எந்தவொரு சர்வதேச விசாரணைக் குழுவுக்கோ, அழுத்தங்களுக்கோ அடிபணிந்து இலங்கையின் சுயாதீனத்தன்மையையும் இறையாண்மையையும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை. நாட்டை காட்டிக் கொடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். உள்நாட்டின் நீதிமன்றத் துறைக்கு சர்வதேச விசாரணைக் குழுக்களினால் களங்கம் ஏற்படுமாயின் அதற்கு இலங்கை அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது. பயங்கரவாத யுத்தம் இல்லாத இலங்கையில் சகல இன மக்களும் சமாதானத்துடன் வாழ்கின்றமை இலங்கை அடைந்த பாரிய வெற்றியாகும். இதேபோன்று பொருளாதார அபிவிருத்தியில் வெற்றி இலக்கை அடைய வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தேசிய தபால் சேவை தொல்பொருள் கூடம் மற்றும் முத்திரை கண்காட்சியகம் ஆகியவற்றை நேற்று செவ்வாய்க்கிழமை தபால் மற்றும் தொலைத் தொடர்பு தலைமையகத்தில் அங்குரார்ப்பணம் செய்த பின்னர் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.