இலங்கை:உலகை முன்னுதாரணமாக்கொண்டு போரிடுகிறது?
இலங்கையில் சிறுபான்மை இனங்களுஞ்சரி அல்லது பெரும்பான்மை இனமாலுஞ்சரி-இந்த, மக்கள் கூட்டம் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களது எதிர்காலம் இருள் சூழ்ந்து ஒளிமங்கிக் கிடக்கிறது.பிராந்திய நலனுக்கும் பொருட் சந்தைக்கும் நடக்கும் போராட்டத்தில் அந்நியச் சக்திகளே முதன்மையான பாத்திரத்தை இலங்கையில் கொண்டிருக்கும்போது நமக்கான விடுதலை,சுதந்திரம்,சுயநிர்ணயமென்பதெல்லாம் பகற்கனவாகும்.
இங்கே, இலங்கை மக்களின் உரிமைகளென்பவை அந்நியச் சக்திகளின் தயவில் பெறும் விடையமல்ல.மாறாக, இலங்கை மக்களே தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு அரசியற் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கானவொரு மக்கள் எழிச்சியை செய்து இத்தகைய புறச் சக்திகளைத் தோற்கடிப்பதற்கானவொரு அரசியல் வியகத்தைக் கட்டியமைக்க வேண்டும்.
புலிகளல்லாத இலங்கை அரசியற்போக்கில் இது அவசியமானவொரு பணி.இனங்களுக்கிடையிலானவொரு நட்பார்ந்த பரஸ்பரப் புரிந்துணர்வின்றி தொடரப்போகும் மகிந்தா குடும்பத்து அந்நியச் சேவையை முறியடிக்க முடியாது.
இலங்கையில் இன்னொரு பாசிசச் சர்வதிகாரத்தைத் தடுதாட்கொண்ட இராஜபக்ஷயின்பின்னே அணிதிரண்டிருப்பவர்கள் யாவரும் எம்மை அண்மித்துவரும் உலகப் பொருளாதாரப் போக்குகளின் திசைவெளியில் சிக்கிய தென்கிழக்காசியத் தரகு முதலாளியக் குடும்பங்களாகும்.
இவர்கள் இலங்கையிலோ அன்றி இந்தியப் பெரு நிலப்பரப்பிலோ ஒரு வகைமாதிரியான தேசிய வாதத்தை முன் தள்ளியபடி தமக்கிசைவானவொரு இராணுவப்படையணியைக் கட்டியுள்ளார்கள்.இந்த இராணுவத்தின் முன் புலிகள்போன்றவொரு அணி அவசியமற்றுப்போனதன் பின்பான காலம், தமிழ் மக்களினது உயிர்களைப் பறித்தாவது புலிகளின் இருப்பை அழித்துவிடுவதில் இன்றைய போர் இதே உலக அரசியலை நகலெடுக்கிறது.இந்த உலக அரசியலை,கடந்த இரு தினங்களாக ஜேர்மனிய முன்ஞ்சன் நகரில் நடைபெறும் பாதுகாப்பு மகாநாட்டினது பேராளர்களின் உரையில் மிக இலகுவாகப் புரியமுடியும்.
ஆவ்கானிஸ்த்தான் அதிபர் கார்சாய்(Karsai),தனது தேசத்தில் 65 மில்லின் மக்களுக்கு 40 பொலிஸ் அலுவலகங்களே இருப்பதால் அங்கே பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாகச் சொல்கிறார்,முன்ஞ்சனில்.போதைப்பொருள் பயிரிடும் மேற்குலக அரசியலைப் பயங்கரவாதிகளுக்கானதாகச் சொல்லிவிடும் அவர்,அதைப் பெரும்பாலும் தலிபானுக்குரிய தொழிலாக நிறுவுகிறார்.இங்கே,அமெரிக்கக் குரல் ஓலமிடுகிறது.
ஜேர்மனியப் பாதுகாப்பு மந்திரியோ,அவ்கானிஸ்த்தானில் ஒரு பெண் கல்விக்கூடஞ் செல்லத்தக்க சூழலைத் தாம் செய்துள்ளதாகவும்,இன்று,ஒரு மில்லியன் பெண்கள் பாடசாலைபோவதாகுவும்,குளங்கள்,கால்வாய்கள் கட்டப்பட்டு அங்கே,தேனும் பாலும் ஓடவிடப்படுவதாகவுஞ் சொல்லிக்கொள்கிறார்.இவைகளைத்தொடர மேலுஞ் சிக்கலிடும் தலிபானை முறியடிக்க இன்னும் பெரும் படைகளை அங்கே குவித்து, அப்பாவி மக்களைக் காத்தாக வேண்டுமென்கிறார்.அவ்கான் அரசியல் வரலாற்றைக் கற்பவர்களுக்குத் தெரியும் இவர்களது உண்மையான முகம்.அமெரிக்கா தொடர்ந்த இந்த அரசியல்-பொருளாதார நோக்கங்களுக்கு மேற்குலக நாடுகள் நல்லவொரு முகமூடியை ஜனநாயக மூலகங்கொண்டு தயாரித்து மேலாதிக்க யுத்தத்தைத் தொடர்கிறபோது,அண்ணல் மகிந்த இராஜபக்ஷவுக்குச் சொல்லியா கொடுக்கவேண்டும்?
