ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னரும் தானே ஜனாதிபதி என இலங்கைச் சர்வாதிகாரியும் இனக்கொலையைத் திட்டமிட்டு நடத்தியவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ராஜபக்ச குடும்பத்தின் நம்பிக்கைக்குரியவரும் இனக்கொலையில் முக்கிய பங்களித்தவருமான மைத்திரிபல சிரிசேன எதிர்க்கட்சிகளின் பிரதான வேட்பாளராக நியமிக்கப்பட்டபின்னர் கொழும்பில் புறநகர்ப் பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றை மகிந்த திறந்து வைத்தார். அதன் போது இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
மைத்திரி மகிந்த ஆகிய இரண்டு இனவாதிகளுக்கும் குறிப்பிடத்தக்க எந்த வேறுபாடும் இல்லாத போதும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் பேரால் சில கட்சிகள் மைத்திரியை ஆதரிக்கின்றனர்.
அதில் ஒருபடி மேலே சென்ற மனோ கணேசன், தேர்தல் முடிந்ததும் இனப்பிரச்சனை தொடர்பாக பேசுவதே முதலாவது வேலைத்திட்டமாக இருக்க வேண்டும் என்கிறார். பேரம்பேசும் வலுவுள்ள தேர்தல் காலத்திலேயே இனப்பிரச்சனை தொடர்பாக மகிந்தவின் அதே அரசியல் திட்டத்தை மைத்திரியோடு இணைந்து ஏற்றுக்கொள்ளும் மனோ கணேசன், வலுவற்ற தேர்தலுக்குப் பிந்தய காலத்தில் என்ன செய்யப்போகிறார்?
ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.ஈழ அகதி