழ்படுவதாலும் என்றுமில்லாவகையில் சீனம் மிகுந்தகலவரம் கொண்டுள்ள வேளையிது.கம்யுனிசக்கட்டுமானத்தால் அஙக்குள்ள ஏழைகள் கவரப்படவில்லை.என்பதே உண்மை.
பிடுங்கி,
சீனப் பொருளாதாரம் வெடிக்கும் என்பது ஆய்வென்பதில் சந்தேகமில்லை.
ஆனால், சீனாவினது பொருளாதாரத்துக்கு 3000.ஆண்டுகால வரலாற்றுப்பின்புலம் உண்டு.அஃது, தன்னைத் தகவமைக்கும் தகமையில் மார்க்சிய ஆயுதத்தைக்கொண்டிருக்கிறது.
புதிய சீனத்தைப் புரிவதானால் நாம் ஆசிய மூளையான பேராசிரியர் கிஷோர் மபுபானியை [Kishore Mahbubani]முடிந்தவரை [http://www.amazon.de/Die-R%C3%BCckkehr-Asiens-westlichen-Dominanz/dp/3549073518 ]கற்றாக வேண்டும்.இந்தியாவும்-சீனாவும் மேற்குலகத்துக்கு முன் பொருளாதாரப் பேரரசுகளாக இருந்திருக்கின்றன.
அவைகளுக்கு ஆயிரக்கணக்கான வரலாற்றுப் பின்புலம், பல நூறுமில்லியன்கள் மக்கட்டொகையுடைய உள்நாட்டுச் சந்தையும்[Binnenmarkt ]உண்டு.
இதைக் கணக்கெடுக்காமல்,மூலவள வறுமையுடையதும்,வெளியுலகச் சந்தையில்(ஏற்றுமதி-மற்றும் மூலவள வறுமையுடைய ஐரோப்பா_”Rohstoffarme Länder wie Deutschland …”) தங்கியுள்ள மேற்கு வகைப்பட்ட முதலாளியத்தை இத்தகைய நாடுகளுக்குப் பொருத்த முடியாதென்பது எனது கருத்து.
” …………..மார்க்சியத்தைச் சீனாவினது யதார்த்த நிலைமைக்கொப்ப இணைக்க விரும்புகிறோம்.அதையே செயற்படுத்துகிறோம்….”
Li Junru
“பைபிளைக் கொடுத்து” நிலங்களை பறித்த காலங்கள் கடந்தவையாகப் போக,”மாக்சிசம் காட்டிய” சூறையாடலில் சீன வென்று வருகிறது.
நெருஞ்சி முன் தீர்ப்பு இருக்கே-அதுதாம் உலகத்தின் மிகப் பெரிய தலைவலி!என்ன செய்ய?எல்லாம்…பட் பட் வரையறைகளாய் நமக்குள்…மார்க்சியத்தைக் காட்டி எதையும் பறிக்க முடியாது.மார்க்சியத்தை படித்தவுடன் அதைக் கொடுத்தவனையே அடுத்தபடி சந்தேகித்துக் கவனமாக இருக்க முடியும்.:-)
தங்களின் தேடுதலுக்கும், வாசிப்பிற்கும் வாழ்த்துக்கள்.உண்மையில் கிசோர் 1971க்குப்பிற்பாடே தத்துவவியலில் பட்டம் பெற்றுப்பேராசிரியரானவர். அவர் சிங்கப்பூரில் பிறந்தாலும் ஆசிய மூளை என்பதைவிட இந்திய மூளை என்பத சாலச்சிறப்பு.3000ஆண்டுகாலப்பழமைமிக்கதல்ல.சீனப்பொருண்மியம். அது மாவோவின் செங்கொடியோடுதான் சன்னத
ம் கொண்டது. 3000ஆன்டு காலவரலாறு ஒருவேளை கன்பூசியசின் பழைமைவாத இருப்பாக இருந்திருக்கலாம். அனுமானத்தின்பேரில் காலம் தீர்மானிப்பது மிகமிக அபத்தமானதென்றே எண்ணுகின்றேன்.சிங்கப்பூரின் குவான் லீ பெரியமீன்கள் சிறியமீன்களை பிடித்துவிடும் டமுறையை மாற்றி சிங்கப்பூரைக்கட்டியவர்.அவரைஆசியமூளை எனல் தகும்.