வன்னியில் வரம்பின்றித் தொடரும் இனவழிப்புக்குப் பெயர்:”மக்களை விடுவிப்பது,பயங்கரவாதத்திலிருந்து நாட்டையும்,மக்களையும் காத்துக்கொள்வது!”
இதுவரை,தமிழர்களின் உரிமைகள் குறித்து எதுவுமே சொல்லாத-பேசாத அரச தலைவர் இலங்கையில் இருக்கிறாராவெனக் கேள்வியெழுந்தால்-அத்தகைய தலைவருக்கு உதாரண புருஷர்:அண்ணல் மகிந்தாவே!இவரது வருகைக்குப்பின் இலங்கையர்கள் என்றவொரு தேசிய இனம்தாம் உண்டு.இதைக்கடந்து இலங்கையில் இனங்கள் கிடையாது.
“நாம் எல்லோரும் இலங்கையர்,நமது மொழி சிங்களம்”என்பது அவருக்குப் பின்னால் நிழலாடும் மந்திரம்.
இது,தகவமைக்க முனையும் இலங்கை அவரது அரச ஆதிகத்துக்கு வெளியேதாம் கருக்கொண்டது.பெரும்பாலும் புதியவொரு பொருளாதாரக்கூட்டை நட்போடு வரவேற்ற சிங்கள ஆளும் வர்க்கமானது இந்தத் தெரிவைத் தமது இருப்புக்கு ஆதாரமாகக் கருதியதன் விளைவில்,மகிந்தா இந்தக் கயிற்றில் அழகான இனவொருமைப்பாட்டூஞ்சலைக் கட்டி,அழுது கண்ணீர்விடும் தமிழ் அரசியற் குழந்தைகளை அதிலிட்டுத் தாலாட்டி, விஸ்க்கோத்துக் கொடுக்கிறார்.
இது,புலிகளுக்குக் குண்டுகளைக் கொடுக்கின்ற அதே கையால் வன்னியில் சிறைப்பிடிக்கப்படும் மக்களுக்குக் கணிசமான கல்லறைகளை எங்கோ இடம் புரியாத-திசை தெரியாத திக்கில் கட்டிவைக்கிறது!இது,அமெரிக்க-ஐரோப்பிய அரசுகள் செய்த-செய்யும் அதே ஜனநாயக முன்னெடுப்பாக இருப்பதால்,இவர்கள் யாருமே இலங்கைக்கு எதிராக ஒரு மசிரைத்தானும் புடுங்க முடியாது!வன்னியல் மரணிப்பவர்களை அவ்கானிஸ்தானிலும்,காசாவிலும்,ஈராக்கிலும் இத்தகைய தேசங்கள் புதைக்கின்றன.இதன் பின்னாலான உலக ஆளும்வர்க்கத்தின் பெருவிருப்பு ஜனநாயகம் என்பதில் இவர்கள் எல்லோரும் அதையொட்டி அரசியல் செய்ய, இவர்களது “புதைகுழிஜனநாயகத்தை”த்தாம் நாம் மகத்தானதாகக் காணும் சந்தர்ப்பத்தை பி.பி.சி.முதல் சி.என்.என்.வரை தருகின்றன.புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் எந்தக் கூச்சல்போட்டாலும் எவரும் காணப்போவதில்லை!நாம் இவர்களைத்தானே இதுவரை நம்பியிருந்தோம்?எமக்கு இவர்களைவிட்ட இன்னொரு உலகம் தெரியாமலே இப்போதும் இருக்கிறதே-இதுதாம் அடுத்த அவலம்!
