நாங்கள் சிங்களம். நானும் சிங்களவன். அதனால் கேட்டுக்கொண்டு இரு, தமிழா. தலைதெறித்து நடந்துகொள்ளாமல்…. கேட்டுக்கொண்டு இருக்க முடியாவிட்டால் போ என இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக் நேற்று (01.04.10) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழ் மக்களைப் பார்த்து பகிரங்கமாக திட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று (01.04.10) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி டெலிபுறம்டர் இயந்திரத்தைப் பார்த்து தமிழை உச்சரித்து வாசித்துக் கொண்டிருந்த போது, அவரது தமிழைப் புரிந்துகொள்ள முடியாத யாழ் மக்கள், கூச்சலிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜனாதிபதி மகிந்த தமிழர்களைப் பார்த்து திட்டியுள்ளார்.
ஜனாதிபதி சிங்களத்தில் திட்டியபோது அதனையும் புரிந்துகொள்ளாத தமிழ் மக்கள் தொடர்ந்தும் கூச்சலிட்டதால், மீண்டும் நான் நிறுத்த மாட்டேன். நீங்கள் சத்தம் போடப் போட இன்னும் இன்னும் நான் தமிழில் பேசத்தான் போகிறேன் என வீராப்பாக கூச்சலிட்டுள்ளார்.
இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர் ஒருவர் ஒலிவாங்கியை எடுத்து மக்களை அமைதிப்படுத்த முயற்சித்துள்ளார். மகிந்த ராஜபக் இவ்வாறு தமிழ் மக்களை இன ரீதியாக திட்டிக் கொண்டிருந்த போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதனை அருகில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.
இந்தத் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றுவதற்கு முன்னர் நாகவிகாரைக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அதன் பின்னர் நல்லூர் கந்தசுவாமி கோயிருக்குச் சென்றிருந்தார்.
நன்றி : உலக தமிழ் செய்திகள்
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் என ஈபீடீபீ செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.
சுமார் 400 பேர் மாத்திரமே கலந்துகொண்டனர் என்று கூறப்படும் செய்திக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மறுப்புத்தெரிவித்துள்ளார்.
தமது அழைப்புக்காகவே மக்கள் வருகை தந்திருந்தனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எனினும் தமிழ்மிரர் இணையதளத்துக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கிடைத்த தகவல்களின்படி இரண்டாயிரத்திற்கும் குறைவானவர்களே வருகை தந்திருந்தனர் எனக்கூறப்படுகிறது.
இலங்கை பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர்., பாடல்களை பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின், அவரது பெயர், படத்தை வைத்து இன்று வரை தமிழகத்தில் அரசியல் நடந்து வருகிறது. தற்போது, இலங்கை பொதுத் தேர்தலிலும் எம்.ஜி.ஆர்., படங்கள், பாடங்கள் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது.
அங்குள்ள தமிழர்களின் வாக்குகளை பெற, அரசியல் கட்சியினர் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக எம்.ஜி.ஆரின் துடிப்புள்ள பாடல்கள் மூலம், தங்கள் வேட்பாளர்களை வாக்காளர்கள் மத்தியில் அடையாளம் காட்டுவதில், முக்கிய கட்சிகள் தீவிரமாக உள்ளன.
‘நான் ஆணையிட்டால், உழைக்கும் கைகளே, நான் உங்கள் வீட்டு பிள்ளை, ஒன்றே குலமென்று பாடுவோம்’ என, எம்.ஜி.ஆரின் சினிமா பாடல்கள் தான், தற்போது இலங்கை தேர்தல் களத்தில் ஒலிக்கிறது.
அந்நாட்டிலிருந்து ஒலிபரப்பாகும் அனைத்து எப்.எம்.,களிலும், கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரமாகவும் இப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழர்களை கவர்ந்திழுக்க எம்.ஜி.ஆர்., தான் சரியான தேர்வு என்பதில், தமிழகத்தையே மிஞ்சிவிட்டது இலங்கை அரசியல்.
இத் தகவல் பரப்பப் படும் விதத்தில் விஷமங்கள் உள்ளன.