[quote]இத்தகைய தேசங்களில் பிரச்சனைகள் இருந்தால் அவர்களே அதைத் தீர்த்துவிடுவார்கள் என்றே நாம் கருதுகிறோம்.கூடவே,அந்தந்தத் தேசத்து மக்கள் இத்தகைய பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆற்றலுடையவர்களென்றே நாம் கருதுகிறோம்.அவர்களுக்கு அந்த ஆற்றலுண்டு,மாற்றார் அவசியமில்லை.இதுவே,எங்களுக்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்குமிடையிலான பாரிய வித்தியாசம்[/quote].
சிறிலங்காவிலயும் தாங்கள் ஒன்றும் செய்யவில்லை என சொல்லுவினம் போலகிடக்குது…….யாருக்கு றீல் விடுகிறாங்கள்
பிடுங்கி
நான் குறித்த 3000.ஆண்டுகள் என்பது பொருளாதாரம் குறித்த அல்ல.சீனவினது சமூக அசைவியத்தின் அநுபவங்களுக்கு 3000 ஆண்டுகள் அநுபவப்படமுண்டு.அதை சீனக் கொம்யூனிசக் கட்சி தொகுத்து வைத்துள்ளது.இந்தியா ஆசிவுக்குள்தானே இருக்கிறது.அத்தோடு சீனா-இந்தியாவின் உள்நாட்டுச் சந்தை அவர்களது அரச ஆதிகத்துக்குட்பட்டது.ஐரோப்பியர்களது நுகர்வுத்திறனுக்கொப்ப இத்தைய நாடுகளில் தலா200-300 மில்லியன்கள் மக்கள் இத் தேசத்தில் இருப்பது ஏற்றுமிதியை நம்பிய பொருண்மியமாக இருக்காது அதைவிடப் பலமான உள்நாட்டுச்சந்தைக் கொண்டிருப்பது பல சாதகத்தை இந்திய-சீனப் பொருளதாரங்களுக்கு வழங்குவதும் கூடவே இத் தேசங்கள் மூலவளத்தில் (ரோப்பாவைவிட நிறைவுடையவை.
அடுத்துப் பொருளாதாரங்குறித்த விவாதமென்பது அல்லது அறிவென்பதற்கு 300 ஆண்டுகால வரலாறே உண்டென்பது எனது கணிப்பு.
பொருளாதாரப் பாடமானது உலகில் மிக,மிகப் பழமையானதல்ல. இயற்பில்,மருத்துவம்,கணிதத்துக்கு உள்ளதுபோன்று பழமையான அறிவுப்பரப்பு பொருளியல் அறிவுக்கு இல்லை.இது வளரும் நிலையிலேயே இன்றும் இருக்கிறது.இப்படிக் கூறாதிருந்தால் சமூகத்தின் வளர்ச்சிக்கட்டம் முடிவடைந்திருக்கணும்.இஃது சாத்தியமின்றியிருந்தால் வளரும் தன்மையில் பொருளாதாரவாழ்வு இருக்கிறது.
பொருளாதாரம் வளர்ந்த நிலையென்பது தனியார் தத்தமது பண இருப்பைக் கட்டடங்களாகக் கொண்டிருப்பதால் ஏற்படுவதல்ல.மாறாக மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவுசெய்யவும்,உழைப்பு நேரம்குன்றிய பொழுதில் அனைத்தையும் பெறும் இயங்கு நிலையே வளர்ச்சி நிலையாகும்.இங்கு மக்கள் தேர்வானது சுதந்திரமான வாழ்வாகவும்,சமாதானமான உற்பத்தியுமாகவிருக்கும்.
