கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுக்க மழையால் தமிழ்நாடு தத்தழித்துக் கொண்டிருக்கிறது.சென்னையில் பல இடங்களில் தேங்கிய தண்ணீர் வடிந்து விட்டாலும், தாழ்வான இடங்களில் தேங்கிய மழை நீர் இன்னும் வடியவில்லை.
உதாரணத்திற்கு புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் இன்னும் வடியவில்லை. இதற்கிடையில் அந்தமான் கடற்பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் நாளை முதல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
இந்த மழை அறிவிப்பு காரணமான வருகிற நாளை மறு நாள் 18-ஆம் தேதி சென்னைக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.