இத்தகைய காலவர்த்தமானத்துள்,கண்டெடுக்கப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை மகிந்தா இராஜபக்ஷ இலங்கைக்குள் சவாரிவிடும்போது,வன்னியில் சாகும் அனைவரும்”புலிப்பயங்கரவாதிகள்”என்பதை உலகமும் ஏற்கிறது.அந்தவகையில் உலகம் புலிகளிடம் கருணை காட்ட முடியாதாம்.எனினும்,இலங்கைக்குள் நிலவும் பாரிய பொருளாதாரச் சமமின்மையானது நிலவுகின்ற ஆட்சியைத் தூக்கியெறியும் வர்க்கவுணர்வாக ஏற்றுமுற்றிருக்கும் தருணங்களில் இந்தத்தேசங்களால்-கட்சிகளால் இத்தகைய கோசங்கள்-இராணுவ முன்னெடுப்புகள் திட்டமிடப்பட்டு மிகக் கவனமாக மக்களரங்கு வருகிறது.அங்கே, மக்களின் அடிப்படை முரண்பாடு வெறும் இராணுவாதத் தந்திரத்தால் மழுங்கடிக்கப்பட்டு, அதைப் பின் தள்ளி இராணுவாதம் உளவியற் தளத்தில் கூர்மையடைகிறது.இது,இலங்கையில் இன்னொரு சிங்களப் பொற்காலத்தைத் தகவமைக்கிறது சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு.இப்போதைக்குச் சிங்களத் தொழிலாள வர்க்கத்துக்கும் இஃது தேசியப்பசி போக்கிவிடுவதால் அவர்களும் தமது பிள்ளைகளைப் போருக்கு அனுப்பிச் சவப்பெட்டிகளைக் காண அவாவுற்றுக் கிடக்கிறார்கள்.என்னவொரு இலங்கை அரசியல்!எங்கே,மாற்றுத் தலைமைகள்-அரசியல்,இடதுசாரியப் பாரம்பரியம்?
இன்றைய வன்னிப் போரோடு புலிகள் துடைத்தெறியப்பட்டபின் எஞ்சுவது என்ன?
“காலாகாலமாகத் தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றப்பட்ட அரசியல் வரலாற்றில் புலிகளும் தமக்கான பங்கை உயிர்ப்பலிகளினூடே ஆற்றியுள்ளார்கள்”என்ற சிறு குறிப்பே எஞ்சிவிடும்!இது,தமிழ்பேசும் மக்களுக்கான விடுதலை!போதும்,இதைவிட வேறென்ன அவசியம்?அப்படி அசியமானால் இருக்கவே இருக்கிறது:மாவீரர் கல்வெட்டும்,துரோகிகள் கல்லறைகளும்!இதுவும் போதாதென்றால்,மகந்தா குடும்பத்து அந்நியச் சேவையில்”பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு” இன்னொரு புலிகள் இலங்கை பூராகவும்-அனைத்து இனங்களுக்குள்ளும் உருவாகப்படும்.ஏனெனில் இலங்கையின் உண்மையான பிரச்சனைகள் அப்படியேதாம் இருக்கிறது.இதுதாம் உலகத்துக்கும்,குறிப்பாக அமெரிக்காவுக்குமான இலங்கைச் சூழலாகும்.இனப் பிரச்சனையோடுகூடிய அனைத்து முரண்பாடுகளும் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் இலங்கையே அவர்களுக்கு அவசியம்.இதைத்தாம் இந்தியாவுக்கும் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.இந்நியாவில் உறங்கிக்கிடக்கும் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பிறிதொரு பாணியில் காஷ்மீரில் விடியும்.
இற்றுவரை ஈழத்தில் ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் உயிர்கள் ஈழக்கோசத்தால் பலியிடப்பட்டுள்ளார்கள்.சுமார்4.5 றில்லியன் ரூபாய் பெறுமதியான உடமைகள் போரினால் நாசமாக்கப்பட்டும்,முப்பதினாயிரம் பெண்கள் விதவைகளாகவும்,கிட்டத்தட்ட அதே தொகை சிறுவர்கள் முடமாக்கப்பட்டும் இந்தத் தமிழ்ச் சமுதாயம் சீரழிந்துபோனதற்குப் பிரபாகரனும் அவரது தப்பான பதவி ஆசையுமே காரணமானதல்ல.மாறாக,இத்தகைய பிரபாகரன்களை உருவாக்கிய அந்நியச் சக்திகளும்,இலங்கையின் இனவாத அழிப்புமே காரணமாகிறது!இப்போதைக்கு ஒரு பிரபாகரனின் முடிவில், இலட்சக்கணக்கான மக்களின் புதைகுழிகள் தோண்டப்பட்டன.இனிவரப்போகும் பிரபாகரன்கள் இன்னும் எத்தனை புதைகுழிகளைத் தோண்டுவார்களோ அது எவருக்குமே இப்போது புரியாது,அந்த ஆண்டவரைத் தவிர!
