தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் மாகாண சுயாட்சி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். தவிர பௌத்த மதத்திற்கு அரசியல் சாசனத்தில் பிரதான இடம் வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பௌத்த துறவிகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவுடனான தேர்தல் ஒப்பந்தத்திலேயே மேற்குறித்த இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. மேலதிக அதிகாரங்களுடன் கூடிய மாகாண சுயாட்சி முறமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வுக்கான வழிமுறையாக முன்வைத்தனர். அதனை மைத்திரிபால சிரிசேன ஜாதிக ஹெல உறுமையவுடனான ஒப்பந்தத்தில் நிராகரித்து தானும் ராஜபக்சவிற்கு இணையான பௌத்த சிங்கள பேரினவாதி எனக் கூறியுள்ளார்.
சிங்கள மக்கள் மத்தியிலிருந்து குறிப்பிடத்தக்க எந்தக் கட்சிகளும் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமையை ஏற்றுக்கொண்டு அதனை மக்கள் மயப்படுத்தவில்லை. தேர்தல் நோக்கில் தமது தொகுதித் தமிழர்களின் வாக்குகளை வாங்கிக்கொள்வதற்காக விக்கிரமபாகு கருணாரத்ன போன்ற புறக்கணிக்கத்தக்க தனி நபர்கள் சுய நிர்ணைய உரிமையை ஏற்றுக்கொள்வதாகப் பேச்சளவில் ஒத்துக்கொள்கின்றனர்.
‘இடதுசாரிக் கட்சி’ எனக் கூறும் பேரினவாதக் கருத்துக்களைக் கொண்டிருக்கும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்றவை மானில சுயாட்சியைக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை அதிகரவர்க்கம் சிங்கள தமிழ் முரண்பாட்டை ஆழப்படுத்துவதன் ஊடாகவே ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதை மைத்திரிபால சிரிசேன உட்பட்ட அனைத்து வாக்குப் பொறுக்கிகளும் ஏற்றுக்கொள்கின்றனர்.
இவர்களின் பேரினவாதக் கருத்தியலுக்குத் துணை செல்லும் வகையிலேயே ஏகாதிபத்தியங்களால் தேசிய விடுதலைப் போராட்டம் அப்பாவிச் சிங்கள மக்களுக்கு எதிரான யுத்தமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது.
சிங்கள உழைக்கும் மக்களுக்கும், ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து பிரிந்து செல்லும் உரிமைக்கான வேலைத்திட்டம் முன்வைக்கப்படும் வரை இரண்டு பக்க இனவாதிகளும் பிழைப்பு நடத்துவார்கள். தேர்தலுக்கு முன்னதாகவே தானும் இனவாதி எனக் கூறும் மைத்திரிபால சிரிசேன ராஜபக்சவிற்கு மாற்று அல்ல, ராஜபக்சவின் பிரதியீடு.
We will have to till after a “New President” assumes office. Political agreements and speeches are different from day to day activities.
SWRD brought in “Sinhala only” and later brought in “Reasonable use of Tamil” and now Tamil is declared as one of the Official Languages. So these are turning points AFTER the elections.
சிங்கள இனவாதத்தை போன்று தமிழ் இனவாதத்தையும் நாம் நிராகரித்து அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதால் மட்டும்தான் ஒடுக்கப்பட்ட நம் அனைவருக்கும் நியாயத்தை பெற்றுகொள்ள முடியும்.
“Unity”..,?
Unity amoung…?