தேசியப் பொருளாதாரம்-பொருளாதாரம் எனும் வார்த்தையானது முதன்முதலில் 1776 ஆம் ஆண்டளவிலேயே உருவாகிறது.இந்தக்காலக்கட்டமானது கொலனித்துவத்தின் உச்சக்கட்டமாகும்.உலகின் அனைத்து வளங்களையும் பிரிடிஸ் ஏகாதிபத்தியம் சுரண்டிக் கொண்டிருந்த காலத்தில் தேசியப் பொருளாதாரம் குறித்த கருத்தமைவானது இந்த ஆளும் கும்பலுக்கு அவசியமாகவிருந்தது.இதை உந்தித் தள்ளிய மிகையான செல்வக் குவிப்பானது அதன் இருத்தலுக்கும்,பாதுகாப்பக்கும் அவசியமான உற்பத்திப் பொறிமுறைகளைவேண்டிக் கொண்டது.அன்றைய தேவையைக் குறித்த சிந்தனையானது’தேசியச் செல்வத்தின் காரணியும் இயற்கைக்கூடான ஆய்வும்’எனும் தலைப்பில் ஆடம் சிமித்தை(1723-1790) சிந்திக்கத்தூண்டியது.1776 வருடம் மேற்காணும் தலைப்பில் வெளியிட்ட அவரது பொருளியல் நூலானது இன்றுவரையும் முதலாளியத்தின் பாடத்திட்டத்தில் முடிசூடா மன்னனாக இருக்கிறது. ஆடாம் சிமித்தும் அவரது முன்னோர்களின் எண்ணங்களும் ‘சுதந்திரப் பொருளாதார அரசியலை’வலியுறுத்துகிறது.இது கண்டம்விட்டுக் கண்டத்தைச் சுரண்ட தனிநபர்களைத் திரட்டும் அரசியலைப் பரிந்துரைக்கிறது.தனிப்பட்ட ஏகாதிபத்திய முதலாளி தனது அடியாட்படையுடன் உலகத்தைக் கொள்ளையிட இது கோரிக்கைவிடுகிறது.இதன் அர்த்தமானது’சுதந்திர வர்த்தகம்’,’போட்டி’,’தனித்துவ நிறுவனங்கள்’,தனியார் செல்வம்’ஆகியவற்றைப் பலப்படுத்துவதும்-பெருக்கிக் கொள்வதாகும்.இதனை அரசு ஏற்கும் பட்சத்தில் அனைவருக்கும் மகிழ்வான வாழ்வுகிட்டுமென்பது ஆடமின் பொய்யுரையாகும்.இதன்படி உலகம் போரையும் அதீதசுரண்டலையும் இன்றுவரை கடைப்பிடிக்கின்றது.இதற்கு ‘மான்சிஸ்டர் லிபிரால்கள்’19ஆம் நூற்றாண்டில் மிகக் கேவலமான சமூகச்சமமின்மையையும்,அடிமைத்தனத்தையும் தந்து நிரூபித்தார்கள். அப்போ இதன் மாற்று யாது?
ஆடம் சிமித்தும்,கார்ல் மார்க்சும்:
மூலதனத்தின் தனியுரிமைக்கும்,எதுவமற்ற தொழிலாளர்களுக்குமான காரணியை ஆடம் சிமித்துக்கு நேரெதிராகக் கண்டவர் கார்ல் மார்க்ஸ்(1818-1883)’கூலியானது செய்த வேலைக்கான பெறுமானமல்ல,மாறாகத் தொழிலாளி அரைவயிற்றை நிரப்பிக் கொண்டு மறுநாள் வேலைக்கு வருவதற்கான-உயிர்ப்புக்கிடும் பிச்சை’என்றார்.இதன்மூலம் முதலாளி தனக்குச் சொந்மில்லாத-தொழிலாளியின் உழைப்பைச் சுரண்டி மிகையான உபரியை செல்வமாக்கிறான் என்ற விஞ்ஞானத்தைக் கண்டடைந்தார்.இதனால் சமூகத்தில் ஏற்றதாழ்வும்,வர்க்கப்பிரிவினையும் நிதர்சனமானது.இது காலாகாலத்துக்கும் நீடித்தபடியே வர்க்கச் சண்டையைக் கொண்டு மக்களையும்,உலகத்தையும் நாசமாக்கும்.எனவே பாட்டாளிய வர்க்கமானது பலாத்தகாரமாக தனியுடமை முறைமையைத் தூக்கியெறிந்துவிட்டு,உற்பத்திச் சக்திகளை பொதுவுடமையாக்கியாகவேண்டும்.இதன்மூலம் வர்க்கபேதமற்ற மனித வாழ்வை எய்திட முடியும்.மார்க்சின் கருத்தானது இன்றுவரையும் எந்தக் கொம்பனாலும் முறியடிக்க முடியாத விஞ்ஞானமாகும்.