இத்தகைய சமூக நெருக்கடியையும்,வரலாற்றுத் துரோகத்தையும் ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிட்ட யுத்தக் கிரிமனலாக இருக்கும் அந்நியத் தேசத் தலைமைகளை-இலங்கை அரச அதிபரை மனிதவுரிமைச் சட்டவரைவுகளுக்கொப்ப டென்காக்கில் தண்டித்தாகவேண்டும்?அப்படியா,நல்லது!அதுவும் இவர்களாலேதாம் உருவாக்கப்பட்டது.அங்கே,மிலேசேவிச்சுக்களுக்குத்தாம் கல்லறைகள் கட்டப்படும்.ஜோர்ஜ் புஷ்சுக்கோ, ரோனி பிளேயருக்கோ அன்றி மகிந்தாவுக்கோ அங்கே இடமில்லை.ஏனெனில்,இவர்கள் தாம் “ஜனநாயகத்தை” தத்தமது தேசங்களில் தொட்டிலிட்டுத் தாலாட்டுபவர்களாச்சே!இதற்கு உதாரணமாக:ஈராக்கும்,அவ்கானிஸ்தானும் மட்டுமல்ல இப்போது வன்னியும் இருக்கிறது-வாழ்க, இவர்களது ஜனநாயகம் காசா(Gaza) வழி!
நன்றி : http://srisagajan.blogspot.com/2009/02/blog-post_08.html
நாடென்ற வகையில் 2,500 வருட பெருமைமிக்க வரலாறு கொண்ட எமக்கு எம்மிடையேயான அனைவரையும் பாதுகாத்து வாழ்வாதாரங்களும் வழங்கும் பண்பாடு இருக்கிறது என ஜனாதிபதி 63 சுதந்திர தின தேசிய விழா உரையில் தெரிவித்திருக்கிறார்
ரங்கன் ஒரே கட்டுரையில் உலகின் இலங்கையின் இன்றைய நிலையை முழுமையாக வெளிப்படுத்தி விட்டீர்காள். வாழ்த்துக்கள். பிரபாகரனின் பதவி ஆசை மட்டுமல்ல யாழ்ப்பாணத்து மனோபாவம் போன்றன எல்லாம் அழிவிற்குக் காரணம். பிரபாகரனின் இடத்தில் யார் இருந்திருந்தாலும் இதைத் தான் செய்திருப்பார்கள்.
தலைவர் பதவிக்கு ஆசைப் பட்டு இருந்தால் அவெர் எப்பவோ வடக்குகிழக்குக்கு முதலமைச்சராய் இருந்திருப்பார். தமிழையும், தமிழரையும் காட்டிக்கொடுத்துவிட்டு அரசாங்கத்தோடு சேர்ந்து மாழிகையில் இருந்து கொண்டு எலும்பை நக்கி இருப்பார். கருணா , டக்கிளஸ்சை விட அரசின் உயர்ந்த அடிவரிடியாய் செயல் பட்டு இருப்பார்.மானமுள்ள , ரோசமுள்ள , சொரணை உள்ள தமிழருக்கு எல்லாம் மேதகு.பிரபாகரன் அவெர்கள் ஒரு வீரன். ஒரு மீட்பன். உங்களைப் போல சொரணை கெட்டதுகள், வெ ட்கம் அற்றதுகள் , துரோகிகளுக்கு எல்லாம் அவெர் கெட்டவர், கொலைகாரன், பதவி வெறி பிடித்தவர்தான்.
தலைவர் தலமைப் பதவிக்கு ஆசைப்பட்டதில் தவறே இல்லை ஆனால் போராட வந்தோரோடு கை குலுக்கி போட்டுத் தள்ளீயதே தவறூ.சிரித்துப் பேசி முதுகில் குத்துவது சினேகமல்ல துரோகம்.கருணாவை,டக்ளஸ்சை உருவாக்கியது தலைவரே.பிரபாகரன் கெட்டிக்காரன் ஆனால் வீரனா? மீட்பரா தெரியவில்லை.ஆனால் சிங்களவன் அவரைப் போட முதல் அவனைப் போட்டிருந்தால் தலைவர் வீரன்.தன்னை நம்பிய சாதாரண போராளீகள காவு கொடுத்து தன்னைக் காப்பாற்ற சரண் அடைந்ததால் அவரை மீட்பராக ஏற்கமுடியவில்லை.
