பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட பின்னர் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரமுகர்களுடன் இரகசியப் பேச்சுவார்த்தையில் அரசு ஈடுபட்டு வருகின்றது. அன்று விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் அழிவுகள் ஏற்படுவதிலிருநது தடுத்திருக்கலாம்என விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்
நாடுகடந்த தமிழீழத்தின் உறுப்பினர்கள் மத்தியில் பிளவுகள் ஏற்பட்டுள்ல நிலையில் விக்கிரமாகு கருணாரத்னவின் கூற்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஐரோப்பிய அமரிக்க அரசுகள் சார்பானதாக தோல்வியடைந்த போராட்டத்தின் எச்ச சொச்சமாக அரச உளவாளி எனக் கருதப்படும் கே.பி யினால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழம் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை மேலும் பின்னோக்கி நகர்த்தும் அரசியல் அபாயம் என ஆய்வுகள் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.