இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை என்ற பெயரில் நடத்தும் காணொளிக் கூட்டங்களில் மாநில முதல்வர்கள் புறக்கணிக்கபப்டுவது தொடர்பாக கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருகும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. கடுமையாக மோடியைச் சாடியுமிருக்கிறார்.`
கடந்த வியாழன் அன்று கொரோனா தொடர்பாக அனைத்து மாநில மாவட்ட ஆட்சியர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் மாநில முதல்வர்களும் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டதால் அம்மாநில மாவட்ட ஆட்சியர்கள் எவரும் பங்கேற்கவில்லை. இக்கூட்டம் தொடர்பாக பேசிய மம்தா பானர்ஜி.
“பிரதமரின் கூட்டத்தில் மாநில முதல்வர்கள் பேச அனுமதியளிக்கா விட்டால் ஏன் முதல்வர்களை அழைக்க வேண்டும். இதை மாநில முதல்வர்கள் எதிர்க்க வேண்டும். பிரதமர் தலைமையில் நடந்த அக்கூட்டம் படு தோல்வி அது முதல்வர்களுக்கு நடந்த அவமதிப்பு” என்று கூறியுள்ளார். மேலும்,
“கொரோனா தொற்று குறைந்து வருவதாக மோடி சொல்கிறார் பின்னர் ஏன் மரணங்கள் அதிகரித்து வருகிறது.கூட்டத்தில் ஆளும் மத்திய ஆட்சிக்கு சாதகமாக பேசுபவராக கருதப்பட்ட வெகு சில ஆட்சியர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டார்கள்.இந்த கொரோனா சூழலில் கூட அவர்கள் அரசியல் செய்கிறார்கள். மேற்கு வங்கத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறார்கள். பிகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கங்கை நதிக்கரையில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதப்பதாக தகவல் வந்ததும் எத்தனை குழுக்களை இவர்கள் அங்கெல்லாம் அனுப்பினார்கள்? ஆனால், மேற்கு வங்கம் என வரும்போது ஒரு கவனிப்பும் கிடையாது.ஒரு நாட்டின் பிரதமர் மாநில முதல்வர்களுடன் பேசுகிறார். அதில் முதல்வர்கள் பேச அனுமதிக்காததன் மூலம் பிரதமர் உரையை கேட்கும் கைப்பாவை போல முதல்வர்கள் ஆக்கப்பட்டுள்ளனர் என்று மமதா குற்றம்சாட்டினார். இவர்களின் சொல்பேச்சுப்படி செயல்பட நாங்கள் ஒன்றும் அடிமைகள் அல்ல என்றும் மமதா பானர்ஜி விமர்சித்தார்.