ராஜபக்ச அரசிற்கு ஆதரவாகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் நீண்டகாலமாகச் செயற்பட்டுவரும் சாதி வெறியரான சுப்பிரமணிய சுவாமி நளினியின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக குரலெழுப்பியுள்ளார்.
இராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாகவுள்ள நளினி விடுதலை வழக்கில், நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கு குறித்து பேட்டி அளித்த சுப்ரமணிய சுவாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
19 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி நளினி தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எலுப்பி தர்மராவ், பால் வசந்தகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தானே நீதிமன்றத்தில் நேர் நின்று வாதிடப்போவதாக நளினி கூறியிருந்தார். நளினியை விடுவிக்கக் கூடாது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார். சுப்ரமணிய சுவாமி சார்பில் வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜரானார்.
நீதிமன்றம் வந்து தனக்காக வாதிட நளினியை அனுமதிக்கக் கூடாது என்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் சுப்ரமணிய சுவாமி அளித்த பேட்டிக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இன்றுக் காலை வந்த தி இந்து நாளிதழை நீங்கள் பார்த்தீர்களா? என்று சுப்ரமணிய சுவாமியின் வழக்கறிஞரைப் பார்த்து கேட்ட நீதிபதிகள், நீதிமன்றம் வர நளினியை அனுமதிக்கக் கூடாது என்று சொல்வதற்கு சுப்ரமணிய சுவாமி யார்? என்று நீதிபதி தர்மராவ் கேள்வி எழுப்பினார்.
நளினி விடுதலை தொடர்பாக வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. இதில் தன்னையும் சேர்த்துக் கொண்டுள்ள சுப்ரமணிய சுவாமி, அது குறித்து நீதிமன்றத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு எவ்வாறு பேட்டியளிக்கலாம் என்றும் நீதிபதிகள் வினவினர். இப்படிப்பட்ட செயல்பாடுகள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்று உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்ட நீதிபதிகள், சுப்ரமணியம் சுவாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சுப்ரமணிய சுவாமி சார்பாக வாதிட்ட வழக்கறிஞ்சர் ராஜகோபால், அவர் சார்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக நீதிபதிகளுக்குத் தெரிவித்தார். அதன் பிறகு விசாரணைத் தொடர்ந்தது.








சுப்பிரமணிய சுவாமி றோ தரகராகச் செயற்பட்ட போது புலிகளின் தீவிர ஆதரவாளர்.
ராஜீவ் கொலையின் பின்பு அவர் சொன்னதை நம்பி றோ ராஜீவ் கொலை புலிகளின் வேலையல்ல என்று மேலிடத்துக்குத் தெரிவித்தது.
உண்மை தெரிய வந்ததும் றோவின்நம்பகத்தன்மை பாதிக்கப் பட்டது.
அவர்கள் சுப்பிரமணிய சுவாமி மீது சினந்தார்கள்.
அன்று முதல் சுப்பிரமணிய சுவாமி புலிகளின் பரம எதிரி.
சுப்பிரமணிய சுவாமி தனிப்பட்ட பழிவாங்கல்கட்குப் பேர் போனவர்.
அவரது அரசியல் உறவுகளில் அவரது பார்ப்பனியத்தையும் இப் பண்பு மேவி விடும்.
அரசியல் உறவுகளீல் சுப்பிரமணீய சுவாமி அவர்களீன் பார்பபனிய பண்பிற்கான ஆதாரம் எது? வதந்திகளீன் அடிப்படையில் எழுதக்கூடாது.
அண்மையில் சிதம்பரம் கோவிலில் தமிழில் பாடக்கூடாது என்று தில்லை வாழ் அந்தணர்கள் எல்லாரும் தடை போட்டதையும் அதற்கெதிரகநடந்த போராட்டம்நீதிமன்றம் வரை சென்றதையும் அதன் பின்பும் தில்லை வாழ் அந்தணப் பெருமாக்கள், நந்தனை மாடு மறித்ததை விட மோசமாக, மறித்ததையும் ஒரு மக்கள் போராட்டமே இறுதியில் தமிழில் பாட அனுமதியை வென்றதையும் அனேகமாக அறிவீர்கள்.
அவ் வழக்குத் தொடர்பில் சிதம்பரம் நடராசப் பெருமானாரின் கோவில் யாருக்குரியது என்ற கேள்வி எழுந்தது. தீர்ப்பு அந்தணப் பெருமாக்களுக்கு மாறாக அமைந்தது.
அதற்கெதிரகப் போர்க் கொடி ஏந்தி நீதிமன்றில் மறு வழக்காட முன்னிற்போர் யார் தெரியுமா?
இது “சுவாமி அவர்களீன் பார்ப்பனிய பண்பிற்கான” அண்மைய தகவல்.
மேலும் தகவல் வேன்டும் என்றல் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போல ஏடுகளைப் (not kumudam, vikadan etc.) பாருங்கள்.
இதயபூர்வமானநன்றீ எக்ஸ்.சிதம்பரம்நமது கோயில்நாய்கள் எல்லாம் வந்துநமது என்றூ சொல்வதைக் கேட்பதுநமது விதியாக இருக்கிறது.சைவத் தமிழ்ரின் சொத்தான சிதம்பரத்தை மீட்டாக வேண்டும்.எமது தேவாரப் பாடல்களூக்கு தடை போட இந்த தீட்சிதர்கள் யார்.வழக்காட சுப்பிரமனிய கோமாளீ என்ன எல்லாக் கோமளீகளூம் ஒன்றாகட்டும்.ஆனால்நாமெல்லாம் ஒன்றானால் சைவத்தின் திருத்தலத்தில் தமிழ் ஒலிக்கும்.