எனக்குக் கிடைத்த ஒரு தலைப்பில் “இந்த நாடு சிங்களவர்களுடையது” என்று ராஜபக்ச சொன்னதாக இருந்தது. அப்படி எதுவுமே சொல்லப்படவில்லை.
இங்கும் “இவ்வாறு தமிழ் மக்களை இன ரீதியாக திட்டிக் கொண்டிருந்த போது” என உள்ளது. அது மிகைபடக் கூறலாகும்.
ராஜபக்சவின் தமிழ் விளங்கக் கடினமானதல்ல. உச்சரிப்புப் பிரச்சினைகள் உண்டு. ஆனால் கூச்சலுக்குக் காரணம், விளங்காமை என நான்நம்பவில்லை.
தான் பேசுவதை இடைமறித்துக் கூச்சலிடுவது ராஜபக்சவுக்குச் சினமூட்டியதில் வியக்க ஒன்றுமில்லை. அவர் கூச்சலிட்டவர்களைத் திட்டினார். அது அவரது வழமையான நிதானமான நடத்தைக்கு முரணானது. அது தவறான அரசியல் நடத்தையே ஒழியத் தமிழ்த் துவேஷமானதல்ல.
வவுனியாவில் தமிழில் பேசுவதற்கு எதிராகக் கூச்சலிட்ட சிங்களவர்களைத் திட்டினார். (அது ஒரு முன்னேற்பாடான நாடகமாக இருந்திருக்கலாம். அது வேறு விடயம்).
ராஜபக்ச ஒரு பேரினவாதி என்பதையோ போர்க் குற்றங்கட்குப் பொறுப்பானவர் என்பதையோ மறக்காமல் ஒரு விடயத்தைக் கவனிக்க வேன்டும். தமிழில் பேசும் ஒரே ஆட்சித்தலைவராக அவரே இருந்துள்ளார். அவர் சிரமப்பட்டுக் கருவியின் உதவியுடன் என்றாலும் பேசுவதைபொறுமையுடன் கேட்பது நற் பண்பு. கூறிய கருத்துக்கள் தீயவை எனின் எதிர்த்துக் கூச்சலிடுவது வேறு விடயம்.
மதிக்க வேண்டிய ஒன்றை அவமதிப்பது நல்லதல்ல.
ராஜபக்சவிடம் கேள்விகளைக் கேட்டோ கருத்துக்களை எதிர்த்துக் கோஷம் எழுப்பியோ இருந்தால் அது பொறுப்பான அரசியல் நடத்தையாய் இருந்திருக்கும்.
புலிகளின் “பிடியில்” இருந்த தமிழரை அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்து முட்கம்பி முகாமிற்குள் அடைத்து விடுவித்த மீட்பனாம் ராஜபக்சேவை இன்னும் யார் இந்த இரட்சகன் என்று விளங்காமல் பலர் விஷமச் செயலில் ஈடுபடுகிறார்கள். முகாமில் இருக்கும் மக்கள் அங்கு சந்தோசமாக ராஜபக்சே கொடுக்கும் உணவை உண்டு வாழ்கிறார்கள். இதைவிட வேறு என்ன வேணும் என்று கேட்கிறான் இந்த தேமிலா?
இணையத்தில் இப்போதெல்லாம் சனல் நாலு போல் பலர் “பொய்யாக” படம் தயாரித்து ராஜபக்சேவுக்கு அவப் பெயர் உண்ட்டாக்க முயலுகிறார்கள். சிங்களவருக்கு மாத்திரமல்ல இவர் கடவுள், சில தமிழ் நக்கிகளுக்கும் தமிழ்ப் பெயரில் எழுதும் அனாதைகளுக்கும் இவர் கடவுள்தான்.
ராஜபக்சவை ரட்சகன் என்போரிடம் கேட்பதை என்னிடம் கேட்தாதீர்கள்.
எதிரியை விமர்சிக்கும் போதும்நேர்மையாகப் பேச வேண்டும் என்பதே என் வாதம்.
நம் பொய்கள் நம்மையே சுடலாம்.