எல்லாவித வேறுபட்ட செயல்பாடுகள் நடவடிக்கைகளுக்கு வேறு பாடுடைய இனங்களுக்கு கூடா ஒருதலைவர் இருந்து கொண்டேயிருப்பர்.இனியும் இருப்பர். முப்பது வருடம் தமிழ்மக்களுக்கு கிடைத்த தலைவர்வரும் தனது அஸ்தியை இன்னுமொரு இனத்திற்கு நந்திக்கடலில் கரைப்பதற்கு தத்தம் செய்து கொடுத்ததிலேயே எப்படிபட்ட தமிழரை தன்னோடு வைத்திருந்தார் என்பது புரியக்கூடிய செய்தியாகிறது. தமிழ்மக்களுடைய உரிமையை வென்றெடுக்க தன்னமில்லாத ஒரு தலைவர் ஏன் தமிழ்மக்களுக்கு துரோகிப்பட்டம் கொடுத்தார். ஏன்? மாற்றுக் கருத்துடைய தமிழ்தலைவர்களை தயவுதாட்சணியம் இல்லாது கொண்றொழிக்க கூடிய வல்லமை வந்தது?. என்பது போன்ற கேள்விகள் எம்மை துளைத்தெடுத்தாலும் நாம் எம்மெல்லாம் அதில் மீண்டுவந்திட மாட்டோம் என்பது தான் குற்றும்குலை உயிருமாக இருக்கிற கிறிமினல் கூட்டத்தின் கேள்வியாகும். தலைவர் ஏன்? பங்கருக்குள் போனார். அவர் ஏன்? முதல்அமைச்சர் பதவி உதறியெறிந்தார் என்பதை பற்றிய சந்தேகங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன். இப்படியான சந்தேகங்களை தீர்பதற்கே நான் இருக்கிறேன். தலைவர் கசாப்புகடைக்கு தலைவராகயிருந்தார். அவருக்கு தேவையானது இரத்தம் ஊண் இறைச்சி அதுவும் சிங்கள இரத்தங்கள் மிகவும் சுவைமிக்கது. டொலோ ஈ.பி.ஆர்.எல்.எப் பின் துரோகிகளது ஊண் இறைச்சி இரத்தங்களே தாய்லாந்து ஆமை இறைச்சிபோல் சுவைமிக்கது. அவர் ஏன் முதல்யமைச்சராக வர விரும்பவில்லை என்றால்…வன்னியன் சூரியா போன்றவர்கள் அறியவேண்டியது என்னவென்றால் முதல்லமைச்சராக வந்தால் கடாப்புகடைத்தலைவன் பங்கருள் இருந்து வெட்டைக்கு வந்தே ஆகா வேண்டும். வந்தால் வெட்டையில் வைத்து வெடிவைப்பது சுலபமானது என்பது ஒரு வேட்டைகாரனுக்கே தெரியும். இந்த கிறிமினல் கொலைகளிலே சுகம்கண்டவன். பொருளாதாரத்யுறவுகள் இனமாகவும் மதமாகவும சகமனிதரின் வெறுப்பின் உச்சத்தின் பிறப்பிடமாகவும் இருக்கும் என்பதை இந்த கசாப்புகடை தலைவனுக்கு தெரியாது இருந்தது என்பதை இந்த கசாப்புகடைத்தலைவனுக்கு புதுமுகவரி தேடுபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இது புலம்பெயர் நாட்டில் ஓரளவுக்கு வெளியாகவும் இலங்கையில் மறைவாகவும் இருக்கக் கூடியது எம்மால் புரிந்து கொள்ளக் கூடியதே!.
தலைவரின் வாரிசுகள் என்ன செய்கின்றன என சரியாக அறிந்தால்
தலைவர் எப்படியென் யாவரும் அறிவர்..அதனை
ஏற்காவிட்டல் அவர் யாருக்குத் தலைவராக் விளங்கினார் என் சொல்லவும்.-துரை
தலைவரின் வாரிசுவே நீங்கள் தானே துரை.தமிழைப் பிடிக்காது, தமிழனைப் பிடிக்காது ஆனால் மகிந்த சால்வைக் கலர்தானே உங்களூக்கு எல்லாம் பிடிக்கிறது.காக்கா பிரியாணீ சாப்பிட்டது எப்போதும் கத்திக் கொண்டே இருக்கிறீர்கள் துரை.யாரய்யா உங்களூக்கு இந்தப் பெயரை வைத்தது.
புலியுடன் புலியாயும், மகிந்தாவுடன் மகிந்தா ஆகவும்
உண்டு உறங்கி தமிழரின் இரத்தத்யும் தசையையும்
விளப்பரமாக்கி வாழும் ஓர் சமூகம், தாங்கள் தான் தமிழர்களிற்கு காவல் காக்கின்றார்களாம் அவர்களில்நீங்கழுமொருவர்தானா? துரை
புலிக்கு வால் பிடித்து புலி வீழ்ந்ததும் புலியை திட்டும் அனேகரில் ஒருவர் துரை.உங்களூக்கும் இந்த நாடி விழுந்தோருக்கும் குடுக்கல் வாங்கல் உண்டே உரத்து சத்தம் போடுகிறீர்கள்?ம்கிந்தா சில்வாவையும்,பெரேராவையும் வைத்து சண்டித்தனம் செட்வதை கேட் கவே மாட்டீர்கள்.ஆனால் தமிழன் தன் நீதிக்காக குரல் கொடுத்தால் எதிர்ப்பீர்கள்? நல்ல ஆக்கள் அய்யா நீங்கள்.
