கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வெளி நாட்டில் தங்கியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவர் இன்று முற்பகல் நாடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் தங்கியிருந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்அடைக்கலநாதன் மற்றும் லண்டணில் தங்கியிருந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரே இன்று நாடு திரும்பியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்தியாவிலும்,நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இரு வருடங்களுக்கு மேலாக இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருந்து இறுதியாக லண்டணில் தங்கியிருந்தார்.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் செல்வம் அடைக்கலநாதன் விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ,இன்று மாலை வாக்குமூலமொன்றை பதிவு செய்வது பற்றி அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
நாடு திரும்பிய குறிப்பிட்ட இருவரும் இன்று நாடாளுமன்ற அமர்விலும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் கடந்த சில மாதங்களாக லண்டணில் தங்கியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனும் அடுத்த சில நாட்களில் நாடு திரும்புவார் என எதிர் ர்க்கப்பட்ட போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஜெயானந்தமூர்த்தி மற்றும் எஸ். கஜேந்திரன் ஆகியோர் நாடு திரும்புவது தொடர்பாக தகவல்கள் எதுவும் இது வரை வெளியாகவில்லை.
ITS ABSULITY HEARD BREAKING FOR TAMIL MPS
நாடு திரும்பும்நாடாளுமன்ட் உற்ப்ப்பினர்களை விசாரனை செய்வதில்கெடுபிடிகள் கூடாது. கன்டிப்பு அதிகமானல் ஓருவரும நாடு திரும்ப விரும்பமாட்டார்கள். இன்னும் விரொத்மான் எண்ண்துடன் நடந்தால் அரசுக்குத்தான் கெடுத்லாகும்.