மார்க்சும்,ஆடம் சிமித்தும் வெவ்வேறான சமுதாயத்தையும்-பொருளாதார உறவுகளையும், முறைமைகளையும் கண்டடைந்தபோது-இவர்களுக்கருகில்(இடையில்?) உருவாக்கப்பட்டதுதாம் சில்வியோ கேசலின்(Sivio GESELL 1862-1930)நியாயப் பொருளியலும்(Die Natuerliche Wirtschafts Ordnung இயற்கையான பொருளியல் ஓழுங்கு),ஜோண் மைனார்ட் கெய்னெஸ்டின்(John Maynard Keynes 1883-1946) ‘பற்றாக்குறை கிடப்பு’திட்டவாக்கமாகும்.
கேசலும் கேய்னெஸ்சும்:
கேசலின் Silvio Gesell (1862 – 1930)பொருளாதாரவிதிகள் இன்று மிகப் பரிச்சியமான எடுகோளாக மாற்றப்பட்ட நிலையிற்றாம் நம்மில் பலர் மாக்சியத்தைக் கெட்டிதட்டிய தத்துவமாகவும்,காலப் பொருத்தமற்ற கற்பனாவாத-உடோப்பிசமெனச் சொல்கிறார்கள்.இவர்களிடம் நியாயமிருப்பதற்கான எந்தத் தரவுமில்லை.ஏனெனில் இவர்களின் ஆசான் கேசலிடமும்,கெய்னெஸ்சிடமும் இந்த விவகாரம் குறித்த விஞ்ஞானமில்லை.
சில்வியோ கேசலின் பிரச்சனை என்னவென்றால்,சமூகத்தின் வறுமைக்கு-ஏற்றதாழ்வுக்கு மார்க்சியக் காரணிகளான ‘உற்பத்திச் சக்திகளின் தனியுடமை’ காரணமில்லை என்பதே.இஃது திட்டமிட்ட தவறென்பதை கேசல் முன்வைத்தபோதே அவர் தவறுசெய்வதாக அன்றே பல ஆய்வாளர்கள் சுட்டியும்,இதை இன்றுவரை சந்தைப்பொருளாதார வாதிகள் அழுங்குப் பிடியாய்ப் பிடித்துள்ளார்கள்.சமூகத்தின் வறுமைக்கு’நிலத்தின் தனியுடமையும்’பணத்தின் சழற்சியுமே’ காரணமாகக் கேசல் முன்மொழிகிறார்.பணம் தனிநபர்களை செல்வந்தர்களாக்கும்போது ,அப்பணமானது கருப்புப் பணமாக நிலவுரிமையைக் கைப்பற்றும்.இஃது எப்பவோ பதுக்கப்பட்டு,பணமுடக்கத்தைச் செய்து- பின் வெளிவரும்போது பொருளாதாரச் சுற்றோட்டத்தை தேங்க வைக்கிறது,இதனால் மீளவும் பற்றாக் குறையானது கடன் பளுவைச் செய்யத்தூண்டும்.கடனின் வட்டியும்-வட்டிக்குவட்டியும் பெரும்பாலான உற்பத்திச் செலவை உயர்த்தும்.இதன்போது நிகழும் தாக்கமானது சமூக ஏற்றதாழ்வையும்,வறுமையையும் ஏற்படுத்துவதாகவும் கேசல் முன்வைக்கிறார்.சமூகவுற்பத்தி தாழ்ந்த நிலையிலும், அரச கடன் பளு உயர்ந்தும் சமுதாயத்தை வறுமைக்குள் தள்ளுவதாகக் கூறினார்.இங்கே அவர் உற்பத்திச் சக்திகளின் தனியுடமையானது உபரியை ஏற்படுத்துவதை திட்டமிட்டு மறுத்தார். பொருளாதாரத்தின் அதீத வளர்ச்சியானது சமூக உற்பத்தியைவிட பன்மடங்கு உயரும்போது கூடிவளரும் பங்கீடானது.இது கீழிருந்து(தொழிலாளர்களிடமிருந்து) மேல்நோக்கி(உடமையாளர்களுக்கு) பங்கீட்டைச் செய்வதாகவும்,இதன் வேகம் அதிகமாகும்போது நிலமையை அரசு கட்டுப்படுத்த முடியாததாகவும் முன்மொழியப் படுகிறது.