ஐயா பாவி.ஸ்ரீரங்கன் அவர்களே, தாங்கள் ஒரு நாளைக்கு தங்கள் புள்ள குட்டிகளுடன் அல்லது உறவுகளுடன் மாத்தறைக்கு கார் பிடித்து அதில் தமிழில் பாட்டொலித்தவாறு ஒரு சுற்றுலா சென்று விட்டு வந்து கூறுங்கள் பார்ப்போம் நாம் இலங்கையரா? என்று. ஊரில் ஒரு கதை சொல்வார்கள் இறால் மற்றவைகளைப்பார்த்து ஏதோ சொன்னதாமெண்டு அதைப்போல் உள்ளது உங்களின் ஆக்கம்.
சீரீ ரங்கன் மாத்தறக்கு வேண்டாம் கரம்பொன் எனும் ஊருக்கு சென்றூ திரும்பி சேமமாக வந்தாலே போதும் நமோ நமோ சீறீலங்கா என மகிழ்வடையலாம்.ஆனாலும்……….என்னதான் இருந்தாலும் பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் உயிரில் கலந்த உணர்வு.
பிரபாகரனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்திலும் பார்கிறார்கள். பிரபாகரனின் தவறுகள் என்பது பல, கருத்துக்களை கருத்துக்களாக ஏற்று அவற்றினை பகுத்தாய்ந்து முடிவினை எடுப்பதில் அவர் தவறிழைத்து உள்ளார். அதுவே பின்னாளில் புலிகளின் ஒருவகை சர்வாதிகாரமாக உருப்பெற்றது. சர்வேதேச நாடுகளின் மேலாதிக்க நோக்கங்களுக்கு பிரபாகரன் எவ்வகையிலும் இடங்கொடுக்கவில்லை என்பதை கட்டுரையாளர் முதலில் அறியவேண்டும், இருப்பினும் பிரபாகரன் மேற்குலகு தமக்கு சாதகமாக உதவும் அல்லது உதவ வேண்டும் என்ற மனநிலை புலிகளிடம் இருந்தது உண்மையானதே. மிக கனகச்சிதமாக திட்டமிட்ட முறையில் தமிழ் பேசும் இனத்தை இனவழிப்புக்கு உள்ளாக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை அதன் நீண்ட பேரினவாத கலாச்சாரத்தை கட்டுரையாளர் புறந்தள்ளி விடுகிறார். என்னவோ சந்தை பொருளாதாரத்தின் ஏட்டா போட்டிகளில் சந்தியாக இருந்த இலங்கையில் அமைதியற்ற சூழல் சர்வதேச நாடுகளை எரிச்சல் ஊட்டியிருந்தன அவர்களுக்கு மக்கள் அழிவதோ, தமிழர்களின் உரிமை பற்றியோ கவலை இல்லை எனவே அவர்கள் இலங்கை
என்ற விபச்சாரிகளிடம் நான் முந்தி நீ முந்தி என்ற தொடர்புகளை பேணினர். இதனை புலிகள் உணர்ந்து தமது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்துச் சென்றிருக்க வேண்டும். பிரபாகரனிடம் யாழ் மேலதிகச் சிந்தனை இருந்ததாக கூறுவது குருட்டுத்தனமான பார்வை. இருப்பினும் புலிகளின் உறுப்பினர்கள் பலரிடம் அந்த குருட்டுச் சிந்தனை இருந்தது என்பது உண்மையே மாறாக பிரபாகரனிடம் அல்ல இருப்பினும் தமிழ் தேசியத்தை அவர் வெறும் உணர்வுகளின் அடிப்படையில் மாத்திரம் கட்டிஎளுப்பியதும் பிரதேசங்கள் மத்தியிலும் சமுக மத்தியிலும் காணப் பட்ட ஏற்றத் தாழ்வுகளை களைவதிலும் புலிகள் தோற்று விட்டார்கள்.
முத்தாய்ப்பான முன்னுரை.எகிப்தில் என்னதான் மக்கள் புரட்சி நடந்தாலும் அமெரிக்காவே ஆட்சியாளரகள தீர்மானிக்கிறதை அவதானிக்கிறோம்.நம்மிடமும்,வீரமும் தீரமும் விவேகமும் இருந்தாலும் அரசியல் சதுரங்க விளயாட்டில் காய்கள நகர்த்த தெரியவில்லை.நாம் குற்றம் குற கண்டுபிடித்துக் கொண்டிருக்கப் போகிறோமா அல்லது நம் மக்களீன் சுதந்திர வாழ்வுக்காக குரல் கொடுக்கப் போகிறோமா?சங்கீத வித்துவான் கள் சமையல் செய்யப் புறப்பட்டது போல நம் விவாதங்கள் தொடரட்டும்.ஆனால் விடிவு எப்போது?
