நாகப்பட்டிண மீனவர்கள் ஆறு பேர் கடந்த ஆறு நாட்களாக கடலில் தத்தளித்த நிலையில் இன்று அதிகாலை வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கியுள்ளார்கள்.
கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் நாகப்பட்டிணத்தில் இருந்து அளடி 1054 ஆம் இலக்க றோலர் படகில் மீன்பிடிப்பதற்காக புறப்பட்ட இவர்கள் நடுக்கடலில் படகின் இயந்திரம்பழுதடைந்த நிலையில் தத்தளித்தனர்.
இன்று அதிகாலை கடல் நீரினால் இழுத்துவரப்பட்ட இவர்கள் வடமராட்சி ஆழியவளை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து கடற்கரையில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் இவர்களை கைது செய்து மருதங்கேணிப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.
இவர்கள் வந்த றோலர் படகு தற்போது ஆழியவளை இராணுவத்தினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.