இதைக் காரணமாகக்கொண்டு கேசல் ‘சுதந்திர பணம்,வட்டியற்ற நிதி'(Umlaufgesichertes Geld – Idee und Rationalisierung)பாதுகாப்பான பணச் சுற்றோட்டம் மற்றும் எண்ணம்-நியாயத்தன்மை) என்னும் மாய மானைத் துணைக்கழைக்கின்றார்.இதை இன்றுவரை முதலாளிகள் செய்யவுமில்லை.நிலவுரிமையை அரசிடம் கையளிக்கவுமில்லை.அந்தோ கேசல் மரணப்படுக்கையில்.மயிலே,மயிலே இறகிடுவாயா என்பதே கேசலின் நிலைமை.கேசலின் மொழிவானது ‘சுதந்திர நிலம்’மக்களின் சொத்தாக அரசிடமிருந்து வட்டியற்ற குத்தகையாகவும் இருக்கின்றது.கெய்னெஸ் ஆடம் சிமித்தைப் பின் பற்றும் மனிதர்.இவரின் திட்டத்தை செயற்படுத்தவிரும்பிய மூலதனவாதிகள் இன்று போரினினூடு ஜனநாயகம் பேசுவதில் வல்லவர்களானார்கள். அதாவது பொருளாதாரச் சுற்றோட்டத்தில் அரசு சமூக உற்பத்திகளை-அரச ஒப்பந்தங்களை தனியாரிடம் கையளித்து,உற்பத்தியாளருக்கு வரிச் சலுகை செய்யும்போது பொருட்களின் விலை குறைந்து நுகர்வாண்மை பெருகுமென்பது கெய்னெசின் கூற்று.இன்று நம்முன் விரிந்துகிடக்கும் தவறுகளை இவர் பெயரால் சொல்லித்தப்ப பொருளியலாளர் முனைகிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டின் இறுதியரைப்பகுதிபூராகவும் கேய்னிசம்(Keynesianimus) பொருளாதாரத்திலும் அரசியலிலும் மாபெரும் செல்வாக்குச் செலுத்திய பொருளாதாரத் தத்துவமாகும்.கடன் நிதிமூலதனத்தினால் நிதியிட்டுக்கொள்ளப்பட்ட அரசநிதிப் பொறிமுறையானது மேற்குலகப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தித் தெம்பிட்டது.ஜேர்மனி இந்தப் பொறிமுறையை ஐம்பதுகளில் அச்சொட்டாகக் கடைப்பிடித்தது.இதன் தாக்கம் இன்று பெரும் அரச கடன் சுமையாக இருக்குமென அன்றைய கேய்னிசின் விசிறிகள் கனவும் கண்டிருக்கவில்லை.ஆரம்பத்தில்பொருளாதார வளர்ச்சியும்,சமூக அமைதியும் இதன்மூலம் கிட்டியதுண்மை.இதை நீண்டகால நோக்கில் பெரும் வருவாய்யாக்கிக்கொண்ட பெருமுதலாளிகள் வர்க்கம் வங்கிகளை இடைத் தரகர்களாக்கிக் கொண்டு அரசையும்,மக்களையும் ஒட்டச் சுரண்டிக் கொழுத்தது.இதன் தாக்கத்தால் இன்றிந்தக்காரியத்தை மூடிமறைக்க அரசும்,அரசிலாளர்களும் பெரும் பிரயத்தனப்பட்டு மக்களைத் திசைதிருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
Chinas Wirtschaft strotzt dagegen weiter vor Kraft: Seit mehr als einem Jahrzehnt wächst das Bruttoinlandsprodukt des Landes um rund zehn Prozent pro Jahr. “USA und China nehmen derzeit einen komplett unterschiedlichen Wachstumsverlauf”, sagte der Barclays-Analyst Ju Wang gegenüber Bloomberg.
http://www.spiegel.de/wirtschaft/unternehmen/0,1518,778147,00.html
சோவியத்யூனியன் சிதறிக்கப் பட்டது. கிழக்குஜேர்மன் குட்டிமுதாலித்துவ போராட்டதால் அதற்கு ஊக்கஊசி இடைவிடாத மேற்குஜேர்மனியரசும் அதை தொடர்ந்து சிகப்பை அகற்றிவிட்டால் தமது நாட்டை முற்னேற்றம் காண முடியும் என முதாலித்துவத்துடன் உறவை பேணியவர் கனவுகள் உடைக்கப்பட்டு…சர்வதேச தொழிலாளவர்கத்து முன்னால் அம்மணமாக காட்சி தருகிறார்கள்.
