ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இழிவான குற்றச்சாட்டுக்கள் ஏற்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எதிராக இழிவான குற்றச்சாட்டுக்கள் சுமத்திய போதிலும், அதனை அரசியல் நலனுக்காக ஐக்கிய தேசியக் கட்சி பயன்படுத்திக் கொள்ளாது.
ஒட்டுமொத்த நாடும் எதிர்நோக்கும் பாதகமான நிலைமையாகவே இந்த நிலையைக் கருத வேண்டும்.
போரின் பின்னர் பொற்காலமொன்றை உருவாக்கக் கூடிய சாத்தியம் காணப்பட்ட போதிலும், ஆட்சியாளர்கள் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
தற்போதைய ஆட்சியாளர்களின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது.
தூரநோக்கற்ற வெளியுறவுக் கொள்கையினால் நாடு நெருக்கடியான நிலைமைகளை எதிர்நோக்கி வருகின்றதுஎனக்கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் அமைப்புக்களோடு இணைந்து இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமரிக்க சார்பு நாடுகளின் பின்னணியில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Look like they are joining hands for a frontak attack. There is a first time for anything. That is the case with Sri Lanka – Shri Lanka. The Human Rights Commission in Geneva is only 30 years or so old. So, this is an intensive exercise in International Diplomacy for all.