மலேஷியாவில் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆராயப்படும் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் பேச்சாளர் யாந்தே ஸ்மாயில் தெரிவித்துள்ளார்.இதே வேளை மலேசியாவிலிருந்து கொழும்பிற்கு நாடுகடத்தப்பட்ட அகதிகள் சிலர் நேற்றிரவு கொழும்பில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தில் உலகம் முழுவதும் சிதறியுள்ள அகதிகள் பதிவு செய்துள்ளனர். டோகோ என்ற ஆபிரிக்க நாட்டில் ஐந்து வருடங்களாக வாழும் பெண்போராளி ஒருவர் இந்த நிறுவனத்தின் ஐந்து வருடப் பதிவின் பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றார்.
தமிழ் நாட்டு அரசினால் அகதிகள் கிரிமினல் போன்று சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவற்றுள் எதனையும் அகதி அமைப்புக்கள் கண்டுகொள்வதில்லை.
பிணங்களை வைத்து வியாபார, நடத்தும் புலிசார் அமைப்புக்களுக்கு புலிக்கொடியிலிருக்கும் பற்று அவலத்துள் வாழும் மக்கள் மீது இல்லை. ஐ.நா ராஜபக்சவைத் தூக்கில் போடப்போவதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து மக்களிடம் பணம்கறக்கும் இந்தக் கும்பல்கள் அகதிகளுக்கான குறைந்தபட்ச வேலைத்திட்டத்தைக்கூட முன்னெடுப்பதில்லை.
From TNA to Diaspora Tamil organizations or TamilNadu ‘Vellai Veddi’ politicians who care about these refugees…?
Yes easy to comment as an easy chair man. Is anyone asked you to do that for you?
Please write usefully by saying what kind of action can be done rather than just criticising
all the time. Because if you give idea’s individuals who read this may take some actions. You all always spend your time on criticising only and serve the purpose of “Kodi” Koodam. Where does your responsibility lies if you are a true left or love people or even a Tamil?
Did you look inside your pockets ?