கம்யூனிஸம் தளர்ந்துவிட்டது.மாக்ஸியம் இறந்துவிட்டது. முதாலித்துவம் இறவாண்மை கொண்டிருக்கிறது. தனக்காண தீர்வை எப்பவும் அது தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஆகவே தொழிலாளர் விவசாயிகள் இனப்பிரச்னைகள் பழம்குடிமக்களுடைய அம்பு வில்லு கோடலிகளை பறித்து அவர்களின் பூர்வீக பூமியில் இருந்து விரட்டியடிக்பட்டு தேசியமுதாலித்திற்கு தீனிபோடுவதும் பலயெதிர்ப்பு மத்தியிலும் இந்த உலகத்தில் எதுவும்நடவாதவை போல அதுவும் சர்வசாதாரணமாகவே நடந்துகொண்டிருக்கிறது.
மாக்ஸியத்திற்கு என்னநடந்தது? சர்வதேசதொழிலாளவர்க்கத்திற்கு என்னநடந்தது?? இந்த மனிதகுலத்திற்கு முன்னால் இன்று பூதாகரமாக தோன்றியிருக்கும் நோய்கள்
யுத்தபீதி இந்த உலகை நிரந்தரமாகவே கவ்விபிடித்து விடுமா? இதில் மீண்டுவருவதற்கு ஏதுவும் வாய்ப்புகளே! இல்லையா? அல்லது சிறீரங்கனுக்கு வந்த சந்தேகம் மாதிரி தமிழ்மக்களின் பிரச்சனையை தமிழ்மக்கள் தான் தீர்த்து கொள்ளவேண்டுமா? ஏன்எமது இனத்துக்குள் உழைப்பாளர்கள் பாட்டாளிகள் விவசாயிகள் தொழிலாளர்கள் அகதிகள் இல்லையா?
இல்லையிவர்கள் உலகத்தொழிலாளவர்க்த்துடன் உலகத்தொழிலாளர்களுடன் பிணைப்பை ஏற்படுத்த ஐக்கியபட தயக்கம் காட்டுபவர்களா? அப்படியென்றால் இவர் ஏன்சீனாவுக்கும் ஜேர்மனிக்கும் தாவிசெய்தி சேகரிக்க வேண்டும்? தமிழ்மக்களிடமே தனது நம்பிக்கையை வைத்திருக்கலாமே? இப்படியான கேள்விகள் எனக்கு நியாயம் போல் தோன்றுவதும் அல்லாமல் அவசியமாகவும் தெரிகிறது.
மனிதவரலாற்றில் பிரென்சுபுரட்சியை போல் பாரீஸ்கம்யூனை போல் சோவியத்யூனியனை ஏற்படுத்திய அக்டோபர்புரட்சி அதை தொடர்ந்து குட்டிமுதாலித்துவ தலைமையான…..புரட்சியை நடத்தியவர்களே புதைகுளிக்கு அனுப்பிய யோசப்ஸ்டாலின்..அந்தந்த நாடுகளின் ஸ்தூலவடிவத்திற்கேற்ப புரட்சி செய்வதே மாக்ஸியபுரட்சி என்று மாவோவால் எழுந்து நின்ற மக்கள்சீனம் வரலாறுகள் பதிவுகள் அக்குவேறு ஆணிவேறாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதால் இந்த
இரு மாபெரும் தேசங்கள் என்றுமே பின்நோக்கி போவதில்லை. மாறான முன்நோக்கியே செல்லும்.