விடுதலைப்புலிகளின் தமிழீழ விடுதலைப்போரட்டத்தில் தவறுகள் இல்லையென்றில்லை. எனினும், தமிழ் மக்களுக்கு (நான் சொல்வது தமிழ் மானம், சூடு, சொரணை, தமிழுணர்வு உள்ளவர்களை) என்றுமே பாதுகாப்பு தமிழீழ நாட்டின் விடிவே என்பதற்காக அயராது அடிபணியாது சுயநலமின்றி போராடியவர்கள் தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைமையும் போராளிகளும் மட்டுமே.
மேதகு வே.பிரபாகரன் அவர்கள் இன்றும் உணர்வுள்ள தமிழர்களுக்கு வழிகாட்டி நிற்கின்ற தலைவர். தமிழர்களின் வீரத்தை ஈகத்தை இந்த உலகத்துக்கு அவர் தலைமையில் நியாயமான வகையில் காட்டியாகிவிட்டது. (கள்ள மறதிக்காரர்கள் வரலாற்றை திரும்பிப்பார்க்கவும்) சண்டை சிங்களவனுக்கும் (ஒட்டுக்குழுக்கள் அடங்கலாக) தமிழனுக்குமானதாக மட்டுமிருந்திருந்தால் இன்றைய நிலைமை வேறாகவிருந்திருக்கும். அத்தோடு, சாக்கடைகளும் பச்சோந்திகளும் வலையில் வேதாந்தமும் வியாக்கியானங்களும் செய்ய சந்தர்ப்பங்களுக்கும் இடமிருந்திருக்காது. நிற்க,
ஒரு காலத்தில் நாங்களும் நீங்களும் லங்காபுவத் (பச்சைப்பொய், புளுகு, பித்தலாட்டச்செய்திகள்) என்பது தொடர்பில் ஒரே கருத்தையே கொண்டிருந்தோம். நாங்கள் இன்றுவரையும் சிங்களவனின் லங்காபுவத்துக்களை அதே கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றோம். ஆனால், இன்று உங்களுக்கு அவைகளே வேதவாக்குகளாகவும் சத்தியமானதாகவும் தெரிகிறது. விரைவில் மானத்தமிழர்களின் தலைவன் வே. பிரபாகரனின் அவர்களின் கதையின் திரை மெதுமெதுவாக விலகும் போது. உங்களைப்போன்றவர்களையும் உலகத்தையும் சிங்களவன் எவ்வளவு பேய்க்காட்டியிருக்கின்றான் என்பது தெரியவரும் மீண்டும் சரியான கட்டமொன்றில் இதை நினைவூட்டுவேன்.
குறிப்பு – நாங்கள் நீங்கள் என்பது எவரையும் குறிப்பிட்டதல்ல. பொருத்தமானவர்கள் போட்டுக்கொள்ளலாம்.
சிங்களவ்ர் ஏமாற்ரியதை விடவும், புலிகள் காட்டிய வீரத்தைவிடவும்,தமிழரே தமிழனையு,ம், உலகினையும் தம்மினத்தின் உயிர்களை பலிகொடுத்து
எமாற்ர வ்ல்லவ்னெற உண்மை விரைவில்வெளிவரும்.-துரை
துரை சால்வை மட்டுமே தூசி துடைத்துச் செல்கிறது.அவரது அறீவும் அவர் எழுத்தும் இங்கிலாந்து நாட்டுக்கும் ஆலோசனை வழங்கும்.தன் பிடறீ மொட்டை என அறீயாது அடுத்தவரை மொட்டை எனும் அவரது மொட்டைத் தனமான கருத்து மொக்குகளூக்கு மோதகமே.எங்கே இருந்து வருகிறார்கள் என்றே தெரியவில்லை இடுப்பு வலிக்கு சுளூக்கு எடுக்க.
30 வருடமாக காட்டிய வீரத்தையும் பார்த்தோம்.
இறுதியில் தமிழரின் துடிக்கும் தசையையும்
உலகிற்குக் காட்டி சூரியக்கடவுளையும், வன்னி
இராட்சிய்த்தையும் காக்க முயன்றதையும்
நாமறிவோம். அண்ணன் தம்பியை அடிபடவைத்து
பிழைத்த அப்புக்காத்துப் பரம்பரை இப்போ
நாடுகடந்த தமிழ்நாடென்று சொல்லி தமிழ்னையும் சிங்களவனையும் அடிபட வைத்து
உலக்முழுவதும் பிழைப்பு நடத்துகின்றது.