இங்குதான் மாக்ஸியத்திற்கான கேள்வி எழுகிறது. வர்க்கம் இரண்டு என்றார். ஒன்று மூலதனத்தை வங்கிகளை பிரச்சாரஸ்தாபனங்களை உற்பத்திகருவிகளை தம்வசம் வைத்திருக்கிற சுரண்டும் வர்க்கமான முதாலித்துவவர்க்கம். மற்றயது உலகின் பெரும்பகுதியினரைக் கொண்ட சுரண்டப்படும் வர்க்கமான உழைப்பாளிவர்க்கம். ஆதாயத்திற்கான உற்பத்திமுறையில் முதாலித்துவர்க்கம் வெறிகொண்டு அலைகிறது என்பதையும் தனது சக்திகளையுட்படுத்தி நாடுகளை அடிமைப்படுத்துகிறது என்றும் தமக்கிருக்கும் போட்டாபோட்டி விளைவாக தேக்க நிலை ஏற்டுகிறது என்றும் இறுதியில் மாபெரும்யுத்தங்களையும் தோற்றிவிடுகிறது என்றும் சொன்னார். இறுதியில் இதைதடுத்து நிறுத்த தொழிலாளிவர்கத்தாலேயே முடியும் என்றும்.. . . ஆகவே உங்களை பிணைத்துள்ள விலங்குகள் உடைத்தெறிய படவேண்டுமானால் உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று தனது அறிகையை முடிக்கிறார்.
புரட்சியா?. உலகப்புரட்சியா??….ஒருசர்வதேசக்கட்சியா??? என்று குட்டிமுதாலித்து பண்புகளை கொண்டவர்கள் இதைக்கேட்டு கெக்கட்டம் விட்டுசிரித்தார்கள். இன்றும் சிரிக்கிறார்கள். இனியும் சிரிப்பார்கள். சிரிப்பே வாழ்க்கையாக கொண்டவர்களுக்கு அந்த உரிமையிருப்பதை நாங்கள் மறுக்கவில்லை. சிரிப்தற்கு முதல்… உலகத்திற்கு நீதிசொன்ன ஐக்கியஅமெரிக்கா உலகிலேயே மாபெரும் கடன்கார நாடுயாகியது எப்படி? என்பதையும் அமெரிக்கதொழிலாளவர்கத்தின் வாயில் வயிற்றில் குடியிருக்கும் கூரையை பிடுங்கியெறிந்து தாக்குதல் தொடுக்காமல் தன்னால் தனது சேமிப்பை நடத்தி தனதுநாணயமான டொலர் எரிந்து போகாமல் தடுக்க முடியுமா?… கவனத்தில் எடுக்கவேண்டும்
இதே நாடகங்கள் தான் ஐரோப்பாவிலும் தப்புதாளம் இல்லாமல் தினமும் அரற்கேறிக் கொண்டிருக்கிறது. பெரும்அணை என்று சொன்ன ஐரோப்பியயூனியன் உடைப்பெடுக்க தயாராகிறது ஆரம்பிக்கிறது. இது நாளாந்த வேலைஇழப்பாகவும் பொதுசொத்துகளை தனியாருக்கு விற்றுதள்ளுவதாகவும் சமூகவெட்டுகளை ஒருபக்கவெட்டிகொண்டும் சிலுவையுத்தம் நடந்தகாலங்களுக்கு திரும்பிப் போவதே! முதாலித்துவதை மீட்பதற்கான வழியென கருதி முஸ்லீங்களுக்கு ஒருமதவெறியை ஏற்படுத்துவதன் மூலமான கைங்கரியங்களில் இடைவிடாது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. ….
முதலாளிவர்க்கம் என்கிறஒருநாணயத்தின் மறுபக்கவடிவமே பாஸிசம்.இந்த பாஸிச வடிவத்துடன் ஒப்பந்தம் செய்தவரே யோசப்ஸ்டாலின். இதை கச்சிதமாக செய்ததாலேயே பலகோடி உயிர்களை காவுகொடுத்து முதாலித்தவத்தின் கருசரணை
யாளர் ஆனார். இவரின் செயல் முறையில் குறைகண்டு கொண்டவர்கள் அல்ல மாவோ என்கிற மக்கள்சீனம். இவர்கள் வேறுமுறையாக முதாலித்தவத்தின் உறவை வைத்து வளர்த்துக் கொண்டார்கள். அதுவே பிங்பொங் மட்டையடி. சீனாவில் பொருளாதாரமும் கட்டிடம் கட்டுமானங்களும் வளர்ந்தது என்னவோ உண்மைதான். மக்கள்சீனம் வளர்ந்தது.முதாலித்தவம் வளர்ந்தது. புதிய புதிய கோடீஸ்வரர்கள் தோன்றினார்கள். இன்று மலிந்த கூலிஉழைப்புயுள்ள நாடாக மக்கள்சீனமும் ஒன்றாக கருதப்படுகிறது. நகரத்தொழிலாளர்களின் இயலாவை பாரிய தொழில்சாலைகளில் தொழிலாளார்களின் தற்கொலைகளாக வெளிப்படுகிறது
இங்குதான் லியுங்ரூவின் கருத்தை கவனத்தில் எடுக்கவேண்டிய தேவையுள்ளது.