துரை
சிங்களவன் அடிச்சுப் பிடித்து ஓடி வந்து எங்கள் வீட்டுத் தாழ்வாரங்களீல் உறங்கும் எருமை மாட்டுக்கே உரிமை கேட் கிறான், நெல் வயல்களீல் விவசாய்ம் செய்கிறான் ஆனால் சொந்த மண்ணீல் வாழவே பயமாக இருக்கிறது தமிழனுக
இங்கே சில பன்னாடைகளுக்கு சிறீ ரங்கனின் கட்டுரையே விளங்கவில்லை. கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பட்கு இலங்கையர்களாக மகிந்த சொல்வது போல வாழ முடியாது என்பதுவே. பன்னாடை என்று அரிச்சந்ரன் சாட்சியா நான் யாரையும் குறிப்பாக சொல்லவில்லை!
அங்கத சுவையோடு எழுதப்பட்டிருக்கின்ற நல்ல கட்டுரை. எங்கே இடதுசாரிபாரம்பரியம், மாற்றுத்தலைமைகள் ? என்பதுவும் இன்னமும் விரிவாக அலசப்பட்டிருக்கலாம். காலத்திற்கேற்ப காவடிஎடுக்கின்ற ரொட்சிச பன்னாடைகளை விட்டுத்தள்ளினாலும், மற்றவர்களுக்கு என்னாச்சு? ஆ அந்த இடதுசாரிகளும் சோவியத்யூனியனாலும், சீனகுடியரசாலும் கையாளப்பட்டார்கள். சீனாவின் வண்ணவண்ண நிறங்களிலான கலாச்சாரவெளியீடுகளை இலங்கை மாண்வர்களின் புத்தக உறைக்குபயன்படுமாறு விற்பனை செய்தார்கள். பூகோள அரசியல் பேசினார்கள்.சோவியத்தும் சீனாவும் முரண்பட்டபோது , பிரிந்துபோனார்கள். மாவோவும் லின்வாவோவும், முட்டிக்கொண்டபோது சிதறிப்போனார்கள். சிறிலங்கா சுதந்திரகட்சிக்கு எழுபதுகளில் ஆட்சிக்குவர சோவியத்யூனியனும் உதவியது. மேலும் திரு.ராகவன் புலிகள் இந்தியமேலாதிக்கத்தையோ, ஏகாதிபத்தியத்தையோ எதிர்த்தவர்கள் அல்லர். மாறாக அவற்றிற்குரிய கடிநாயாக(ஏக பிரதிநிகளாக) தாங்கள் மட்டுமே இருக்க விரும்பினார்கள். அதற்குரிய தேவை இல்லாதவிடத்து அவர்கள் அழிவு தவிர்க்கமுடியாததாகியது.
தமிழ் மாறன்,
சீரியசாக நீங்கள் எழ்துவதை நகைச்சுவை வாசித்துண்டு ஆனால் நகைச் சுவையாக நீங்கள் துரைக்கு எழுதிய பதில் மிகச் சீரியசானது
மணீபாரதி எருமை மாடு மாதிரி எப்பொதும் மகிந்தாவுக்கு தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள் சிலர் ஆனால் அவிச்ச பங்கிழங்கே கிடைக்காது அல்லாடுகிறது தமிழ் இனம்.இதில் சிங்ளவனை சண்டைக்கு கூப்பிட்டமாம் என மகிந்தாவுக்கு வால் பிடிக்கிறார்கள்.இந்த ஆந்தை மனிட்தரின் குணத்தை புரிந்து கொள்ளவே முடியவிலை மணீபாரதி.
மகிந்தாவின் காலில் முதலில்போய் விழுந்த்தும்,விழ முண்டிய்டித்துக் கொண்டு இருப்ப்தும் புலிகளே.
தமிழரின் இந்த
நிலைமைக்கு காரணம் புலிகழும் புலியின் குணம் கொண்ட
தமிழர்கழுமே.. துரோகிகள் துரோகிகள் என எல்லோரையும்
சொல்லியவ்ர்களே துரோகிகளிற்கு கோட்டை கட்டி கொடுத்து விட்டனர்.-துரை
ஐயா துரை அவர்களே தங்கள் கருத்துக்கு தலை வணங்குகின்றேன். இன – வர்க்க – சாதிய முரண்பாடு என்பது வேறு. உந்த அரிச்சந்திரனைப்போல அடிப்படை உண்மை விழங்காத அடி நக்குதல் என்பது வேறு. புலிகள் எப்போதும் மிருகமாகவே இருந்தார்கள். சில வேளைகளில் வடிவேலுவைப்போல் சிரிக்க வைத்தார்கள். கொலை செய்துவிட்டு தமக்கு பொட்டு வைத்தார்கள். உந்த இறை நம்பிக்கை போலத்தான் இந்த புலி நம்பிக்கையும்.