மாக்ஸியம் இதற்கு முன்பு மக்கள்சீனத்தில் இருக்கவில்லையா? இனிமேல்தானா மாக்ஸியத்திற்குள் கலக்கப்போகிறார்கள்?இது வரை நீங்கள் தனியொருநாட்டு சோஸலிசவாதியாகவா இருந்தீர்களா?. உண்மையும் அதுவே!.
மாக்ஸியம் வெளிபடுத்திய வரலாறுயுண்மைகள் தீர்க்கமானவை. இயங்கியல் பொருள்முதல்வாதத்தை அடிப்படையாகக்கொண்டவை.விஞ்யாண பூர்வமானவை. அதேபோல் தொழிலாளவர்க்கம் தனது நேரடித்தலையீட்டாலேயே தனது வெற்றியை பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதும் மறக்கமுடியாத உண்மை. டொலரும் யூரோவுக்கும் என்னநிலை ஏற்படப் போகிறதோ! அதே நிலைதான் யுவானுக்கும் ஏற்படும். இதுவே முதாலித்தவத்தின் விதி. இந்த விதியில் சர்வதேச தொழிலாளவர்கம் என்கிற பதம் ஒரு முற்போக்கு எண்ணம் கொண்ட தொழிலாளிக்கு மறக்கப்பட்ட வெறுக்கப் பட்ட சொல்லாக தோன்றுமா? அல்லது ஏதொவொரு நாட்டையோதேசத்தையோ நம்பி தொழிலாளவர்கம் தனது எதிர்காலத்தை கரைத்துவிடுமா…..??.
சந்திரன் ராஜா யதார்த்தமான கேள்விகளோடு வந்திருக்கிறீர்கள்.இவைகளுக்கு என்னிடம் எந்தப் பதிலும் இல்லை.இதைக் காலம்தாம் தீர்மானிக்க வேண்டும்.பதிலை நீங்கள் ஏதிர் பார்க்கவில்லை என்பதும் புரிகிறது…
நன்றி சிறிரங்கன். பேட்டிக்குக்கருத்து எழுதவந்து கருத்துகளே இப்போ நீண்டு மிக அற்புதமான அறிவியல் விடயங்கள் அலசப்பட்டிருக்கின்றன.இலக்கியம் மனிதனை மனிதனோடு நெருங்கிவரச்செய்வது என்பது உணமைதான்.பொருளாதாரம் எனும் பதம் வேண்டுமானால்நீங்கள் குறிப்பிடுவதைபோல 1776 களில் தோன்றியிருக்கலாம்.ஆனால் பொருளாதாரச் சித்தாந்த அறிவு மனிதன் பிறக்கிற போதே உதயமாகிவிட்டது.மனிதன் காட்டைவிட்டு நதிக்கரையோரங்களில் குடிசைபோட்டகாலங்களை மார்க்சீய சிந்தனையாளார் ராகுல சங்கிருத்தியாயன் வால்காவிலிருந்து கங்கை வரையில் அற்புதமாக படம் போட்டிருக்கிறார்.காலம் இடம் என்பனதான் ஒருவரைபை அதிகம் தீர்மானிக்கின்றன. காலாவதியாகிபோன அடம்சிமித்தின் கொள்கைகள் பலதசாப்தங்களாக வெள்ளைய ஏகாதிபத்தியத்தின் முதுகெலும்பாயிருந்தது.பிரித்தானியத்தாள்களில் இன்றைக்கும் முகம் காட்டுகிறார் அடம்சிமித். ஜேர்மனியில் பிறந்த மார்க்சின் கொள்கைகள் தொழிலாளவர்க்கநலம் சார்ந்தவை.அவரால் தன்னுடைய வாழ்வையே பேண முடியவில்லை.என்கின்ற தற்குறிகளும் நம்மிடையே இல்லாமலில்லை.